Tagged: கடவுள் நம்பிக்கையற்றவர்கள்

நாத்திகர்களின் நாடாக மாறி வருகிறது நார்வே!

நாத்திகர்களின் நாடாக மாறி வருகிறது நார்வே!

உலக மக்கள் தொகையில் 33 சதவீதம் பேர் எந்த மதத்திலும் நம்பிக்கை இல்லாதவர்கள் என்று அண்மையில் சர்வதேச அடிப்படையில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. ‘கால் அப் இன்டர் நேஷனல்’  ‘பேவ் ரிசர்ச் சென்டர்’ என்ற அமைப்புகள் இணைந்து, இந்த ஆய்வை மேற்கொண்டன. ‘கடவுள்’ மத நம்பிக்கையற்றவர்களாக வாழ்வதற்கு, இந்த நாடுகளில் எதிர்ப்புகள் ஏதும் இல்லை. நம்பிக்கையாளர்கள் இந்த சிந்தனையை அங்கீகரிக்கின்றனர் என்றும் அந்த ஆய்வு கூறுகிறது. இந்த ஆய்வு தெரிவித்துள்ள தகவல்கள்: சீனாவில் 90 சதவீதம் பேரும், ஹாங்காங்கில் 70 சதவீதம் பேரும் மதநம்பிக்கையோ கடவுள் நம்பிக்கையோ இல்லாதவர்கள். முன்னாள் சோவியத் ஒன்றியத்திலிருந்து பிரிந்த நாடான ‘செக்’ குடியரசில் மொத்த மக்கள் தொகையில் 45 சதவீதம் பேர் கடவுள் மதங்களில் நம்பிக்கை இல்லாதவர்கள். 30 சதவீதம் பேர் நாத்திகர்கள். அதாவது கடவுள் – மதத்தை மறுப்பவர்கள். அய்ரோப்பிய ஒன்றியத்திலேயே அதிக எண்ணிக்கையில் கடவுள் மத நம்பிக்கையில்லாதவர்களைக் கொண்ட நாடாக செக் குடியரசு...