Author: admin

வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் 0

வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம்

  இந்தியாவில் முதல் முதலாக அரசியல் கிளர்ச்சி உண்டாக்கப் பட்டதின் உத்தேசமே, இந்திய ஆட்சி உத்தியோகம் முழுவதும் ஆங்கிலே யர் கையிலே இருப்பதால் இந்தியர்களுக்கும் இந்திய அரசாட்சியில் சரியான பிரதிநிதித்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்கின்ற கருத்தைக் கொண்டேதான் ஏற்படுத்தப்பட்டது என்பது எல்லா அரசியல்வாதிகளாலும் ஒப்பு கொள்ளப்பட்ட உண்மையாகும். யாராவது ஆnக்ஷபிப்பதாயிருந்தால் 45¦´த்திய அரசியல் ஸ்தாபனங்கள் என்பவைகளின் தீர்மானங்களைப் பார்த்தால் நன்றாய் தெரிய வரும். இப்படி அவர்கள் கேள்க்க வேண்டிய அவசியம் எப்படி ஏற்பட்டதென்றால் ஆங்கில அரசாட்சியின் பயனாக  இந்திய மக்களுக்கு சற்று கல்வி, அன்னிய நாட்டு வர்த்தமானம் முதலியவை கள் மூலம் அரசியல் விஷயங்கள்  அறிய வசதி ஏற்பட்டதேயாகும். ஆகவே அவர்களது ஆசையானது அரசாட்சி உத்தியோகங்களில் புகுந்து அதை அடைவதற்கு அரசியல் ஸ்தாபனம் என்பதை ஏற்படுத்திக் கொண்டு அதன்  மூலமாய் தங்களுக்கு இன்ன இன்ன உத்தியோகங்களில் உரிமை கொடுக்க வேண்டுமென்றும், பிறகு அதில்  இத்தனை இத்தனை ஸ்தானங்கள் தங்களுக்கே (இந்தியர்களுக்கே) வேண்டுமென்றும்...

கோவையில் நபிகள் நாயகம்                  பிறந்தநாள் வைபவம் 0

கோவையில் நபிகள் நாயகம்                  பிறந்தநாள் வைபவம்

தலைவரவர்களே! நண்பர்களே! முஸ்லீம் சமூகத்திற்கே முக்கியமான இந்த நாளில் எனக்கும் ஒரு சந்தர்ப்பமளித்து இங்கு பேசும்படி செய்ததற்கு எனது நன்றி அறிதலை தெரிவித்துக் கொள்ளுகின்றேன். இங்கு எனக்கு முன்பாக மௌல்வி சாயபு அவர்களும் ராவ்சாகிப் இராமச்சந்திரன் செட்டி யார் அவர்களும் மிக்க அருமையான விஷயங்களை தக்க நூல் ஆதார ஆராய்ச்சியுடன் எடுத்துச்சொன்னார்கள். நானோ அந்தக் காரியத்தில் சூனியமானவன். அதாவது நூலராய்ச்சி என்பது எனக்கு கிடையாது. நான் அதில் அதிகக் கவலை செலுத்தியதுமில்லை. அது மாத்திரமல்லாமல் பெரியவர்கள், மதத்தலைவர்கள் என்பவர்களின் பெருமைகளும், அவர்களது உபதேசப் பெருமைகளுமே ஒரு சமூகத்தின் மேன்மைக்குப் போதுமானது என்று நான் கருதுகின்றவனுமல்ல. ஆதாரங்கள் எப்படிப் பட்டதாக இருந்தாலும், மதத்தலைவர்கள் ‘மத அவதார புருஷர்கள்’ என்பவர்கள் எவ்வளவு பெருமை பொருந்தியவர்களாக இருந்தாலும், இன்றைய நம்முடைய யோக்கியதை பிரத்தியட்சத்தில் எப்படி இருக் கின்றது? உலக மக்கள் வரிசையில் நமது நிலைமை என்ன? நமது பிரத்தி யட்ச அனுபவ நடவடிக்கையும், மதிப்பும் எவ்வளவில்...

“இந்து மதம்”  வாணியர் சூத்திரரில் சேர்ந்தவரானாலும் வாணியர் தாழ்ந்த ஜாதியாராம்! 0

“இந்து மதம்” வாணியர் சூத்திரரில் சேர்ந்தவரானாலும் வாணியர் தாழ்ந்த ஜாதியாராம்!

      “வாணிய வகுப்பார்” என்று தங்களைச் சொல்லிக்கொள்ளும் ஒரு வகுப்பார் இந்தியாவில் எங்கும் ஒவ்வொரு பட்டணங்களிலும் தாராளமாய் இருந்து வருகிறார்கள். அவர்கள் வியாபாரத்துறையில் மிகுதியும் ஈடுபட்டு பல இடங்களில் மிக செல்வந்தர்களாகவும், பிரபலஸ்தர்களாகவும், நாகரீக முடையவர்களாவும் இருந்து வருகின்றார்கள். பலர் ஆங்கிலக் கல்வியில் தேற்சியடைந்து உத்தியோகத்திலும், வக்கீல் தொழிலிலும் ஈடுபட்டு மிகப் பிரக்கியாதியாகவும் இருந்து வருகின்றார்கள். அப்படிப்பட்ட ஒரு நாகரீகமான சமூகம் இந்தியாவில் பிறந்ததி னாலும் இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லிக் கொள்வதாலும் இந்த 20வது நூற்றாண்டிலும் தீண்டாதவர்களாகப் பாவிக்கப்பட வேண்டிய வர்களாக இருந்து வருகின்றார்கள். எப்படியெனில் திருவனந்தபுரம் ராஜிய எல்லைக்குள் அவர்கள் “அவர்ணஸ்தர்கள்” என்றே “ஈன ஜாதியார்” என்றே அரசியல் சமுதாய இயல்களில் எல்லாம் பதிவு செய்யப்பட்டு கோவில் பிரவேசமும், குளப்பிரவேசமும் தடுக்கப்பட்டு இருக்கின்றது. சென்னை மாகாணத்திலும், திருச்செந்தூரில் அவர்களுக்கு ஆலயப்பிரவேச உரிமை இல்லை என்று தீர்மானிக்கப்பட்டுவிட்டது. இப்போது சமீபத்தில் இந்த வாரத்திலேயே தஞ்சாவூர் ஜில்லாவிலுள்ள...

விருதுநகரில்,  உண்மைச் சுயமரியாதை திருமணம் 0

விருதுநகரில்,  உண்மைச் சுயமரியாதை திருமணம்

  தலைவரவர்களே! மணமக்களே! அவர்களது பெற்றோர்களே! மற்றும் சகோதரி, சகோதரர்களே! இந்தக் கூட்டத்தில் எனக்குப் பேச மிக்க ஆசையா யிருக்கிறது. ஆனால் நான் ஆசீர்வாதம் செய்யவோ வாழ்த்துக் கூறவோ எழுந்திருக்கவில்லை. மேல்கண்ட இரண்டும் முறையே புரட்டும் மூட நம்பிக்கையுடையதுமாகும். நமது நாட்டில் ஆசீர்வாதம் அனேகமாய் ஒரு ஜாதிக்கே உரிய தென்றும், அதுவும் அவர்களிடமிருந்து பணத்திற்கு விலைக்கு கிடைக்கக் கூடியதென்றும் கருதி இருக்கிறோம். அனேகமாக ஆசீர்வாத ஜாதி பிச்சை யெடுப்பதற்கு இந்த ஆசீர்வாதத்தை  உபயோகப்படுத்துவதையும் பார்க்கின்றோம். நம்மை மகாராஜனாகவும் nக்ஷமமாகவும் இருக்கும்படி ஆசீர்வாதம் செய்து பணம் வாங்குகிறவனுடைய  ஆசீர்வாதம் யோக்கிய முடையதும் உண்மை யுடையதுமானால் தன்னையே ஆசீர்வாதம் செய்து கொண்டு செல்வவானாய் சீமானாய் இருக்கும்படி செய்து கொள்ளலாமல்லவா? நம்மி டம் பிச்சைக்கு வருவானேன்? தவிர வாழ்த்துவதும் அர்த்த மற்றதேயாகும். ஒருவன் வாழ்த்துதலினாலேயே ஒரு காரியமும் ஆகி விடாது. வேண்டு மானால் மணமக்கள் இன்பமாய் வாழ ஆசைப்படலாம். ஆனால் அவ்வித ஆசைப்படுகின்றவர்களுக்கு ஆசைக்கேற்ற கடமை...

ஒரு யோசனை 0

ஒரு யோசனை

  சென்ற மே மாதம் 25 தேதியின் மாலை 6 மலர் 4 இதழில் “ஒரு யோசனை” யென்னும் தலைப்பின் கீழ் குடி அரசு பத்திரிகையை எட்டு பக்கங்கள் குறைத்து சந்தாத் துகை வருஷத்துக்கு மூன்று ரூபாயாக இருப் பதை இரண்டு ரூபாயாக ஆக்கலாம் என்று கருதியிருப்பதை வெளிப்படுத்தி  வாசகர்களின் அபிப்பிராயத்தையறிய  ஆசைப்பட்டிருப்பதை வெளியிட்டி ருந்தோம். அவற்றிற்கு வந்த பல அபிப்பிராயங்களில் சுமார் பத்துப் பேர் களேதான் அதற்குச் சம்மதம் கொடுத்திருக்கிறார்கள். சுமார் முன்னூற்றுக்கு மேற்பட்ட வாசகர்கள் பக்கங்களை எவ்வித காரணங் கொண்டும் குறைக்கக் கூடாதென்றும், சந்தா மூன்று ரூபாயாக இருப்பதைப் பற்றி கவலையில்லை யென்றும் தெரிவித்து வேறு சில யோசனைகளும் சொல்லி இருக்கிறார்கள். நிற்க, மலாய் நாட்டுச் சந்தாதாரர்கள்  கண்டிப்பாகப் பக்கங்களைக் குறைக் கக் கூடாதென்றும், சௌகரியப்பட்டால் அதிகப்படுத்தும் படியும் தெரிவித் திருக்கிறார்கள். ஆகவே வாசகர்களின் பெரும்பான்மையோர்களுடைய அபிப்பிராயம் மாறுபாடாயிருப்பதால் இது சமயம் அதாவது தற்காலம் குடி அரசு பத்திரிகையில்...

சோதிடம் 0

சோதிடம்

  இந்தியாவில் இந்துக்கள் என்பவர்கள் சாமி ஆடுதல் வாக்குச் சொல்லுதல், பூதம், பேய், பிசாசு, மனிதனை அடித்தல், மனிதனைப் பிடித்தல், மந்திரம் மந்திரித்தல், பில்லி சூனியம் செய்து மக்களுக்கு துன்பம் சாவு முதலியவை உண்டாக்குதல், குட்டி சாத்தான், கருப்பு முதலியவைகளைக் கொண்டு சித்து விளையாடுதல், வசியம் செய்து மக்களை ஸ்வாதீனப் படுத்தல், முன் ஜன்மம் பின் ஜன்மம் உண்டெனல் இவை முதலாகிய விஷயங்களில் நம்பிக்கைக் கொண்டு தங்கள் வாழ்க்கை நலத்திற்கு என்றும், எதிரிகளின் கேட்டிற்கு என்றும் எப்படித் தங்கள் பணத்தையும் நேரத்தையும் உபயோகிக்கின்றார்களோ அதுபோலவே தங்கள் வாழ்க்கைக்கு ஜோசியம் என்னும் ஒரு விஷயத்திலும் அதிக நம்பிக்கை  வைத்து பணத்தையும் நேரத்தையும் செலவு செய்து வருகிறார்கள். இதனால் மக்களின் வாழ்க்கைக்கு எவ்வளவோ கெடுதிகளும், பொருள் நஷ்டம், காலம் நஷ்டம், தப்பு அபிப்பி ராயம்  முதலியவைகளும் ஏற்பட்டு வருவதை கண்கூடாய்ப் பார்க் கின்றோம். சாதாரணமாய் எப்போதுமே ஜோசியன், மந்திரவாதி,  கோயில் குருக்கள் ஆகிய மூவரும்...

