Author: admin

தென்னாட்டுத் தலைவர்களின்               சுற்றுப் பிரயாணத்தின் பெருமை 0

தென்னாட்டுத் தலைவர்களின் சுற்றுப் பிரயாணத்தின் பெருமை

தென்னாட்டுத் தலைவர்கள் என்று சொல்லப்படுவோர்கள் வோட்டு வேட்டையென்னும் சுற்றுப் பிரயாணங்களில் ஆங்காங்கு நடக்கும் திரு விளையாடல்களை பிராமணப் பத்திரிகைகள் மறைத்து விட்டு தங்களுக்குப் பெருமை உண்டாகும்படியாக இல்லாத சங்கதிகளையும், நடக்காத கௌரவங் களையும் எழுதி பாமர ஜனங்களை ஏமாற்றி வருகிறது. பிராமணரல்லாத வாரப் பத்திரிகைகள் சிலதும் உண்மைகளை மறைத்துவிடுகிறது. தலைவர் களின் சுற்றுப் பிரயாணங்களின் யோக்கியதையை அறியவேண்டுமானால் “திராவிடன்” பத்திரிகையை வாங்கிப் படித்தால் உண்மை விளங்கும். சுய ராஜ்யக் கட்சியை எதிர்ப்பவர்களுக்கும் பிராமணரல்லாதார்களுக்காக பாடு படும் பிராமணரல்லாதார் கட்சிக்கும் பிராமணர்களின் யோக்கியதையை தைரியமாய் எடுத்து சொல்லுகிறவர்களுக்கும் யோக்கியதையும் மதிப்பும் இருக்கிறதா என்பதையும் நன்றாய் அறியலாம். தூத்துக்குடியில் நடந்த விஷயங்களும் திருச்சியில் நடந்த விஷயங்களும் தலைவர்களைக் கேட்ட கேள்விகளும் அதற்குத் தலைவர்கள் சொன்ன பதில்களையும் பிராமணப் பத்திரிகைகள் பிரசுரிக்காமல் விட்டுவிட்டிருக்கிறது. ஆகையால் அப்பத்திரி கைகளின் பொய் ஆதாரங்களையும் பொய்த் தலையங்கங்களையும் கண்டு ஏமாந்து போகாமல் இருக்கும்படியாய்க் கேட்டுக் கொள்ளுகிறோம். குடி அரசு –...

எது வீணான அவதூறு ? 0

எது வீணான அவதூறு ?

ஸ்ரீமான் எஸ்.ராமநாதன் காரைக்குடியில் சொன்னதாகக் காணப்படும் கதர் இயக்க சம்மந்தமான விஷயங்களுக்கு பதில் அடுத்த வாரம் எழுது வதாய் குறிப்பிட்டிருந்தோம். காரணம் என்னவென்றால் அவ்வார்த்தைகள் உண்மையாய் ஸ்ரீமான் ராமநாதன் அவர்களால் வெளியிடப்பட்டதுதானா என்றறிவதற்காக வேண்டியே அப்படி எழுதியிருந்தோம். ஆயினும் இதுவரை அவற்றை மறுக்கத்தக்க விஷயம் ஒன்றும் நமக்கு எட்டவில்லை. ஆதலால் அவற்றிற்கு நம்முடைய சமாதானத்தை எழுதிவிட வேண்டியவர் களாகிறோம். ஏனெனில் மக்களை ஏமாற்றி சிலர் பிழைப்பதற்காக செய்யப் படும் சூழ்ச்சிகளை நாம் கண்டிக்கப் புறப்படும் போதெல்லாம், இதுவரை நமது கண்டனத்தை கண்டிக்க வந்தவர்கள் ஒருவராவது நாம் என்ன சொன்னோம், அதற்கு அவர்கள் சொல்லுகிற பதில் என்ன? என்பதைக்காட்டாமல், வகுப்புத் துவேஷம், வகுப்பு உணர்ச்சி, பொறாமை, குரோதம் என்கிற வார்த்தைகளைச் சொல்லி தப்பிக்கவோ, மழுப்பவோ, ஏமாற்றவோ, பார்க்கிறார்களேயல்லாமல் யோக்கியப் பொறுப்புடன் நடந்து கொள்பவர்களை காண்பது அரியதாய் விட்டது. அப்படிப்பட்ட சமயத்தில் ஸ்ரீமான்கள் ராமநாதன், காசி விஸ்வ நாதஞ் செட்டியார் சம்பாஷணையானது, நாம் பொறாமை,...

டாக்டர் வரதராஜுலு நாயுடுவின் சுற்றுப் பிரயாணம் 0

டாக்டர் வரதராஜுலு நாயுடுவின் சுற்றுப் பிரயாணம்

டாக்டர் வரதராஜுலு நாயுடு அவர்கள் தனது சுற்றுப் பிரயாணத்தில் நாகப்பட்டணம் முனிசிபல் உபசாரப் பத்திரத்திற்கு பதிலளிக்கும்போது வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் வேண்டுமென்று பேசினார். அதாவது பஞ்சமர் முதலிய சிறுபான்மையோருக்கு தனித் தொகுதி வகுத்து தேர்தல் முறையை அளிக்க வேண்டும் என்று பேசியிருக்கிறார். (இது 21-3-26 தமிழ்நாடு பத்திரிகையின் 7 – வது பக்கம் 23, 24, 25, 26 – வது வரிகளில் பிரசுரமாயிருக் கிறது) நாம் கேழ்க்கும் முதல் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் இதேதான். இது சமயம் பஞ்சமர்களுக்கு டாக்டர் நாயுடு சொல்லுகிறபடி செய்தால்கூட போது மானது. ஆனாலும் பஞ்சமர் சிறுபான்மையோரல்ல என்பதை டாக்டர் நாயுடு அவர்களுக்குத் தெரிவித்துக் கொள்ளுகிறோம். பஞ்சமர் என்போர் இந்தியா வில் ஐந்தாவது வகுப்பார் என்று சொல்லுவது நிஜமல்லாமலிருந் தாலும் தேச மொத்த ஜனத் தொகையில் 5-ல் ஒன்றுக்கு மேலாயிருக்கிறார்கள். இந்த கணக்கு டாக்டர் நாயுடு அவர்களுக்குத் தெரிந்ததுதான். ஜஸ்டிஸ் கட்சியா ருடைய வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தின் தத்துவமும் இதுதான்....

பார்ப்பனர் – பார்ப்பனரல்லாதார் யுத்தம் தொடங்கப்பட்டு விட்டது 0

பார்ப்பனர் – பார்ப்பனரல்லாதார் யுத்தம் தொடங்கப்பட்டு விட்டது

கொஞ்ச காலமாக நம் நாட்டுப் பார்ப்பனரல்லாதார் மக்கள் தங்களது சுயமரியாதை உணர்ச்சி பெற்று பார்ப்பனீய அடிமைத் தன்மையில் இருந்து விடுபடவேண்டும் என்கிற உணர்ச்சி பெறுகிற காரணத்தால் இப்பார்ப்பனர் கள் இவ்வுணர்ச்சியை அடக்கி ஒழிக்க பல வழிகளிலும் முயற்சித்து வருவது பொது விஷயங்களில் கண்ணோட்டம் செலுத்திவரும் யாவரும் அறிந்ததே. அதாவது 10 வருஷங்களுக்கு முன்னால் டாக்டர் நாயர் பெருமானும் தியாகராய பெருமானும் அரசியல் துறையிலும் காங்கிரஸ் இயக்கத்திலும் எவ்வளவு தூரம் ஈடுபட்டிருந்தார்கள் என்பதும் அக்கால அரசியல் காங்கிரஸ் கான்பரன்சுகளில் தலைமை வகித்தல், அமிதவாதமான சொற்பொழிவு நிகழ்த்துதல், கமிட்டியில் சாட்சி சொல்லுதல், தேசீய அபிப்பிராயம் சொல்லு தல், இரகசிய போலீசாரின் கண்காணிப்புக்கு ஆளாகுதல் முதலிய காரியங் களில் தற்காலம் மிக பெரிய தேசபக்தர், தேசத் தொண்டர், தேசீய வீரர், தேசீயத் தலைவர் என்று சொல்லப்படுவார்கள். எவர்க்கும் இளைத்தவர்கள் அல்லாதாராயிருந்து வந்ததும் யாவரும் அறிந்ததே. இப்பொழுதாவது பார்ப்பனரல்லாதார் “தேசபக்தர்” ஆவதென்றால் வெகுசுலபமான காரியம். ஏனெனில் பார்ப்பனர்களுக்கு...

“ஸ்ரீமான் கலியாணசுந்திர முதலி”யாரின் சுற்றுப் பிரயாணம் 0

“ஸ்ரீமான் கலியாணசுந்திர முதலி”யாரின் சுற்றுப் பிரயாணம்

வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தால் வகுப்புத் துவேஷம் உண்டாகி விடும் என்று பயப்படுவதாய்ச் சொல்லிக்கொண்டு அதற்கெதிர்ப் பிரசாரம் செய்ய பிராமணர்களுடன் சுற்றுப் பிரயாணம் செய்யும் ஸ்ரீமான் திரு.வி.கலி யாணசுந்திர முதலியார் அவர்கள் ஆங்காங்கு கண்ட காட்சியைப் பற்றி சொல்லும் போதும், எழுதும் போதும், தான் போனவிடங்களில் வகுப்புத் துவேஷங்கள் விளங்கிக் கொண்டிருப்பதாய்ச் சொல்லுகிறார். வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் வெகுகாலமாய் இல்லாமலிருந்தும் நாட்டில் ஏன் வகுப்புத் துவேஷங்கள் ஏற்பட்டிருக்க வேண்டும்? இம்மாதிரி வகுப்புத் துவேஷங்கள் நாட்டில் இருப்பதற்குக் காரணம் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் ஏற்பட்ட தினாலா ஏற்படாததினாலா? என்பதை நமது ஸ்ரீமான் முதலியார் அவர்கள் தயவு செய்து பிராமணர்கள் இல்லாத சமயத்தில் தனியே உட்கார்ந்து தனது நெஞ்சில் கையை வைத்துப் பார்க்கும்படி வேண்டிக் கொள்ளுகிறோம். குடி அரசு – செய்தி விளக்கம் – 18.04.1926

இதற்கு என்ன பெயர் 0

இதற்கு என்ன பெயர்

கோயமுத்தூர் நகர பரிபாலன சபையில் பார்ப்பன கவுன்சிலர்களின் துவேஷங்களும் உபத்திரவங்களும் கோயமுத்தூர் முனிசிபல் சேர்மனிடம் பொறாமைக் கொண்ட சில ஆசாமிகளின் விஷமங்களும் கோயமுத்தூர் விஷயங்களைப் பத்திரிகையில் கவனித்து வருகிறவர்களுக்கு நன்றாய் தெரிந்திருக்கும். இப்போது அது நாளுக்கு நாள் முற்றி வருவதுடன் அப் பார்ப்பனர்களுக்கு நாளுக்கு நாள் புத்திகூட மழுங்கிக்கொண்டு வருகிற தென்றே சொல்லவேண்டியிருக்கிறது. சென்ற வாரத்தில் கோயமுத்தூர் முனி சிபாலிட்டியில் ஒரு பார்ப்பனர் பார்ப்பனரல்லாத சேர்மெனைப் பற்றி ஒரு தீர்மானம் கொண்டு வந்த விஷயம், மற்றொரு இடத்தில் பிரசுரித்திருக் கிறோம். அதாவது சேர்மனுக்கு முனிசிபாலிட்டியில் அதிகமான வேலை இருப்பதால், அவர் தனக்குள்ள கௌரவ உத்தியோகங்களில் ஏதாவது ஒன்றை ராஜினாமா கொடுத்துவிடவேண்டும் என்ற பொருள் கொண்ட தீர்மானம் கொண்டு வந்தாராம். இத்தீர்மானத்தை ஈரோடு சேர்மன் ஸ்ரீமான் ஸ்ரீனிவாச முதலியார் அவர்களாயிருந்தால் காலடியில் போட்டு நசுக்கி இருப்பார். ஸ்ரீமான் ரத்தினசபாபதி முதலியாரோ அவ்விதம் செய்யாமல் வேண்டுமென்றே கண்ணியமாய் அதை ஏற்றுக்கொண்டு விவகாரத்திற்கு விட்டதோடு தானும்...

