Tagged: அய்யப்பன் சாமி

“அய்யப்பசாமி; பறையுங்கோ!”

சபரிமலை அய்யப்பன் ‘கட்டை பிரம்மச்சாரி’ என்பதால் ‘மாதவிலக்கு’ எனும் ‘தீட்டுக்கு’ உள்ளாகும் பெண்களை கோயிலுக்குள் அனுமதிக்க முடியாதாம்! ‘அய்யப்பனுக்காக’ அவனது வழக்கறிஞர்கள் இப்படி வாதாடுகிறார்கள். ‘நியூஸ் 18’ தொலைக்காட்சி விவாதத்தில் (நவ. 7) பேசிய இரண்டு பார்ப்பனர்கள் (இதில் ஒருவர் பெண்) – பெண்களை அய்யப்பன் கோயிலுக்குள் அனுமதிக்கலாம் என்று கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி கூறுவதை ஏற்கவே முடியாது என்று அடம் பிடித்தார்கள். “கூடாது; கூடாது; இது அடாவடி.” அய்யப்பன், பிரம்மச்சாரி கோலத்தில் அங்கே இருக்கிறான். 10க்கு மேல் 50 வயதுக்குள் உள்ள பெண்கள் ‘பிரம்மச்சாரி’யை நேரில் தரிசித்தால் பகவான் கவனம் திசை திரும்பி விடாதா? பிரம்மச்சரியம் குலைந்து விடாதா? இது நாட்டுக்கே பேராபத்தாகி விடும் – என்று தொலைக்காட்சியில் பதறுகிறார்கள். ஆனாலும், ‘இவாள்கள்’ அய்யப்பனை இப்படியெல்லாம் அவமதிக்கக்கூடாது என்பதே அடியேனின் கருத்து. அய்யப்பன் பிரம்மச்சர்யம் என்ன அவ்வளவு பலவீனமானதா? பெண்களைப் பார்த்தாலே சபலத்துக்கு ஆளாகி விடுவானா? இதைக்...