Tagged: அப்துல் சமது

திப்பு சுல்தான் படத்தில் நடிக்காததால் ரஜினிக்கு கிடைத்த விருது!

திப்பு சுல்தான் படத்தில் நடிக்காததால் ரஜினிக்கு கிடைத்த விருது!

கோபி கழக மாநாட்டில் அப்துல் சமது ஆற்றிய உரை கோபியில் பிப்.28 அன்று திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய பார்ப்பன மதவாத எதிர்ப்பு மாநாட்டில் மனித நேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் அப்துல் சமது ஆற்றிய உரை: (சென்ற இதழ் தொடர்ச்சி) இன்றைக்கு ‘பாரதமாதா கி ஜே’ எனும் கோசம் போடும் ஆர்.எஸ்.எஸ் பார்ப்பன காவிக் கும்பலை பார்த்துக் கேட்கின்றேன், இந்த பாரதமாதா அடிமை சங்கிலியால் கட்டப்பட்டு கிடந்தபோது அதை உடைப்பதற்கு நாட்டு விடுதலைக்குப் பாடுபட்ட போரிட்டவர்களில் எத்தனை பேர் ஆர்.எஸ்.எஸ் பார்ப்பன காவிக்கும்பல்கள்?  ஒருவர் கூட இல்லையே! விடுதலைப் போராட்டத்தில் பங்கு பெறாத ஆர்.எஸ்.எஸ் கும்பல், பார்ப்பனக் கும்பல் இன்றைக்கு இந்தியாவின் ஆட்சிப் பீடத்தில் அமர்ந்து இருக்கிறது என்றால் அதற்குக் காரணமான பார்ப்பனீயம் ஒடுக்கப்பட்டிருக்கிறதா அல்லது நசுக்கப்பட்டிருக்கிறதா? எனக் கேட்கிறோம்.  இந்த கும்பலுக்குதான் இன்றைக்கு தேசபக்தி பீறிட்டு கொண்டு வருகிறது. விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொள்ளாதது மட்டுமல்ல காட்டிக்கொடுத்தது...

தமிழகத்தில் மதக்கலவரத்தை உருவாக்க தயாரிக்கப்பட்ட குறுந்தகடு!

தமிழகத்தில் மதக்கலவரத்தை உருவாக்க தயாரிக்கப்பட்ட குறுந்தகடு!

சென்ற இதழ் தொடர்ச்சி எச். ராஜா, இராம. கோபாலன், சுப்பிரமணிய சாமி பார்ப்பனர்கள் தமிழகத்தில் மதக் கலவரத்தை உருவாக்க உருவாக்கிய குறுந் தகட்டை தமிழக அரசு தடை செய்திருக்கிறது என்ற தகவலை அப்துல் சமது வெளியிட்டார். கோபியில் பிப்.28 அன்று திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய பார்ப்பன மதவாத எதிர்ப்பு மாநாட்டில் மனித நேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் அப்துல் சமது ஆற்றிய உரை: (சென்ற இதழ் தொடர்ச்சி) மராட்டியத்தில் கோவிந்த் பன்சாரே என்கிற பொதுவுடைமை இயக்கத் தலைவர், எழுத்தாளர் இருந்தார்.  அவரை நடைப்பயிற்சியின் போது சுட்டுக் கொன்றது பார்ப்பன காவிக்கும்பல். எதற்காக இந்த படுகொலை நடந்தது என நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். ‘யார்  இந்த சிவாஜி?’ என்ற ஒரு புத்தகத்தை கோவிந்த் பன்சாரே எழுதினார். சிவாஜி என்று சொன்னால் முஸ்லீம்களுக்கு எதிரான ஒரு மன்னர். சத்ரபதி சிவாஜி, முஸ்லீம்களுக்கு எதிராகக் களமாடியவர்; இந்துக்களின் தலைவர்; அவுரங்கசீப் போன்ற...

சங்பரிவாரங்களுக்கு அப்துல் சமது  கேள்வி

சங்பரிவாரங்களுக்கு அப்துல் சமது கேள்வி

இந்து ராஷ்டிரத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் நிலை என்ன? “பார்ப்பனருக்கு சேவகம் செய்வதே இந்து ராஷ்டிரம்” என்றார், ஆர்.எஸ்.எஸ். தத்துவத்தை உருவாக்கிய கோல்வாக்கர். “இந்து ராஷ்டிரத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் நிலை என்ன?” என்று கேள்வி எழுப்பினார் அப்துல் சமது. கோபியில் பிப்.28 அன்று திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய பார்ப்பன மதவாத எதிர்ப்பு மாநாட்டில் மனித நேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் அப்துல் சமது ஆற்றிய உரை: தமிழ்நாடு விரைவில் சட்டமன்ற தேர்தலைச் சந்திக்க இருக்கின்ற சூழலில் அரசியல் கட்சிகள் எல்லாம் யாருடன் கூட்டணி வைத்துக்கொள்ளலாம் என ஆளாய் பறந்துக் கொண்டிருக்கின்ற நிலையில் பார்ப்பன மதவாத எதிர்ப்பு மாநாட்டினை இங்கு திராவிடர் விடுதலைக் கழகம் நடத்துகின்றது.  காவல் துறை அனுமதி மறுத்தும் உயர்நீதிமன்றத்தை அணுகி அதன் அனுமதியோடு இம்மாநாடு நடைபெறுகிறது.  அடுத்த தேர்தலைப் பற்றி யோசிப்பவர்கள் சாதாரண அரசியல்வாதிகள்; ஆனால் அடுத்த தலைமுறையைப் பற்றி சிந்திப்பவர்கள் பெரியார் தொண்டர்கள்.  இதுதான் இம்மாநாட்டின்...