Tagged: இம்மானுவேல்

ஜாதி ஒழிப்புப் போராளி  இம்மானுவேல் சேகரன் நினைவு நாள்

ஜாதி ஒழிப்புப் போராளி இம்மானுவேல் சேகரன் நினைவு நாள்

ஜாதி ஒழிப்புப் போராளி இம்மானுவேல் சேகரன் நினைவு நாளான 11.9.12 செவ்வாய் அன்று பிற்பகல் 2 மணியளவில் பரமக்குடியில் உள்ள இம்மானுவேல் சேகரன் நினைவிடத்தில் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் வீரவணக்க – ஜாதி ஒழிப்பு உறுதியேற்பு நிகழ்வு நடைபெற உள்ளது. கழகத்தின் திருப்பூர் மாவட்டத் தலைவர் க. துரைசாமி தலைமையில் மாநில பரப்புரைச் செயலாளர் தூத்துக்குடி பால். பிரபாகரன் மற்றும் மாநில அமைப்புச் செயலாளர், தாமரைக் கண்ணன் மண்டல அமைப்புச் செயலாளர்கள், தென் மாவட்டங்களின் பொறுப்பாளர்களும், தோழர்களும் பங்கேற்க உள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டியில் ஒன்றுகூடி அங்கிருந்து பரமக்குடிக்குப் பயணமாக உள்ளனர். வீரவணக்க நிகழ்வில்  பங்கேற்க விரும்பும் தோழர்கள் 11.9.12 செவ்வாய் காலை சரியாக 10 மணிக்கு செம்பட்டிக்கு வருமாறு அழைக்கிறோம். மற்ற மாவட்டப் பொறுப்பாளர்கள் தத்தம் மாவட்டங்களில் ஜாதி ஒழிப்புப் போராளி இம்மானுவேல் சேகரன் நினைவு நாளை, ஜாதி ஒழிப்பு உறுதி மொழியேற்று பொதுக் கூட்டங்களாக நடத்துமாறு கேட்டுக்...