தமிழ் தினசரி 0

தமிழ் தினசரி

“சண்டமாருதம்” என்னும் தமிழ் தினசரிப் பத்திரிகை திருச்சியில் இருந்து சுயமரியாதை இயக்கத்திற்கு ஆக சுயமரியாதை சங்கத் தலைவர்க ளுடைய முயற்சியின் மீது ஆரம்பிக்கப்பட்டு இம்மாதம் 7ந்தேதி முதல் வெளியாகி இருக்கின்றது. அதை ஒரு லிமிடெட் கம்பெனி மூலம் வெளி யாக்கக் கருதி இருந்த விஷயம் பத்திரிகைகள் மூலம் ஏற்கனவே வாசகர் களுக்குத் தெரிந்ததாகும். லிமிடெட் கம்பெனி ரிஜிஸ்டர் செய்து பங்கு சேர்ந்த பிறகே பத்திரிகை வெளிவருவதென்றால் சற்று நாளாகும். ஆதலால் மகாநாடு நடைபெறும் நாளிலேயே எப்படியாவது பத்திரிகை வெளி யானால் அதற்கு அதிக ஆதரவு கிடைக்கும் என்கின்ற ஆசையின் மீது உயர்திரு.சௌந்திரபாண்டியன் அவர்கள் தற்கால சாந்தியாக சொந்தத்தில் ஏற்பாடு செய்து திரு.முருகப்பா அவர்கள் ஆசிரியத் தன்மையில் வெளிப் படுத்தப்பட்டதானது மிகுதியும் பாராட்டத்தக்கதும் நன்றி செலுத்தத்தக்க துமாகும். கூடிய சீக்கிரத்தில் கம்பெனி ரிஜிஸ்டர் செய்யப்பட்டு உயர்திரு. பாண்டியன் முதலியவர்கள் பங்கு சேர்க்க வருவார்கள். அந்தச்சமயம் பொது மக்களும் சிறப்பாக இயக்கத்தில் ஆர்வமுள்ள கனவான்களும்...

விருதுநகர் மகாநாடு  ஐ 0

விருதுநகர் மகாநாடு  ஐ

“சுயமரியாதை இயக்கம்” என்பதாக ஒரு இயக்கம் தோன்றி சுமார் 5,6 வருஷகாலமாகியிருந்தாலும், பொது மகாநாடு என்பதாக இந்த இரண்டு மூன்று வருஷங்களாகப் பெரிய பெரிய மகாநாடுகளும் அதற்கு முன்பிருந் தும் ஜில்லா, தாலூகா மகாநாடு என்பதாகப் பல மகாநாடுகளும் தமிழ் நாட்டில் கூட்டப்பட்டு வருவது யாவருமறிந்ததேயாகும். மற்றும் அது சம்பந்தமான பிரசாரங்களும் தமிழ்நாட்டில் ஆங்காங்கு தினந்தோறும் நடைபெற்று வருவதும் யாவருமறிந்ததாகும். இவற்றின் பயனாய் இந்துக்களென்று சொல்லிக்கொள்ளப்படும் பெரும்பான்மை மக்களுக்குள் ஒரு தலைகீழான பெரிய மனமாறுதலும் மற்றும் மத சம்பந்தமான சமூக சம்பந்தமான காரியங்களில் செய்கையிலே யுங்கூட ஒரு பெரிய மாறுதலும் ஏற்பட்டு வந்திருக்கின்ற விஷயமும் யாவரும் அறிந்ததேயாகும். இந்த இயக்கமும் இதற்கு ஏற்பட்டுள்ள பல அதிதீவிரக் கொள்கை களும் மதவுணர்ச்சிக்கும் பழக்க வழக்கத்திற்கும் நேர் மாறுதலானதாயிருந் தும் இவ்வளவு சொற்ப நாளில் இவ்வளவு தூரம் பரவியதற்குக் காரணம் என்னவென்றால் இவ்வியக்கம் கண்டும் இவ்வியக்கத்திற்கு சேவை புரிந்தும் வரும் மக்கள் யாவரும் ஏறக்குறைய...

அருஞ்சொல் பொருள் 0

அருஞ்சொல் பொருள்

  கியாதி              –              புகழ் சிட்சை             –              தண்டனை, பயிற்சி சிசு போஷண சாலை          –              குழந்தைகள் காப்பகம் சிலா சாசனம்            –              கல்வெட்டு பிர பாவம்      –              மேன்மை, கீர்த்தி விக்கினம்     –              இடையூறு, தீது

வைதீகர்களின் முட்டுக்கட்டை 0

வைதீகர்களின் முட்டுக்கட்டை

உலகமெங்கும், ‘சுதந்திரம்’ ‘சமத்துவம்’, ‘சகோதரத்துவம்’, ‘விடுதலை’ என்று கூக்குரலிடும் ஓசை செவியைத் துளைக்கின்றது. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக அடிமைப் படுகுழியில் வீழ்ந்துகிடந்த பெண்களும், ஏழை மக்களும், தாழ்த்தப்பட்ட மக்களும், தொழிலாளர்களும், தங்கள் முன்னேற்றத்திற்குத் தடையாக நின்ற கோட்டைகளைத் தகர்த்து ஒழித்து தரைமட்டமாக்கிக் கொண்டு வருகிறார்கள். இவர்களின் படை எழுச்சி யினால், மதக் கோட்டைகளும், சாஸ்திரக் கோட்டைகளும், வருணாசிரம தருமக் கோட்டைகளும், சுய நலக் கோட்டைகளும், பகுத்தறிவுக் குண்டு களால் அடியோடு பெயர்த் தெறியப்படுகின்றன. இந்தச் சந்தர்ப்பத்தில் இந்தியாவில் உள்ள உலக நிலையறியாத, பரந்த நோக்கமில்லாத வைதீகப்  பிடுங்கல்கள் தர்ப்பைப் புல்லுகளையும், பழய பஞ்சாங்கக் கட்டுகளையும், சாத்திரக் குப்பைகளையும் காட்டி மேற்படி கோட்டைகளைக் காப்பாற்ற முயற்சி செய்கின்றார்கள். ஆனால் இவர்களின் முயற்சி வீணென்று பள்ளிப் பிள்ளைகளும் அறிந்து பரிகசிக்கின்றார்கள் என்பதை நாம் சொல்ல வேண்டியதில்லை. இந்த வைதீகப்பிடுங்கல்களின் போக்கையும், மனப் பாங்கையும், முட்டாள் தனத்தையும் சென்ற 20-6-32 ல் தஞ்சை ஜில்லா திருவிடமருதூரில் கூடிய...

மன்னார்குடி மகாநாடு 0

மன்னார்குடி மகாநாடு

  தஞ்சை ஜில்லாவின் இரண்டாவது சுயமரியாதை மகாநாடு, சென்ற 18, 19-6-32 சனி, ஞாயிறுகளில் மன்னார்குடியில் நடைபெற்றது. அம்மகா நாட்டு டன் தொண்டர் மகாநாடும் நடைபெற்றது. தஞ்சை ஜில்லாவின் முதலாவது மகாநாடு சென்ற ஆண்டில் தரங்கம்பாடியில் நடைபெற்றபின் சென்ற ஆண்டி லேயே நன்னிலம் தாலூக்கா மகாநாடு நன்னிலத்திலும் நாகப்பட்டிணம் தாலூக்கா மகாநாடு நாகப்பட்டிணத்திலும், சென்னை மாகாணச் சுய மரியாதைத் தொண்டர் மகாநாடு திருவாரூரிலும் நடை பெற்றன. இன்னும் பல பொதுக்கூட்டங்களும் நடைபெற்றிருக்கின்றன. இவ்வாறு தஞ்சை ஜில்லா வில் பல சுயமரியாதை மகாநாடுகளும், அடிக்கடி பல ஊர்களில் பல பொதுக் கூட்டங்களும் நடைபெற்றுக் கொண்டிருந்தாலும், கிணற்றுத் தவளைகளாக இருந்து கொண்டிருக்கும் நமது வைதீக எதிரிகளில் பலர் தஞ்சை ஜில்லாவில் சுயமரியாதை இயக்கம் ஆதரவற்று மாண்டு போய் விட்டதென்று கனவு கண்டு கொண்டும், அக்கனவை உண்மையென்று அறியாமையால் நம்பிப் புரளி பண்ணிக் கொண்டும் இருந்தனர். இத்தகைய அறிவற்றோர்க்கு மன்னார்குடி மகாநாடு நல்ல புத்தி கற்பித்திருக்கும்...

சம்பளக் குறைவு 0

சம்பளக் குறைவு

மத்திய மாகாண அரசாங்க கல்வி மந்திரி உயர்தர வகுப்புப் பள்ளிக் கூடத்துப் பிள்ளைகளின் சம்பளங்களை அதாவது ஹைஸ்கூல் பிள்ளை களுக்கு 8-ல் ஒரு பங்கும், கலாசாலை மாணவர்களுக்கு 3-ல் ஒரு பங்குமே குறைத்திருக்கிறார்கள். இதற்குக் காரணம் சொல்லும்போது “ஏழைக் குடியானவர்களுடையவும், தொழிலாளிகளுடையவும் பிள்ளைகள் படிப்பதற்கு இப்போதைய சம்பளம் மிக அதிகமாயிருப்பதால் அதை குறைத்து அவர்களுக்குச் சௌகரியம் செய்ய வேண்டும் என்பதற்காகவே குறைக்கப்படுகின்றது” என்று சொல்லி இருக்கிறார். இதை அந்தச் சர்க்காராரும் ஒப்புக் கொண்டு விட்டார்கள். அது இந்த ஆகஸ்டு 1-ந் தேதி முதலே அமுலுக்கு வரப்படுமாம். அந்தப்படி இங்கும் நமது கல்வி மந்திரி பிள்ளைகள் சம்பளத்தை ஏன் குறைக்கப்படாது என்பதற்குக் காரணம் நமக்குத் தெரியவில்லை. குடி அரசு – துணைத் தலையங்கம் – 09.08.1931

இதற்கு என்ன சொல்லுகிறீர்கள்? 0

இதற்கு என்ன சொல்லுகிறீர்கள்?

உயர்திரு காந்தி அவர்கள் தமது 30-7-31 ² “யங் இந்தியா” பத்திரிகை யில் “நாம் இன்று செய்ய வேண்டியது எது?” என்னும் தலைப்பின் கீழ் “பொது ஜனங்களால் அதிகமாகக் கண்டிக்கப்படும் கராச்சி காங்கிரஸ் ஜீவாதார உரிமைகளைப் பற்றிய தீர்மானங்கள்” என்று ஆரம்பித்து, அவைகளை எல்லாம் எடுத்தெழுதி, அவைகளைப் பற்றி தமதபிப்பிராய மென்பதாக எழுதியிருப்பது என்னவென்றால், “ஜீவாதார உரிமைத் தீர்மானத்தில் குறிப்பிட்ட பல விஷயங் களில், அனேக விஷயங்களை இன்றே நடத்தி வைக்கக்கூடியவை களாகும். ஆதலால், அவற்றுள் சர்க்காரார் மூலம் சட்டம் செய்து நிறைவேற்றப்பட வேண்டிய சில விஷயங்கள் தவிர, பொது ஜனங் களால் செய்து முடிக்க வேண்டிய முக்கியமான விஷயங்களை இப்பொழுதே நாம் செய்து முடிக்காவிட்டால் பிறகு, இதே பொது ஜனங்கள் தயவாலே இருக்கவேண்டிய அரசாங்கத்தால் எப்படி அவைகள் செய்து முடிக்கப்பட முடியும்?”. “இன்றைய தினமே, கண்டிப்பாய் மாற்றித்தீர வேண்டிய முக்கிய விஷயங்களை செய்யாமல் விட்டு விட்டால், நமக்கு அதிகாரம் வந்தபிறகு...