சுயராஜ்யக் கக்ஷியும் மதுவிலக்கும்  தென்னாட்டு பிராமணர் சக்தி 0

சுயராஜ்யக் கக்ஷியும் மதுவிலக்கும் தென்னாட்டு பிராமணர் சக்தி

பிராமணக் கக்ஷியாகிய சுயராஜ்யக் கக்ஷி சட்டசபைகளில் மது விலக்கு செய்யும் ஆதலால் அவர்களுக்கு வோட்டுக் கொடுங்களென்று இன்னமும் ஸ்ரீமான் சி.ராஜகோபாலாச்சாரியார் பிரசாரம் செய்து வருவது பொது ஜனங்களுக்குத் தெரியும். ஆனால், மதுவிலக்குக்கும் சுயராஜ்ய கக்ஷிக் கும் எவ்வளவு பொருத்தமிருக்கிறது என்பதை ஓட்டர்கள் நினைத்துப் பார்க்கவேண்டும். 1. சுயராஜ்யக் கக்ஷித் தலைவர் பண்டிதர், வட இந்தியாவில் சாராயம் காய்ச்சும் ஒரு பெரிய கம்பெனியில் பங்குக்காரர் என்று கேள்விப் படுகிறோம். அல்லாமலும் மதுவருந்துவது குற்றமல்ல வென்று நினைத்து அளவாய்க் குடிக்கும் மேல் நாட்டு நாகரிகத்தில் ஈடுபட்டவர். 2. சுயராஜ்யக் கக்ஷித் தலைவரை நடத்துகிறவரும் சுயராஜ்யக் கக்ஷி யைத் தோற்றுவித்தவரும் காங்கிரஸ் காரியதரிசியுமான ஸ்ரீமான் ஏ. ரெங்க சாமி அய்யங்கார் ஒவ்வொரு வீட்டிலும் பிராந்தி என்னும் சாராயம் வைத்திருக்க வேண்டியது அவசியம் என்று விளம்பரம் செய்து சாராயம் விற்கிறவர். 3. ஸ்ரீமான் சீனிவாசய்யங்காரைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. 4. ஸ்ரீமான் சி.வி. வெங்கிட்டரமணய்யங்காரோ தன் தென்னை...

நாடார் மஹாஜன சங்க 11 – வது மகாநாடு 0

நாடார் மஹாஜன சங்க 11 – வது மகாநாடு

இம்மாதிரியான வகுப்பு மகாநாடுகள் நமது நாட்டில் நடந்து வருவது நாட்டின் முற்போக்குக்கு ஏற்றதா இல்லையா என்பது கேள்வி. பலர் இது கெடுதல் எனச் சொல்லுகிறார்கள். எனினும் வகுப்பு மகாநாடு அல்லாத (வகுப்பு வாதமல்லாத) மகாநாடுகளே இந்நாட்டில் இல்லை என்பதே எனது அபிப்பிராயம். ஒவ்வொரு வகுப்பாரும் தங்களுடைய உரிமைகளைக் கேட்கவே மகாநாடுகள் நடத்துகிறார்கள் . மற்றொரு வகுப்பார் தலையெடுக் காமல் அடிக்கவும், மற்ற வகுப்பார் உரிமைகள் பெறாமலிருக்கவுமே பலர் பல மகாநாடுகளை நடத்துகிறார்கள் . ஆனால் நமது நாடார் மகாநாடோ அப்படி இல்லை. பிறருக்கு கெடுதல் செய்யாமல் நாடார் மகாஜனங்களின் நன்மையை நாடியும், உரிமைகளைப் பெறவுமே இம்மகாநாடு நடைபெறு கின்றது. வகுப்பு மகாநாடுகளும், வகுப்பு வாதங்களும் மேல் ஜாதியாராலும் அவர்களுடைய கொடுமைகளாலும் தான் ஏற்பட்டவை. துவேஷத்தை உண் டாக்க நாம் மகாநாடுகள் கூட்டுவதில்லை. துவேஷம் வேண்டாம், எல்லோ ரும் சமம் என்று சொல்லுங்கள் என்று சொல்லவே நாம் இம்மகாநாடு கூட்டியிருக்கிறோம். நம் நாட்டில்...

தொழிலாளர் இயக்கம் 0

தொழிலாளர் இயக்கம்

தற்கால நிலைமை தற்காலம் நமது நாட்டிலுள்ள தொழிலாளர் இயக்கங்கள் என்று சொல்லப்பட்டவைகள் எடுப்பார் கைக் குழந்தைகள் போல் தங்களுக்கென எவ்வித சக்தியும் இல்லாமலும், தங்களுக்கு தேவை இன்னதென்றுகூட அறிய முடியாமலும், தாங்களே தங்கள் சங்கத்தை நடத்திக்கொள்ள சக்தியற்றவர் களாகவும் இருந்து கொண்டிருப்பதுமல்லாமல் சுயநலத்துக்காகவும் வயிற்றுப் பிழைப்புக்காகவும் அரசியலில் சம்பந்தப்பட்டு அரசியல் பேரைச் சொல்லிக் கொண்டு வாழும் சில பொறுப்பற்றவர்கள் தொழிலாளர்களில் வாயாடிகளாக வும் செல்வாக்குற்றவர்களாகவும் இருப்பவர்களை பணங் கொடுத்தோ உதவி செய்தோ அவர்கள் மூலமாய்த் தங்களை தொழிலாளர்களுக்குத் தலைவர் களாகும்படிச் செய்து, அதன் மூலமாய் தலைமை பெற்ற சில சுயநலக்காரர் களை தங்களுக்குத் தலைவர்களாகவைத்துக் கொண்டு அவர்கள் சொல்லுகிற படி ஆடவும் ஒருவரை அடியென்றால் அடிக்கவும் திட்டும்படி சொன்னால் திட்டவும் இம்மாதிரியான காரியங்களைச் செய்து கொண்டு அவர்களின் கை ஆளுகள் போலிருந்து அந்நியரின் நன்மைக்காக தங்கள் சங்கங்களை விட்டுக்கொடுக்கும்படியான நிலைமையிலிருந்து வருகிறது. இவ்விதமான நிலைமையிலுள்ள சங்கங்கள் நாட்டிற்காவது தொழிலாளர்களுக்காவது என்ன நன்மையைக்...

மகாத்மா வரவேற்பு 0

மகாத்மா வரவேற்பு

கதரின் பேரால் நமது பார்ப்பனர்கள் பார்ப்பனரல்லாத சமூகத்திற்கு இடையூறு அதாவது அரசியலின் பேரினாலும் கடவுள், மோக்ஷம், மதம், என்னும் பேரினாலும் எவ்வளவு கொடுமையும், சூழ்ச்சிகளும் செய்து வந்தார் களோ வருகிறார்களோ அதுபோலவே ஸ்ரீமான் சி. இராஜகோபாலாச்சாரியார் முதலிய பார்ப்பனர்களும் அவருடைய பார்ப்பன சிஷ்யர்களும் பார்ப்பன ரல்லாத சில கூலிகளும் சூழ்ச்சி செய்து வருவதாக நாம் நினைப்பதற்கு இடமேற்பட்டு வருவதற்கு தகுந்தாற்போல் பல இடங்களில் இருந்து சமாச்சா ரங்களும் வந்து கொண்டிருக்கின்றன. இச்சூழ்ச்சிகளுக்கு பெரும்பாலும் மகாத்மா வரவை ஒரு ஆயுதமாக உபயோகப்படுத்திக் கொள்ளுகிறார்கள் என்றும் தெரியவருகிறது. “மகாத்மாவின் தென்னாட்டு விஜயம்” என்னும் பேரால் கதர் பண்டை செலவு செய்து ஆங்காங்கு போய் பார்ப்பனீய விஷங் களைப் பரப்ப உபயோகித்துக் கொள்ளுவதாகவும் தெரிகிறது. ஆன போதி லும் நமக்கு அதைப்பற்றிப் பயம் ஒரு சிறிதுமில்லை என்றே சொல்லுவோம். மகாத்மாவை நாம் எல்லோரும் சேர்ந்து வரவேற்க வேண்டியதுதான். நாம் எல்லோரும் அவரது வருகையின் கருத்துக்கு ஆதரவளிக்க...

பெண்ணின் பெருமை அல்லது              வாழ்க்கைத் துணை 0

பெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கைத் துணை

இதன் ஆசிரியர் திருவாளர் வி.கல்யாணசுந்தர முதலியாரைப் பற்றி தமிழுலகிற்கு அறிமுகஞ் செய்ய வேண்டிய அவசியமின்று. அன்னார் இதுகாலை எழுதி வெளிப்படுத்தியுள்ள பெண்ணின் பெருமை என்னும் புத்தகத்தைக் கண்டு மகிழ்ந்தேன். தேனினுமினிய செந்தமிழ் நடையில் வாழ்க்கையில் பெண்ணுக்குள்ள இடத்தையும், உரிமையையும், ஆண் பெண் மாறுபாடுகளையும் பெண்பாலாரின் பெருமைகளையும், அவைகட்கேற்ப பெண் தெய்வங்களை ஆண்கள் நடத்த வேண்டிய முறையும், மற்றும் இல்லறம் துறவறம் இரண்டின் விளக்கமும், பெண் ஆண்கள் தங்கள் வாழ்க்கையில் அறிந்து கொள்ள வேண்டிய பல Žநுட்பங்களையும், எல்லாவற் றிற்கு மேல் பெண்ணின் பால் உள்ள இறையொளியையும் மிகத் தெளிவாக எடுத்து விளக்கி மற்றப் பதிப்புகளைப் போலன்றி நல்ல தாளில் நல்ல கட்டடத் துடன் கண்ணைக் கவரும் வகையில் பதிப்பிக்கப்பட்டுள்ளது. பெண்களின் விடுதலை வேண்டு மென்று பாடுபடும் இக்காலத்து இத்தகைய புத்தகங்கள் பல கட்டாயம் வெளிவர வேண்டும். விலை ரூ 2. கிடைக்குமிடம்:- முருகவேள் புத்தக சாலை ராயப்பேட்டை சென்னை. குடி அரசு...

அடுத்த வாரம் 0

அடுத்த வாரம்

27-9-27 தேதி ஊழியன் என்னும் ஒரு பத்திரிகையின் முதல் கலத்தில் “ வீணான அவதூறு” என்ற தலைப்பில் ஸ்ரீமான் காசி விஸ்வநாதன் செட்டியார் அவர்களுக்கும், ஸ்ரீமான். எஸ். ராமனாதன் அவர்களுக்கும் நடந்ததாக ஒரு சம்பாஷணை காணப்படுகின்றது. இதற்கு சமாதானம் எழுத வேண்டிய பொறுப்பு ‘திராவிடனுக்கும்’ ‘குடி அரசுக்கும்’ ஏற்பட்டதோடு ராமசாமி நாயக்கருக்கும் ஏற்பட்டிருக்கிறது. இம்மாதிரியான ஒரு சந்தர்ப்பம் அளிக்கப் பட்டதற்கு நன்றி செலுத்தக் கடமைப் பட்டிருக்கிறோம். எனினும் இந்த சம்பாஷணைகளில் கண்ட வர்த்தமானங்கள் முழுதும் ஸ்ரீமான் ராமநாதன் அவர்களால் சொல்லப்பட்டது தானா என்பதை நாம் மற்றுமொரு முறை கேட்டுத் தெரிந்து கொண்டு பதில் எழுத வேண்டிய நிலைமையில் அச்சம்பாஷணையில் சில பாகம் இருக்கின்றது. ஆகவே அது முழுவதும் உண்மைதான் என்றாவது, உண்மையல்ல வென்றாவது தெரிந்துகொண்டு அடுத்தவார ஆரம்பத்தில் எழுதுகிறோம். இதற்கு இரண்டில் ஒன்று பதில் இல்லாத பட்சம் சம்பாஷணை நடந்தது வாஸ்த வம் என்றும் அதில் கண்டது முழுவதும் உண்மை என்றும்...

