பொது வாசக சாலைகளில் பார்ப்பன ஆதிக்கம்
எல்லா மக்களின் பொது நலத்திற்கென்று ஏறக்குறைய ஒவ்வொரு முக்கிய பட்டணங்களிலும் வாசக சாலைகள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. அவைகள் பெரும்பாலும் பார்ப்பனரல்லாதார் பணத்தைக் கொண்டே நடப்பதாயிருந்தாலும் பார்ப்பன ஆதிக்கமே அதில் தலைசிறந்து விளங்கும். சிற்சில வாசக சாலைகளில் பார்ப்பனரல்லாதவர்களே காரியதரிசிகளாகக்கூட இருக்கலாம். ஆனாலும், அவ்வூர் முனிசீப்போ, டிப்டி கலெக்டரோ, மேஜிஸ் திரேட்டோ, சர்க்கிள் இன்ஸ்பெக்டரோ, ரிவினியூž இன்ஸ்பெக்டரோ பார்ப்ப னர்களாயிருந்து விட்டால் இந்தப் பார்ப்பனரல்லாத வக்கீல்களோ, பெரிய மனிதர்களோ அப்பார்ப்பன உத்தியோக மெம்பர்களுக்கு அடிமையாயிருப் பதுடன் அப்பார்ப்பன மெம்பர்கள் செய்யும் பார்ப்பனீயப் பிரசாரத்திற்கு செகரட்ரி என்கிற பெயரால் கையாட்களாகவும் இருந்து வருகிறார்கள். நமது நாட்டில் உள்ள ஒவ்வொரு வாசக சாலையிலும் “சுதேசமித்திரன்”, “இந்து” முதலிய பார்ப்பனீயப் பிரசார பார்ப்பனப் பத்திரிகைகள் வந்து கொண்டிருக் கும். “இந்து”, “சுதேசமித்திரன்” இல்லாத ரீடிங்குரூம் ஒரு ரீடிங்கு ரூமாகுமா என்று சொல்லிவிடுவார்கள். தங்கள் ரீடிங்கு ரூமுக்கு மெயில் பத்திரிகை வருகிறது என்று பெருமையும் பேசிக் கொள்வார்கள். ஆனால், “திராவிடன்”,...