பாராட்டுகின்றோம் 0

பாராட்டுகின்றோம்

  எவ்வளவுதான் பழமை விரும்பிகளும், வைதீகர்களும், வர்ணாசிரமி களும் தங்கள் சுயநலத்தையும், கொள்கைகளையும், பிடிவாதத்தையும் நிலைநாட்ட பகீரதப் பிரயத்தனப் பட்டபோதிலும், எவ்வகை சூட்சிகள் செய்ய முற்பட்டபோதிலும், எவ்வகை மறைமுகமான எதிர்ப்புகள் உண்டாக்கி வைத்த போதிலும் நடைபெறுகின்ற சம்பவங்கள் அவர்களது மனமுவந்த எண்ணங்களையும் ஆகாயக் கோட்டைகளையும் தவிடு பொடியாக்குவதன்றி நேர்விரோதமாகவுமிருக்கின்றன. இது காலச் சக்கரத்தின் வேகமேயன்றி பிறிதொன்றில்லை. உலகம் தினம் தினம் நிமிஷத்திற்கு நிமிஷம் முற்போக் கடைந்து கொண்டு நவீன மயமாகிக் கொண்டு வருவதுடன் ஒவ்வொரு நாளும்  நடைபெறும் அதியற்புத செயல்களினின்று பழமையை மறந்து விடுங்கள்! பழமையை மறந்து விடுங்கள்! என்று அறை கூவியழைப்பதை போன்றிருக்கிறது. இதற்கு உதாரணம் வேண்டுமாயின் இவ்வாரம் நமதியக்கத் தோழர் விருதுநகர் திரு வி. வி. ராமசாமி அவர்கள் ராமனாதபுரம் ஜில்லா தேவஸ்தான கமிட்டி ஆலோசனை போர்டின் தலைவராய்த் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் என்ற செய்தியே போதுமானதாகும். அன்பர் திரு. ராமசாமி அவர்கள் நாடார் என்று வழங்கப்படும் குலத்தவராவர். நாடார் குலத்தவர்கள்...

ஈரோட்டில் திரு. முகமதுநபி பிறந்தநாள் கொண்டாட்டம் 0

ஈரோட்டில் திரு. முகமதுநபி பிறந்தநாள் கொண்டாட்டம்

சகோதரர்களே! உங்கள் மத சம்பந்தமான ஒரு சிறந்த நாள் கொண் டாட்டத்திற்கு என்னைத் தலைமை வகிக்க அழைத்ததற்கு நான் நன்றி செலுத்துகிறேன். என்னை அநேகர் மத துவேஷி என்றும் கடவுள் மறுப்புக்காரன் என்றும் சொல்லுவார்கள். இந்த ஊரிலும் பலர் சொல்லுவார்கள். அப்படி யிருக்க நீங்கள் என்னை அழைத்து மிகவும் தைரியமென்றே சொல்ல வேண்டும். எப்படி இருந்தாலும் நான் இந்த மாதிரி சந்தர்ப்பங்களில் எனது அபிப்பிராயத்தை வெளியிட பின்வாங்குவதே இல்லை. சென்ற வருஷத் திலும் இதேமாதிரிகொண்டாட்டத்தில் நான் பேசி இருக்கின்றேன். அதிலும் பல இந்து முஸ்லீம்களுக்கு அதிருப்தி இருந்திருக்கலாமானாலும் அநேக ருக்கு திருப்தி ஏற்பட்டு முஸ்லீம்களால் அல்லாசாமிப் பண்டிகை நிறுத்தப் பட்டதற்கு நான் மகிழ்ச்சி அடைகின்றேன். ஆனால் என்பேரில் கோபித்துக் கொண்ட இந்துக்கள் இவ்வூரில் தங்கள் மாரியம்மன் பண்டிகையைக்கூட நிறுத்திவிட சம்மதிக்காமல் மிகுதியும் காட்டுமிராண்டித்தனமான முறையி லேயே நடத்துகின்றார்கள். இப்படியேதான் எங்கும் நடைபெறுகிறது. இந்துக்களை விட இஸ்லாமானவர்கள் அறிவுக்கு மதிப்புக் கொடுப்பவர்கள் என்பதும்...

அரசாங்கமும், சமூக சீர்திருத்தமும் 0

அரசாங்கமும், சமூக சீர்திருத்தமும்

  மைசூர் சமஸ்தான சட்டசபைத் கூட்டத்தின் முடிவில், திவான் சர். மிர்ஸா இஸ்மாயில் அவர்கள் செய்த பிரசங்கத்தில், “இந்தியாவில் சமுதாய சீர்திருத்தங்கள் சம்பந்தமான சட்டங்களை அமுலுக்குக் கொண்டு வரும் விஷயத்தில் பல கஷ்டங்கள் ஏற்படும். முதலில் பொது ஜனங்களிடம் சீர்திருத்தம் உண்டாக வேண்டும்.  இதனால் தான் எளிதில் சமுதாயச் சீர்திருத்தம் உண்டாகும். இவ்வாறு பொது ஜனங்களிடம் சீர்திருத்த உணர்ச்சி உண்டாகாத காரணத்தால்தான், அதிகமான பொது ஜன ஆதரவு ஏற்படும் வரையிலும் சீர்திருத்தம் சம்பந்தமான மசோதாக்களை ஆதரிக்க அரசாங்கத்தார் பின் வாங்குகின்றனர்” என்று பேசியிருக்கிறார். இப்பேச்சிலிருந்து பொதுஜன ஆதரவு இருந்தால் தான் அரசாங்கத்தார், சமூகச் சீர்திருத்த மசோதாக்களுக்கு ஆதரவு அளிக்க முடியும். இன்றேல் அளிக்க முடியாதென்று அர்த்தம் உண்டாகவும் இட மிருக்கின்றது. உண்மையில் இந்த அர்த்தத்தில் திவான் அவர்கள் பேசி யிருப்பாரானால், இது “அலை ஒய்ந்த பின் கடலில் ஸ்நானம் செய்யலாம்” என்னும் முடிவைப் போன்றது என்று தான் நாம் கருதுகின்றோம். பொது...

சிறுபான்மையோர் ஒப்பந்தம் 0

சிறுபான்மையோர் ஒப்பந்தம்

  வாக்குரிமை சம்பந்தமாக இந்தியாவில் விசாரணை செய்த திரு. லோதியன் கமிட்டியின் அறிக்கையும் வெளியாகி விட்டது. வயது வந்தவர் களுக்கெல்லாம் ஓட்டுரிமை கொடுத்தால் ஒழிய, தேசத்தில் கஷ்ட நிலை மையை அனுபவத்தில் உணர்ந்திருக்கும் ஏழை மக்கள் சட்டசபைகளில் பிரதிநிதித்துவம் பெற முடியாதென்றும், ஓட்டுரிமையை நூற்றுக்குப் பத்து வீதமோ, பதினைந்து வீதமோ, இருபது வீதமோ, முப்பது வீதமோ, ஐம்பது வீதமோ அதிகப் படுத்துவதனால் ஏழைகளுக்கு ஒரு வித நன்மையும் ஏற்பட்டு விடாதென்றும், இப்பொழுது இருப்பதுபோல், பணக்காரர்களும், ஜமீன்தார்களும், முதலாளிகளும் தான் சட்டசபைகளில் பிரதிநிதித்துவம் பெற முடியுமென்றும் முன்பு எழுதியிருந்தோம். வயது வந்தவர்களுக்கெல்லாம் ஓட்டுரிமை கொடுக்கும் விஷயத்தைப் பற்றி. லோதியன் கமிட்டியோடு ஒத்துழைத்த யாரும் கவலை எடுத்துக் கொள்ளவில்லை யென்றும் குறிப் பிட்டிருந்தோம். அவ்வாறே இப்பொழுது வெளியா யிருக்கும் லோதியன் கமிட்டி அறிக்கையிலும் ஓட்டர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தப் பட்டிருப்பதைத் தவிர வேறு எந்த அபூர்வமான காரியமும் காணப்பட வில்லை. ஆகவே ஏழைமக்கள் நிலை எப்பொழுதும்...

சித்தோடு சீர்திருத்த சங்கம் 0

சித்தோடு சீர்திருத்த சங்கம்

  தலைவரவர்களே! சகோதரிகளே!! சகோதரர்களே!!! இன்று இந்து சமூகம் என்பதற்கென்று ஏற்படுத்திக்கொண்டிருக்கின்ற ஒரு பண்டிகை நாளைக்கொண்டு ஒரு கூட்டம் ஏற்பாடு செய்திருக்கிறீர்கள். ஆனால் வேறு இந்துக்கள் இம்மாதிரிகூட்டம் கூடினால் பண்டிகையின் புராணத்தைப் பற்றியும் அதைக் கொண்டாடினால் மோக்ஷம் அடையலாம் என்றும் பிரசங்கம் செய்யக் கூட்டுவார்கள். ஆனால் நீங்கள் இம்மாதிரி பண்டிகையை இனி வெறுக்கும்படி எடுத்துச் சொல்லும் உணர்ச்சி உள்ள வனை கூப்பிட்டிருப்பது மிகவும் போற்றத்தக்கதேயாகும். இக்கூட்டத்திற்கு நீங்கள் ஒரு அருமையான தலைவரைக் கண்டு பிடித்தது மிகவும் போற்றத்தக்கதேயாகும். தலைவர் திரு.வி.எஸ்.செங் கோட்டையா அவர்கள் பெரும் செல்வவான், பொதுஜனங்களுக்குப் பெரிதும் உபகாரியாய் இருந்து வருபவர், அநேக நல்ல பொதுக்காரியங் களில் ஈடுபட்டிருப்பார்கள். அதுபோலவே மத விஷயங்களிலும் பெரிதும் ஈடுபட்டு மதசம்மந்தமான விஷயங்களில் அநேக காரியங்கள் செய்து வரு பவர். ஆதலால் அவரை இந்தக்கூட்டத்திற்கு தலைமை வகிக்க ஏற்பாடு செய்த உங்களை பாராட்ட வேண்டியதே. எனது உபன்யாசம் பயன்படு மானால் தலைவரால் சீர்திருத்தத்துறைக்கு அநேக...

சிக்கனம்  சிக்கனமா? வரி குறைப்பா? 0

சிக்கனம் சிக்கனமா? வரி குறைப்பா?

