சுயமரியாதைப் பிரசாரம்
கனவான்களே! இந்த இடங்களில் இதற்கு முன் அநேக தடவைகளில் வந்து பேசியி ருக்கின்றேன். அப்போது வந்த சமயங்களில் நான் எதைப்பற்றி பேசினே னோ அதே விஷயங்களைப்பற்றித்தான் இப்போதும் பேச வந்திருக் கின்றேன். ஆனால் அந்தக் காலங்களில் எனது பிரசங்கத்தைக் கேட்க வந்த ஜனங்களை விடவும் உற்சாகத்தைவிடவும் இப்போது எத்தனையோ மடங்கு அதிகமான ஜனங்களும் உற்சாகங்களும் காணப்படுவது எனக்கே ஆச்சரிய மாய் இருக்கிறது. ஒரு சமயம் எனது கொள்கைகள் ஏதாவது மாற்றமடைந்து விட்டதா என்பதாக நானே யோசித்துப் பார்ப்பதுண்டு. எவ்வளவு யோசித் தாலும் எனது பழைய கொள்கைகளிலிருந்து ஒரு சிறிதும் மாற்றிக் கொண்ட தாக எனது மனச்சாக்ஷி சொல்லுவதே இல்லை. மகாத்மா காங்கிரஸ் காலத்திலும், அதற்கு முன் நான் தனியே அபிப் பிராயம் கொண்டிருந்த சமயத்திலும் எந்தக் கொள்கையில் நம்பிக்கை கொண்டிருந்தேனோ அவற்றில் ஒரு சிறிதும் மாற்ற மேற்பட்டதாக எனக்குத் தோன்றுவதே இல்லை. அதாவது மகாத்மாவின் ஒத்துழையாமை காங்கிர சுக்கு முன்னால் பார்ப்பனரல்லாதார்...
