Tagged: ஓணம்

ஓணம் – தீபாவளி ஒப்பிட்டு சிந்தியுங்கள்!

பார்ப்பனர்கள் ‘தேவர்’கள், அவர்கள் கொடுங்கோன்மையை எதிர்த்தவர்கள் ‘அசுரர்’கள் – இப்படித்தான் புராணங்களுக்கு பார்ப்பனர்கள் கற்பனை வடிவம் கொடுத்தார்கள். ‘தேவ-அசுர’ப் போராட்டம் என்பது ஆரியர்-திராவிடர் போராட்டம் தான். தீபாவளி – திராவிடன் ‘நரகாசுரன்’ என்ற அசுரனை ‘மகாவிஷ்ணு’ எனும் பார்ப்பன அவதாரம் சூழ்ச்சியாக கொன்ற நாள். கொன்ற நாளை கொண்டாடி மகிழச் சொன்னார்கள் பார்ப்பனர்கள். நமது மக்களும் ‘இழிவை’ சுமந்து கொண்டாடுகிறார்கள். ஆனால், கேரள மக்கள் கொண்டாடும் ‘ஓணம்’ – இதற்கு நேர் எதிரானது. ஓணம் ‘மாவலி’ என்ற அசுரனை வரவேற்கும் பண்டிகை. கேரளத்தை ஆண்ட ‘மாவலி’ என்ற திராவிட மன்னன் ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்தார்கள். அதை சகிக்க முடியாத தேவர்களாகிய பார்ப்பனர்கள் விஷ்ணுவிடம் முறையிட விஷ்ணு, வாமன அவதாரம் எடுத்து மாவலியை அழித்தான். எப்படி அழித்தான்? “வாமன அவதாரம் எடுத்து வந்த விஷ்ணு, மாவலியிடம் மூன்றடி நிலம் வேண்டும் என்று யாசகம் கேட்டான். இதற்குப் பின்னால் அடங்கியுள்ள சதியை புரிந்து கொண்ட மாவலியின் குரு...