இளைஞர்களின் எழுச்சி…
வெகுமக்களின் பீறிட்ட எழுச்சியாக நடந்து முடிந்திருக்கிறது இளைஞர்களின் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம்! ‘ஜல்லிக்கட்டு’க்கு அப்பால், தொடர்ந்து பறிக்கப்பட்டு வந்த தமிழர்களின் உரிமைகள் பற்றிய குமுறல் இந்த எழுச்சியை உந்தித் தள்ளியது என்பதே உண்மை. மோடிக்கும், இந்திய அரசுக்கும் எதிரான உணர்வுஅலைகளேபோராட்டக்களங்களில் மையம்கொண்டிருந்தது. “எங்கள் உரிமைகளை ஓர் அன்னிய ஆட்சி எத்தனை காலத்திற்கு மறுத்துக் கொண்டிருக்கும்? “ என்ற கேள்விதான் இந்த உணர்வுகளின் அடித்தளம். அதிகார மையங்களை பணிய வைத்திருக்கிறது இந்த போராட்ட சக்தி. உண்மைதான் ; ஜல்லிக்கட்டு ஜாதிய விளையாட்டாகத்தான் இருக்கிறது. அந்த கண்ணோட்டத்திலேயே நாமும் அதை எதிர்த்தோம். இப்போது ஜாதியற்ற ஜல்லிக்கட்டு வேண்டுமென்ற கருத்து உருவாகி வருகிறது. ஜாதி, மதம், பாலின பேதங்களைக் கடந்து இளைஞர்கள் திரண்டனர். இஸ்லாமிய எதிர்ப்பு அரசியலில் குளிர்காய துடித்தவர்களுக்கு சரியான பாடத்தை புகட்டினர். பெண்களின் பங்கேற்போ ஏராளம். இரவு பகல் பாராமல் தோழமையோடு இணைந்து நின்றார்கள். தமிழகம் இதுவரை பார்க்காத அதிசயம் இது. வெகுமக்கள்...