சமஸ்கிருதத்தைத் திணிக்காதே! சமஸ்கிருதத்தில் அறிவியலா?
சமஸ்கிருதத்தில் பல அறிவியல் கருத்துகள் இருக்கின்றன என்கிறார்கள். கண்டம் விட்டு கண்டம் பாயும் – விமானங்கள் குறித்து சமஸ்கிருதத்திலேயே நமது முன்னோர்கள் எழுதி வைத்துள்ளனர் என்று பேசினார் பிரதமர் மோடி! மனிதன் கற்பனையில் கண்ட கனவுகளும், அதில் உருவான எழுத்துகளுமே அறிவியலுக்கான ஆதாரங்கள் ஆகிட முடியாது. கோட்பாடு (தியரி), சோதனை (எக்ஸ்பெரிமென்ட்), கண்டறிதல் -இம் மூன்றையும் உள்ளடக்கிய செயல்பாடுதான் அறிவியல்! கண்டம் விட்டு கண்டம் பாயும் விமானங்கள் வேத காலத்தில் பறந்திருக்க முடியுமா? எரிபொருள் இல்லாமல் விமானம் பறக்க முடியாது. இரப்பர், அலுமினியம் போன்ற பொருள்கள் இல்லாமல் விமானத்தையே வடிவமைத்திருக்கவும் முடியாது. எல்லாவற்றுக்கும் மேலாக ‘பெர்னூலி’ கொள்கை, நியூட்டனின் விதிகள் தெரியாமல் பறப்பது பற்றிய ஒரு அடிப்படைப் புரிதலே வந்திருக்க முடியாது. “எல்லாம் நம்மிடத்திலே ஒரு காலத்தில் இருந்ததுதான். ஆனால் தொலைந்து போய்விட்டன” என்று பதில் கூறலாம். அது அறிவியலுக்கு எதிரானது. தொலைந்து போவது அவ்வளவு எளிது அல்ல. மனிதன் தனக்குப் பயன்படக்கூடிய...