Tagged: இராதாகிருஷ்ணன்

ஜோதிராவ் புலே – ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்

இந்துத்துவ தத்துவஞானி ராதாகிருஷ்ணன் கொண்டாடப்படுகிறார்; கல்லடிப்பட்டு கல்விக்கூடங்கள் நடத்திய புலே இருட்டில் இருக்கிறார்! முன்னாள் குடியரசுத் தலைவரான சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான இன்று ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. நல்ல ஆசிரியர் என்பதற்கான இலக்கணம் குறித்தும் அவர் மாணவர் சமுதாயத்துக்கு ஆற்ற வேண்டிய பணிகள் குறித்தும் அவரவர் பாணியில் கருத்துக்களை அள்ளித் தெளிக்கிறார்கள். ஊடகமும் சமூக ஊடகங்களும் நிரம்பி வழிகின்றன. எந்த ஊடகமும் முன்னாள் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணன் ஆசிரியர் சமுதாயத்துக்கும் மாணவர் சமுதாயத்தும் என்ன செய்தார் என்று எப்போதுமே சொல்வதில்லை. ராதாகிருஷ்ணன் யார்? ஆந்திராவின் திருத்தணி அருகே உள்ள சர்வபள்ளி என்ற கிராமத்தில் ஒரு பார்ப்பன குடும்பத்தில் பிறந்தவர் ராதாகிருஷ்ணன். கிறித்துவ மிஷனரி பள்ளிகளிலும் சென்னை கிறித்துவ கல்லூரியிலும் படித்த அவர், இளம் வயதிலேயே பேராசிரியராக நியமிக்கப்பட்டவர். இதெல்லாம் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் நடந்தவை. இந்திய சுதந்திரப் போராட்டத்தின் ஊடாக இந்து சமூகம் சாதி படிநிலைகள் மூலம் அடிமைப் படுத்தி...

விண்வெளித் துறையின் மூடநம்பிக்கை

விண்வெளித் துறையின் மூடநம்பிக்கை

இ°ரோ தலைவர் இராதாகிருஷ்ணன் – ஒவ்வொரு செயற்கைக்கோள் ஏவும்போதும் திருப்பதி ஏழுமலையான் ஆசி பெறுகிறார் இ°ரோ அமைப்பு மொத்தத்தில் எவ்வித மூடநம்பிக்கையிலும் ஈடுபடுவதில்லை என்று இ°ரோ விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் ஐ.ஏ.என்.எ°. செய்தியாளர்களிடம் கூறியுள்ளனர்.   அவர்கள் மூடநம்பிக்கையை முறியடித்து செவ்வாய் அன்று ஏவுகணையை ஏவியதாக மார்தட்டிக் கொள்கிறார்கள். ஆனால், இதுவரை செவ்வாய்கிழமையன்று ஒரு ஏவுகணைகூட ஏவப்பட்ட தில்லை. அது ஒரு ராசியில்லா நாள் என்பதுதான் காரணமாகும். செவ்வாய் ராசியில்லை என்றால் அப்பெயர் கொண்ட கிரகம் குறித்து ஏன்ஆராய்ச்சி செய்ய வேண்டும்? என்ற கேள்விக்கு அவர்களிடம் பதில் இல்லை. இ°ரோ நிறுவனத்தின் மூத்த அதிகாரியொருவர் செவ்வாய் எனக்கு ராசியான நாள் என்று கூறியுள்ளார். அப்படியென்றால் அவரின் விருப்பப்படி தான் செவ்வாய் கிரகத்துக்கு செவ்வாய் அன்று விண்கலத்தை அனுப்புவது பொருத்தமாக இருக்கும் என்று அவர்கள் கருதியிருக்கக் கூடும். விண்வெளிக்கலம் 12அய் ஏவிய பிறகு, 13 அய் தவிர்த்துவிட்டு, 14 அய் ஏவியது ஏன்? 13 ராசியில்லாத...