Author: admin

ஜாதிமறுப்பு திருமணங்களும் எதிர்கொள்ளும் சவால்களும் கருத்தரங்கம் 2 மன்னார்குடி 27042013 0

ஜாதிமறுப்பு திருமணங்களும் எதிர்கொள்ளும் சவால்களும் கருத்தரங்கம் 2 மன்னார்குடி 27042013

<iframe width=”390″ height=”315″ src=”https://www.youtube.com/embed/Zubk7TebL2g” frameborder=”0″ allowfullscreen></iframe>

திருச்சியில் டாஸ்மாக் முற்றுகை: கழகத் தோழர்கள் கைது 0

திருச்சியில் டாஸ்மாக் முற்றுகை: கழகத் தோழர்கள் கைது

காந்தி மார்க்கெட் பகுதியில் பள்ளி வளாகங்களுக்கு அருகிலுள்ள நெல்பேட்டை ஒயின்ஷாப், பொது மக்கள் மற்றும் மாணவர்களுக்கும் பெரும் இடையூறாக இருந்து வருகிறது. இந்நிலையில் திருச்சி மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக சார்பில் ஒயின்ஷாப் முற்றுகைப் போராட்டத்தை 4.8.2015 காலை 10 மணிக்குஅறிவித்த நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ற பெயரில் காந்தி மார்க்கெட் காவல் துறையினர் கழக மாவட்டச் செயலாளர் கந்த வேல் குமார், பிள்ளை மாநகர் பகுதி தலைவர் வெனிஸ் கிளமெண்ட், ஜெனிபர் ஆகியோரை நள்ளிரவில் கைது செய்து சிறையில் அடைத்தனர். பெரியார் முழக்கம் 13082015 இதழ்

ஆர்.எஸ்.எஸ்ஸை அம்பலப்படுத்துகிறார் சுப்ரமணியசாமி 0

ஆர்.எஸ்.எஸ்ஸை அம்பலப்படுத்துகிறார் சுப்ரமணியசாமி

1976ஆம் ஆண்டு இந்திராகாந்தி பிரதமராக இருந்தபோது அவசர நிலையைப் பிரகடனம் செய்து, அடிப்படை உரிமைகளை முடக்கியதோடு, ‘மிசா’ எனும் ஆள் தூக்கி சட்டத்தின் கீழ் விசாரணையின்றி ஓராண்டு காலம் தனது ஆட்சியை எதிர்த்தவர்களை சிறையில் போட்டார். அந்த கொடுங்கோல் ஆட்சியை எதிர்த்த வீராதி வீரர்களாக ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் இப்போது மார்தட்டிக் கொள்கிறார்கள். ஆனால், உண்மையில் சிறை செல்ல அஞ்சி, இந்திராகாந்தியிடம் மன்னிப்புக் கடிதங்களை எழுதிக் குவித்தவர்கள் என்பதே உண்மையான வரலாறு. ஆனாலும், இப்போது பா.ஜ.க.வின் முன்னணி தளபதியாக வலம்வரும் பார்ப்பனர் சுப்ரமணியசாமியே எழுதிய கட்டுரை ஒன்று கிடைத்திருக்கிறது. ‘இந்து’ ஆங்கில நாளேட்டில் 2000ஆம் ஆண்டில் ஜூன் 13ஆம் தேதி, சுப்ரமணியசாமி இக்கட்டுரையை எழுதினார். (கட்டுரையை படிக்க இங்கே சொடுக்கவும்) அப்போது இவர் பா.ஜ.க.வில் இல்லை. “பா.ஜ.க.-ஆர்.எஸ்.எஸ். தலைவர்களில் பெரும்பாலோர், அவசர நிலை காலத்தில் அதற்கு எதிராக நடந்த போராட்டத்தில் துரோகிகளாகவே மாறிவிட்டார்கள். இதற்கான ஆதாரங்கள், மகாராஷ்டிரா சட்டமன்ற நிகழ்வுகளின் ஆவணங்களிலேயே பதிவாகியுள்ளன. அப்போது...

கழுத்துக் கயிறும் கைக் கயிறும் 0

கழுத்துக் கயிறும் கைக் கயிறும்

கணவன் – திருமணம் செய்யப்போகும் ஒரு பெண், இனி தனக்கு ‘கீழ்ப்படிந்தவளாகவே’ இருக்கவேண்டும் என்பதன் அடையாளமாகக் கட்டப்படுவதுதான் தாலி. சமத்துவத்தையும் சுயமரியாதையையும் விரும்பும் பெண்கள், தாலியை அகற்றிக் கொள்ள முன் வந்தால், அது இந்து மதத்துக்கும், பண்பாட்டுக்கும் எதிரானது என்று தோள் தட்டி தொடை தட்டி, ‘இந்துத்துவா’வாதிகள் கிளம்பி விடுகிறார்கள். கடந்த ஏப்.14ஆம் தேதி, பெரியார் திடலில் நடந்த தாலி அகற்றும் நிகழ்வில், உள்ளே புகுந்து வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டார்கள். தாலி குறித்து விவாத நிகழ்ச்சி நடத்திய ஒரு தொலைக்காட்சி நிறுவனத்துக்கு வெடிகுண்டு வைத்தார்கள். கழுத்தில் கயிறு கட்டுவதுபோல கையில் கயிறு கட்டும் ஒரு பழக்கமும் ‘இந்து கலாச்சாரமாக’ நடைமுறைப் படுத்தப்பட்டு வருகிறது. இதற்குப் பெயர் ‘ரக்ஷா பந்தன்’. இது பெண்கள் ஆண்களின் கைகளில் கட்டும் கயிறு. ஒரு பெண், ஆணின் கையில் இந்தக் கயிறை கட்டிவிட்டால் அவனை சகோதரராக ஏற்றுக் கொண்டதாக அர்த்தம். சகோதரனாக இப்படி அறிவிக்கப்பட்ட ஒரு ஆண்,...