பெண்கள் பாதுகாப்பு: மருத்துவர் இராமதாசு கடிதத்திற்கு கழகத்தின் பதில்
தமிழ்நாட்டில் இளம்பெண்கள் அச்சுறுத்தல் குறித்து கவலைப்பட்டு அவர்களின் பாதுகாப்புக்காக குரல் கொடுக்க வேண்டும் என்று கோரி பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு, கட்சித் தலைவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர், பொதுச் செயலாளர்களுக்கும் கடிதங்கள் நேரில் வழங்கப்பட்டன. இது குறித்து கருத்துகளை பா.ம.க. தலைமை அலுவலகத்துக்கு தெரிவிக்குமாறு அக்கடிதத்தில் மருத்துவர் இராமதாசு வேண்டுகோள் விடுத்திருந்தார். இது குறித்து நமது கருத்தை பதிவு செய்ய விரும்புகிறோம். காரைக்கால் வினோதினி, ஆதம்பாக்கம் வித்யா, சேலம் வினுப்பிரியா, சூளைமேடு சுவாதி, விழுப்புரம் நவீனா என்று காதலை ஏற்க மறுத்தப் பெண்களை கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளதை மருத்துவர் இராமதாசு பட்டியலிட்டுள்ளார். பெண்கள் மீது மூர்க்கத்தனமாக தங்கள் காதலை ஏற்கவேண்டும் என்று மிரட்டுவதும் மறுக்கும் பெண்களை கொடூரமாக கொலை செய்வதும் சகித்துக் கொள்ள முடியாத வக்கிர மனநிலை; ஆண்களின் இந்த ‘மூர்க்கம்’ காதல் என்ற பெயரில் வெளிப்படுவதை நாகரிக சமூகம் ஒரு போதும் ஏற்க முடியாது. ஆனால், பெண்கள்...