இனாம் மசோதாவும் வைஸ்ராயும் நிராகரித்த காரணம் என்ன?

 

 

“உரிமையைப் பறிமுதல்” செய்கிறது என்பது ஒன்றே

– உண்மை விளம்பி

திருத்துறைப் பூண்டியில் நடந்த தஞ்சை ஜில்லா சுயமரியாதை மகாநாட்டில் தோழர் கே.எம். பாலசுப்பிரமணியம் தன்னுடைய சொற்பொழிவில், ஜஸ்டிஸ் கட்சி நிறைவேற்றிய மசோதாவை வைஸ்ராய் அவர்கள் அங்கீகரிக்க மறுத்து நிராகரிக்கக் காரணம், வைஸ்ராய் இம்மசோதாவானது இனாம் தாரர்களின் உரிமைகளை (குடிவார உரிமை) பறிமுதல் செய்து இனாம் குடிகளுக்கு வழங்கும் தன்மையது என்று அபிப்பிராயப்பட்டதேயாகும் என்று கூறினார். இதை எதற்காக எடுத்துரைத்தார் எனின், ஜஸ்டிஸ் கட்சியும் கூடிய அளவு ஏழை மக்களுக்கு, உதுணீணூணிணீணூடிச்tடிணிண (பறிமுதல்) என்ற முறையை சட்டபூர்வமாகக் கையாண்டு பிழைப்புவழி செய்து வந்துள்ளது என்பதை விளக்கவே. இது பலருக்குப் போதுமான அளவு பொதுவுடமை தத்துவத்தை புரட்சி மூலம் செய்யாத உப்புச்சப்பில்லாச் சட்டமாய்த் தோன்றலாம். ஆனால் இது உதுணீணூணிணீணூடிச்tணிணூதூ இடச்ணூச்ஞிtஞுணூ (பறிமுதல் தன்மையை) கொண்டிலது என்று கூறுவது தவறாகும். இதைவிடத் தவறு, வைஸ்ராய் இந்த அபிப்பிராயத்தைக் கொள்ளவில்லை என்று கூறுவது.

அப்படியிருந்தும், அந்த மகாநாட்டில் சட்டம் பயின்ற தோழர் முத்துசாமி வல்லத்தரசு, வைஸ்ராய் தன் அங்கீகாரத்தை மறுத்ததற்குக் காரணம் பறிமுதல் தன்மையை இனாம் மசோதா கொண்டுள்ளது என்பது அல்ல என்று திருப்பித் திருப்பி வாதாடினார். இது விஷயத்தைச் சந்தேகமறத் தெரிய விரும்பும் தோழர்கள் 22236 சனிக்கிழமை வெளிவந்த “இந்து”, “ஜஸ்டிஸ்”, ” மதராஸ் மெயில்”, “இந்தியன் எக்ஸ்பிரஸ்” போன்ற ஆங்கிலப் பத்திரிக்கைகளைப் பார்த்தால் உண்மை விளங்கும். அதில் வைஸ்ராய் அவர்களின் கடிதம் பிரசுரிக்கப்பட்டிருக்கிறது. அதில் கீழக்கண்ட வாக்கியம் இருப்பதை அனைவரும் காணலாம்.

” your Excellency ……. I hereby signify to you that my reason for withholding my assent from the Madras Estates Land Act, is that .. … I have reached the conclusion that the Act is Expropriatory in that it involves loss of Kudivaram of land etc ..”

“நான் இந்த இனாம் மசோதாவிற்கு என் சம்மதியைக் கொடுக்க மறுப்பதற்குக் காரணம், இனாம்தாரர்களின் குடிவார உரிமையை இது பறிமுதல் செய்யும் தன்மையது என்ற முடிவிற்கு நான் வந்ததேயாகும்.”

உண்மை இப்படியிருக்க, தோழர் வல்லத்தரசு எந்தப் பத்திரிகையைப் படித்து இதை மறுத்தாரோ தெரியவில்லை. அபிப்பிராயம் தவறுதலாயினும் அடிப்படையான விஷயங்கள் தவறாகா.

குடி அரசு கட்டுரை 05.04.1936

 

You may also like...