    உணவுப் பொருள்களின் விலை சுமார் 30 வருஷத்திற்குமுன் இருந்தது போலவும், சிலவற்றிற்கு அதைவிட மலிவாகவும் குறைந்து போய் சர்க்காரார் வரிகட்டுவதற்கு மார்க்கமில்லாமல் குடியானவர்களுக்கும், வியாபாரிகளுக்கும் அதிகக்கஷ்டம் ஏற்பட்டு மக்கள் புழுவாய்த் துடித்துக் கொண்டிருக்கும் இக்காலத்தில், பொதுஜனத் தலைவர்கள் என்பவர்களும், தேசீயத் தலைவர்களென்பவர்களும், தேசீய ஸ்தாபனம் என்பவைகளும் சிறிதும் ஈவு, இரக்கம் யோக்கியப் பொறுப்பு இன்றி உத்தியோகங்கள் பெறவும், பெரும் பெரும் உத்தியோகங்களை சிருஷ்டிக்கவும் முயற்சிகள் செய்வதிலும், அவற்றிற்காகப் போட்டி போடுவதிலும் காலத்தைக் கழித்துக் கொண்டு வருவது இந்திய தேசத்திற்கே பெரிய மானக்கேடானதும், குடி களுக்கு அதிகக் கஷ்டம் கொடுக்கக் கூடியதுமான காரியமுமாகும் என்பதை நாம் எடுத்துக்காட்ட வேண்டியதில்லை. இந்தக் கொடுமையையும், அக்கிரமங்களையும் பொதுஜனங்கள் ஒருவாறு உணர்ந்து விட்டார்கள் என்பதை அறிந்த சர்க்காராரும், ஜனத் தலைவர் ஜனப்பிரதிநிதிகள் என்பவர்களும், பொது ஜனங்களை ஏமாற்ற சிக்கனம்-சிக்கனமென்ற பல்லவியைப் பாடிக்கொண்டு, ஒரு சிக்கன நாடகத்தை ஆரம்பித்து, பொது ஜனங்கள் கண்களில் மண்ணைப் போட...

சத்தியாக்கிரகம் வீண் 0

சத்தியாக்கிரகம் வீண்

  “சத்தியாக்கிரகம்” என்பது “சண்டித்தனம்” என்பதும், அதனால் வீண் சிரமமும், நஷ்டமும் ஏற்படும் என்பதும், அது மனிதருடைய வீர உணர்ச் சியைக் குறைத்து அடிமைப்புத்தியை வளர்க்கக்கூடிய தென்பதும் நமது இயக்கத் தோழர்களுக்கெல்லாம் தெரியும். ஆகையால் தான் நாம் சத்தியாக் கிரகத்தைக் கண்டித்து வருகிறோம். அரசியல் துறையில் சத்தியாக்கிரகம் சிறிதும் பயனளிக்காதென்பது வெளிப்படையாகத் தெரிந்த செய்தி. சமூக ஊழல்களைப் போக்கும் வகையில் சத்தியாக்கிரகம் பயன் தரக்கூடும் என்ற ஒரு நம்பிக்கை சிலரிடம் இருந்து வந்தது. அந் நம்பிக்கையும் பயனற்ற தென்பதை விருதுநகர் மகாநாட்டிலும், அதன்பின் பல மகாநாடுகளிலும் நமது பத்திரிகை மூலமாகவும் விளக்கப் பட்டிருக்கிறது. இதை உண்மையென்று நிரூபிக்க, சமீபத்தில், நாசிக்கில், தீண்டாதவர்கள் செய்த சத்தியாக்கிரகம் சம்பந்தமாக அவர்களுக்கும் சனா தன தருமிகளுக்கும் உண்டான சச்சரவை, நாசிக் ஜில்லா மாஜிஸ்திரேட் திரு. எல். என். பிரௌன் அவர்கள் விசாரணை செய்து தீர்ப்பளித்து உத்தர விட்டிருப்பதே போதுமானதாகும். நாசிக்கில், ராமகுண்டம், இலச்சுமணகுண்டம், தனூர்குண்டம், சீதா...

சிறுபிள்ளைத்தனம் 0

சிறுபிள்ளைத்தனம்

  சிறுபிள்ளைகள் விளையாட்டிலேயே கவனமுள்ளவர்கள்; தாம் செய்யும் வேலைக்குப் பிற்காலத்தில் இன்னது பலன் கிடைக்கும் என்பது பற்றிச் சிறிதும் சிந்திக்கமாட்டார்கள். தற்கால சந்தோஷத்திற்காக எந்தக் காரியங்களையும் பொறுப்பின்றித் செய்யத் துணிவார்கள். அவர்களுக்குக் கவலையோ பொறுப்போ ஒரு சிறிதும் தெரியாது. இதனால்தான் ‘சிறுபிள்ளை யிட்ட வெள்ளாமை வீடு வந்து சேராது’ என்று சொல்லுவது வழக்கம். இத்தகைய விளையாட்டுப் பிள்ளைகளைப் போலத்தான் இப்பொழுது காங்கிரஸ்காரர்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கிறவர்கள் நடந்து வரு கிறார்கள். உண்மையில் கொஞ்சங் கூட பொறுப்புள்ள காங்கிரஸ்காரர்கள் யாரும் இப்பொழுது இல்லை. பொறுப்பற்ற முறையில்   காலித்தனமான காரியங்களைச் செய்து வீண் கலகத்தை உண்டு பண்ணும் சில சிறுபிள்ளைத் தனமுடையவர்களே இப்பொழுது ‘காங்கிரஸ்’ என்பதன் பெயரால் ஆர்ப் பாட்டம் செய்து கொண்டிருக்கிறார்கள். தபால் பெட்டிகளுக்குத் தீயிடுவது, தபாலாபிசை மறியல் செய்வது, ரயிலை மறியல் செய்வது காங்கிரஸ் கட்டளைகளுக்கு உட்படாத தனித்த   வியாபாரிகளுக்கு நஷ்டத்தை  விளைவிப்பது,  அவர்கள் கடைகளை ரகசிய முறையில் தீக்கிரையாக்குவது போன்ற...

தற்கொலை தெய்வீகமா? 0

தற்கொலை தெய்வீகமா?

  -தேசியத்துரோகி மசூலிப்பட்டிணத்தில், ஒரு போலீஸ் சேவகரின் மகளுக்குக் கல்யாணம் நடத்துவதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாம். கல்யாணத்திற்கு முதல் நாள் அந்த மணப்பெண், கல்யாண உடைகளை அணிந்து கொண்டு வீட்டின் கொல்லைப் புறத்தில் அடுக்கியிருந்த விறகில் ஏறித் தானே நெருப்பு வைத்துக் கொண்டு இறந்து விட்டாளாம். இவ்வாறு இறந்ததற்குக் காரணம் அப்பெண், தன்னை “தெய்வத் தன்மை உள்ளவள்” என்றும் தான் “மனிதனைக் கல்யாணம் பண்ணிக் கொள்ள யோக்யதை இல்லை” என்றும் கூறியதாகவும் கடிதம் எழுதி வைத்திருந்ததாகவும் சொல்லப்படுகிறது. அப்பெண் இறந்ததற்கு ‘தெய்வத்தன்மை’ கற்பிக்கப்பட்டவுடன், ஏராளமான ஜனங்கள் கூடி, முனிசிபல் அதிகாரிகளின் உத்தரவுப் பெற்று அப்பிணத்தை ஊர்வலமாக தூக்கிச் சென்று அடக்கஞ் செய்தார்களாம். இதன்பின் அப்பிணத்தை புதைத்த இடத்தில் கோயில் கட்டுவதற்காக ஜில்லா முழுதும் பணம் வசூல் பண்ணுகிறார்களாம். நமது நாட்டு மக்களின் பயித்தியக்காரத்தனத்தைக் காட்டுவதற்கு இதைவிட வேறு என்ன உதாரணம் வேண்டும்? வாங்கினகடனை திருப்பிக் கொடுக்க முடியாத காரணத்தால் மான முள்ளவர்கள் பலர்...

முகமதுநபி பிறந்தநாள் கொண்டாட்டம் 0

முகமதுநபி பிறந்தநாள் கொண்டாட்டம்

சகோதரர்களே! இன்று இங்கு கூட்டப்பட்டிருக்கும் ஒரு மதசம்பந்தமான இந்த முக்கியக் கொண்டாட்டத்திற்கு என்னைத் தலைமை வகிக்க அழைத்ததை உண்மையிலேயே நான் ஒரு பெருமையாய்க் கருதுகின்றேன். ஏனெனில், என்னைப்பற்றி எல்லா மத பக்தர்களும் சொல்லும் குறை கள் உலகம் அறிந்ததேயாகும். அதாவது நான் மதங்களைக் குற்றம் சொல்லுகின்றவன் என்றும், மதமே கூடாதென்று சொல்லுகின்றவன் என்பதோடு மாத்திரமல்லாமல் கடவுளைப் பற்றியே கூடத் தகறாரு சொல்லுகின்றவன் என்றும் சொல்லப்படுகின்றவனாவேன். அப்படிப்பட்ட என்னை, உலகத்திலுள்ள மற்ற மதக்காரர்களை எல்லாம் விட அதிகமான மதபக்தி கொண்டவர்கள் என்று சொல்லப்படு கின்ற இஸ்லாம் மார்க்கத்தை அனுசரிக்கின்றவர்கள் என்பவர்களாகிய நீங்கள் கூப்பிட்டிருப்பது மிகவும் அதிசயமென்று சொல்லப்பட வேண்டும் அல்லவா? நீங்கள் என்னைக் கூப்பிட்டது போல் இந்துக்கள் என்று சொல்லிக் கொள்ளுகின்றவர்கள் அவர்கள் மதசம்பந்தமான ஒரு நாயன்மாரோ, ஆழ்வாரோ பிறந்த நாள், செத்த நாள் “திருநக்ஷத்திரம்” என்று சொல்லப் படும் “விஷேச நாள்” கொண்டாட்டத்திற்கு ஒரு முஸ்லீமையோ, ஒரு கிறிஸ்துவனையோ சுலபத்தில் கூப்பிட்டு...

புதுக்கோட்டை 0

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் டவுன் முனிசிபல் சங்கத்தார் முனிசிபாலிடி வரியை வழக்கப்படி ஐந்து வருடங்களுக்கொரு தடவை பரிசீலனை செய்வது போன்ற முறையில் புதியவரிவிதிக்கப்பட்டதின் காரணமாக பொதுஜனங்கள் தங்களுடைய குறைகளை சமஸ்தான தலைமை அதிகாரி யாகிய உயர்திரு ராகவையாவிடம் கூட்டமாகச் சென்று சொல்லிக்கொண்ட தில் அவர் அளித்த பதில் திருப்தியில்லாமல் போனதின் காரணமாய் ஜனங் கள் ஆத்திரப்பட்டு, பொறுமையிழந்து, பெரிய கலவரம்  விளைவித்து விட்டதாகச் செய்தி கிடைத்திருக்கின்றது. அச்செய்திகளில் கலவரத்தின் பயனாய் பலாத்காரங்களும், அடிதடிகளும், உயிர்ச்சேதங்களும், பொருள் நஷ்டமுமேற்பட்டிருப்பதாக வும் தெரிய வருகிறது. அதிகாரிகள் கலவரத்தை யடக்க சக்தியற்றவர்களாகி அவர்களும் நிலைமை தவறி நடந்து கொண்டதாகவும், உயிருக்கு பயந்து ஓடிவிட்ட தாகவும் தெரியவருகிறது. அதிகாரிகள் ஓடியொழிந்துகொள்ள நேர்ந்ததை நம்மால் ஒப்புக்கொள்ள முடியவில்லை. கலகம் செய்தவர்கள் வரி போடப் பட்டக் காரணத்தைக் கொண்டு கலகம் செய்தார்களென்றாலும், கலகத்தின் தன்மையும், முக்கியமும் பார்ப்பனர் பேரிலுள்ள ஆத்திரமென்றே காணப் படுகின்றது. அதாவது அந்த சமஸ்தானத்தில் பார்ப்பனர்களின் ஆதிக்கமும், அவர்களால் மக்களுக்கேற்பட்டு...

