Tagged: ஆர்.எஸ்.எஸ்.சுக்கு சில கேள்விகள்

ஆர்.எஸ்.எஸ்.சுக்கு சில கேள்விகள்

ஆர்.எஸ்.எஸ்.சுக்கு சில கேள்விகள்

இந்து கோயில்களில் பெண்கள் வழிபாட்டு உரிமைகளைத் தடுக்கக் கூடாது என்று ஆர்.எஸ்.எஸ். அதன் ஆண்டு அறிக்கையில் அறிவித்துள்ள செய்தி, ஏடுகளில் வெளி வந்துள்ளது. மதம், ஆன்மிகம் சார்ந்த பிரச்சினைகளில் ஆண்களும், பெண்களும் சம உரிமை கொண்டவர்கள் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது. வழிபாடுகளில் சம்பிரதாயங்களை மீறக் கூடாது என்று ஆர்.எஸ்.எஸ். ஏற்கெனவே எடுத்திருந்த நிலைப்பாட்டை இப்போது மாற்றிக் கொண்டிருக்கிறது; வரவேற்க வேண்டிய முடிவு. ஆர்.எஸ்.எஸ். இந்த முடிவில் உண்மையாக இருக்குமானால் சில கேள்விகள் இருக்கின்றன. பெண்களுக்கு சம உரிமை வழங்கக் கூடாது. அவர்கள் ‘தீட்டுக்குரியவர்கள்’ அடிபணிந்து கிடக்க வேண்டியவர்கள் என்பதை வலியுறுத்தும் மனுசாஸ்திரம், பகவத்கீதை மற்றும் ஆகமங்களில் வலியுறுத்தப்படும் கருத்துகளும் ஏற்கத் தக்கவை அல்ல என்று ஆர்.எஸ்.எஸ். அறிவிக்குமா? இது முதல் கேள்வி. ஜாதி – பால் வேறுபாடின்றி அர்ச்சகருக்குரிய கல்வித் தகுதியுள்ள எவரும் அர்ச்சகராகலாம் என்பதை ஆர்.எஸ். எஸ். ஆதரிக்க முன் வருமா? இது இரண்டாவது கேள்வி. மூன்றாவதாக –...