பச்சையப்பன் கலாசாலையும் பார்ப்பனர்களும்
பச்சையப்பன் கலாசாலையில் ஆதிதிராவிடர்கள் என்று சொல்லப் படுபவர்கள் இந்துக்கள்தான் என்று ஐகோர்ட்டார் தீர்ப்பு சொன்னதின் பலனாக சேர்த்துக் கொள்ள அப்பள்ளி தர்மகர்த்தாக்களில் பெரும்பாலோர் ஒப்புக் கொண்டார்களாம். இந்துக்கள் என்பவர்களுக்கும் இந்து மதம் என்ப தற்கும் இதைப்போல் முட்டாள்தனமானதும் அவமானமானதுமான சம்பவம் என்பதாக மற்றொன்றை குறிப்பிட முடியவேமுடியாது. ஒரு மனிதன் இந்துவா அல்லவா என்பதற்கு கூட வெள்ளைக்காரர்கள் ஏற்படுத்திய சட்ட மும் கோர்ட்டுகளும் தான் தீர்மானிக்க யோக்கியதை யுடையவைகளாக இருக்கின்றதேயொழிய தர்மகர்த்தாக்களுக்கோ இந்து மதம் ஆதாரம் என்பவைகளுக்கோ இந்துமத தலைவர்கள் என்பவர்களுக்கோ கொஞ்சமும் யோக்கியதை இல்லை என்றும் வெள்ளைக்கார கோர்ட்டார் சொன்னால் தான் தர்மகர்த்தாக்கள் ஒப்புக் கொள்ளக்கூடியவர்களே ஒழிய தங்களுக்கு என்ப தாக ஒரு சுயபுத்தியும் சுயமரியாதையும் இல்லையென்பதும் இதனால் நன் றாய் விளங்கிவிட்டது. தவிர தர்மகர்த்தாக்கள் சிலரின் யோக்கியதையை பார்க்கின்றபொழுது இந்த விஷயத்தில் அபிப்பிராயம் சொல்ல நேர்ந்த ஐகோர்ட் ஜட்ஜு நல்ல வேளையாக ஒரு வெள்ளைக்காரராய் இருந்ததினாலேயே ஆதிதிராவிடர் களும் இந்துக்கள்தான்...