காந்தீயம் 0

காந்தீயம்

காந்தீயம் என்பது மகாத்மா காந்தியை மூல புருஷராய் வைத்து அவரது சரித்திரத்தையும், கொள்கையையும், அதன் பலனையும் பற்றியது. எப்படி சைவம் என்பது சிவனை முதன்மையாகக் கொண்டதோ, வைணவம் என்பது விஷ்ணுவை முதன்மையாகக் கொண்டதோ, ராமாயணம் என்பது எப்படி ராமரை முதன்மையாகக் கொண்டதோ அதுபோல் காந்தீயம் என்பது காந்தியை முதன்மையாகக் கொண்டது. இவற்றில் மக்களுக்காக மகாத்மா காந்தி ஏற்படுத்திய கொள்கைகளும் அதற்காக அவரது சேவையும் அவரது தியாகமும் முதன்மையானது. அதனால் ஏற்பட்ட பலன்களும் நிகழ்ச்சிகளும் இரண்டாவதாகச் சொல்லலாம். நமது தேசத்தில் இவ்விருபதாம் நூற்றாண்டில் ராஜாக்களும், பிரபுக்களும், பெரும்பதவி அதிகாரமுடையவர்களும் எத்த னையோ பேர் பிறந்திருந்தாலும் மறைந்திருந்தாலும் 33 கோடி மக்களும் மதிக்கத் தகுந்த மாதிரி மகாத்மா காந்தியைப் போல் மற்றொருவரை சொல்ல முடியாமற் போனதற்குக் காரணம் என்ன? காந்தியை மாத்திரம் மகாத்மா என்று சொல்லக் காரணமென்ன? தங்கள் தங்கள் சுயநலத்துக்காக வாழ்கிறவர் கள் எவ்வளவு பெரியவர்களென்று சொல்லிக் கொண்டபோதிலும் அவர்கள் சாதாரண மனிதர்களாகத்தான்...

மதுரையில் ராஜியும் ஒற்றுமை மகாநாடும் 0

மதுரையில் ராஜியும் ஒற்றுமை மகாநாடும்

மகாத்மா காந்தி பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் என்கிற விஷயத்தைப் பற்றி ராஜிபேசி ஏதாவது ஒரு முடிவு செய்ய பார்ப்பனரல்லாதார் தலைவர் என்கிற முறையில் உங்களை கூப்பிட்டால் வருவீர்களா என்பதாக சில பத்திராதிபர்களும் சமாச்சார வியாபார பிரதிநிதிகளும் வந்து நம்மைக் கேட்கிறார்கள். தவிர, மதுரையில் பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் ஒற்றுமை மகாநாடு என்பதாக ஒன்றைக் கூட்டி மகாத்மாவைத் தலைமையாக வைத்து பேசு வதானால் வரத் தயாராயிருக்கின்றீர்களா என்று பார்ப்பனரல்லாத பிரமுகர் களில் சிலரும் கேட்கிறார்கள். இவற்றிற்கு பதில் சொல்லவேண்டியது அவசி யமாகின்றது. முதலில் மகாத்மா கூப்பிட்டால் என்பதற்கு பதில் சொல்லிவிட்டு மகாநாட்டுக்கு பதில் சொல்லுவோம். மகாத்மா கூப்பிடுகிறாரா இல்லையா என்பது தெரியாமல் கூப்பிட்டால் வரத் தயாராயிருக்கிறேன் என்று சொல்ல நாம் தயாராயில்லை. அல்லாமலும் எதற்காக கூப்பிடுகிறார் என்பதும், பார்ப்பனருக்கும் பார்ப்பனரல்லாதாருக்கும் ஒற்றுமைக் குறைவாயிருக்கும் விஷயங்களில் மகாத்மா அவர்களின் சொந்த கொள்கை என்ன என்பதை நாம் அறிந்து கொள்ளாமலும், மகாத்மா அழைப்புக்கு வரும் பார்ப்பனர்கள் மகாத்மா சொல்லும்...

ஸ்ரீமான் தங்கப்பெருமாள் பிள்ளையின் ஞாபகச்சின்னம் 0

ஸ்ரீமான் தங்கப்பெருமாள் பிள்ளையின் ஞாபகச்சின்னம்

வெள்ளக்கிணற்றில் ஸ்ரீமான்.எஸ். இராமநாதனின் அக்ராசனத்தின் கீழ் நடைபெற்ற கோயமுத்தூர் தாலூக்கா மகாநாட்டில், அடியிற்கண்ட தீர்மானம் நிறைவேறிற்று. தமிழ்நாட்டு அருந்தவப் புதல்வரும் மாகாண காங்கிரஸ் கமிட்டியின் காரியதரிசியும், ஜில்லா காங்கிரஸ் கமிட்டியின் தலை வரும், கோவை தாலூக்கா மகாநாட்டின் அக்ராசனரும், மாகாண காங்கிரஸ் நிர்வாக சபையின் அங்கத்தினரும். கதர்போர்டின் காரியதரிசியும், ஆகிய இவைகளா யிருந்தவரும். உண்மைத் தியாக மூர்த்தியுமாகிய ஈரோடு ஸ்ரீமான். வா. மு. தங்கப்பெருமாள் பிள்ளையவர்கள் காலஞ்சென்றதைக் குறித்து இம் மகாநாடு ஆழ்ந்த துக்கத்தை அடைவதோடு, அவர் குடும்பத்தாருக்கு அநு தாபத்தைத் தெரிவித்துக்கொள்ளுகிறது. காலமான நம்நாட்டுப் பெருந்தேசாபிமானியும். நமது ஜில்லாவாசியு மான ஸ்ரீமான். தங்கப்பெருமாள் பிள்ளையின் ஞாபகச்சின்னமாகவும், அவரது போதனைகளைப் பரப்ப ஓர் சாதனமாகவும், இந்த ஜில்லாவில் ஓர் ஸ்தாபனம் ஏற்பாடு செய்ய வேண்டுமென்றும், அதற்காகப் பொருள் சேர்த்தல் முதலிய வேண்டுவன செய்ய, கீழ்க்கண்ட கனவான்களை ஓர் கமிட்டியாக நியமித்திருப்பதாய்த் தீர்மானித்திருக்கிறது. கமிட்டி அங்கத்தினர் ஸ்ரீமான்கள்.ஈ.வெ.இராமசாமி நாயக்கர், அக்ராசனர், எஸ். இராமநாதன்,...

பார்ப்பனரும் அரசியலும் 0

பார்ப்பனரும் அரசியலும்

அரசியல் விஷயத்தில் நாம் பார்ப்பனர்களை நம்பக்கூடாது என்றும், அவர்களது அரசியல் நோக்கம் என்பதெல்லாம் பார்ப்பனரல்லாதாரை மிதித்து பார்ப்பனர்கள் எப்படியாவது அதிகாரத்திற்கும் பதவிக்கும் உத்தியோ கத்திற்கும் வர வேண்டும் என்பதைத்தவிர வேறில்லை என்றும், பார்ப்பனர் கள் தங்களுக்கு உத்தியோகம் பதவி முதலியவைகள் கிடைக்கக்கூடும் என்று எண்ணுகிற விஷயங்களில் அதற்கு விலையாக தேசத்தையோ மானத்தையோ நாணயத்தையோ கூட விடப் பின்வாங்க மாட்டார்கள் என்றும், இந்தப்படி செய்தே நமது நாட்டை ஆயிரக்கணக்கான வருஷங் களாய் அன்னிய ஆக்ஷிக்கு அதாவது மனிதத்தன்மை அற்ற ஆக்ஷிக்கு அடிமைப்படுத்தி நமது நாட்டிற்கு அடியோடு சுயமரியாதை இல்லாமற் செய்து விட்டார்களென்றும், இக்குணங்களான பார்ப்பனீயம் நமது நாட்டை விட்டு ஒழிந்தாலல்லது நமக்கு என்றென்றைக்கும் விடுதலையோ சுயமரியாதையோ ஏற்படாதென்றும் அனேக தடவைகளில் எழுதியும் பேசியும் வந்திருப் பதுடன் அதே வேலையிலேயே நமது வாழ்நாளைக் கடத்தியும் வருகிறோம். ஆனால் நம்மில் ஒருசாராருக்கே, அதாவது பார்ப்பனர்களை பின்பற்றினாலொழிய வாழ முடியாது என்கிற கூட்டத்தாருக்கு இந்த உண்மை கள்...

மதுரை அமெரிக்கன் காலேஜ் மாணவர்களுக்குள் சுயமரியாதை உதயம் 0

மதுரை அமெரிக்கன் காலேஜ் மாணவர்களுக்குள் சுயமரியாதை உதயம்

சென்ற வாரம் சென்னை பச்சையப்பா ஆஸ்ட்டலில் பார்ப்பன ரல்லாத வாலிபர்கள் தங்களுக்கு பார்ப்பனரல்லாத சமையல்காரரையே வைத்து சமையல் செய்து சாப்பிட்டு வருவதும் அதன் காரணங்களையும் எழுதி மற்ற காலேஜ் பார்ப்பனரல்லாத பிள்ளைகளும் இதை பின்பற்ற வேண்டும் என்று வேண்டிக் கொண்டோம். அதற்கிணங்க இவ்வாரம் மதுரை அமெரிக்கன் காலேஜிலுள்ள பார்ப்பனரல்லாத பிள்ளைகளும் தங்களுக்குள் பார்ப்பன சமையல்காரரைத் தள்ளிவிட்டு பார்ப்பனரல்லாத சமையல்காரரை வைத்து சமைத்து சாப்பிடுவதுடன் வகுப்பு வித்தியாசமில்லாமல் தங்களுடன் கூட உட்கார்ந்து சாப்பிட சம்மதிக்கும் மாணவர்களையெல்லாம் சேர்த்து ஒன்றாய் உட்கார்ந்து சாப்பிடத் தீர்மானித்து அந்தப்படி நடத்தி வருகிறார்கள் என்பதைக் கேட்க மிகவும் சந்தோஷமடைகிறோம். மதுரை காலேஜில் இப்படி நேர்ந்ததற்கு ஒரு தகுந்த காரணமும் சொல்லப்பட்டது. அதாவது அக்காலேஜ் மாணவர்களில் இரண்டொரு பார்ப் பன மாணவர்களுக்கும் பார்ப்பனரல்லாத மாணவர்களுக்கும் மிகவும் நேச மாய் இருந்ததோடு மாமிச உணவு முதல் கொண்டு வித்தியாசமில்லாமல் ஒன்றாய் உட்கார்ந்து சாப்பிட்டு வருவது வழக்கமாய் இருந்து வந்தது. சமீபத்தில் ஒரு...

சுரணையற்ற பொய் 0

சுரணையற்ற பொய்

நல்ல சமயத்தில் 2 வாரத்திற்குப் பத்திரிகை தாமதிக்க ஏற்பட்டதானது நமக்கு மிகுதியும் ஏமாற்றத்தைக் கொடுத்து விட்டதோடு வாசகர்களுக்கும் விளக்க முடியாத ஏமாற்றம் ஏற்பட்டிருக்கும் என்றே நினைக்கிறோம். இவ்வாரம் எழுத வேண்டிய விஷயங்கள் அநேகம். அவற்றில் பிராமணப் பத்திரிகைகளின் கொடுமையை எடுத்துக்காட்ட வேண்டியது மிகுதியும் அவசியமான சமயம். அவைகளை விளக்க இதில் இடமில்லை. கோவை தாலூக்கா மகாநாட்டைப் பற்றியும் கோவை பொது மீட்டிங்கைப் பற்றியும், சுதேசமித்திரன் சுரணையற்ற வெறும் பொய்யையே பிரசுரித்திருக்கின்றது. அவற்றுள் 100 – க்கு 90 பொய் என்பதை வாசகர் உணர வேண்டுகிறோம். குடி அரசு – அறிவிப்பு – 28.03.1926

இரண்டே வாரம் 0

இரண்டே வாரம்

நமது “குடி அரசு”ப் பத்திரிகை கொஞ்ச காலமாக கூலி அச்சுக் கூடத் தில் பதிப்பிக்கப்பட்டு வந்தது. ஆனால், அவ்வச்சுக் கூடத்தால் பல தடவை களில் எதிர்பாராத தாமதங்களுடன் காலந்தவறி பத்திரிகை வெளியாக வேண்டி ஏற்பட்டதினிமித்தம், சந்தாதாரர்களில் பலர் ஏமாற்றமடைய நேர்ந்த தால் தங்கள் மனவருத்தத்தையும் கோபத்தையும் தெரிவித்து வருகிறார்கள். “குடி அரசு” எத்தனை விதமான எதிரிகளின் சூக்ஷிக்கும், கொடுமைக்கும் தப்புவித்து நடந்து வருகிறது என்பதை அவர்கள் அறிவதில்லை. ஆதலின், பத்திரிகையை இரண்டொரு வாரத்திற்கு மட்டும் நிறுத்தி வேறு அச்சுக்கூடம் ஏற்பாடு செய்து, கூடியவரை காலந் தவறாது அனுப்பிவர ஏற்பாடு செய்ய சில யந்திரங்களும் எழுத்துக்களும் வந்திருக்கிறது. இனியும் சில சாமான்கள் வாங்க சென்னைக்கு ஆள் போகிறது. ஆதலால், அதுவரை வாசகர்களை மன்னிக்கும்படி வேண்டுகிறோம். குடி அரசு – தலையங்கம் – 28.03.1926

பார்ப்பனப் புரோகிதம் ஒழிந்தது! 0

பார்ப்பனப் புரோகிதம் ஒழிந்தது!

