காங்கிரஸ் பைத்தியம்
மகாத்மா காந்தி அவர்களாலும், அவர் பேச்சைக் கேட்டு சிறைக்கு சென்ற பதினாயிரக்கணக்கான தேசபக்தர்களாலும் ஒரு கோடி ரூபாய் செலவு செய்து பிரசாரம் செய்ததின் பலனாலும் பாமர மக்களிடையே காங்கிரஸ் என்கிற பதத்திற்கு நமது நாட்டில் ஒருவித மதிப்பும் செல்வாக்கும் ஏற்பட்ட தோடு படித்த வகுப்பார்களுக்கு அதன் மூலம் உத்யோகம், பதவி, பட்டம், அதிகாரம் முதலியதுகள் கிடைப்பதற்கு இடமிருப்பதால், அதனிடத்தில் ஒருவித பைத்தியமும் ஏற்பட்டிருக்கிறது. அதனாலேயே ஒரு கூட்டத்தார் காங்கிரசின் பெயரை சொல்லிக் கொண்டு பிழைப்பதையும் மறைக்க முடியாது. ஆகவே, காங்கிரசின் பேரில் மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் குருட்டு நம்பிக்கையில், அதனால் தேசத்திற்கும், தேசத்தின் பெரும்பான்மை மக்களான குடியானவர்கள், தொழிலாளிகள், ஏழை மக்கள் முதலியவர்களுக் கும் ஏற்பட்ட கெடுதியையும், சர்க்காருக்கு அதனால் ஏற்படும் ஆதிக்கத் தையும் பலத்தையும் வெளியில் எடுத்துச் சொல்லக்கூட பயப்படுகிறார்கள். யாராவது துணிந்து வெளியில் எடுத்துச் சொல்ல வந்தாலும் அது மிகக் கஷ்டமாக இருக்கிறது. அதாவது மத சம்மந்தமான புரட்டுகளை வெளியில்...
