தலையங்கம் அடுத்து….?
தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாகத் திகழ்ந்த முதலமைச்சர் ஜெயலலிதா முடிவெய்திவிட்டார். ஆளுமைத் திறன் கொண்ட ஒரு பெண்ணாக தன்னை உயர்த்திக் கொண்டவர். பெண்களால் ஆட்சி சக்கரத்தை வலிமையோடு நகர்த்திச் செல்ல முடியும் என்று நிரூபித்தவர். தான் வழி நடத்திய கட்சிக்கு அவர் சர்வாதிகாரியாகவே செயல்பட்டார். அவரது விரல் அசைப்புக்கு அவரது அமைச்சர்களும், கட்சிப் பொறுப் பாளர்களும், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களும் அடிபணிந்து நின்றனர். ஆண்கள் ஆதிக்கமே கொடிகட்டிப் பறக்கும் அரசியல் உலகில் இது ஓர் அபூர்வக் காட்சி. கருத்து மாறுபாடு களையும் கடந்து பெண்களின் இத்தகைய ஆளுமைத் திறமையை பெரியார் பாராட்டியிருக்கிறார். இந்தியாவின் பிரதமராக இந்திரா காந்தி இருந்தபோது அவரது கொள்கையில் முரண்பாடுகள் இருந்தாலும்கூட ஒரு பெண் நாட்டை நிர்வகிக்க முடியும் என்பதற்கு பெருமையாக சான்று காட்டி, பெரியார் பேசினார். சுயமரியாதைத் திருமணம் பற்றிய பெரியார் உரையில் (அது பிறகு ஒலித் தட்டாகவும் வெளி வந்தது) இந்தக் கருத்து இடம்...