விஞ்ஞானிகள் கடும் கண்டனம்: மருத்துவ சோதிட வகுப்பைத் தொடங்குகிறது மருத்துவக் கவுன்சில்
ஆயுர்வேத மருத்துவப் படிப்பில் ‘மருத்துவ சோதிடம்’ என்ற புதிய வகுப்பை இந்திய மருத்துவக் கட்டமைப்புக்கான தேசிய கவுன்சில் உருவாக்கியுள்ளது. இதற்கு ‘அறிவியல் கழகம்; தடைகள் தகர்ப்பு’ என்று விஞ்ஞானிகள் – அறிவியலாளர்களைக் கொண்ட அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
வானத்திலுள்ள கிரகங்கள் மனித உடல்கள் மீதும் உணவியல் மீதும் தாக்கத்தை உருவாக்குகிறது என்பது அறிவியலுக்கு எதிரான மூடநம்பிக்கை. இந்த மூட நம்பிக்கைகளை அறிவியல் பாடத்தில் சேர்ப்பது கண்டனத்துக்குரியது என்று அந்த அமைப்பு அ றிக்கை வெளியிட்டுள்ளது.
இந்த வகுப்புக்கு இதுவரை 1000 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். மருத்துவ அறிவியல் பயிலும் மாணவர்களை மூடநம்பிக்கைகளில் ஆழ்த்தும் இந்த வகுப்பு, இந்திய கல்வி முறையை மதிப்பிழக்கச் செய்து நாட்டுக்கு கேடு விளைவிப்பதாகி விடும். இந்த கேலிக் கூத்து நாடகங்களை குடிமக்கள் வேடிக்கைப் பார்க்கக் கூடாது; எதிர்க்க வேண்டும் என்று அறிவியல் கழகம் தனது கண்டன அறிக்கையில் கூறியுள்ளது.
பெரியார் முழக்கம் 02032023 இதழ்