“பார்ப்பன குருமாருக்கு” கொடுத்து வந்த வரியும் ஒழிந்தது. மதுரை பிராமணரல்லாத மகாநாட்டில் தோன்றிய தீர்மானங்களை நம் சகோதரர்கள் செய்கையில் நடத்தி வருவதை நம் “திராவிடன்” “குடியரசு” பத்திரிகைகள் வாயிலான் அறிந்து மகிழ்ச்சியடைகிறோம். நிற்க நம் மகாநாட்டிற்கு உப காரியதரிசியாய் விளங்கி நமக்கு அல்லும் பகலும் உழைத்தவரும், உழைக் கின்றவருமான திருவாளர்.டி. கொண்டல் நாயுடு அவர்கள் அன்னையார் விண்ணவர்க்கு விருந்தாயது பற்றி 19. 2. 27 குண்ணத்தூரில் தமதில்லத்தில் சடங்குக் கிரியைகள் நடைபெற்றன. இக்கிரியைகளுக்கு மதுரையினின்று திருவாளர்கள் ஐகோர்ட்டு வக்கீல் பி. ரங்கசாமி நாயுடு அவர்கள் பி.ஏ.பி.எல்., எஸ். கூடலிங்கம் பிள்ளை அவர்கள், பெஞ்ச் கோர்ட்டு மாஜிஸ்திரேட் சின்ன சாமி ராஜா அவர்கள், பென்ஷன் பட்டாளம் சுபேதார் சுப்பா நாயுடு அவர்கள், ஜவுளி வியாபாரம் சின்னசாமி நாயுடு அவர்கள், ஆத்தூர் சின்னசாமி நாயுடு அவர்கள், நிலச்சுவான்தார்கள் அ.சு. சீனிவாசலு நாயுடு அவர்கள், அ.சு. அக்கையசாமி நாயுடு அவர்கள் மற்றும் கிராமங்களினின்று அநேக நில...

வருண பேத விளக்கம் 0

வருண பேத விளக்கம்

“வருணபேத விளக்கம்” என்னும் புத்தகம் காலஞ்சென்ற திரு. ம. மாசி லாமணி அவர்களால் எழுதப்பட்டு தென்னிந்திய பௌத்த சங்கத்தினா தரவில் ஸ்ரீ சித்தார்த்த புத்தக சாலையாரால் பதிப்பித்து பிரசுரிக்கப்பட்டது. இப்புத்தகம் வருணபேதத்தின் இரகசியங்களையும், ஆதிகாலத்திலிருந்தே, பிராமணர்களின் சூழ்ச்சிகளையும், தயவு தாக்ஷண்யமில்லாமல் தைரியமாய் விளக்குகிறது. இப்புத்தகத்தை வாங்கிப் படிப்பவர் இவ்விஷயங்களைப் பற்றி நமது “குடி அரசு” எழுதிவரும் விஷயங்கள் இப்புத்தகத்திலிருந்து எடுத் தெழுதப்பட்டதோ அல்லது குடி அரசிலிருந்து எடுத்து இப்புத்தகம் எழுதப்பட்டதோ என்று நினைக்கும்படி பெரும் பாகம் ஒத்திருக்கும். ஆத லால், சிற்சில விஷயங்களில் அபிப்பிராய பேதம் இருந்தபோதிலும் ஜாதி உயர்வு-தாழ்வு இரகசியம் அறிய ஆவல் கொண்டவர்கள் இதனை வாங்கி வாசிக்க சிபார்சு செய்கிறோம். இதன் விலை அணா 0-4-0. குடி அரசு – நூல் மதிப்புரை – 21.03.1926

‘நீலாம்பிகை திருமணம்’ 0

‘நீலாம்பிகை திருமணம்’

சுவாமி வேதாசலம் அவர்களின் அருமைப்புதல்வி திரு.செல்வி நீலாம்பிகையம்மைக்கும் நமது நண்பரான திருவாளர் திருவரங்கம் பிள்ளை அவர்களுக்கும் நடந்த திருமணச் சடங்கு சம்பந்தமாக சில விபரங்கள் பொது மக்கள் கவனத்தை இழுக்கும்படி நேர்ந்தது பற்றி வருந்துகிறோம். ஆயினும் இச்சடங்கானது இது சமயம் தமிழ்நாட்டில் வெகு மும்மரமாய் நடந்துவரும் தமிழ் மக்களின் மனிதத்தன்மை உணர்ச்சியின் எழுச்சிக்கு இடையூறாய் நிற்குமோவென்னும் ஐயத்தால் அவற்றை வெளியிட்டாக வேண்டிய நிலைமை ஏற்பட்டது பற்றி வெளியிடலாயிற்று. அதற்கு சமாதானமாக பண்டிதர் ஆனந்தம் அவர்கள் எழுதிய கட்டுரையானது குளிக்கப் போய் சேற்றைப் பூசிக்கொண்டது போல் செய்து விட்டாலும் “கண்டு களித்தோன்” என்னும் நண்பர் எழுதிய மற்றொரு கட்டுரையும் அதை ஒருவாறு திருவாளர் கா.சுப்பிரமணியபிள்ளை அவர்கள் சரி என்று ஒப்புக்கொண்ட தாக்கலும் மக்களுக்கு திருப்தி அளிக்கும் எனக் கருதி அவ்விஷயத்தை அத்துடன் நிறுத்திவிடலாம் என்பதாக முடிவு செய்து “இவ்விஷயம் இத்துடன் முடிவு பெற்றது” என்பதாக குறிப்பும் எழுதி முடித்துவிட்டோம். ஆனால் மறுபடியும் சுவாமி...

ஹிந்து மஹாசபை 0

ஹிந்து மஹாசபை

ஹிந்து மஹாசபையைப் பற்றி நாம் பல தடவைகளில் அது வர்ணா சிரம சபை என்றும், இந்து முஸ்லீம் ஒற்றுமைக்கு விரோதமான சபை என்றும், பிராமணாதிக்கத்திற்காக உழைக்கும் சபை என்றும் எழுதி வந்தது வாசகர் களுக்கு ஞாபகமிருக்கலாம். சில நண்பர்களுக்கு இவ்வாறு எழுதியதைப் பற்றி மனவருத்தம் ஏற்பட்டிருந்தாலும் இருக்கலாம். ஆனால் இப்பொழுது வரவர அதன் யோக்கியதை நாம் எழுதியபடியே முழுவதும் வெளியாகி விட்டது. அதாவது, விதவா விவாகத் தீர்மானம் ஹிந்து மஹாசபை மஹா நாட்டின் விஷயாலோசனைக் கமிட்டியில் நிறைவேறினதும், அதன் அக்கிரா சனராகிய பண்டித மாளவியா மஹாநாட்டுப் பந்தல் பக்கம் கூட எட்டிப் பார்க்கமாட்டேன் என்று அத்தீர்மானத்திற்கு ஆதாரமாயிருந்தவர்களை விரட்டித் தீர்மானத்தையே மஹாநாட்டிற்கும் கொண்டு வரவிடாமல் நசுக்கி விட்டார். பின்னர் தீண்டாமையைப் பற்றின தீர்மானம் மஹாநாட்டில் நிறை வேறினவுடன் சபையில் உள்ளவர்களெல்லாம் எழுந்து ஓடிப்போய் விட்டார்களாம் . ஆதலால் தலைவர்கள் எழுந்து போனவர்களை அழைத்து வந்து இத்தீர்மானத்தின் ரகசியத்தை எடுத்துரைத்து, அதாவது இத்தீர்மா...

பி. வரதராஜலு நாயுடு –                               பிராமணர்களின் கொடுமையும் குறும்புத்தனமும் 		-சித்திரபுத்திரன் 0

பி. வரதராஜலு நாயுடு – பிராமணர்களின் கொடுமையும் குறும்புத்தனமும் -சித்திரபுத்திரன்

மாயவரம் முனிசிபாலிட்டியில் ஸ்ரீமான் வரதராஜலு நாயுடுவுக்கு ஒரு வரவேற்புப் பத்திரம் வாசித்துக் கொடுக்க வேண்டுமென்று ஒரு தீர்மானம் வந்தபொழுது, சில பிராமணர்கள் அதை எதிர்த்தார்கள். இவர்கள் எதிர்ப்பை அலட்சியம் செய்து மற்ற கவுன்சிலர்கள் ஒரேயடியாய் நிறைவேற்றி விட்டார் கள். தங்கள் ஆnக்ஷபனை பலிக்கவில்லை என்று நினைத்த ³ பிராமணர்கள் அதோடு சும்மாயிராமல் அரசாங்கத்தாருக்கு அடியிற் கண்டபடி தந்தி கொடுத்தார்கள். அதாவது “மாயவரம் முனிசிபாலிட்டியார் டாக்டர் வரதராஜலு நாயுடுவுக்கு உபசாரப் பத்திரம் வாசித்துக் கொடுத்தால் மாயவரத்தில் சமாதானத்திற்கு மிகவும் பங்கம் வரும். ஆதலால், அரசாங் கத்தார் இத்தீர்மானத்தை நிராகரித்து விடவேண்டும்” என்று கண்டிருந்ததாம். இது எவ்வளவு அயோக்கியத்தனமான காரியம் என்பதை வாசகர்கள்தான் முடிவு செய்யவேண்டும். ஸ்ரீமான்கள் சீனிவாசய்யங்கார், கலியாணசுந்தர முதலியார், ராஜகோபாலாச்சாரியார் முதலியவர்களுக்கு வாசித்துக் கொடுக் கும் உபசாரப் பத்திரங்கள் சமாதானத்தை விளைவிக்கும்; டாக்டர் நாயுடுவுக்கு வாசித்துக் கொடுக்கும் உபசாரப் பத்திரம் சமாதான பங்கம் விளைவிக்கும் என்றால், அய்யங்கார், ஆச்சாரியார், முதலியார் முதலானவர்களிடம்...

இதுவா வீரம்? இதுவா வீர மொழி? 0

இதுவா வீரம்? இதுவா வீர மொழி?

நமது நாட்டுப் பத்திரிகைகளில் ஒன்றுகூடத் தவறாமல் அதாவது பிராமணப் பத்திரிகைகள், பிராமணரல்லாத பத்திரிகைகள், மகமதியப் பத்திரிகைகள் ஆகிய அனைத்தும் சுயராஜ்யக் கட்சியினர் சட்டசபைகளை விட்டு வெளியேறினதை மெச்சியும், ஆதரித்தும் வெளியேறினதற்கு பண்டிதநேரு சொல்லிய காரணங்களை “பண்டிதரின் வீர மொழிகள்” என மகுடமிட்டும் பிரசுரிக்கின்றன. பிராமணப் பத்திரிகைகளைப் பற்றியோ, அவர்களால் ஆட்கொள்ளப்பட்ட பத்திரிகைகளைப் பற்றியோ கவலைப் படாது தள்ளிவிடினும் மற்றைய சுயேச்சை பத்திரிகைகளுக்காவது ஆத்மா உண்டா? இல்லையா? என்பதும் உண்மையை அறிய ஆற்றலுண்டா? இல்லையா? என்பதும் அல்லது எல்லாமிருந்தும் தன் காலில் நிற்கச் சக்தி யற்று கூட்டத்தில் கோவிந்தா போட்டுக் கொண்டுகாலங்கடத்துகிறார்களா வென்பதும், அல்லது முரட்டு வெள்ளத்தில் நாம் எப்படி எதிர் நீச்சல் நீந்துவது என்று பயந்து பொறுப்பு இழந்து வாழ்க்கையை நடத்திக்கொண்டு வருகிறார் களாவென்பதும், அல்லது ராஜதந்திரம் என்றால் சிலர் எதுவேண்டுமானாலும், என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம் என்று நினைத்துக் கொண்டிருக் கிறார்களே, அதுபோல நினைத்து அதைப் பின்பற்றுகிறார்களாவென்பதும், அல்லது நிர்வாண தேசத்தில்...

