Tagged: ஆணவப் படுகொலை

கழகத்தின் முற்றுகைப் போராட்டம் எதிரொலி மவுனம் கலைத்தது, தீண்டாமை ஒழிப்புப் பிரிவு “ஜாதிய ஒடுக்குமுறைகள் மூடி மறைக்கப்படுவது உண்மைதான்!”

கழகத்தின் முற்றுகைப் போராட்டம் எதிரொலி மவுனம் கலைத்தது, தீண்டாமை ஒழிப்புப் பிரிவு “ஜாதிய ஒடுக்குமுறைகள் மூடி மறைக்கப்படுவது உண்மைதான்!”

உடுமலைப்பேட்டையில் தலித் பொறியாளர் சங்கர் சில ஜாதி வெறியர்களால் கொடூரமாகக் கொலை செய்யப் பட்டார். கொலைக் குற்றவாளியாக கைது செய்யப்பட்ட வர்களில் ஒருவர் திண்டுக்கல் இந்து மக்கள் கட்சியின் நகர செயலாளர். தமிழ் நாட்டில் தொடர்ந்து நடந்து வரும் ஜாதி ஆணவப் படுகொலைகளையும் ஜாதிய ஒடுக்கு முறைகளையும் கண்டித்து திராவிடர் விடுதலைக் கழக சார்பில் சென்னை, திருப்பூரில் காவல்துறையை முற்றுகையிடும் போராட்டத்தை கழகத் தோழர்கள் தோழமை அமைப்புகளுடன் இணைந்து நடத்தி கைதானார்கள். காவல்துறையிலேயே ஜாதி-தீண்டாமைக் குற்றங்களைத் தடுப்பதற்காகவே தனிப் பிரிவு ஒன்று இருக்கிறது.  அதன் பெயர் ‘சமூகநீதி மற்றும் மனித உரிமை தனிப் பிரிவு’. இந்த அலு வலகத்தைத்தான் அதன் செயலற்றப் போக்கைக் கண்டித்து கழகம் முற்றுகை யிட்டது. கழகத்தின் போராட்டத்துக்குப் பிறகு, இத்துறையின் உயர் அதிகாரிகள் தங்கள் மவுனத்தைக் கலைத்து கருத் துகளைத் தெரிவித் துள்ளனர். ‘தினத்தந்தி’ தமிழ் நாளேடு சென்னையில் ‘டிடி-நெக்ஸ்டு’ (dtNEXT) என்ற ஆங்கில பதிப்பையும் வெளியிட்டு...