Tagged: அ.தி.மு.க.

காதலர்களைப் பிரித்து தற்கொலைக்குத் தூண்டிய வன்முறைக் கும்பல் மீது தாரமங்கலம் காவல்துறை நடவடிக்கைக் கோரி ஆர்ப்பாட்டம்

காதலர்களைப் பிரித்து தற்கொலைக்குத் தூண்டிய வன்முறைக் கும்பல் மீது தாரமங்கலம் காவல்துறை நடவடிக்கைக் கோரி ஆர்ப்பாட்டம்

சேலம் மாவட்டம் தாரமங்கலத்தை அடுத்த தெசவிளக்கு கிராமம் லட்சுமாயூரைச் சேர்ந்தவர் முருகன். இவர் லாரி கிளீனராக இருக்கிறார். இவரது மனைவி மகேஸ்வரி ( 35). இவர்களது மகள் சுமதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தாரமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10–ம் வகுப்பு தேர்வு எழுதி உள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த அ.தி.மு.க. கிளை செயலாளர் விஸ்வநாதனின் மகனும், ராசிபுரத்தில் உள்ள தனியார் பாலிடெக்னிக்கில் படித்து வருபவருமான சந்தோஷ் என்ற சாமிநாதன் சுமதியை காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த காதல் விவகாரம் விஸ்வநாதன் குடும்பத்துக்கு தெரிய வந்தது. இதனால் அவர்கள் மாணவியின் வீட்டுக்கு சென்று வசதியான வீட்டு பிள்ளையை மயக்குகிறாயா என்று கேட்டுள்ளனர். இதனால் மாணவி சாமிநாதனுடன் பேசுவதை நிறுத்தி விட்டார். 22-04-2014 அன்று நள்ளிரவு 12 மணிக்கு மாணவி வீட்டுக்கு சென்ற சாமிநாதன் ஏன் என்னுடன் பேசுவதில்லையென கேட்டுள்ளார். தன்னுடன் பேசாவிட்டால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ளப்போவதாகவும் அவர் மிரட்டியுள்ளார்....