சுயமரியாதைக்கு சத்தியாக்கிரகம் வாலிபர்களுக்கு விண்ணப்பம் 0

சுயமரியாதைக்கு சத்தியாக்கிரகம் வாலிபர்களுக்கு விண்ணப்பம்

பார்ப்பனரல்லாத மக்களின் சுயமரியாதைக்காக சத்தியாக்கிரகம் செய்யவேண்டும் என்பதாக பார்ப்பனரல்லாத வாலிபர் பலர் உள்ளத்தில் ஆத்திரம் பொங்கித் ததும்பிக் கொண்டிருக்கிறது. இவ்விதமான உணர்ச்சி யைக் கண்டு நாம் மிகுதியும் மகிழ்ச்சி உறுகிறோம். ஸ்ரீமான் தண்டபாணி பிள்ளையும் மதுரை அருணாசலமும் விண்ணப்பமும் வேண்டுகோளும் விடுத்த பிறகு பல வாலிபர்கள் தங்கள் தங்கள் பெயர்களைக் கொடுத்து சத்தியாக்கிரகத்தை சடுதியில் ஆரம்பிக்கும் படியாகச் சொல்லி தங்கள் உற்சாகத்தைக் காட்டி வருகிறார்கள் . தமிழ்நாட்டில் ஏதாவது ஒரு பயனுள்ள வேலை செய்யவேண்டு மானால் அது சத்தியாக்கிரகத்தைத் தவிர வேறில்லை என்பதை நாம் மனப்பூர்த்தியாக ஒப்புக் கொள்கிறோம். நமது நாட்டில் ஆசாரச் சீர்திருத்தமும் அரசியல் சீர்திருத்தமும் ஆரம்பித்து எவ்வளவு காலமாய் நடைபெற்று வருகிறது? இவ்விரண்டிற்காக நமது மக்கள் சிலவழித்த காலம், பொருள் எவ்வளவு? இவ்வளவு ஆகியும் இதன் பெயரைச் சொல்லிக் கொண்டு ஒவ்வொரு தலைவர் என்போரும் மக்களை ஏமாற்றி தன் தன் சுயநலத்திற்கு வழி தேடிக் கொண்டார்களேயல்லது நாடு அடைந்த...

கொங்கு வேளாளர்                          மஹாநாட்டின் தீர்மானத்தின் பலன் 0

கொங்கு வேளாளர் மஹாநாட்டின் தீர்மானத்தின் பலன்

ஈரோடு தாலூக்கா வாயப்பாடி சாராயக்கடை 1-3-26 தேதி ஏலம் போடப்பட்டது. அவ்வூர் பிரபல மிராசுதாரரும் கொங்கு வேளாள குலத் தினருமான ஸ்ரீமான் ரத்தினசாமிக் கவுண்டர் குமாரர் முத்துசாமிக் கவுண்டர் ஏலமாகுமிடத்துக்கு விஜயம் செய்து வேளாள குலத்தினர் யாரும் வாயப்பாடி சாராயக்கடையை எடுக்கக்கூடாதென்று கேட்டுக்கொண்டார். அவர் கேட்டுக் கொண்டதற்கிணங்கி, ஏலம் கூற வந்திருந்த வேளாள குலத்தினர் ஏலம் கூறா மல் நின்றுவிட்டனர். வேளாள குலத்தினர் நின்றுவிடவே மற்றெவரும் ஏலம் கூறவில்லை. அதிகாரிகள் என்ன முயற்சித்தும் ஒருவரும் கடை எடுக்க வில்லையென்று கேட்டு சந்தோஷிக்கிறோம். குடி அரசு – செய்தி விளக்கம் – 21.03.1926

குருக்களின் புரட்டு 0

குருக்களின் புரட்டு

சகோதரர்களே! இதுவரை அரசியல் புரட்டையும், மதப் புரட்டையும் பற்றிச் சொல்லி வந்தேன். இனி ஆச்சாரியார், குரு, மகந்து, சங்கராச்சாரியார்கள், மடாதிபதிகள் என்பவர்களின் பேரால் நடக்கும் புரட்டுகளையும் சற்று கவனித்துப் பாருங்கள் . எந்த தனிப்பட்ட நபர் மீதிலும் எனக்கு எவ்விதமான மன வருத்தமும், துவேஷமும் இல்லை. இவர்களுக்கு கொடுக்கும் பணம் நின்றுவிட்டால் எனக்கு ஒன்றும் லாபம் கிடையாது. நான் சொல்லுவதெல்லாம் நம்முடைய பணம் எவ்வளவு அக்கிரம வழியிலும், அவிவிவேக வழியிலும் செலவா கிறது என்பதையும் இதன் மூலம் நமது சுயமரியாதைகள் எவ்வளவு தூரம் பாதிக்கப்படுவதோடு நாம் எந்தெந்த வழிகளில் ஏமாற்றப்படுகிறோம் என்ப தையும் உங்கள் அறிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்கிற எண்ணமே அல்லாமல் வேறல்ல. ஆசாரியார், மகந்து, மடாதிபதி, சிஷ்யன், குரு என்று சொல்லும் வார்த்தைகள் தமிழ் வார்த்தைகள் அல்ல. அவை ஆரியர்கள் நாட்டு வார்த் தைகள் . அவர்கள் இங்கு வந்தபிறகு அவ்வார்த்தைகளை நம்முள் புகுத்தி அவர்களே அவர்களை...

டிப்டி கலெக்டர் உத்தியோகம் 0

டிப்டி கலெக்டர் உத்தியோகம்

இவ்வுத்தியோகமானது நமது நாட்டின் ராஜ்ய பாரத்திற்குக் கடுகளவு உபயோகமும் இல்லாமல் – வெறும் தபாலாபீசைப் போல் காகிதம் வாங்கி மேலாபீசுக்கு அனுப்புவதும் – அரசாங்க ஜாதியாரின் சுய நன்மைக்காகவே இருந்து நமது பணத்தின் ஒரு முக்கிய பாகத்தைச் செலவு செய்து கொண்டும் வருகிறது. சுமார் 30 வருடங்களுக்கு முன்பாக ஒரு ஜில்லாவை 4-4 தாலூக் காக்கள் கொண்ட 2 டிவிஷன் அல்லது மூன்று டிவிஷன்களாகப் பிரித்து சப் கலெக்டர் என்பவருக்கு ஒரு டிவிஷனும் ஹெட் அஸிஸ்டெண்டு கலெக்டர் என்பவருக்கு ஒரு டிவிஷனும், அஸிஸ்டெண்டு கலெக்டர் என்பவரை ஜில்லாக் கலெக்டர் என்பவர் தன்னிடம் வைத்துக்கொண்டு அவருக்கு ஒரு சின்ன டிவிஷனுமாய் கொடுத்து வந்தார்கள். அப்படியிருந்தாலும் அவர் களுக்குப் பலவேலைகள் இருக்கும். அதாவது கிரிமினல் கேசு விசாரணை கள், கிரிமினல் அப்பீல்கள், ரிவின்யூž வேலைகள் முனிசிபாலிட்டி மேற் பார்வை, தாலூகா போர்டு மேற்பார்வை, இன்கம்டாக்ஸ் போடும் விஷயம், நீர்க்கூலி விதிப்பது, சிவாஜிநாமா உத்திரவு முதலியவைகள்...

கோயமுத்தூரில் காங்கிரஸ் பிரசாரத்தின் யோக்கியதை ! 0

கோயமுத்தூரில் காங்கிரஸ் பிரசாரத்தின் யோக்கியதை !

சில தினங்களுக்குமுன் கோயமுத்தூர் சேர்மெனின் சில பிராமண விரோதிகளும், அவர்கள் வாலைப்பிடித்துக்கொண்டு வயிறு வளர்க்கும் சில பிராமணரல்லாதாரும் சேர்ந்து காங்கிரஸ் மீட்டிங்கு என்பதாக பெயர் வைத்து காங்கிரஸ் கொடியுடன் டவுன்ஹாலில், ஒரு கூட்டம் கூடினார்கள். அக்கூட்டத்தில் ஒரு பிராமணர் அக்ராசனம் வகிக்கவும், மற்றொரு பிராம ணர் பேசவும் சில பிராமணர்கள் உட்கார்ந்து கொண்டு சிரிக்கவுமாய் இருந் தது. இந்நிலைமையில் பேசிய பிராமணர், சேர்மெனையும், மற்றும் சில பிராமணரல்லாத கவுன்சிலர்களையும், வைதுகொண்டே வரும் போது, மற்ற பிராமணர்கள் சிரிக்கும் ஆனந்தத்தில் மூழ்கியிருக்க உபந்யாசகர் முனிசிபல் கவுன்சில்களில் சேர்மெனுக்கு அனுகூலமாயிருக்கும் கவுன்சிலர் களெல்லாம் கைதூக்கும் கழுதைகள் என்று சொன்னார். கூட்டத்திலிருந்த ஒருவர், உடனே அடங்காக் கோபப்பட்டு, உபந்யாசகரை அவமானப்படுத்தவும், துன்புறுத்த வும் பிரயத்தனப்பட்டார். அவர் பக்கத்திலிருந்த ஒருவர், அதை தடுத்துப் பக்கத்தில் தேசியக் கொடியும் மகாத்மாகாந்தியின் படமும் இருக்கிறது போலிருக்கிறது, உபந்யாசகர் மேல்படுவதினால் நமக்குக் கவலையொன்று மில்லை; தேசீயக்கொடியின் மீது விழுந்தால் பெரிய தோசமல்லவா,...

ஈரோடு முனிசிபாலிட்டி 0

ஈரோடு முனிசிபாலிட்டி

ஈரோடு முனிசிபாலிட்டியின் சேர்மன் நடத்தையைப் பற்றி கவுன்சிலர் கள் அடிக்கடி கோர்ட்டுகளுக்குப் போக ஏற்பட்டதைப் பற்றியும், அரசாங்கத் தாருக்கு அடிக்கடி புகார்கள் போய்க் கொண்டிருப்பது பற்றியும் இதற்கு முன் பல தடவைகளில் குறிப்பிட்டிருக்கின்றோம். இவற்றில் சிங்காரவன விஷயமாக நிறைவேறின ஓர் ஒழுங்கான தீர்மானத்தை விட்டு விட்டு, நிறை வேறாத ஓர் தீர்மானத்தை நிறைவேறியதாக கெட்ட எண்ணங் கொண்டு பொய்யாகவும் அக்கிரமமாகவும் நடவடிக்கைப் புத்தகத்தில் பதிந்து கொண்டார் என்கிற காரணம் கொண்டு ஸ்ரீமான்கள் கே.ஏ.ஷேக் தாவூத் சாயபு, மு.ச. முத்துக்கருப்பன் செட்டியார் முதலியவர்கள் இத்தீர்மானம் நிறைவேற்ற வொட்டாதபடி தற்கால தடை உத்திரவு பெற்றிருந்த விஷயம் நேயர்களறிந்திருக்கலாம். அதன் பிறகு இதே சேர்மன் ஸ்ரீமான் ஸ்ரீனிவாச முதலியார் முனிசிபல் பண விஷயங்களில் நாணயமாய் நடந்துக் கொள்ள வில்லை யென்பதாக பல புகார்கள் அதிகாரிகளுக்கு எட்டியிருப்பதன் பலனாய், சிவில் கோர்ட்டு விவகாரங்களை ராஜி செய்துகொள்ள வேண்டியது சேர்மனுக்கு அவசியமாய்ப் போய்விட்டது. அதை முன்னிட்டே தற்காலம் கோர்ட்டிலிருக்கும்...