இளைஞர்களும் சுயமரியாதையும் 0

இளைஞர்களும் சுயமரியாதையும்

  கத்தோலிக்கர்  பயம் இளைஞர்களுக்கும், சுயமரியாதை இயக்கத்திற்கும் உள்ள தொடர்பைப் பற்றி இப்பொழுது நாம் கூறுவது புதியதன்று. இந்த நாட்டில் மட்டிலும் அல்ல, வேறு எந்த நாட்டிலும் மூடப் பழக்க வழக்கங்களையும் அவற்றிற்குத் தந்தைமார்களாக இருந்து வளர்த்து வரும் புரோகிதர்களின் ஆதிக்கங்களையும், இந்தப் புரோகிதர்களின் வயிற்றுப் பிழைப்பு வஞ்சகச் செயல்களுக்கெல்லாம் ஆதரவு கொடுத்து வரும் மதங்களையும் அழித்து தவிடுபொடி செய்வதற்குக் காரணமாக இருந்தவர்கள் அந்நாட்டின் வாலிபர் கள் என்பதை உலக ஞானம் உள்ள எவரும் அறிவார்கள். இளைஞர்களால் விரும்பப்படாததும், அவர்களுடைய கூட்டுறவையும் ஒத்துழைப்பையும் பெறாததுமான எந்த இயக்கமும் மாண்டு மடிந்து இருந்த இடந்தெரியாமலும், தேச மக்களின் நினைவில்கூட இல்லாமலும் போதல் திண்ணம். ஏனென்றால் முதியோர்களைப் போன்று அழுக்கேறிப் பாசம் பிடித்து, சுரணையற்றுப் போன மூளை இளைஞர்களிடமில்லை. இது நமது முன்னோர் வழக்க மாயிற்றே இதை விட்டு விட்டால், நமக்கு ஏதாவது தீங்கு நேர்ந்து விடுமோ! அண்டை அயலார் நம் மேல் பழி...

குத்தும்  கொலை முயற்சியும்                        பம்பாய் கவர்னர் சுடப்பட்டார் 0

குத்தும்  கொலை முயற்சியும்                       பம்பாய் கவர்னர் சுடப்பட்டார்

  இவ்வாரத்தில் அரசியல் சம்பந்தமாய் குத்தும், கொலை முயற்சியும், கலகமும் நடைபெற்றிருப்பதாக பல இடங்களிலிருந்து செய்திகள் கிடைத் திருக்கிறது. பம்பாய் கவர்னரை பூனாவில் ஒரு வாலிபன் ஒரு புத்தகசாலையைப் பார்வையிடும் போது அவரை கொல்லக் கருதி துப்பாக்கியால் சுட்டிருக் கிறான். ஆனால் அக்கவர்னர் அதிசயமாய் தப்பித்துக் கொண்டிருக்கிறார். அதாவது அவரது சட்டப்பையில் இருந்த ஒரு தினக்குறிப்புப் புத்தகத்தின் மூடிப் பொத்தானின் பேரில் அக்குண்டு பட்டதால் அது உடலில் பாயாமல் சட்டைப் பையிலேயே அக்குண்டு தாங்கிவிட்டது. மற்றொரு தரம் சுட்டும் அது அவர்மீது படவில்லையாம். ஏனெனில் அவன் குறிபார்க்கும் போதே கவர்னர் அந்த வாலிபனைப் பிடிக்கப் போனதால் வாலிபனின் குறி தவறி குண்டு அவர்மேலே படாமல் போய்விட்டது. பிறகும் கவர்னரே தான் அந்த வாலிபனை எட்டிப் பிடித்தாராம். இந்தமாதிரி மற்றவர்களுக்கு நேர்ந்திருந்தால் “கடவுளே அந்த சட்டைப் பையிக்குள் வந்து இருந்துகொண்டு குண்டைப் பிடித்துக் கொண் டார்” என்றுதான் சொல்லுவார்கள். ஆனபோதிலும் இந்த கவர்னருடைய...

சீர்திருத்த அரசியல் சிங்கம் 0

சீர்திருத்த அரசியல் சிங்கம்

  உண்மையான சீர்திருத்தக்காரரும், தேசபக்தருமான திரு. விபினசந்திர பாலர் அவர்கள் காலஞ்சென்ற செய்திகேட்டு வருந்துகின்றோம். நமது நாட்டில் அரசியல்வாதியாகவும், சமுதாய சீர்திருத்தவாதியாகவும் விளங்கிய தலைவர்கள் சிலரேயாவார்கள், அவர்களில் காலஞ் சென்ற லாலா லஜபதிராய் ஒருவர் என்பது நாடறிந்த செய்தி. அவரைப் போன்றே திரு. விபினசந்திர பாலரும் சமுதாய சீர்திருத்தக் காரராகவும், நிதானமுள்ள அரசியல்வாதியாக வும் விளங்கினார். சென்ற 1925 ல் சென்னையில் நடைபெற்ற ஒரு வாலிபர் மகாநாட்டில் திரு. விபினசந்திர பாலர் அவர்கள் தலைமை வகித்துப் பேசும் போது “நீங்கள் உண்மையில் வீரர்களாகவும், தேசத்திற்கு உழைக்கக் கூடியவர்களாகவும் இருக்க விரும்புவீர்களானால் 25 வயதிற்குமுன் ஒருக்காலும் மணம் புரிந்து கொள்ளாதீர்கள்! ஒரு சமயம் உங்கள் பெற்றோர்கள் கட்டாயப்படுத்தி மணம் செய்து வைக்கத் துணிவார்களாயின் வீட்டை விட்டு ஓடிப் போய்விடுங்கள்” என்று கூறினார். இதைப் போலவே பெண்கள் மணவிஷயத்திலும் பால்ய மணம் கூடாது என்ற அபிப்பிராயமுடையவர். அன்றியும் திரு. பாலர் அவர்கள் தமது முதல்...

விருதுநகர் மகாநாடு 0

விருதுநகர் மகாநாடு

மூன்றாவது சுயமரியாதை மகாநாடு விருதுநகரில் ஆகஸ்டு மாதம் 8,9 தேதிகளில் திருவாளர் ஆர்.கே. ஷண்முகம் அவர்கள் தலைமையில் நடத்த தீர்மானமாகி எல்லா ஏற்பாடுகளும் வெகு மும்மரமாய் நடைபெற்று வருவதை வாசகர்கள் பத்திரிகைகளின் மூலம் அறிந்திருக்கலாம். இம் மகாநாடு இதற்கு முன் இரண்டு தடவை தேதிகள் குறிப்பிடப்பட்டு எதிர் பாராத சம்பவங்களால் தடைப்படுத்தப்பட்டு விட்டது. ஆனாலும், இப்போது முன் நடத்தப்பட்டிருந்தால் எவ்வளவு விசேஷமாய் நடைபெற்றிருக்குமோ அதை விட பன்மடங்கு விசேஷமாக நடந்தேர காரியங்கள் நடந்து வருவதானது தலைவர் திருவாளர் சௌந்தர பாண்டியன் அவர்கள் தீவிர முயற்சி எடுத்து சுற்றுப்பிரயாணம் முதலிய வைகள் செய்து வருகின்றதைப் பார்த்தாலே விளங்கும். கால நிலைமையும் முன்னைவிட இப்போது சற்று திருப்திகரமாகவே காணப்படுவது மற்றொரு விசேஷமாகும். அதாவது வெய்யில் கொடுமை தணிந்திருப்பது ஒன்று. தண்ணீர் சௌகரியத்திற்கு சற்று அனுகூலமேற்பட்டிருப்பது மற்றொன்று. இவ் விரண்டையும் விட சுயராஜ்ஜியம் என்னும் அரசியல் கிளர்ச்சி என் பதின் இரகசியம் பம்பாய் காரியக்கமிட்டியின் தீர்மானத்தால்...

மௌலானா ஷெளகத் அலி 0

மௌலானா ஷெளகத் அலி

மௌலானா ஷெளகத் அலி அவர்கள் முஸ்லீம்களுக்கு பிரதிநிதி யல்லவென்பதாகக் காங்கிரஸ் காரியக்கமிட்டி முடிவு செய்து விட்டது என்ப தாக உயர்திரு. காந்தியவர்கள் தமது 16-7-31 தேதி “யங் இந்தியா” பத்திரிகையின் தலையங்கத்தில் எழுதிவிட்டார். இதற்கு பதிலாக மௌலானா அவர்கள் ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதன் சுருக்கம் மற்றொரு பக்கம் பிரசுரிக்கப்பட்டிருக்கின்றது. மௌலானா ஷெளகத்அலி அவர் களை “முஸ்லீம்கள் பிரதிநிதியல்ல” வென்று காங்கிரஸ் காரியக் கமிட்டி முடிவு செய்திருப்பதைப் பற்றி யோசித்துப் பார்த்தால் காங்கிரசானது யாரை யும் இலட்சியம் செய்யாமல் தனது போக்கில் மிகவும் தைரியத்தையும், உறுதியையும் கொண்டு விட்டதாகத் தான் சொல்ல வேண்டும். திரு. காந்தி யவர்களும் காங்கிரஸ் காரியகமிட்டியின் இந்த முடிவைப்பற்றி சிறிதும் யோசனை செய்யாமலும், காரியக்கமிட்டியைக் கண்டிக்காமலும் தமது பத்திரிகையில் விளம்பரம்படுத்தி விட்டதிலிருந்து அவரும் துணிந்து விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். அதாவது “காந்தி-இர்வின்” ஒப்பந்தம் முடிந்தவுடன் “இந்து முஸ்லீம் ஒப்பந்தம் ஏற்படாவிடில் மேலால் என்ன செய்வது என்பது...

விபசாரம் ஒழியுமா? 0

விபசாரம் ஒழியுமா?

‘விபசாரம்’  என்பதற்குச் சாஸ்திரங்களில் கூறப்படும் பொருள் பலவகையாகும். பொதுவாக இப்பொழுது “பொருள் வாங்கிக் கொண்டு ஆடவர்களின் இச்சையைப் பூர்த்தி செய்வதையே  தொழிலாகக் கொண்டு ஜீவனம் பண்ணுவதையே விபசாரம்” என்று உலக மக்கள் எல்லோராலும் ஒப்புக் கொள்ளப்பட்டிருக்கிறது. பொருள் பெறாமல் சிற்றின்ப ஆசையுடன் கண்டவர்களையெல்லாம் காதலிக்கும் ஆண்களின் செய்கையையும் பெண்களின் செய்கையையும் ‘விபசாரம்’ என்றே கூறலாம் இத்தகைய ‘விபசார’த்தினால் தேசத்தில் உண்டாகி வரும் தீமைகள் எண்ணற்றவை.   கேட்கச் சகிக்காத கொடும் பிணிகளும், பார்க்கப் பொறுக்காத பெரும்நோய்களும் விபசாரத்தினால் உண்டாகின்றன. விபசாரத்தில் ஈடுபட்டிருக்கும் ஆண்களும், பெண்களும் நோய்வாய்பட்டு வருந்துவதோடு மட்டுமல்லாமல் அவர்களுக்குப் பிறக்கும் பிள்ளைகளும் நோய்க்கு ஆளாகி ஜன சமூகத்தையே பிணியடையச் செய்யும் காளான்களாக இருக்கின்றனர். இன்னும் ‘விபசார’த்தினாலேயே கொலை, களவு முதலிய தீச் செயல் களும் மிகுதிப்படுகின்றன. ஆதலால் இக்கொடிய விபசாரத்தை ஒழிக்க உலகமெங்கும் முயற்சி நடைபெற்று வருகின்றது; அறிஞர்கள் எல்லோரும் இக் கொடுமையைப் பற்றி பேசி வருகின்றனர். ஜனசமூகத்தை அரித்துக் கொல்லும்...

