Tagged: அரசியல் நிலைப்பாடு

தலையங்கம் தமிழக அரசியல் குழப்பம்: கழகத்தின் நிலைப்பாடு

தலையங்கம் தமிழக அரசியல் குழப்பம்: கழகத்தின் நிலைப்பாடு

ஜெயலலிதா மரணத்தைத் தொடர்ந்து தமிழ்நாட்டு அரசியலில் ஒவ்வொரு நாளும் திடீர் திடீர் மாற்றங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. அதிகாரத்தைக் கைப்பற்றுதலையே இலட்சியமாகக் கொண்டு செயல்படும் கட்சிகளில் அதன் ஒற்றை சர்வாதிகாரத் தலைமையில் வெற்றிடம் உருவாகிடும்போது கட்சி சிதறுண்டுதான் போகும். அணி சேர்க்கைகளுக்கு ஆதார சுருதியாக அதிகார மய்யங்களைக் கைப்பற்றுதலே இருக்குமே தவிர, கொள்கைப் பிரச்சினைகளுக்கு வாய்ப்பே இல்லை. அ.இ.அ.தி.மு.க. கட்சியே தமிழக பா.ஜ.க. தான். தமிழ்நாட்டு அரசியல் நிகழ்வுகளுக்கு மத அடையாளம் தந்து, கட்சி நிகழ்வுகளையே மதச் சடங்குகளாக மாற்றிய கட்சி அது. பகுத்தறிவு சிந்தனைக்கோ, பகுத்தறிவாளர்களுக்கோ, அக்கட்சியில் துளியும் இடமில்லை. கட்சி அமைப்பும், ஜாதிய கட்டமைப்புக் குள்ளேயே முடங்கிக் கிடந்தது. இந்த நிலையில் பிளவுபட்டு நிற்கும் அணிகளில் எந்த அணி கொள்கைக்கானது என்ற ‘தேடல்களில்’ இறங்குவது, ‘இருட்டறைக்குள் கருப்புப் பூனையை’த் தேடும் கதையாகவே இருக்கும். பெரியார் வாழ்ந்த காலத்தின் அரசியல் களமும், பொது வாழ்க்கை நேர்மையும் முற்றிலும் வேறானது. தனது கொள்கைகளை முன்னெடுத்துச்...