தமிழ் நாட்டின் உயர் நீதிமன்றத்தில் மலையாளிகளின் ஆதிக்கமா?

நண்பர்களே!

சென்னை உயர் நீதிமன்றத்திற்குப் புதியதாக நியமிக்கப்பட்டுள்ள புதிய நீதிபதிகள் பட்டியலில் கேரளாவைச் சார்ந்த டெல்லி உச்ச நீதிமன்றத்தில் பணியாற்றும் சுப்ரமணிய பிரசாத் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால் இவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக ஒருபோதும் பணியாற்றியவர் அல்லர். எங்கோ டெல்லியில் வழக்கறிஞராக உள்ள ஒருவரை தமிழ் நாட்டிற்கும் , சென்னை உயர் நீதிமன்றத்திற்கும் சம்பந்தமில்லாத ஒருவரை நியமிப்பது சரியா?

சமூக நீதிக்கு முன்னோடியாக உள்ள தமிழ் நாட்டில் இன்றும் கூட சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக தேர்வு செய்யப்படாமல் வாய்ப்பு மறுக்கப்பட்டு வரும் சமூகப் பிரிவினர்களான பிரன்மலைக் கள்ளர்கள், வண்ணார், அருந்ததியர், ஆசாரி, கோனார், முத்தரையர், நாவிதர், போயர், மற்றும் ஏராளமான சமூக பிரிவினரும் மற்றும் பெயரளவில் ஒருவர் மட்டுமே இருக்கும் மீனவர், வன்னியர் போன்ற சமூகப் பிரிவுகளில் ஏராளமான திறமை வாய்ந்த வழக்கறிஞர்கள் உள்ள நிலையில் அவர்களுக்கு வாய்ப்பு வழங்காமல் எங்கோ டெல்லியில் இருக்கும் அதிலும் கேரளாவைச் சார்ந்த ஒருவருக்கு வாய்ப்பு வழங்குவது சமூக நீதியை குழி தோண்டி புதைக்கும் செயல் ஆகும். அதோடு மட்டுமல்லாமல் ஏற்கனவே தமிழ் நாட்டின் தலைமை வழக்கறிஞராக கேரளாவைச் சார்ந்த விஜய நாராயணன் என்பவரை நியமித்து இருப்பதோடு அரசு கூடுதல் வழக்கறிஞராக இன்னொரு கேரளாவைச் சார்ந்த பெண் வழக்கறிஞரை நியமிப்பது என்ன நியாயம்? இது அநீதி அல்லவா?
தமிழ் நாட்டு வழக்கறிஞர்களுக்கு இழைக்கப்படும் அநீதி அல்லவா?

கேரளா பாலக்காட்டைப் பூர்வீகமாக கொண்ட டெல்லி வழக்கறிஞர் சுப்பிரமணியம் பிரசாத்தை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு நீதிபதியாக நியமனம் செய்வதைத் தமிழகம் ஒருபோதும் ஏற்காது.

ஆகவே சென்னை உயர் நீதிமன்றமே! மத்திய பிஜேபி அரசே!

சென்னை உயர் நீதிமன்றத்திற்கு கேரளாவைச் சார்ந்த சுப்ரமணிய பிரசாத்தை நீதிபதியாக நியமிக்கும் உத்தரவைத் திரும்பப் பெறு !

தமிழ் நாட்டு மக்களை போராட்டத்திற்குத் தள்ளாதே!

*- கொளத்தூர் தா.செ.மணி*
தலைவர்,
திராவிடர் விடுதலைக் கழகம்.

You may also like...