Tagged: ஈழத்தமிழர் உரிமை

ஈழத்தில் உரிமை உயிர்வாழ துடிக்கிறது (1)

ஈழத்தில் உரிமை உயிர்வாழ துடிக்கிறது (1)

பறிக்கப்படும் தமிழர் நிலங்கள் அருட்தந்தை ஆ. குழந்தை இலங்கையின் வடக்கு-கிழக்குப் பகுதிகளில் ஒரு மாத காலம் சுற்றுப் பயணம்செய்து மக்களை சந்தித்து, கள நிகழ்வுகளைக் கண்டறிந்து திரும்பியுள்ளார் அருட்தந்தை ஆ. குழந்தை. தமிழர்கள் மீதான ஒடுக்கு முறைகளை விளக்கி ‘புரட்சிப் பெரியார் முழக்க’த்துக்காக அவர் எழுதிய கட்டுரை இது.   15.08.2016 அன்று மருதமடு மாதா கோவில் திருவிழாவில் மன்னார் மறை மாவட்ட பரிபாலகர் ஆயர் கிங்ஸ்லி சுவாமிபிள்ளை அவர்கள் “நாட்டின் இப் போதையை நடைமுறைச் செயல்பாடுகளும் எழுந்துள்ள பிரச்சினைகளும் முரண்பாடான அறிக்கை களும் நம்பிக்கை தருவனவாக இல்லை. மாறாக நல்லாட்சியும் நல்லிணக்கமும் மந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன என்பதையே தெளிவாக காட்டுகின்றன. இதனால் நாம் விரக்தி அடையும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்” என்று கூறினார். ஈழமக்களின் கோரிக்கை களையும் உரிமை களையும் சிங்கள பேரினவாத அரசு கொடுக்காமல் ஈழத்தமிழ் மக்களை விரக்தியில் தள்ளுகிறது. ஈழத்தமிழர்களின் வரலாற்றுத் தொன்மையையும்  தமிழ் இனக் குழுவின் எண்ணிக்கையை சிங்களபேரினவாத அரசு திட்டமிட்டு குறைத்து அழிக்கிறது. அது கையாளுகின்ற...