தேவஸ்தானக் கமிட்டி ஈ.வெ.ராமசாமியார் ராஜிநாமா
திரு. ஈரோடு சர்க்கிள் தேவஸ்தானக் கமிட்டி பிரசிடெண்டு அவர்களுக்கும், மெம்பர் கனவான்கள் அவர்களுக்கும், மேற்படி கமிட்டி வைஸ் பிரசிடெண்டு ஈ.வெ.ராமசாமி வணக்கமாய் எழுதிக் கொண்டது:- கனவான்களே! மேற்படி கமிட்டியின் பொது மீட்டிங்குக்கும் ஸ்பெஷல் மீட்டிங்குக்கும் 4. 7. 29 ம் தேதி போடப்பட்டிருக்கும் அஜண்டா நோட்டீஸ் எனக்கு சென்னையில் கிடைத்தது. மேற்படி நோட்டீசானது என் கைக்குக் கிடைப்பதற்கு முன்பாகவே அந்த தேதியில் ஒரு முக்கியமான காரியத்திற்காக நான் சென்னையில் இருக்க வேண்டியதாய் ஏற்படுத்திக் கொண்டுவிட்ட படியால் குறிப்பிட்ட மீட்டிங்குகளுக்கு ஆஜராக முடியாததற்கு வருந்துகிறேன். நிற்க, மேற்படி 4-ந் தேதியில் ஏற்பாடு செய்திருக்கும் மற்றொரு மீட்டிங்கான ஸ்பெஷல் மீட்டிங்கில் குறிப்பிட்ட தீர்மானமானது சற்று முக்கியமானதென்றும், ஒரு தடவை இதே கமிட்டியாரால் செய்யப்பட்ட ஒரு தீர்மானத்தைக் கான்சல் செய்யத்தக்கதாய் இருப்பதால் அப்படி கான்சல் செய்யப்படுவதானது எனது முக்கிய கொள்கையை பாதிக்கக் கூடியதென்றும், மேலும் தேசத்தின் பொதுநல முற்போக்குக்கும், மனிதத்தன்மையின் உரிமைக்கும் நீதிக்கும் விரோதமானதென்றும் நான்...
