தமிழக அரசை கண்டிக்கிறோம்
ஆசிரியர்கள் தேர்வில் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட வர்களுக்காக சமூக நீதியை புதை குழிக்கு அனுப்பிய அ.இ.அ.தி.மு.க. ஆட்சி இப்போது புதிய தலைமைச் செயலகக் கட்டிடத்தில் அமைக்க விருக்கும் உயர்தர மருத்துவமனை யின் மருத்துவருக்கான தேர்விலும் இட ஒதுக்கீட்டைப் புறக்கணித் துள்ளது வன்மையான கண்டனத் துக்கு உரியது. இதற்காக வெளியிடப்பட்ட அரசு அறிவிப்பில் மருத்துவர் தேர்வில் இடஒதுக்கீடு முறை மறுக்கப்பட் டுள்ளது. ‘சூப்பர் ஸ்பெஷாலிட்டி’ என்ற பெயரில் மருத்துவமனை தொடங்கப்படுவதால் இடஒதுக் கீட்டின் கீழ் தேர்வு செய்யப்படும் மருத்துவர்கள் இதற்கு தகுதியானவர் களாக மாட்டார்கள் என்று அரசு கருதுவது பார்ப்பனியக் கண் ணோட்டமேயாகும். இடஒதுக்கீடு தகுதி திறமைக்கு எதிரானது என்று பார்ப்பனர்கள் கூறும் கருத்தை ஜெயலலிதா ஆட்சியும் வழி மொழிகிறது. ‘சமூக நீதிகாத்த வீராங்கனை’ என்ற விருது பெற்ற முதல்வர் ஜெயலலிதா, இப்போது சமூக நீதியைப் புறக்கணிக்கும் வீராங்கனையாகி வருகிறாரா என்று கேட்க விரும்புகிறோம். இடஒதுக்கீட்டுக் கொள்கையை படிப்படியாகக் கைவிடுவதற்கான முயற்சியின் தொடக்கப் புள்ளி...