Tagged: ஐநா

அய்.நா. என்ன செய்யப் போகிறது? – பூங்குழலி போர்க்குற்ற விசாரணையிலிருந்து தப்பிக்க இலங்கையின் புதிய சதி

எதிர்வரும் மார்ச் மாதம் அய்.நா.வில் மீண்டும் ஈழத் தமிழர் பிரச்சனை விவாததக்கு வரவிருக்கிறது. இலங்கை அரங்கேற்றி வரும் சூழ்ச்சிகளையும், தமிழர்கள் நிகழ்த்த வேண்டிய எதிர்விளைவுகளையும் அலசுகிறது இந்த ஆய்வு. அண்மையில் தி இந்து ஆங்கில நாளேட்டில் ஒரு செய்திக் கட்டுரை வெளியானது. 28.1.2017 அன்று வெளியான அச்செய்திக் கட்டுரையில் கட்டுரையாளர் மீரா சீனிவாசன், இலங்கையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினரான சுமந்திரனை கொல்வதற்காக முன்னாள் போராளிகள் போட்டசதித் திட்டம் அம்பலமாகியிருப்பதாககூறுகிறார்.இதேநாளில் இதே செய்தி கொழும்பிலிருந்து வெளிவரும் டெய்லி மிரர் இதழிலிலும் கட்டுரையாக வெளிவருகிறது. ஏற்கெனவே இது தொடர்பில் 4 முன்னாள் போராளிகள் கைது செய்யப்பட்டும் உள்ளனர். திடீரென தமிழ்ச் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரின் உயிருக்கு ஆபத்து என்ற செய்தி வருவதும் அதற்காக உடனடியாக அரசு நடவடிக்கை எடுத்து நால்வரை கைது செய்திருப்பதும் பல கேள்விகளை எழுப்புகிறது. ஜோசப்பரராஜசிங்கத்தைஅவர்நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த போதே ஒரு கிறிஸ்துமஸ் நாளில் சர்ச்சுக்குள் வைத்தே...

மோடி ஆட்சி அய்.நா.வில் அம்பேத்கர் விழா எடுத்தது ஏன்?

மோடி ஆட்சி அய்.நா.வில் அம்பேத்கர் விழா எடுத்தது ஏன்?

நியூயார்க்கில் அய்.நா.வின் தலைமையகத்தில் ஏப்.13 ஆம் ஆண்டு புரட்சியாளர் அம்பேத்கர் 125ஆவது பிறந்த நாள் கொண்டாடப்பட்டிருக்கிறது. அய்.நா.வுக்கான இந்திய நிரந்தர தூதரகம், இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை செய்தது. “ஏற்றத்தாழ்வு களுக்கு எதிரான போராட்டத்தை தொடர்ச்சியான வளர்ச்சிப் பாதையில் முன்னெடுப்போம்” என்ற முழக்கத்தை முன் வைத்து அம்பேத்கரின் பிறந்த நாளுக்கான கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட் டிருந்தது. நியூசிலாந்து நாட்டின் முன்னாள் பிரதமரும் அய்.நா.வின் வளர்ச்சித்திட்ட அதிகாரி யுமான ஹெலன் கிளார்க், கருத்தரங்கில், ‘அம்பேத்கர் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான உலகளாவிய அடையாளம்’ என்று பேசியிருப்பது அம்பேத்கரின் சமூக விடுதலை இலட்சியத்துக்கு சூட்டப்பட்ட மணிமகுடமாகும். ஹெலன், அய்.நா.வின் அடுத்த பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒடுக்கப்பட்ட மக்களுக்கான உலகளாவிய அடையாளமாக அம்பேத்கர் உயர்ந்து நின்றாலும், அவர் வாழ்ந்து உழைத்துப் போராடிய நாட்டில் ஒடுக்கப்பட்ட மக்களின் நிலை எப்படி இருக்கிறது? என்ற கேள்வியை கவலையுடன் எழுப்ப வேண்டியிருக்கிறது.  2030ஆம் ஆண்டுக்குள் உலகம் முழுதும் ஏழ்மை,...