மக்கள் கவிஞர் இன்குலாப் முடிவெய்தினார்
மக்கள் கவிஞர் இன்குலாப் (73) டிசம்பர் முதல் தேதி சென்னையில் முடிவெய்திவிட்டார். சமரசத்துக்கு இடமில்லாத கவிஞர். அவரது கவிதைகள் மக்களுக்காகவே பேசின. சென்னைப் புதுக் கல்லூரியில் தமிழ்த் துறைப் பேராசிரியர். ஆனாலும் கவிஞராக, போராளியாக, நாடக ஆசிரியராக அவரது அடையாளங்கள் விரிந்து நின்றன. மார்க்சிய லெனினியத்திலும் பெரியாரி யத்திலும் அவர் ஈர்க்கப்பட்டார். 1996ஆம் ஆண்டு பெரியார் திராவிடர் கழகம் தொடங்கப்பட்ட காலத்தில் இன்குலாப் இல்லாமல் பெரியார் திராவிடர் கழக மேடைகள் இல்லை என்ற அளவுக்கு நெருக்கமாக இருந்தவர். 17.9.2000ஆம் ஆண்டு சென்னை இராயப் பேட்டை சைவ முத்தையா முதலி 5ஆவது வீதியில் பெரியார் திராவிடர் கழகத்துக்கான தலைமை அலுவலகத்தை திறந்து வைத்தவர் கவிஞர் இன்குலாப். விளம்பர வெளிச்சங்களி லிருந்து ஒதுங்கி நின்ற உண்மையான மனிதர். தனக்கு வழங்கப்பட்ட கலைமாமணி விருதை 2009ஆம் ஆண்டு ஈழத் தமிழர் இனப் படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து விருதையும் ஒரு இலட்சம் ரூபாயையும் தமிழக அரசுக்கு திருப்பி...