Tagged: கறுப்பு கொடி

தோழர் நீதி அரேசர் கைது குமரி 08072017

மக்களைச் சமதர்மம் அடையச் செய்யும் இடஒதுக்கீட்டு முறையை ஒழிக்கத்துடிக்கும் பார்ப்பன ஆர்.எஸ்.எஸ்.தலைவர் மோகன் பாகவத்தின் குமரி மாவட்ட வருகையைக்  கண்டித்து எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கறுப்புக்கொடி (08-07-2017.சனிக்கிழமை)காட்டச்சென்ற கழகத் தோழர் நீதி அரசர் அவர்களை காவல் துறை கைதுச்செய்து பிணை வழங்காமல் 15 நாள் காவலில் வைத்தது. தற்போது நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மக்களை மதத்தால் உசுப்பி சண்டைப் போடவைத்துவிட்டு அதில் குளிர் காயும் பார்ப்பன மத வெறியருக்கு பாதுகாப்பும்,மக்களுக்காக போராடும் போராளிகளுக்குச் சிறையும் வழங்கும் காவல் துறைக்கு குமரி மாவட்டத் திராவிடர் கழகத்தின் சார்பாக கண்டனங்களைத் தெரிவிக்கிறோம். இடஒதுக்கீட்டு முறையால் பயன்பெற்ற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரே இடஒதுக்கீடை ஒழிக்கும் பார்ப்பனனுக்கு ஆதரவாக செயல்படுவது வருந்தத்தக்கது.