காங்கிரஸ் புரட்டும் – காந்தியின் தவறும் 0

காங்கிரஸ் புரட்டும் – காந்தியின் தவறும்

தலைவரவர்களே!  சகோதர சகோதரிகளே!! இன்று இக்கூட்டத்தில் நான் “காங்கிரஸ் புரட்டும் – காந்தியின் தவறும்”என்னும் விஷயத்தைப் பற்றி பேசவேண்டும் என்று குறிப்பிடப் பட்டிருக்கின்றது. இந்தத் தலைப்பைப் பார்த்த சிலருக்கு ஆத்திரமுண்டாகி யிருக்கலாம். கலகம் செய்யலாமா என்றுகூட கருதிக்கொண்டு வந்திருக் கலாம். இந்தப்படி ஆத்திரம் ஏற்படுவது சகஜமேயாகும். ஆனால், நான் மாத்திரம் 5,6 வருஷ காலமாகவே காங்கிரசை ஒரு புரட்டு ஸ்தாபனம் என்றும், அது பார்ப்பன ஆதிக்கத்திற்கு ஏற்பட்ட ஸ்தாபனமென்றும் சொல்லி வந்திருப்பதோடு, “திரு காந்தியவர்கள் பார்ப்பனப் பிரசாரகர் என்றும், பார்ப்பனீயத்திற்கு பாடுபடுகின்றவர்” என்றும் சொல்லி வந்திருக் கின்றேன். இந்த அபிப்பிராயம் எனது அனுபவத்தில் நாளுக்கு நாள் பலப்பட்டுகொண்டு வந்திருக்கின்றதேயொழிய சிறிதாவது குறைவுபடவே இல்லை. காங்கிரசு ஒரு வகுப்புவாத சபையேயாகும். “தேசிய”ப் போர்வை போர்த்த வகுப்புவாதக் குரங்கேயாகும். அதாவது பிடிவாத வகுப்பு வாத மாகும். தேசீயம் என்னும் பித்தலாட்ட வார்த்தையைச் சொல்லிக்கொண்டே வகுப்புவாதங்களை அதாவது “உயர்” வகுப்பு உரிமைகளைக் காப்பாற்று வதற்கு ஏற்பட்ட...

எதிரிகளின் விஷமப்பிரசாரம் 0

எதிரிகளின் விஷமப்பிரசாரம்

நமது இயக்கத் தோழர்களான திரு. சௌந்தர பாண்டியன் அவர்களும், திரு. வி. வி. ராமசாமி அவர்களும், திரு. முருகப்பர் அவர்களும், திரு.                      கி. ஆ பெ. விஸ்வநாதன் அவர்களும், திரு. டி. வி சோமசுந்தரம் அவர்களும், “சுயமரியாதை இயக்கக் கொள்கைகளை வரையறுத்து ரிஜிஸ்டர் செய்ய  முடியாதிருப்பதனாலும், பலரும் தங்கள் தங்கள் விருப்பப்படி சங்கத்தின் அனுமதியின்றி நடந்து கொள்ளுவதாலும், இயக்க நிர்வாகக் கமிட்டி யினின்றும் நீங்கிக் கொள்ளலாமா” என்று யோசனை செய்ததாகவும், முடிவை நமது மாகாணச் சங்கத் தலைவர் திரு. ஆர். கே. சண்முகம் அவர்கள் வரும் வரையிலும் ஒத்திவைத்திருப்பதாகவும், அதுவரையிலும் இயக்கத்தின் நடவடிக்கைகளில் கலந்து கொள்ளாமல் விலகியிருப்பதென்று தீர்மானித் திருப்பதாகும் சண்டமாருதம் பத்திரிகையில் ஒரு அறிக்கை வெளிவந்தது. அவ்வறிக்கை வெளிவந்த பின் திரு. டி. வி. சோமசுந்தரம் அவர்கள், தான் அவ்வறிக்கையில் சம்பந்தப்படவில்லையென்றும், தனக்கு அவ் வறிக்கையில் கூறியுள்ளவை யாதொன்றும் தெரியாதென்றும், அவ்வறிக்கை யில் கண்ட விஷயங்களை தாம் ஒப்பவில்லை என்றும்,...

சுயமரியாதை வீரய்ய செட்டியாருக்கும்           சுய ஆக்ஷி சுப்பையருக்கும் சம்பாஷணை  – சித்திரபுத்திரன் 0

சுயமரியாதை வீரய்ய செட்டியாருக்கும்           சுய ஆக்ஷி சுப்பையருக்கும் சம்பாஷணை – சித்திரபுத்திரன்

சு.ம.வீரைய்யசெட்டியார்:- என்ன ஓய்!சு.ஆ. சுப்பைய்யரே நேற்றெல்லாம் சீமை வேட்டி கட்டிக் கொண்டிருந்தீர். இன்று திடீரென்று கதர் வேஷ்டியும், கதர்  குல்லாயும், தடபுடலாயிருக்கின்றதே? சு.ஆ:- சுப்பையர்:-  ஒன்றும் விசேஷமில்லை. இன்று முதல் காங்கிரசில் சேர்ந்து விட்டேன். சு.ம.வீ:- அதென்ன திடீரென்று சேர்ந்து விட்டாய் காங்கிரசைப்பற்றி குற்றம் சொல்லிக் கொண்டிருந்தாயே. சு.ஆ.சு:-                         நான் பி.ஏ. பாஸ் செய்து எத்தனை நாள் ஆச்சுது? சு.ம.வீ:-                          3 வருஷ மாச்சுது. சு.ஆ.சு:-                         உத்தியோகத்திற்கு எத்தனை விண்ணப்பம் போட்டேன் உனக்குத் தெரியாதா? சு.ம.வீ:- ஆம், சுமார் 50, 60 விண்ணப்பம் போட்டாய். அதற்கென்ன இப்போது? சு.ஆ.சு:-                         ஒரு விண்ணப்பத்திற்காவது பதில் கிடைத்ததா சொல் பார்ப்போம்? சு.ம.வீ:- அது சரி அதற்கு யார் என்ன செய்வார்கள். உத்தியோகம் இருந்தால் தானே கிடைக்கும். சு.ஆ.சு:-                         உத்தியோகம் காலியாகவா இல்லை? எனக்குப் பிறகு எஸ்.எஸ்.எல்.சி  பாசு பண்ணின அப்துல்ரகிமான், பறக்கருப்பன், ஜோசப்பு, இரங்கசாமி நாயக்கன், இராமசாமி...

இந்து முஸ்லிம் கலகம் 0

இந்து முஸ்லிம் கலகம்

  மொகரம் பண்டிகையை முன்னிட்டு சென்ற 14-5-32  முதல் பம்பாயில் முஸ்லிம்களுக்கும் இந்துக்களுக்கும் கடுமையான கலகம் நடைபெற்று வருகின்றது. கல்கத்தாவிலும் இக்கலகம் தலைகாட்டத் தொடங்கிவிட்டது. எங்கும் ஒற்றுமை, சகோதரத்துவம், சமரசம், சீர்திருத்தம் என்று பேசப்பட்டு வரும் இக்காலத்தில் கேவலம் மதத்தையும், ஜாதியையும் முன்னிட்டு இவ்வாறு கலகம் விளைவித்துக் கொள்ளுவதாக உலகத்தார் கருதும்படி நடந்து கொள்ளுவதைவிட நமது நாட்டிற்கு மானங்கெட்ட தன்மை வேறு ஒன்றுமே இல்லையென்பதை எந்த இந்தியரும் வெட்கத்தோட ஒப்புக் கொண்டுதான் தீர வேண்டும். கலகம் உண்டானதற்கு மூலகாரணம் சிறுபிள்ளைகள் ஆரம்பித்த சில காரியங்கள் என்றே பத்திரிகைகளில் சுட்டிக் காட்டப்படுகின்றது. சில முஸ்லிம் சிறுவர்கள் இந்துக்கள் வசிக்கும் இடங்களுக்குச் சென்று யாசகம் கேட்டார் களாம். இந்துக்கள் யாசகம் கொடுக்க மறுத்தார்களாம். இவ்வாறு யாசகம் கொடுக்க மறுத்தவர்களையும் வற்புறுத்திக் கேட்கவே அவர்கள் கோபங் கொண்டு, தமது வேலைக்காரர்களைக் கொண்டு அச்சிறுவர்களைத் துன்புறுத் தினார்களாம். இதைக் கேள்வியுற்ற முஸ்லிம்கள் உடனே கூட்டமாகச் சேர்ந்து வந்து...

காந்தியின் திண்டாட்டம் 0

காந்தியின் திண்டாட்டம்

உயர்திரு காந்தியவர்கள் லண்டன் மகாநாட்டிற்கு வருவதாக சர்க்காரிடம் உறுதிகொடுத்து ராஜிசெய்து கொண்டதிலிருந்து அவர்பாடு மிகத் திண்டாட்டமாகவேபோய்விட்டது. ஏனெனில் தான் வட்டமேஜை மகாநாட்டிற்கு போனால் என்ன செய்வது என்பது அவருக்கே புரியாததாய் இருக்கின்றதுடன் இவரது அபிப்பிராயத்தை ஆதரிக்க அங்கு போதிய ஆட்கள் கிடைக்குமா என்பதே பெரிய சந்தேகமாகி விட்டது. அரசியல் சுதந்திரத்தை விட சீர்திருத்த அதாவது சமத்துவ சுதந்திர உரிமை ஆகியவை கேட்கும் வேலையே அங்கு தலை சிறந்து விளங்கப் போகின் றது. ஆதலால் திரு காந்திக்கு அங்கு செல்வாக்கு இருக்கமுடியாது. திரு காந்தியை லங்காஷயர் உள்பட அநேக ஊர்காரர்கள் கூப்பிடுவதாயிருந் தாலும் அவர்கள் இவரைப் பார்க்க ஆசைப்படுவார்களே ஒழிய இவர் பேச்சைக் கேட்பவர்களாய் இருக்கமாட்டார்கள் என்பது திண்ணம். இது அவருக்கே தெரியும். ஆதலால் ஏதாவது ஒரு சாக்கைப் போட்டு போகாமல் தப்பித்துக் கொள்ளப்பார்க்கின்றார் என்பதாகவே நாம் கருதுகின்றோம். நம்மைப் பொறுத்தவரை அவர் போவதும் போகாததும் ஒன்றேதான். ஆனால் அவரைப்பொறுத்தவரை அவர்போகாமல் இருப்பதே...

திருச்சி பார்ப்பனரல்லாதார் மகாநாடு 0

திருச்சி பார்ப்பனரல்லாதார் மகாநாடு

  சென்ற 7, 8-5-32 இல் திருச்சிராப்பள்ளி ஜில்லா பார்ப்பனரல்லாதார் ஆறாவது மகாநாடு திருச்சியில் நடைபெற்றது. அம் மகாநாட்டை அங்கு எந்த விஷயத்திற்குக் கூட்டப்பட்டதோ அந்த விஷயத்தைத் தவிர மற்றவை களெல்லாம் வெற்றியோடு நடைபெற்றன என்றுதான் சொல்ல வேண்டும். தற்சமயம், பார்ப்பனரல்லாதார் கட்சியில் பார்ப்பனர்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டுமென்று, அக்கட்சியின் தலைவர்கள் சிலர் கொண்டிருக்கும் அபிப்பிராயத்தைப் பற்றி ஆராய்ந்து ஒரு முடிவு செய்யவே இம்மகாநாடு கூட்டப்பட்டதாகும். ஆனால் இவ்விஷயம் விஷயாலோசனைக் கமிட்டியில் விவாதத்திற்கு வந்துங்கூட தலைவர்களின் பிடிவாதத்தினால் நிராகரிக்கப்பட்டதென அறிகிறோம். மற்றபடி அரசியல் சுதந்தரம் சம்பந்த மாகவே பெரும்பாலும் தீர்மானங்கள் நடைபெற்றன. மகாநாட்டின் தலைவர் சர். ஏ. பி. பாத்ரோ அவர்களும், மற்றும் திறப்பாளர் வரவேற்புத் தலைவர் முதலியவர்களும், பெரும்பாலும் அரசியல் உரிமை சம்பந்தமாகவே ஊக்கங் காட்டிப் பேசினார்கள். சர். பாத்ரோ, சர், கே. வி. ரெட்டி போன்ற பிரபல தலைவர்கள் அனை வரும் காங்கிரசின் போக்கையும், சட்ட மறுப்பின் தீமையையும்...