நமது கோர்ட்டுகள் 0

நமது கோர்ட்டுகள்

கோர்ட்டு என்பது சூதாடுமிடம் நமது வகுப்பார் சீர்குலைந்து மானங்கெட்டு பார்ப்பனர்களின் அடிமை களாகி அவர்களின் வாலைப் பிடித்துக்கொண்டு திரிவதற்கு முக்கியக் காரணம் நம் நாட்டில் ஏற்பட்டிருக்கும் கோர்ட்டுகள் என்று சொல்லப்படும் சூதாடுமிடங்களும் அவைகளுக்கு ஜட்ஜுகள் என்று சொல்லப்படும் சூதாட்ட நிர்வாகிகளுமே ஆவார்கள். சீட்டு மேஜை அதாவது ஒருவர் ஒரு வீட்டை சூதாட்டத்திற்கு வாடகைக்கு கொடுத் திருந்தால் அவ்வீட்டில் சூதாடிகளை ஒன்று சேர்த்து அவ்வாட்டத்திற்கு அநுகுணமான சாமான்களையும் ஆட வசதியையும் செய்து கொடுத்து சீட்டு மேஜைக் காசு என்னும் கூலி வாங்குகிறவன் ஒருவனுண்டு. சூது ஆட வருகிற வர்கள் ஒவ்வொரு வெற்றிக்கும் இவ்வளவு என்று கொடுத்து வருவதுண்டு. சாதாரணமாக காலை முதல் மறுநாள் காலை வரையில் ஆளுக்கு இவ்வளவு என்பதாக கையில் பணம் வைத்துக் கொண்டு சூதாட ஆரம்பித்தால் கடைசி யாய் எழுந்து போகும் போது நாலுபேர் தோல்வி அடைந்து கடன்காரராய் எழுந்து போவதும் இருவர் சம்பாதிப்பவர்களாகவும் இருவர் அசலோடு போவதாகவும் காணப்படும்....

காந்தியைக் காட்டி காசு பரித்தல் 0

காந்தியைக் காட்டி காசு பரித்தல்

நமது நாட்டுப் பார்ப்பனர்கள் மகாத்மாவைக் காட்டி காசு பரிக்கிறார் கள் என்று பொதுவாய் எழுதி வந்தோம். இப்போது அது வாஸ்தவமாகவே நடைபெற்றுவிட்டது. அதாவது திருச்சியில் ஒரு கொட்டகையில் மகாத்மா வைக் கொண்டுபோய் வைத்து பார்க்க வருகிறவர்களிடம் டிக்கட்டு போட்டு பணம் வசூல் செய்கிறதாக சங்கதி எட்டுகிறது. மேடை ரூ. 25-க்கு மேல் ரிசர்வெட் ரூ.15 முதல் 25 வரை, முதல் வகுப்பு ரூ. 10 முதல் 15 வரை, இரண்டாவது வகுப்பு ரூ. 5 முதல் 10வரை, மூன்றாம் வகுப்பு ரூ. 2 முதல் 5 வரை என்பதாகவும், டிக்கட்டுகள் சாஸ்திரி & கம்பெனியிலும் வைத்தியா & கம்பெனியிலும் கிடைக்கும் என்பதாகவும் திருச்சி டாக்டர் ராஜனால் துண்டு நோட்டீசு வினி யோகிக்கப்பட்டது நமது பார்வைக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. மகாத்மாவின் பிரசங்கமும் அவர் தரிசனமும் அவர் தாமதிப்பதும் சங்கராச்சாரி போடும் வரிக்கு மேல் போய் விட்டது. அது செலவாவதும் சங்கராச்சாரி செலவு செய் வது...

பிராமணர்களுக்கு ஒரு கை ஒடிந்தது                   மந்திரிகளுக்கு ஒரு உபத்திரவம் ஒழிந்தது -சித்திரபுத்திரன் 0

பிராமணர்களுக்கு ஒரு கை ஒடிந்தது மந்திரிகளுக்கு ஒரு உபத்திரவம் ஒழிந்தது -சித்திரபுத்திரன்

சென்னை சட்டசபையில் கொழுத்த சம்பளம் பெறும் மந்திரிகளை பொறாமைக் கொண்டு வேண்டுமென்றே உபத்திரவப்படுத்த நமது பிராமணர் களுக்கு ஸ்ரீமான்கள் ஊ.ராமலிங்க ரெட்டியார் அவர்களும் ஹ.ராமலிங்க செட்டியார் அவர்களும் வலக்கை இடக்கை போல் கொஞ்சக் காலமாய் இருந்து வருகிறார்கள். இதில் ஸ்ரீமான் ரெட்டியாருக்கு மாதம் 2000 ரூபாய் சம்பளத்தில் ஒரு உத்தியோகம் கிடைத்துவிட்டது. இதனால் பிராமணர்க ளுக்கு ஒரு கை ஒடிந்ததென்றுதான் சொல்ல வேண்டும். மந்திரிகளுக்கும் ஒரு உபத்திரவம் குறைந்தது என்றுதான் சொல்லவேண்டும். இதுபோலவே நமது ஸ்ரீமான் செட்டியார் அவர்களுக்கும் ஒரு உத்தியோகம் ஏற்பட்டு விட் டால் பிராமணர்களின் மற்றொரு கையும் தற்கால சாந்தியாய் ஒடியும். மந்திரிகளின் முழு உபத்திரவமும் நீங்கிப் போகும். மந்திரிகளின் அறியாமை யினால் ஒரு நல்ல சந்தர்ப்பத்தை மந்திரிகள் நழுவ விட்டுவிட்டார்கள். அதாவது, சட்டசபை பிரசிடெண்டு உத்தியோகத்தை செட்டியாருக்கு கொடுக்கத் தவறிவிட்டதுதான். இதை மந்திரிகளின் மன்னிக்க முடியாத குற்ற மென்றுதான் சொல்வேன். இவ்விருவருக்கும் தயவுக்காக யாரும் உத்தி யோகம்...

மகாத்மாவுக்கு முதலியாரின்                   நற்சாக்ஷி பத்திரம் 0

மகாத்மாவுக்கு முதலியாரின் நற்சாக்ஷி பத்திரம்

ஸ்ரீமான் கல்யாணசுந்திர முதலியார் அவர்கள் மகாத்மா காந்திக்கு ஒரு நற்சாக்ஷி பத்திரம் வழங்கினார். அதாவது மகாத்மா தன்னைப் பற்றி ஞாபகம் வைத்திருக்கிறாராம். 5, 6´க்கு முன் தான் மகாத்மாவின் பிரசங் கத்தை மொழிபெயர்த்தது மகாத்மாவுக்கு இன்னம் ஞாபகத்திலிருக்கிறதாம். அதனாலேயே மகாத்மாவுக்கு நல்ல ஞாபகக் குறிப்பு இருக்கிறதாம். ஆனால் அதே மகாத்மா ஒருசமயம் சென்னைக்கு வந்த காலத்தில் ஸ்ரீமான் சர். தியாகராயர் வீட்டில் இறங்கி கொஞ்சநாள் தங்கியும் இருந்து விட்டு போனபிறகு ஒரு விஷயத்தில் சர். தியாகராயரைப் பற்றி மகாத்மாவை கேட்ட போது தமக்கு அவரைப் பற்றி தெரியாது என்று சொல்லி விட்டாராம், கொஞ்சநேரம் பிரசங்கம் மொழிபெயர்த்ததைப்பற்றி ஞாபகத்தில் வைத் திருந்த மகாத்மாவுக்கு தாம் இறங்கி கொஞ்சநாள் இருந்தவர் ஞாபகத்திற்கு வராமல் போனது என்ன காரணமோ என்பதை ஸ்ரீமான் முதலியார்தான் சொல்லவேண்டும், மகாத்மாவுக்கு ஞாபக சக்தி அதிகம் என்று தீர்மானிப் பதானால் பார்ப்பனரின் அடக்குமுறை சக்தி அதைவிட அதிகமென்றுதான் தீர்மானிக்கவேண்டும். இல்லாவிட்டால் ஸ்ரீமான்...

ஓட்டர்களை ஏமாற்றும் தந்திரம் 0

ஓட்டர்களை ஏமாற்றும் தந்திரம்

இவ்வாரம் பத்திரிகைகளெல்லாம் ஒரே மூச்சாய் சுயராஜ்யக் கக்ஷியார் சட்டசபைகளை விட்டு வெளியேறி விட்டார்கள், வெளியேறி விட்டார்க ளென்று சுயராஜ்யக் கக்ஷியாருக்காக வஞ்சகப் பிரசாரங்கள் செய்து வருகின் றன. சுயராஜ்யக் கக்ஷியார் எப்பொழுது விலகினார்கள்? எதற்காக விலகினார் கள்? எவ்வளவு நாளைக்கு விலகியிருப்பார்கள்? விலகிய பின் இவர்களு டைய வேலை என்ன? இந்த நான்கு விஷயங்களையும் கவனித்துப் பார்த்தால் சுயராஜ்யக் கக்ஷியாரின் தந்திரம் பொது ஜனங்களுக்கு விளங்கா மற் போகாது. எப்போது விலகினார்கள்? இருக்கவேண்டிய நாளெல்லாம் இருந்து விட்டு அடைய வேண்டிய பெருமையையும், உத்தியோகத்தையும், பணத்தையும், தங்கள் பிள்ளைக ளுக்கு உத்தியோகத்தையும் சம்பாதித்துக் கொண்டு கடைசியாய் சட்டசபை வேலையெல்லாம் முடிந்து, காலாவதி முடிய ஒரு வாரமிருக்கும்போது விலகி விட்டோம்! விலகி விட்டோம்!! என்று ஆடம்பரம் செய்கிறார்கள். எதற்காக விலகினார்கள்? விலகி விட்டோமென்று பொதுஜனங்களை ஏமாற்றி மறுபடியும் தங்களுக்கே வோட்டுப் போடும்படி செய்து மறுபடியும் தாங்களே போய் முன்னிலும் பலமாய் உட்கார்ந்துக் கொள்ளுவதற்காக விலகினார்கள்....

நீல் சத்தியாக்கிரகமும் “தலைவர்களும்” 0

நீல் சத்தியாக்கிரகமும் “தலைவர்களும்”

நீல் சத்தியாக்கிரகத்தை நடத்துவதற்கு ஆதாரமாயிருந்த சென்னைத் ‘தலைவர்’களில் ஒருவரான திரு. குழந்தை திரு. சாமிநாத முதலியாரைப் பிடித்தவுடன் ஒரு விளம்பரத்தை வெளியிட்டிருக்கிறார். அதில் தான் சத்தியாக்கிரகத்திற்கு தலைவனல்லவென்றும் சத்தியாக்கிரகி அல்லவென்றும், ஸ்ரீமான் சாமிநாத முதலியாரே அதன் தலைவரென்றும் எழுதி இருக்கிறார். சத்தியாக்கிரகக் கூட்டங்களுக்கெல்லாம் தலைமை வகித்து, சத்தியாக் கிரகங்களுக்கு உற்சாகத்தையும் கொடுத்து பேசி விட்டு, தன்னுடையப் பெய ரையும் பரப்பிக் கொண்டு, இப்போது தலைவர் என்பவரை சர்க்கார் பிடித்த வுடன் ‘நான் தலைவனல்ல,’ ‘சத்தியாக்கிரகியல்ல’ என்று எழுதி வேறு ஆசாமியை காட்டிக் கொடுத்து விட்டு தப்பித்துக் கொள்ளப் பார்ப்பது எவ்வளவு பயங்காளித் தனம் என்பதை நேயர்களே கவனிக்க வேண்டும். சென்னைத் தலைவர்களின் யோக்கியதை வெளியாவதற்கு திரு குழந்தை உதவி செய்தது நமக்கு மகிழ்ச்சியே. ஆனால் முதலிலேயே சத்தியாக்கிரக கூட்டமொன்றில் திரு. தண்டபாணி பிள்ளை அவர்கள் பேசும்போது இந்த மாதிரி கனவான்களின் யோக்கியதைகளை எடுத்துச் சொல்லி “தக்க சமயத்தில் இவர்கள் ஏமாற்றி விட்டுப்...

சுயராஜ்ஜிய கக்ஷியின் தேர்தல் உறுதிமொழி நிறைவேற்றல்! 0

சுயராஜ்ஜிய கக்ஷியின் தேர்தல் உறுதிமொழி நிறைவேற்றல்!

