Tagged: ஆந்திர பிரிவினை

வரலாற்றுப் புரட்டர்களுக்கு மறுப்பு (22) தலைநகர் மீட்புப் போரில் திராவிடர் கழகம் வாலாசா வல்லவன்

வரலாற்றுப் புரட்டர்களுக்கு மறுப்பு (22) தலைநகர் மீட்புப் போரில் திராவிடர் கழகம் வாலாசா வல்லவன்

தமிழரசு கழகத்தைத் தொடங்கிய ம.பொ.சி., மீண்டும் காங்கிரசுக்குள் தன்னை இணைத்துக் கொள்ளவே தீவிர முயற்சிகளில் ஈடுபட்டார். இது குறித்து ம.பொ.சி.யே இப்படி எழுதுகிறார். (சென்ற இதழ் தொடர்ச்சி) காங்கிரசிலிருந்து வெளியேறி விடுவதென்று தமிழரசுக் கழகம் எடுத்த தீர்மானத்தின் ஆங்கில நகலை எனது கையெழுத்துடன் நேருஜிக்கு அனுப்பி வைத்தேன். அவர், “தமிழரசுக் கழகம் எடுத்த துரதிருஷ்டமான முடிவு எனக்குக் கிடைத்தது” என்று மட்டுமே குறிப்பிட்டு பதில்  எழுதினார். “தமிழரசுக் கழகத்தார் அனுப்பிய ராஜினாமாக்களை ஏற்று பதில் எழுதவேண்டாம்; மேற்கொண்டு அவர்கள் எப்படி நடக்கிறார்கள் என்பதைக் கண் காணித்து வாருங்கள்” என்று நேருஜி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு எழுதியதாகக் கேள்விப்பட்டேன். பிரதமர் நேருஜி என்பால் காட்டிய பேரன்பு காரணமாக ஒன்றரையாண்டு காலம் நான் காங்சிரசில் நீடித்திருக்க அவகாசம் கிடைத்தது. (ம.பொ.சி. ‘நேருஜி என் ஆசான்’ பக். 93 முதல் 100 வானதி பதிப்பகம், சென்னை-17) சென்னை நகர் பிரச்சினை 1953 சனவரி முதல் 1953...

வரலாற்றுப் புரட்டர்களுக்கு மறுப்பு (21) காங்கிரசில் மீண்டும் சேர துடித்த ம.பொ.சி. வாலாசா வல்லவன்

வரலாற்றுப் புரட்டர்களுக்கு மறுப்பு (21) காங்கிரசில் மீண்டும் சேர துடித்த ம.பொ.சி. வாலாசா வல்லவன்

தமிழரசு கழகத்தைத் தொடங்கிய ம.பொ.சி., மீண்டும் காங்கிரசுக்குள் தன்னை இணைத்துக் கொள்ளவே தீவிர முயற்சிகளில் ஈடுபட்டார். இது குறித்து ம.பொ.சி.யே இப்படி எழுது கிறார். (சென்ற  இதழ் தொடர்ச்சி) காங்கிரஸ் கட்சித் தேர்தலில் போட்டியிட எனக்குத் தகுதியில்லை என்ற தேர்தல் அதிகாரியின் இந்த நடவடிக்கை யானது என் மனத்திற்கு மிகுந்த அதிர்ச்சியைத் தந்தது. நேருஜி அப்போது அனைத்திந்திய காங்கிரசின் தலைவராக இருந்தார். என்னைப்பற்றி அவர் நன்கு அறிந்து வைத்திருந்த நேரம் அது. அதனால், தேர்தல் அதிகாரியின் முடிவை நேருஜிக்கு அறிவித்து, எனக்கு நீதி வழங்க வேண்டும் என்று அவருக்கு ‘மேல் மனு’ப் போட்டேன். 21 மணி நேரத்திற்குள் அவரிடமிருந்து கீழ்க்கண்ட தந்தி கிடைத்தது. புதுடெல்லி, 16.11.1952 தாங்கள் காங்கிரஸ்ஸ்தலைவருக்குச் செய்து கொண்ட அப்பீல் மனு கிடைத்தது. காங்கிரஸ்ஸ்மேலிடம் தமிழரசுக் கழக அங்கத்தினர்கள் பற்றி விசாரணை நடத்தி இறுதி முடிவு எடுக்கப்படும் வரையிலும் அந்தக் கழகத்தைச் சேர்ந்தவர்களும் காங்கிரஸ்ஸ்தேர்தலில் ஈடுபட அனுமதிக்கப் படுவார்கள்....

வரலாற்றுப் புரட்டர்களுக்கு மறுப்பு (20) பெரியார் பற்றி ம.பொ.சி.யின் பச்சைப் பொய்! வாலாசா வல்லவன்

வரலாற்றுப் புரட்டர்களுக்கு மறுப்பு (20) பெரியார் பற்றி ம.பொ.சி.யின் பச்சைப் பொய்! வாலாசா வல்லவன்

