அணுஉலைகளுக்கான அமெரிக்க ஒப்பந்தத்தை மோடி கைவிட வேண்டும்
மேட்டூரில் கூடிய கழகச் செயலவைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம். ஆபத்துகளை உருவாக்கிடும் அணுஉலைகளைப் பயன்படுத்து வதை உலகநாடுகள் கைவிட்டு வருகின்றன. இந்த நிலையில் இந்தியாவில் மின் உற்பத்திக்கு என்று அணுஉலைகளைப் பயன் படுத்துவதில் நடுவண் அரசு தீவிரம் காட்டி வருகிறது. இது மக்கள் விரோத செயல்பாடா கும். அண்மையில் அமெரிக்கப் பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி “வெஸ்டிங் ஹவுஸ்” என்ற தனியார் நிறுவனத்திடம் 6 அணு உலைகளை இந்தியாவில் நிறுவிடும் ஒப்பந்தத்தில் கையெ ழுத்திட்டுள்ளார் என்ற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. இந்த நிறு வனம் தரமற்ற ஆபத்தான எந்தி ரங்களை வழங்கிய குற்றச் சாட்டு களுக்குள்ளான நிறுவனம்ஆகும். அறிவியலில் வளர்ந்ததாகக் கூறப்படும் அமெரிக்காவே அணுஉலை ஆபத்துகளை கருத்தில் கொண்டு 1979ஆம் ஆண்டுக்குப் பிறகு கடந்த 40 ஆண்டுகளாக அணுமின் நிலையங்களைத் தொடங்க வில்லை என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும். கலிபோர்னியா மாகாணத்தில் செயல்பட்டு வந்த கடைசி அணுமின் நிலையமும் மூடப்படவிருக்கிறது. ஆனால் அதே...