Tagged: உதயகுமாரன்

மாபெரும் சிக்கலில் ஊழல்மிகு கூடங்குளம் அணுமின் நிலையம் – சுப. உதயகுமார்

மாபெரும் சிக்கலில் ஊழல்மிகு கூடங்குளம் அணுமின் நிலையம் – சுப. உதயகுமார்

கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதல் அலகிலுள்ள நீராவி தயாரிப்பான் சரியாக வேலை செய்யவில்லை எனத் தெரிகிறது. இது ரஷ்யாவிலுள்ள மோசடி நிறுவனமான சியோ பொடால்°க் எனும் கம்பெனியிடமிருந்து வாங்கப்பட்டது. இந்த நிறுவனத்தின் கொள்முதல் இயக்குனர் செர்கே ஷுட்டோவ் தரமற்ற எஃகினை வாங்கி உதரிப்பாகங்கள் தயாரித்த ஊழல் குற்றச்சாட்டுக்களால் 2012ஆம் ஆண்டு சிறையில் அடைக்கப் பட்டார். இந்திய மக்களிடம் உண்மையைச் சொல்லி நம்மை பாதுகாப்பதற்கு பதிலாக, வருடாந்திர பராமரிப்பு, எரிகோல்கள் மாற்றம் என்று என்னென்னவோ கதைகளை யார் யாரையெல்லாமோ வைத்து சொல்லிக் கொண்டிருக்கிறது அணுசக்தித் துறை. கூடங்குளம் அணுஉலை அக்டோபர் 22, 2013 அன்று மின்தொகுப்பில் இணைக்கப்பட்டதாக சொல்லப்பட்டது. பின்னர் டிசம்பர் 31, 2014 அன்று வணிக ரீதியிலான மின்உற்பத்தி துவங்கிவிட்டதாக அறிவிக்கப்பட்டது. மே 31, 2015 வரையிலான 586 நாட்களில் அணுஉலை 226 நாட்கள் ஓடவில்லை. மொத்தம் 64 நாட்கள் அணுஉலை பராமரிப்புக்காக மூடப்பட்டது. டர்பைனில் ஏற்பட்ட பழுதை நீக்குவதற்காகவும், டர்பைனை...