சென்னை-தலைநகர் மீட்பு போராட்டத்தில் பெரியார்-காமராசர் கருத்துகளை பொய்யாகப் பதிவு செய்தவர் ம.பொ.சி. (சென்ற  இதழ் தொடர்ச்சி) ம.பொ.சி. வரலாற்றையே புரட்டி எழுதி விட்டார். “சென்னைப் பற்றிய பிரச்சினை யில் தமிழினத்தார் நிலை ஆரம்பத்தில் பரிதாபகரமானதாக இருந்தது. தி.க. தலைவர் பெரியார் ஈ.வெ. ரா., “சென்னை ஆந்திரத்தில் இருந்தால் என்ன தமிழகத் தில் இருந்தாலென்ன! எங்கிருந்தாலும் திராவிடத்தில் தானே இருக்கப் போகிறது என்று அறிவித்து விட்டார்” என்ற பச்சையான பொய்யை (எனது போராட் டத்தில் பக். 619இல்) ம.பொ.சி. எழுதி யுள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே. காமராஜரைப் பற்றிக்கூடப் பொய்யான தகவலையே ம.பொ.சி. எழுதி யுள்ளார். “ஆம் சென்னை நகர் பற்றிக் கூட எதுவும் கூறாமல் அவர் மௌனம் சாதித்தார்.” (எனது போராட்டம் பக். 619) ம.பொ.சியின் கூற்று உண்மையல்ல. காமராசரின் தலைமையில் தான் அக்கட்சி யினர் நீதிபதி வாஞ்சுவைச் சந்தித்து ஆந்திராவின் தலைநகர் சென்னையில் இருக்கக் கூடாது என்று...

வரலாற்றுப் புரட்டர்களுக்கு மறுப்பு (18) வாஞ்சு அறிக்கைக்கு எதிராக பெரியார் போர்க் கொடி! வாலாசா வல்லவன்

வரலாற்றுப் புரட்டர்களுக்கு மறுப்பு (18) வாஞ்சு அறிக்கைக்கு எதிராக பெரியார் போர்க் கொடி! வாலாசா வல்லவன்

சென்னையை ஆந்திராவுக்கு தலைநகராக்க வேண்டும் என்ற திட்டத்தை வகுத்துத் தந்ததே பிரதமர் நேரு தான் என்ற கருத்தை வலியுறுத்தி, 13.2.1953 அன்று சென்னை கடற்கரையில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பெரியார் பேசினார். பெரியார் உரையின் தொடர்ச்சி இது. சென்னை நகரம் பறி  போவதை எதிர்த்து பெரியார் ஏதும் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு மறுப்பாக பல வரலாற்றுத் தகவல்களை முன்வைக்கிறது கட்டுரை. (14.4.2016 ‘புரட்சிப் பெரியார் முழக்க’ இதழின் தொடர்ச்சி) இந்தக் கூட்டம் வாஞ்சு அறிக்கையினால் ஏற்படும் கெடுதியை எடுத்துச் சொல்ல மாத்திரம் ஏற்படுத்தப்பட்டக் கூட்டம் அல்ல. அந்த அறிக்கையை மாற்ற நாம் என்ன செய்யவேண்டும் என்கிற பரிகாரத்திற்கு ஆகவும் கூட்டப்பட்ட கூட்டமாகும். வாஞ்சு அறிக்கையினால் ஏற்படும் கேடு இந்த நாட்டில் உள்ள எல்லோருக்கும் தெரிந்ததுதான்; இங்குக் கூடி உள்ள உங்கள் எல்லோருக் கும் தெரிந்ததுதான். இதற்குப் பரிகாரம் என்ன? இதில் யார் யார் எவ்வளவு தூரம் ஒன்றுபட்டு வேலை செய்ய...

வரலாற்றுப் புரட்டர்களுக்கு மறுப்பு (17) மாநிலப் பிரிவினையில் நேருவின் சதி! வாலாசா வல்லவன்

வரலாற்றுப் புரட்டர்களுக்கு மறுப்பு (17) மாநிலப் பிரிவினையில் நேருவின் சதி! வாலாசா வல்லவன்

‘குணா’வின் வாரிசாக கிளம்பியுள்ள ஒருவர் அண்மையில் வெளியிட்டுள்ள நூலுக்கு இது ஒரு மறுப்பு. புதிய ஆந்திர மாநிலம் உருவாக்க நீதிபதி வாஞ்சு தலைமையிலான குழு ஒன்றை அமைத்தது. இது குறித்து ‘விடுதலை’ ஏட்டில வந்த செய்திகள்: பிரகாசம் – வாஞ்சு சந்திப்பு 100 நிமிடம் பேச்சு: பல்வேறு தரப்பினரும் நீதிபதி வாஞ்சுவிடம் தம் கோரிக்கைகளை முன் வைத்தனர். தோழர் டி. பிரகாசம் நேற்று நீதிபதி வாஞ்சுவைக் கண்டு சுமார் 100 நிமிட நேரம் ஆந்திரப் பிரிவினைப் பிரச்சனைகளைக் குறித்துத் தமது கோரிக்கைகளை வெளியிட்டதாகவும் சென்னையில் இரு இராஜ்ஜியங்களின் தலைநகரங்களும் இருக்க வேண்டு மென்று வற்புறுத்தியதாகவும் தெரிகிறது. (விடுதலை 11.01.1953) கம்யூனிஸ்டுகள் சந்திப்பு: ஆந்திரக் கம்யூனிஸ்ட் கட்சியின் உட்குழுவினர்களாகிய தோழர்கள் டி. நாகி ரெட்டி, சி. ராஜேஸ்வரராவ், பி. வெங்கடேசுவரலு, ஓய். ஈஸ்வராரெட்டி, ஓய்.வி. கிருஷ்ணாராவ் ஆகியவர்கள்  நீதிபதி வாஞ்சுவை நேற்று பிற்பகல் கண்டு ஒரு மணி நேரம் வரை விவாதித்தனர். பொது...