ஈரோடு முனிபாசிலிட்டியும்,                          சென்னை அரசாங்கமும்  0

ஈரோடு முனிபாசிலிட்டியும்,                          சென்னை அரசாங்கமும் 

ஈரோடு மகாஜனங்கள் கண்டனம் ஈரோடு முனிசிபல் டவுனுக்கு எலக்ட்ரிக் விளக்குகள் போடும் விஷயமானது 1922-ம்´ முதல் ஈரோடு முனிசிபல் கவுன்சில் ஆலோசனையிலிருந்து வந்ததாகும். 1928 ம் வருஷம் முதல் இவ் விஷய மாய் தீவிரமான முயற்சிகள் எடுக்கப்பட்டு கவர்ன்மெண்டாருடன் கடிதப் போக்குவரவுகள் செய்யப்பட்டு வந்தன. அப்போது மைசூர் கவர்ன் மெண்டார் மேட்டூருக்கு மின்சாரசக்தி சப்ளை செய்துவந்தபடியினால் மேட்டூர் ஹெட்வர்க்ஸ்களிலிருந்தே ஈரோடு முனிசிபாலிட்டிக்கு மின்சார சக்தி கொண்டுவர வேண்டுமென்ற ஈரோடு முனிசிபல் கவுன்சிலின் பிரேரே பனையானது உடனே மதறாஸ் கவர்ன்மெண்டாரால் அங்கீகரிக்கப்பட்டு விட்டது. பிறகு ஈ.மு.கவுன்சில் மைசூர் கவர்ன்மெண்டாருடன் இது விஷயமாய் கடிதபோக்குவரவுகள் செய்து மைசூர் கவர்ன்மெண்டு எலக்டிரிக்கல் இன்ஜினீயரவர்களை சந்தித்துப் பேசி முடிவு செய்யும் பொருட்டு ஈரோடு முனிசிபல் சங்கத்தார் ஒரு கமிட்டியை நியமுகம் செய்தார்கள். அந்தக் கமிட்டியார் மைசூர் கவர்ன்மெண்டுடன் கலந்து பேசிய பிறகு அவ்விஷயம் அனுகூலமாய் முடிவுபெறும் நிலைமையில் இருக்கையில் மதறாஸ் கவர்ன்மெண்டார் இவ்விஷயத்தில் பிரவேசித்ததின் பேரில் திடீரென்று...

இன்னுமென்ன சந்தேகம்? 0

இன்னுமென்ன சந்தேகம்?

“பிராமணா! உன் வாக்குப் பலித்தது!”   ஒரு பார்ப்பனன் தன் பெண் ஜாதியின் நடத்தையில் சந்தேகங் கொண்டு அடிக்கடி அந்தம்மாளை “விபசாரி, விபசாரி” என்று கூறிக் கொண்டே வந்தான். ஆனால் அந்தம்மாள் தன் புருஷனின் சந்தேகத்திற்கிடமான காரியங்களுக்கெல்லாம் அவ்வப்போது பல சாக்குப் போக்குகள் சொல்லி புருஷனை அடக்கிக்கொண்டே வந்தாள். இப்படி இருக்கையில், அந்த பார்ப்பான் தன் மனைவி அன்னிய புருஷனிடம் சம்பந்தப்பட்டுக் கொண்டிருக்கையில் ஒரு நாள் கைப் பிடியாய் பிடித்துவிட்டான். அப்பொழுது அந்த அம்மாள் வேறு எவ்வித சாக்குப்போக்கும், சமாதானமும் சொல்லித் தப்பித்துக் கொள்ள முடியாமல் போய்விட்டதால் “பிராமணா! உன் வாக்குப் பலித்து விட்டது!! அதற்கு நான் என்ன செய்யட்டும்?”என்று பதில் சொல்லி மறுபடியும் புருஷன் மீதே குற்றத்தைச் சுமத்தினாள். அதாவது, புருஷனைப் பார்த்து “நீ அடிக்கடி என்னை விபசாரி, விபசாரிஎன்று உன் வாயால் சொல்லிக்கொண்டே வந்ததாலல்லவா (பிராமணன் வாக்கு பொய்க்காது, அது எப்படியும் பலித்துவிடும்) என்று சாஸ்திரங்களில் சொல்லி இருக்கின்றபடி...

சேலம் சுயமரியாதை மகாநாடு 0

சேலம் சுயமரியாதை மகாநாடு

சென்ற 7, 8-5-32 சனி ஞாயிறுகளில் சேலத்தில் நடைபெற்ற முதலாவது சேலம் ஜில்லா சுயமரியாதை மகாநாட்டின் தலைவர், வரவேற்புத் தலைவர்; பெண்கள் மகாநாட்டின் தலைவர், வரவேற்புத்தலைவர், திறப்பாளர்; தொண்டர் மகாநாட்டின் தலைவர், வரவேற்புத் தலைவர், திறப்பாளர் முதலிய வர்களின் பிரசங்கங்கள் நமது பத்திரிகையில் சென்ற வாரத்திலும், இவ் வாரத்திலும் வெளியாகி யிருக்கின்றன. அந்தப் பிரசங்கங்களை யெல்லாம்  படித்துப் பார்ப்பவர்களுக்கு, நமது இயக்கத்தின் தற்கால வளர்ச்சியைப் பற்றியும், உண்மையான கொள்கைகளை அநுபோகத்தில் கொண்டு வரும் செய்தியைப் பற்றியும் நாம் ஒன்றும் அதிகமாகக் கூறவேண்டியதில்லை என்றே கருதுகின்றோம். முதலாவது இவ்வாண்டில் முதலில் சேலத்தில் நமது மகாநாடு நடை பெற்றதே நமக்கு ஒரு பெரிய வெற்றியாகும். ஏனெனில் சேலம் ஒரு பெரிய தேசீயக் கோட்டை என்றும், தேசீயத்திற்கு எதிர்ப்பான எந்தச் செயல்களையும் சேலத்தில் செய்ய முடியாதென்றும், சிலர் மனதில் ஒரு தப்பான எண்ணம் நிலவியிருந்தது. இவ்வெண்ணம் தவறானதென்பதை உணர்த்துவதற்கும், சுயமரியாதை இயக்கமும், அதன் கொள்கைகளும், எந்தத்...

விருதுநகர் விருந்து 0

விருதுநகர் விருந்து

கனவான்களே! திரு.வி.வி.இராமசாமி அவர்கள் சுயமரியாதைக்காரர்கள் தேவஸ் தானக் கமிட்டிக்குப் போகலாமா எனக்கேட்பது ஒரு நல்ல கேள்வியே யாகும். நான் சுயமரியாதை இயக்கம் ஏற்பட்டு 4,5 வருஷம் தேவஸ்தானக் கமிட்டியில் பிரசிடெண்டாகவும், வைஸ் பிரசிடெண்டாகவும் இருந்தேன். தேவஸ்தான செல்வங்களை பொது நலத்திற்குப் பயன்படும்படி செய்யக் கூடுமானால் அது நல்ல வேலைதான். அங்கு போக வேண்டியதும் அவசியந் தான் என்று கருதியே அங்கு இருந்தேன். இந்த எண்ணத்தின் மீதே தேவஸ் தான சட்டத்தையும் ஆதரித்தேன். ஆனால் அவை சரியான பலனைக் கொடுக்கவில்லை. ஆகவே நான் இராஜிநாமாச் செய்தேன். எனது சகபாடிகள் எனது இராஜினாமாவை ஒப்பாமல் எனது அபிப்பிராயத்தை ஆதரிப்பதாயும் ஆனால் பொது ஜனங்கள் அபிப்பிராயம் விரோதமென்றும் சொன்னார்கள். ஆனாலும் நான் வேறு வேலையில் இந்த கவனம் செலுத்தலாம் என்று ஒதுங்கிக் கொண்டேன். தகுந்த சகபாடிகள் இருந்தால் அதை நல்வழிப் படுத்தலாம் என்பதும் ஒரு அளவுக்கு உண்மைதான். இராமனாதபுரம் தேவஸ்தானக் கமிட்டி பிரசிடெண்ட் திரு. இராமச்சந்திரன்...

காலித்தனமா? அஹிம்சையா? 0

காலித்தனமா? அஹிம்சையா?

காங்கிரசின் பெயராலும், திரு. காந்தியின் பெயராலும், அஹிம்சையின் பெயராலும், சத்தியாக்கிரகத்தின் பெயராலும் நமது நாட்டில் இப்பொழுது நிகழ்ந்து வரும் காரியங்களைப் பார்த்தால் நியாய புத்தியுடைய எவரும் அவைகளைக் கண்டிக்காமலிருக்க முடியாது. ‘அஹிம்சையின்’ பெயரால் ஆரம்பித்து நடத்தப்படும் சட்டமறுப்பு இயக்கத்தினால் உண்டாகும் ஹிம்சைகள் எண்ணற்றவை. நாட்டில் வியாபார மந்தமும் பொருளாதார நெருக்கடியும் ஏற்றுமதி இறக்குமதிக் குறைவுகளும் ஏற்பட்டுச் செல்வ நிலை பாழ்பட்டுக் கிடக்கிறது.  ஏழைமக்கள் பட்டினியினாலும் நோயினாலும் கிடந்து மடிகின்றனர். கற்றவர்கள் பலர் வேலையற்ற திண்டாட்டத்தினால் படும் தொல்லைகள் சொல்லித் தொலையாதவை. அரசாங்கமோ இத்துன்பங்களை நிவர்த்தி செய்ய முன் வராம லிருப்பதற்குத் தங்களுக்கு சட்ட மறுப்புக்காரர்கள் கொடுத்து வரும் தொல் லையே காரணம் என்று சொல்லி விடக் கூடிய நிலைமையில் இருக்கின்றனர். ஆகவே பொதுஜனங்களின் கஷ்டம் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டு போகின்ற தென்பதை யாரும் இல்லையென்று சொல்ல முடியாது. “அரசாங்கத்திற்கு உண்டாகும் கஷ்டம் ஜனங்களைப் பாதிக்காமல் போகாது” என்ற அரசியல் தத்துவத்தை...

கோயில் நுழைவும் தீண்டாமையும் 0

கோயில் நுழைவும் தீண்டாமையும்

தீண்டாமை என்னும் வழக்கம் மனிதத் தன்மைக்கு விரோதமான தென்பதையும், அதுவே நமது நாட்டு மக்களைப் பல்வேறு பிரிவினராக்கி வைத்துக் கலகத் தன்மையை உண்டாக்கி வருகிறதென்பதையும், தீண்டாமை ஒழிவதன் மூலந்தான் நாட்டில் ஒற்றுமையும் சகோதரத்துவமும் நிலவமுடியு மென்பதையும் இப்பொழுது அனேகமாக எல்லாக் கட்சியினரும் ஒப்புக் கொண்டுவிட்டனர். தீண்டாமையை நாட்டை விட்டு அகற்றி, அதனால் துன்பப்பட்டுக் கொண்டிருந்த மக்களுக்குச் சமூக சமத்துவமளிப்பதற்காகப் பல கட்சியினரும் பேச்சளவிலும் எழுத்தளவிலுமாவது முயற்சி செய்ய முன் வந்திருக்கின்றனர். தீண்டாமை ஒழிந்துவிட்டால் அதைப் போற்றுகின்ற வேத சாஸ்திரங்க ளுக்கும், வைதீக மதங்களுக்கும், அம்மதங்களைப் பின்பற்றுகின்ற கண்மூடி வைதீகர்களின் வயிற்றுப் பிழைப்புக்கும் ஆட்டமும் அபாயமும் உண்டாகி விடும் என்பதை அறிந்திருக்கின்ற திரு. எம். கே. ஆச்சாரியார் கூட்டத்தைச் சேர்ந்த முரட்டு வைதீகர்களையும் அவர்களுடைய சூழ்ச்சிகளில் அகப்பட்டு கிடக்கும் பொது ஜனங்களையும் தவிர வேறு யாரும் தீண்டாமைக்கு ஆதரவளிக்கவில்லையென்று துணிந்து கூறலாம். தீண்டாமையை ஒழித்து, அதனால் கொடுமைப்படுத்தப்பட்டிருக்கும் மக்களை கை தூக்கி விட...

