அன்புமணி மீதான வழக்கு என்ன?
அன்புமணி மீதான சி.பி.ஐ. வழக்குகள் குறித்து டெல்லி வட்டாரத்தில் விசாரித்தோம். “அவர் மீது முதல் வழக்கு, ம.பி. மாநிலம் இந்தூரில் பதிவு செய்யப்பட்டது. இங்கு கடந்த 2007 ஆம் ஆண்டு ‘இன்டெக்° மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம்’ என்ற பெயரில் சுரேஷ் சிங் என்பவர் புதிய மருத்துவக் கல்லூரியைத் தொடங்கினார். 2008-2009 ஆம் கல்வியாண்டில் இந்தக் கல்லூரி எம்.பி.பி.எ°. இரண்டாமாண்டு மாணவர் சேர்க்கைக்காக, இந்திய மருத்துவக் கவுன்சிலிடம் விண்ணப்பித்து. இந்திய மருத்துவக் கவுன்சில் குழு அங்கு சென்று ஆய்வு செய்து, ‘கூடுதல் மாணவர்களை சேர்க்கத் தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லை’ என அறிக்கை கொடுத்துவிட்டது. பின்னர் சுரேஷ் சிங் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். அதன் பேரில் நீதிமன்றமே ஒரு குழுவை அமைத்து ஆய்வு செய்ய, அந்தக் குழுவும் முதல் குழுவைப் போலவே அறிக்கை தாக்கல் செய்தது. இதன் பிறகுதான் சுரேஷ் சிங், அன்புமணியின் இலாகாவை நாடியிருக்கிறார். மத்திய சுகாதாரத்...