Tagged: உண்மை சம்பவம்

பின்னால் துரத்தி வந்த கர்ப்பிணியின் பேய்…!

பின்னால் துரத்தி வந்த கர்ப்பிணியின் பேய்…!

(பேய், பயம் என்பது ஒரு மனநோய். நினைத்ததைப் போன்றே பேசி, நடிக்கும் மனநோய்க்குப் பெயர்‘குளோசொலேலியா’. மனநல மருத்துவர் டாக்டர் கோவூர் சிகிச்சை அளித்த ஒரு பேய் பிடித்தவரின் கதை இது)   காலி ரிச்மண்ட் கல்லூரியில் கோவூர் ஆசிரியராகக் கடமையாற்றிக் கொண் டிருந்த காலம். 1946ஆம் ஆண்டு பல்கலைக் கழக நுழைவுக்காகப் பயின்று கொண்டிருந்த சில மாணவர்களுக்கு சனிக்கிழமைகளில் விசேட வகுப்புகளை நடத்திக்கொண்டிருந்தார் கோவூர்.மே மாதத்தில் ஒரு சனிக்கிழமை வகுப்பு முடிந்து மாணவர்கள் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். ஜயசிங்கா என்ற மாணவன் கோவூரிடம் வந்தான். ‘என்ன விஷயம்’ என்று கேட்டார். தன் தந்தை ஒரு அரசாங்க அதிகாரி என்றும், அவரிடம் கடமை புரியம் ஒரு பியூன் ஆறு மாதங்களுக்கு முன்பு இறந்துபோன கர்ப்பிணியான ஒரு மீனவப் பெண்ணின் ஆவியால் பீடிக்கப்பட்டு அந்தப் பெண்ணைப் போன்றே பிதற்றிக் கொண்டிருப்பதாகவும் கூறினான். தன் வீட்டுக்கு இரு வீடுகள் தள்ளியே அந்தப் பியூனின் வீடு இருப்பதாகவும்...