சுயராஜ்ஜியக் கக்ஷித் தலைவரான ஸ்ரீமான் எஸ். சீனிவாஸய்யங்கார், செல்லுமிடங்களிலெல்லாம் ஜஸ்ட்டிஸ் கக்ஷியார் கவர்ன்மென்டு விருந்து களுக்குப் போகிறார்கள். கவர்னர் முதலிய கவர்ன்மென்டு உத்தியோகஸ் தர்களுக்கு விருந்து கொடுக்கிறார்கள். நாங்கள் விருந்துக்கும் போகோம்; விருந்தும் கொடுக்கமாட்டோம்; ஆதலால் நாங்கள் ஒத்துழையாமை வாசனைக்காரர் என்று உறுதிமொழி கூறி ஓட்டு கேட்கிறார். இவ்வுறுதிமொழிக்கு ஜாமீன் கொடுப்பது போல் ஸ்ரீமான் சி.ராஜ கோபாலாச்சாரியாரும் சுயராஜ்யா கக்ஷியார் உறுதிமொழிப்படி நடப்பார்கள் அதற்கு நான் ஜாமீன் என்று மேலொப்பமும் போடுகிறார். மேலொப்ப கையெ ழுத்து முடிவதற்குள்ளாகவே சுயராஜ்யக் கக்ஷி முக்கியஸ்தரான சென்னை கார்ப்பரேஷன் தலைவர் ஸ்ரீமான் சாமி வெங்கிடாசலம் செட்டியார் கவர்ன ருக்கும் சர்க்கார் உத்தியோகஸ்தருக்கும் விருந்து கொடுத்து வருகிறார். தேர்தல் பாக்கியிருக்கும்போதே இவ்வளவு நாணயமாய் நடப்பவர் கள் தேர்தல் முற்றும் நடந்த பிறகு என்ன செய்வார்கள் என்பதை ஜாமீன் தாரான ஸ்ரீமான் ஆச்சாரியாரையும் சாக்ஷிக் கையெழுத்து போடுபவரான ஸ்ரீமான் முதலியாரையும் நம்புபவர்கள் தான் பதில் சொல்லவேண்டும்.. குடி அரசு...

மதத்தைப் பற்றிய விபரீதம் 0

மதத்தைப் பற்றிய விபரீதம்

மத சம்மந்தமான புரட்டுகளை நாம் வெளியாக்கி கண்டித்து வருவதில் வைதீகக் கொள்கையுடைய பார்ப்பனரல்லாதாரிலே அனேகருக்கு மன வருத்தம் ஏற்பட்டிருப்பதாகத் தெரிய வருகிறது. அதற்கேற்றாப் போல் மதத்தின் பேரால் வயிறு வளர்க்கும் பார்ப்பனர்களும் நம்மைப் பற்றி இம் மாதிரி ஆசாமிகளிடம் விஷமப் பிரசாரமும் செய்து வருவதினால் அவசரப் பட்டு மிகவும் விபரீத கொள்கைக்கும் மூட வழக்கங்களுக்கும் கட்டுப் பட்டவர்களும் “பழக்கம்” “பெரியோர் போன வழி” என்கிற வியாதிக்கும் ஆளானவர்களும் இம்மாதிரி விபரீதமாக கருதி வருத்தப்படுவதில் நமக்கு ஆச்சரியம் ஒன்றும் தோன்றவில்லை. தன வைசிய நாடு என்கிற நாட்டுக் கோட்டை செட்டியார்கள் நாட்டில் நாம் பிரசாரத்திற்கு சென்றிருந்த காலையிலும்கூட நெற்குப்பை என்ற ஒரு ஊரிலுள்ள வைதீகச் செட்டியார்மார்களை இப்படித்தான் ஒரு பார்ப்பனன் சொல்லி ஏமாற்றிவிட்டான். அதாவது ராமசாமி நாயக்கர் என்கிற ஒருவன் வந்து நாட்டையே பாழாக்குகிறான், கலி அவனால்தான் வெளியாகிறது, நாஸ்திகம் பேசுகிறான், அவன் பேச்சைக் கேட்டால் சிறுபிள் ளைகள் எல்லாம் கெட்டுப் போவார்கள்...

கதர் 0

கதர்

சபாநாயகரவர்களே, சபையோர்களே! இந்த மகாநாட்டில் எனக்கு முன் பேசிய கனவான்கள் ஒவ்வொரு வரும் முக்கியமாக கதர், மதுவிலக்கு, தீண்டாமை என மூன்று விஷயங் களைத்தான் சொல்லியிருக்கிறார்கள். நான் அதிகம் சொல்ல வேண்டிய தில்லை. ஏதோ என் மனதிலுள்ள சில விஷயங்களைச் சொல்ல அநுமதி கொடுத்ததால் சொல்லுகிறேன். கொங்குவேளாள குலத்தினர் இத்துடன் மூன்று மகாநாடு கூடியாகி விட்டது. சற்று உணர்ச்சியையும் கொடுத்திருக்கிறது. மகாநாட்டிற்கு வேளாள சமூகத்தினர் திருவிழாவுக்கு வருவதுபோல் எண்ணி வருகிறார்கள். காப்பியும் சாப்பாடும் சாப்பிட்டுவிட்டுப் போய்விடுகிறார்கள். இந்த சமூகத்தார்களிருக் கும் நிலைமைக்கு இச்சங்கம் இந்த வேலை செய்தது போதியதல்ல. இச்சமூகத்தின் கஷ்டந்தான் நாட்டின் கஷ்டமாகும். இச்சமூகத்தின் முன்னேற் றந்தான் நாட்டின் முன்னேற்றமாகும். கதரும், மதுவிலக்கும் உங்கள் சமூகத் தினர் செய்யாதது பெருங்குறை. உபசரணைக் கமிட்டித் தலைவர் ஸ்ரீமான் ஞ.ரத்தினசபாபதிக் கவுண்டர் கதரைப் பற்றித் தமது பிரசங்கத்தில் குறிப்பிட வில்லையென்று ஸ்ரீமான் ராஜகோபாலாச்சாரியாரவர்கள் குறிப்பிட்டார். அதன் காரணம் வேறொன்றுமில்லை; அவர் கதர் கட்டவில்லை;...

தங்கப்பெருமாள்  பாரதத் தாயின் துர்ப்பாக்கியம் 0

தங்கப்பெருமாள் பாரதத் தாயின் துர்ப்பாக்கியம்

தமிழ்நாட்டின் அருந்தவப்பயன், நமது ஆருயிர் நண்பர் ஸ்ரீமான் வா.மு. தங்கப்பெருமாள் பிள்ளை இம்மாதம் 6 – ந் தேதி காலை 4 மணிக்கு உயிர் நீத்தார் என்னும் சேதியை எழுதவே மெய் நடுங்குகிறது. அவருக்கு இன்னமும் ஆண்டு முப்பது கூட ஆகவில்லை. அவர் ஈரோடு முனிசிபல் எல்லைக்குள் கருங்கல் பாளையம் என்னும் கிராமத்தில் வாத்தியார் வீடு என்று சொல்லும்படியான புராதனமும் கண்ணியமும் வாய்ந்த ஒரு வைணவ வேளாள செல்வக் குடும்பத்திற்குச் செல்வமாய் பிறந்தவர். அவரது இளம் வயதிலே, அதாவது 12 – வது வயதிலேயே தந்தை இறந்து போனார். ஆயினும் சிறிய தந்தையார் ஆதரணையால் கல்வி கற்கப்பட்டு தனது 21 – வது வயதில் க்ஷ.ஹ பட்டம் பெற்று, 24 – வது வயதில் க்ஷ.டு.பட்டமும் பெற்று, ஈரோடு ஜில்லா முனிசிபு கோர்ட்டில் 1921 – ம் வருஷத்தில் வக்கீல் தொழிலை ஆரம் பித்தார். ஆரம்பித்த மாதமே 200 ரூபாய் வரும்படி...

வேண்டுகோள் 0

வேண்டுகோள்

“திராவிடன்” சென்னையில் தென்னிந்திய மகாஜன சங்கம் லிமிடெட் கம்பெனி யாரால் பார்ப்பனரல்லாத மக்களின் முன்னேற்றத்திற்கு என்பதாக “ஐஸ்டிஸ்”, “திராவிடன்” என்கிற இரு தினசரி பத்திரிகைகள் முறையே இங்கிலீசிலும் தமிழிலுமாக நடந்து வருகின்றன. அவைகள் ஜஸ்டிஸ் கட்சியானது அரசியல் அதிகாரத்தில் இருந்த காலமாகிய சென்ற ஆறு வருஷ காலமாக மந்திரிகளின் ஆயிரக்கணக்கான ரூபாய் நன்கொடைகளினாலும் அக்கட்சிப் பிரமுகர் களின் நன்கொடையாலும் நடைபெற்று வந்தன. இப்போது அக்கட்சி அதி காரமும், ஆரவாரமும் அக்கட்சியார் பாமர மக்கள் இடையில் தங்களது கொள்கைகளைச் சரியாகப் பரப்பாததாலும் பாமர மக்களிடம் அளவுக்கு மீறின நம்பிக்கையால் சரியான பிரசாரம் செய்யாமல் அலட்சியமாக இருந்து விட்டதாலும் அவர்களின் எதிர்கட்சியராகிய பார்ப்பனர்கள் தங்களுக்கு அனுகூலமாய் இக்குறைகளை உபயோகித்துக்கொண்டு காங்கிரஸ், சுயராஜ் யம் என்னும் பல பாமர மக்கள் ஆசையால் ஏமாறத்தக்க பெயர்களால் விஷமப் பிரசாரம் செய்ததின் பலனாலும், அதிகாரப் பதவி இழக்க நேரிட்ட தால் இப்பத்திரிகைகள் கஷ்டத்திலிருக்கின்றன. ஆனபோதிலும், இக் கட்சியார் இப்போது...

இந்து தேவஸ்தான சட்டம் 0

இந்து தேவஸ்தான சட்டம்

இந்து தேவஸ்தான சட்டத்தைப் பற்றி பாமர ஜனங்களை ஏமாற்ற தமிழ்நாட்டு தேசீய பிராமணர்களில் பெரும்பாலோர் செய்த கிளர்ச்சி, ஸ்ரீமான் கள் ஈ.வெ.ராமசாமி நாயக்கர், வரதராஜுலு நாயுடு முதலியவர்கள் போட்ட வெடி குண்டினால் நசுக்குண்டு போயிருந்தாலும், வேறு விதமான பல தந்திரங்கள் இன்னமும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அதாவது, வைசிராய் இதற்கு அநுமதி கொடுக்கச் செய்யாமலிருப்பதற்கு எவ்வளவோ பாடு பட்டார்கள். அதுவும் தோல்வியுற்றது. இந்தியா சட்டசபையில் எவ்வ ளவோ தந்திரம் செய்தார்கள். அதிலும் தோல்வியுற்றது. சீமைக்குப் போய் சக்கரவர்த்தியின் மூலம் இச்சட்டத்தை அழிக்கப் பார்த்தார்கள். அதிலும் தோல்வியுற்றது. கடைசியாக தங்கள் சட்ட ஞான தந்திரத்தைக் கொண்டு ஹைகோர்ட்டைப் பிடித்தார்கள். அங்கு ஏதோ கொஞ்சம் ஜயமடைகிறார்கள் போல் தோன்றுகிறது. அதாவது, பல மடாதிபதிகள் பேரால் அவர்களிடம் வக்காலத்து வாங்கி இச்சட்டமே சட்டப்படி செல்லாதென்றோ, இச்சட்டம் செய்ய சட்டசபைக்கு சட்டமில்லை என்றோ, வாதம் சொல்லி வழக்குத் தொடர்ந்திருக்கிறார்கள். வழக்கின் தன்மையைப் பற்றி இது சமயம் நாம்...

சென்னைக்கு செல்கிறோம் 0

சென்னைக்கு செல்கிறோம்

சுமார் ஐந்து ஆறு மாதங்களாய் நாம் தெரிவித்து கொண்டு வந்த படிக்கு ‘திராவிடன்’ பத்திரிகை விஷயமாய் சென்னைக்குச் செல்லுகிறோம். பார்ப்பனரல்லாதார் நன்மையையும் சுயமரியாதையையும் முன்னிட்டு ‘திராவிடன்’ பத்திரிகையையும் ஏற்று நடத்த வேண்டும் என்று நம்மை பலர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க பார்ப்பனரல்லாதார் இயக்கமாகிய தென் இந்திய நல உரிமைச் சங்கத்தின் சில முக்கிய தலைவர்களுக்கும் தோன்றிற்று. இதன் பயனாக நாம் மகா ஜனங்களையும் அபிப்பிராயம் கேட்டதில் அவர் களும் பெரும்பான்மையோர்கள் அந்தப்படியே கட்டளை இட்டார்கள் . அன்றியும் பல பிரபுக்களும் வேண்டிய சகாயம் செய்வதாக வாக்களித்து ஏற்றுக் கொள்ளும்படியாகவே வற்புறுத்தினார்கள் . எனவே சென்னைக்கு செல்லுகின்றோம். இதைப்பற்றி இந்த சமயத்தில் இரண்டொரு வார்த்தைகள் தெரியப் படுத்த வேண்டியது அவசியமெனக் கருதி வெளியிடுகிறோம். முதலாவது ஏற்கனவே தமிழ் நாட்டில் 2, 3 தமிழ் தினசரிகள் இருக்கும் போது ‘திராவிடன்’ என்கிற தினசரி பத்திரிகை ஒன்று நமக்கு வேண்டுமா? தமிழ் மக்கள் இவ்வளவு பத்திரிகைகளையும்...

