“தேசிய அறிக்கை”
மேல்படி தலையங்கம் கொண்ட அறிக்கையொன்று சென்னை ‘தமிழ்நாடு’ காரியாலயத்திலிருந்து நமக்கு அனுப்பப்பட்டதை வேறு இடத்தில் பிரசுரிக்கப்பட்டிருக்கிறது. இதை அனுசரித்து ஸ்ரீமான் டாக்டர் வரதராஜுலு நாயுடுகார் அவர்களால் ஒரு அச்சடித்த அழைப்புக் கார்டும் சிலருக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. அவ்வழைப்புக்கு யாவரும் போக வேண்டுமென்றே வேண்டிக் கொள்ளுகிறோம் . ஸ்ரீமான் ஈ.வெ. ராமசாமி நாயக்கர் தாயாருக்கு இது சமயம் கடினமான காயலா வாயிருக்கிற படியால் 9-ந் தேதிக்கு சென்னை போக அவருக்கு சவுகரியமாயிருக்குமோ இருக் காதோ என்பது சந்தேகமாயினும் அது பற்றி நமது அபிப்பிராயத்தை தெரிவிக்கக் கடமைப்பட்டிருக்கிறோம். தேசீய அறிக்கையில் குறித்திருக் கும் ஒரு விஷயத்தை நாமும் பலமாய் ஆதரிக்கிறோம். அதாவது, “சுயராஜ்யக் கக்ஷி பிராமணரல்லாதாருக்கு விரோதமாய்க் கட்டுப்பாடாகப் பிரசாரம் செய்து வருகிறது. இம்மாதிரியான நிலைமையை இன்னும் வளர விட்டுக் கொண்டே போனால் பிராமணரல்லாதாருக்குக் கெடுதல் வரும்” என்ப தாகும். இந்த அபிப்பிராயத்தை நாம் இரண்டு வருஷத்திற்கு முன்ன தாகவே கொண்டுள் ளோம். ஆதலால் ‘தமிழ்நாடு’ம்...
