மோடியின் ‘இராம இராஜ்யத்தில்’ நீதியும் அநீதியும்
மோடி ஆட்சியின் இரண்டாண்டு சாதனைகள் மதவெறி குற்றவாளிகளை தப்பிக்க வைப்பதும் அப்பாவிகள் மீது தேச விரோத முத்திரைகள் குத்துவதுமாகவே இருக்கிறது. பொருளாதாரத் துறையிலும் சாதனைகள் ஏதுமில்லை. ‘பார்வையற்றவர்கள் உலகில் ஒற்றைக்கண் கொண்டவரே அரசர்’ என்ற நிலையிலேயே இந்தியாவின் பொருளாதாரம் இருக்கிறது. இப்படி கூறியவர் வேறு யாருமல்ல; ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன். மோடி அறிவித்த பல திட்டங்கள் அறிவிப்புகளோடு முடங்கிப் போய் நிற்கின்றன. இந்து மதத்தின பெயரால் வன்முறைகளை கலவரங்களை நடத்துவோரை பாதுகாப்பதற்கு அரசு எந்திரங்கள் முறைகேடாகப் பயன்படுத்தப்படுகின்றன. மகாராஷ்டிரா மாநிலம் மலேகான் நகரில் கடந்த 2008ஆம் ஆண்டு நடந்த குண்டுவெடிப்பில் ரம்ஜான் தொழுகையை முடித்துவிட்டு வந்த 7 அப்பாவி முஸ்லிம்கள் பலியானார்கள். 80 பேர் காயமடைந்தனர். வழக்கம்போல் இஸ்லாமிய ‘தீவிரவாதிகள்’ என்றே குற்றம்சாட்டப்பட்டனர். பிறகு ஹேமந்த் கர்கரே என்ற நேர்மையான அதிகாரி தலைமையில் செயல்பட்ட தீவிரவாத தடுப்புப் படை, குண்டு வைத்தவர்கள் இந்துத்துவ தீவிரவாதிகளே என்பதை கண்டறிந்தது. பெண் சாமியார் பிரக்யாசிங் தாகூர், இராணுவ அதிகாரி பிரசாந்த், $காந்த்...