தெருவில் நடத்தலும்                              சர்க்காரின் மனப்பான்மையும் 0

தெருவில் நடத்தலும் சர்க்காரின் மனப்பான்மையும்

கோயமுத்தூர் ஜில்லா உடுமலைப்பேட்டை தாலூக்கா குமரலிங்கம் என்னும் கிராம அக்கிரஹாரத்தில் ஒரு சர்க்கார் பொது தபாலாபீஸ் இருந்து வந்தது. அவ்வூர் அக்கிரஹாரவாசிகளாகிய பிராமணர்கள் தாழ்ந்த வகுப்பார் என்று சொல்லப்படும் ஆதி திராவிடர்களை தீண்டாதார் என்னும் காரணத் தால் அந்தத் தபால் ஆபீஸுக்குச் செல்லவும் அவ்வீதியில் நடக்கவும் விடுவ தில்லை. அதைப்பற்றி ஸ்ரீமான் சு.வீரய்யன் சட்டசபையில் ஒரு கேள்வி கேட்டார். அதாவது, 1924 ´ செப்டம்பர் – µ 25- ² சகல பொதுத் தெருக்களிலும் சகல ஜாதி மனிதர்களும் நடக்கலாம் யாரும் ஆnக்ஷபிக்கக் கூடாது என்ற 2660 – ம் நெம்பர் அரசாங்க உத்தரவு குமரலிங்கம் பிராமணர் களுக்குத் தெரிந்திருந்தும், அவர்கள் ஆதிதிராவிடர்களை தெருவில் நடக்கவிடாமல் தடுக்கிறார்களே; இதைப்பற்றி கேள்வியில்லையா என்று கேட்டார். அதற்கு சர்க்கார் மெம்பர் பதிலளித் ததாவது:- இது விஷயத்தைப் பற்றி போஸ்ட் மாஸ்டர் ஜனரலுக்கு எழுதி யிருக்கிறது; அவரும் ³ தபாலா பீஸை வேறு வீதிக்கு “மாற்றி...

சுயமரியாதைப் பிரசாரம் 0

சுயமரியாதைப் பிரசாரம்

கனவான்களே! இந்த இடங்களில் இதற்கு முன் அநேக தடவைகளில் வந்து பேசியி ருக்கின்றேன். அப்போது வந்த சமயங்களில் நான் எதைப்பற்றி பேசினே னோ அதே விஷயங்களைப்பற்றித்தான் இப்போதும் பேச வந்திருக் கின்றேன். ஆனால் அந்தக் காலங்களில் எனது பிரசங்கத்தைக் கேட்க வந்த ஜனங்களை விடவும் உற்சாகத்தைவிடவும் இப்போது எத்தனையோ மடங்கு அதிகமான ஜனங்களும் உற்சாகங்களும் காணப்படுவது எனக்கே ஆச்சரிய மாய் இருக்கிறது. ஒரு சமயம் எனது கொள்கைகள் ஏதாவது மாற்றமடைந்து விட்டதா என்பதாக நானே யோசித்துப் பார்ப்பதுண்டு. எவ்வளவு யோசித் தாலும் எனது பழைய கொள்கைகளிலிருந்து ஒரு சிறிதும் மாற்றிக் கொண்ட தாக எனது மனச்சாக்ஷி சொல்லுவதே இல்லை. மகாத்மா காங்கிரஸ் காலத்திலும், அதற்கு முன் நான் தனியே அபிப் பிராயம் கொண்டிருந்த சமயத்திலும் எந்தக் கொள்கையில் நம்பிக்கை கொண்டிருந்தேனோ அவற்றில் ஒரு சிறிதும் மாற்ற மேற்பட்டதாக எனக்குத் தோன்றுவதே இல்லை. அதாவது மகாத்மாவின் ஒத்துழையாமை காங்கிர சுக்கு முன்னால் பார்ப்பனரல்லாதார்...

சக்கரை என் நண்பரல்ல ( நன்றி கெட்ட தன்மை ) 0

சக்கரை என் நண்பரல்ல ( நன்றி கெட்ட தன்மை )

சென்னை கார்பொரேஷன் தேர்தலின் போது சென்னை கார்பொரே ஷனை பிராமணக் கார்பொரேஷனாக்க ஸ்ரீமான்கள் சக்கரை செட்டியாரும், ஆதிகேசவ நாயக்கரும், பிராமணரல்லாதார் பலரும் அரும்பாடு பட்டார்கள்; தங்கள் வகுப்பாரை வைதார்கள்; தேசத் துரோகி என்றார்கள்; சமூகத் துரோகி என்றார்கள்; இன்னும் ஒரு மயிர்க்காலுக்கு ஒரு பொய்யும் சொல்லி பாமர ஜனங்களை ஏமாற்றி பிராமண கார்பொரேஷன் ஆக்கினார்கள். பிறகு, இவர்கள் கதி என்ன ஆயிற்று? ஸ்ரீமான் ஆதிகேசவ நாயக்கரைப்பற்றி எங்கு தேடிப் பார்த்தாலும் ஆசாமி இருக்கிற இடமே தெரியாமல் ஒழித்து விட்டார் கள். ஸ்ரீமான் சக்கரை செட்டியாரைப் பற்றியோவென்றால் நினைப்பதற்கே மயிர் கூச்சல் எடுக்கிறது. அதாவது, சென்ற வாரம் கார்பொரேஷன் மீட்டிங் கில் ஸ்ரீமான் சக்கரை செட்டியார் தனது அருகில் இருந்த ஒரு பிராமண நண்பரிடம் தனது நண்பர் என்கிற முறையில், ஏதோ சில வார்த்தைகள் பேசிக் கொண்டிருந்தாராம். அதை ஒண்டிக் கேட்டுக் கொண்டிருந்த மற்றொரு பிராமண மெம்பர் உடனே அதை கார்பொரேஷன் பிரசிடெண்ட்...

இந்து மகாசபையின் உண்மை நிறம்! 0

இந்து மகாசபையின் உண்மை நிறம்!

சிரத்தானந்தரே அறிந்து விலகிக் கொண்டார் நமது நாட்டில் இந்து மகாசபை என்னும் பேரால் ஒரு பிராமண வர்ணாஸ்ரம சபை ஏற்பட்டிருப்பதைப்பற்றி நாம் பல முறை – அது, இந்தியா வை அந்நியருக்கு காட்டிக் கொடுப்பதற்கு ஆதரவாயிருந்த – இருக்கிற பிராமண வர்ணாஸ்ரமத்தை நிலை நிறுத்தவும், இந்துக்களும், முஸ்லீம்களும் ஒன்றுபட முடியாதபடி மத்தியில் ஒரு தடைக்கல்லாயிருக்கவும் (ஏனென்றால் இந்துக்களும், முஸ்லீம்களும் ஒன்றாய் விட்டால் சர்க்காரை விட வர்ணாஸ் ரமிகளுக்கு பெரிய ஆபத்து ) ஏற்பட்டதென்றும்; பிராமண சூழ்ச்சிகள் பல வற்றில் இதொன்று எனவும் பேசியும், எழுதியும் வந்திருக்கிறோம். அதற்கு ஆதாரமாகவும் தமிழ் நாட்டிலுள்ள இந்து மகாசபைக்கு வடிகட்டின வர்ணாஸ் ரமியான ஸ்ரீமான் கூ.சு. ராமச்சந்திரய்யர் அக்கிராசனராயிருப்பதும்; ஒரு வேளை சாப்பாடு ஒரு பிராமணக் குழந்தை சாப்பிடுவதை ஒரு பிராமண ரல்லாத குழந்தை பார்த்து விட்டால் ஒரு மாதம் பட்டினிக் கிடப்பேன் என்று சொன்ன ஸ்ரீமான் ஆ.மு. ஆச்சாரியார் முதலியோர் முக்கியஸ்தர்களாகவும் இருப்பதோடல்லாமல், தமிழ்...

பாதிரிமார்களும் ஆச்சாரியார்களும் 0

பாதிரிமார்களும் ஆச்சாரியார்களும்

நம் நாட்டு இந்து ஜனங்களுக்கு பாதிரிமார்களென்றால் ஒரு வித பக்தியும் மரியாதையும் அவர்களிடம் ஏற்பட்டு இருக்கிறது. அவர்கள் இரகசி யத்தை நமது மக்கள் உணரவே முடியாமல் போய் விடுகிறது. பொதுவாக பாதிரிமார்கள் என்போர் ஆங்கில அரசாங்கத்திற்கு ஒரு நடுத் தூண் போன்ற வர்கள். சுருக்கமாய் ஒரு வார்த்தையில் சொல்லுவதானால் அரசாங்கத் திற்கும், இந்தியக் குடி மக்களுக்கும் இடையில் உள்ள ஒற்றர்கள் என்றுதான் அவர்களைச் சொல்லவேண்டும். அப்பாதிரிமார்களிலேயும் உண்மையாய் கிருஸ்துநாதருடைய கட்டளைப்படி நடக்கக் கூடியவர்களோ, நடக்க வேண் டும் என்கிற ஆசையுள்ளவர்களோ சிலர் இருக்கலாம். நாம் நமது கண்ணுக் குத் தென்பட்ட அளவுக்கு பெரும்பான்மையானவர்களைப் பற்றி நமது அபிப்ராயத்தை எழுதுவோம். ஒரு தேசத்தையோ ஒரு மதத்தையோ ஜெயித்துக் கைப்பற்ற வேண்டுமானால், எப்படி திருடன் ஒரு வீட்டில் திருடு வதானால் கன்னம் வைத்து துவாரம் செய்துகொண்டு முதலில் தன் காலை விட்டு பார்ப்பானோ அதுபோல் பாதிரிமார்களை, அதாவது மதக் குருக்கள் என்பவர்களை முதலில் அனுப்புவது...

நெற்றிக் கண்ணைக் காட்டினாலும்              குற்றம் குற்றமே 0

நெற்றிக் கண்ணைக் காட்டினாலும் குற்றம் குற்றமே

சுவாமி வேதாசலம் அவர்கள் அருமைக் குமாரத்திக்கும் நமது நண்பர் திருவரங்கம்பிள்ளை அவர்களுக்கும் நடந்தேறிய திருமணச் சடங்கானது தமிழ்மக்களையே குழப்பத்தில் கொண்டு வந்து விட்டு விட்டது. சுவாமி வேதாசலம் அவர்களும் திருவாளர் கா. சுப்பிரமணிய பிள்ளை அவர்களும் தமிழ் நாட்டிலேயே தமிழ் மக்களின் பழய நாகரிக விஷயமாய் தக்க ஆராய்ச்சி உள்ளவர்கள் . ஏனையவர்களை இவர்களுக்கு சமமானவர்கள் அல்லது இவர்களுக்கு அடுத்தவர்கள் என்று சொல்ல வேண்டுமேயல்லாமல் இவர்களுக்கு மீறினவர்கள் என்று சொல்ல முடியாது என்பது நமது அபிப்பிராயம். அப்படிப்பட்ட இரு ஞான பாஸ்கரர்கள் கூடிச் செய்த திருமணம் பார்ப்பனீயத் திருமணமாய் நடந்தேறிற்றென்றால் மற்ற வர்கள் எவ்வளவு தூரம் பார்ப்பனீயத்திற்கு உயர்வு கொடுக்க மாட்டார்கள்! உயர்வு கொடுக்க விரும்பார்களா என்பதை யோசிக்கும்படி அவர்களுக்கே விட்டு விடுகிறேன். இதற்கு ஏதாவது தகுந்த சமாதானம் இவர்கள் சொல்லாத வரையில் திருத்த முடியாத குற்றமாவதோடு மக்களுக்கு குழப்பமும் நமது முயற்சிக்கு இடையூறும் ஏற்படும் என்பதையும் வணக்கத்துடன் தெரிவித்துக் கொள்ளுகிறோம்....