அதிசயச்சாமியாரும், நம் பாமர மக்களும்  நமக்கேன் சுயராஜியம்? 0

அதிசயச்சாமியாரும், நம் பாமர மக்களும் நமக்கேன் சுயராஜியம்?

சகோதரர்களே! இராமநாதபுரத்திற்கடுத்த சுமார் 15-மைலுக்கப்பால் திருப்பாலைக்குடி என்னும் ஊரில் ஓர் சாமியார் இருக்கின்றார். அவர் மகமதிய சாமியாராம். அவர் வெளிவந்து நான்கு மாதம் ஆயிற்றாம். அதற்கு மூன்று மாதங்களுக்கு முன் அவர் பூமிக்குள் உயிருடன் புதைக்கப்பட்டாராம். 3-மாத காலமாய் உள்ளேயே இருந்து பின் வெளிவந்து அந்த திருப்பாலைக் குடிக்குச் சென்று அங்குள்ள ஓர் வரண்ட குளத்தில்போய் அவர் கைவைத்த மாத்திரத்தில் தண்ணீர்பெருகிவிட்டதாம். அவரிடம் வரம் கேட்க போகின்றவர்களுக்கு அந்த குளத்துத் தண்ணீரை எடுத்துவரச்சொல்லி கொடுக்கின்ராறாம். அதைச்சாப்பிட்ட மாத்திரத்தில் சகல நோய்களும் ரோகங்களும் நிவர்த்தி யாகின்றதாம். ஆஹா!என்னே ஆச்சரியம்! இவ் விருபதாம் நூற்றாண்டில் கடவுள் என்ற ஒன்று அரூபி என்று சொல்லு வதற்கும் ஆதாரமில்லாமல் தத்தளிக்கும் பொழுது ஒரு மனிதன் மேற் சொன்ன கடவுளும் செய்யொணாத காரியங்கள் செய்வதென்றால், பகுத் தறிவுள்ள எவரும் நம்ப ஹேது வுண்டா? நிற்க, இன்னுமோர் அதிசயமாம். குழந்தையில்லாதவர்களுக்கு அந்தக் குளத்துத் தண்ணீரைச் சாப்பிட்டமாத்திரத்தில் கெர்ப்பம் உற்பத்தி யாகின்றதாம்!....

எட்டாவதாண்டு 0

எட்டாவதாண்டு

நமது ‘குடி அரசுக்கு’ ஏழு ஆண்டுகள் நிறைவேறி, இன்று எட்டாவது ஆண்டின் முதல் இதழ் வெளிவருகிறது. நமது ‘குடி அரசு’ பிறந்தது முதல் இது வரையிலும் நாட்டில் உண்டாக்கியிருக்கும் மாறுதலை எதிரிகளும் வயிற்றெரிச்சலோடு ஒப்புக்கொண்டுதான் தீருவார்கள். நமது ‘குடி அரசு’ மக்களுடைய உயர்வு தாழ்வுக்குக் காரணமான எல்லா மாசுகளையும் போக்கிச் சமத்துவத்தை உண்டாக்கும் கொள்கையுடன் ஏற்பட்டது என்பதை வாசகர்களுக்கு நாம் எடுத்துக் காட்ட வேண்டியதில்லை. முதலில் புரோகிதப் புரட்டில் உள்ள சூழ்ச்சிகளையும் அர்த்தமற்ற செயல்களையும் வெளிப்படுத்திச் சிக்கனத்தையும், மூட நம்பிக்கையைப் போக்கிப் பகுத்தறிவையும் போதித்தது. இரண்டாவது மக்களிடம் ஜாதி பேதத்தையும் எண்ணற்ற மூடநம்பிக்கைகளையும் உண்டாக்குவதற்குக் காரணமாக இருக்கும் வேதம், புராணம், இதிகாசம், ஸ்மிருதி முதலிய சாஸ்திரங்களின் ஆபாசங்களையும் பொய்யுரைகளையும், அவைகள் பார்ப்பனர்களின் சுயநலத்திற்காக உண்டாக் கப்பட்டவை என்பதையும் எடுத்துக்காட்டிற்று. மூன்றாவது மக்கள் ஏமாறுவதற்கும், மக்களை ஏமாற்றுவதற்கும் காரணமான அவதாரம், நாயன்மார், ஆழ்வார்கள், ஆச்சாரியார்கள், ஜீயர்கள், சந்நிதானங்கள், பாதிரிகள், முல்லாக்கள், புரோகிதர்கள், குருக்கள்...

சுயராஜியமும் சுதேச சமஸ்தானமும் 0

சுயராஜியமும் சுதேச சமஸ்தானமும்

இந்தியாவுக்கு வரப்போகும் சுயராஜியம் என்பதும் சீர்திருத்த மென்பதும் இப்போதிருப்பதை விட இன்னும் மோசமான அடிமை விலங்காகவே வந்து முடியப் போகின்றது. இந்தியாவுக்கு வந்த சைமன் கமிட்டியானது இந்தியாவின் உண்மை நிலைமையையும், தேவையையும் அறியத் தொடங்கியதால், நமது பார்ப் பனர்கள் அதற்கு இடம் கொடுத்தால் தங்களுக்கு ஆபத்து வந்துவிடுமென கருதி, ஏதாவது ஒரு தந்திரம் செய்து கமிஷன் விசாரணையை வெற்றிய டையாமல் செய்யவேண்டும் என்ற எண்ணத்தின்மீது அநேக சூட்சிகள் செய்தார்கள். அவைஒன்றும் தமிழ்நாட்டு மக்களிடம் பலிக்காமல்போகவே, கடைசியாகச் சத்தியாக்கிரகம் என்பதாக ஆரம்பிக்கச்செய்து ஒருபக்கம் கலகம் செய்தார்கள். இவற்றிற்கெல்லாம் காரணம் காங்கிரஸ் என்பதான பார்ப்பன ஸ்தாபனம் ஒன்று அவர்களுக்கு கை ஆயுதமாய் இருப்பதால் எதுவும் செய்ய முடிகின்றது என்பதுடன் மற்ற மக்களுக்கும் அதனால் பல தொல்லைகள் ஏற்பட முடிந்தன. இதனாலேயே சென்ற வருஷம் சத்தியாக் கிரகம் என்னும் பேரால் (பார்ப்பனத்)தொல்லை நிகழ்ந்தது எனினும், மற் றொரு பக்கம் சமதர்ம உண்மைக் கொள்கைகள் முன்னிலும் அதிகமாகத்...

சுயமரியாதையும் காங்கிரசும் 0

சுயமரியாதையும் காங்கிரசும்

  சுயமரியாதை திரு. காந்தியால் 1921ஆம் வருஷம் ஆரம்பிக்கப்பட்ட ஒத்துழை யாமை இயக்கமானது அரசியல் கொடுமைகள் ஒழிப்பதோடு பார்ப்பனக் கொடுமைகளையும் ஒருவாறு ஒழிக்கும்படியான மாதிரியில் சில கொள்கை கள் கொண்டிருந்தாலும் நம் போன்றவர்களின் ஆசைக்கும், அவசரத்திற்கும் தக்கபடி அது காணப்பட்டதை முன்னிட்டும், அவ்வியக்கத்தில் கலந்து மனப்பூர்வமாக நாலைந்து வருஷ காலம் உழைத்ததின் மூலமும் அது சமயம் பார்ப்பனர்களுடைய நெருங்கிய சம்பந்தம் இருக்க நேர்ந்ததன் மூலமும், அதன் பலாபலன்களை நாமும் ஒரு பங்கு அனுபவிக்க நேர்ந்ததின் மூலமும், அவ்வியக்கத்தின் போக்கைப் பார்ப்பனர்கள் எந்த வழியில் திருப்பி அதன் பலனை எப்படி அடைய முயற்சித்தார்கள், முயற்சிக்கின்றார்கள் என்பதை நன்றாய் அறிய நமக்கு சந்தர்ப்பம் கிடைத்தது. அதிலிருந்து நமது போக்கையும் ஒரு வகையில் ஒன்றுபடுத்தி ஒரே வழியில் திருப்பி யோசிக்க வேண்டிய அவசிய முண்டாயிற்று. அங்கனம் யோசித்ததின் பலனாக நமக்குக் கிடைத்த பலன் என்னவென்றால் நமது மக்கள் அரசியல் விஷயமாய் கூச்சல் போடுவதும், முயற்சிகள் செய்வதும்...

வக்கீல்களின் ஜாதி ஆணவம் 0

வக்கீல்களின் ஜாதி ஆணவம்

மதுரையில் உள்ள பார்ப்பன வக்கீல்களும், கோயமுத்தூரில் உள்ள பார்ப்பன வக்கீல்களும் சென்னை அரசாங்கத்தின் சட்ட மந்திரி கனம் கிருஷ்ண நாயர் அவர்களுக்கு வரவேற்பு அளிப்பதில்லையென்று தங்கள் சங்கத்தில் தீர்மானம் செய்தனர். ஆனால் கோயமுத்தூரிலுள்ள பார்ப்பன ரல்லாத வக்கீல்கள், தங்கள் சங்கத்தில் இவ்வாறு தீர்மானம் நிறைவேறிய தற்குப் பார்ப்பன வக்கீல்களின் ஜாதி ஆணவமே காரணமென்பதை அறிந்து, பார்ப்பனரல்லாத வக்கீல் சங்கம் ஒன்றை ஸ்தாபனம் பண்ணினார்கள்.   இவ்வாறு பார்ப்பனரல்லாத வக்கீல்கள் செய்த காரியத்தை நாம் வரவேற் கின்றோம். நமது மாகாண முழுவதிலும் உள்ள வக்கீல் சங்கங்கள் எல்லாவற்றிலும் பார்ப்பனர்களின் ஆதிக்கம் தான் மிகுந்து நிற்கின்றது. ஆகையால் மாகாணத் தில் உள்ள எல்லா வக்கீல்களுமே பார்ப்பனரல்லாதார் நன்மைக்கென ஒரு தனிச் சங்கம் ஏற்படுத்திக் கொள்ளுவது மிகவும் நன்மையேயாகும். இனி கனம் கிருஷ்ணன் நாயருக்கு வரவேற்பு அளிப்பது கூடாது என்று தீர்மானித்த வக்கீல்களின் மனப்போக்கையும் அவர்கள் செய்த காரியம் உண்மையில் தேசாபிமானத்திற்கு அறிகுறியான காரியமா? அல்லது ஜாதி...

ஐக்கிய திட்டத்தின் அலங்கோலம் 0

ஐக்கிய திட்டத்தின் அலங்கோலம்

மதவாதிகள் என்று இருப்பவர்கள் ஏதேனும் ஒரு ‘கடவுள்’  என்பதன் பெயரைச் சொல்லிக் கொண்டு பாமர மக்களை ஏமாற்றுவது எவ்வாறு உலக இயல்பாக ஆகிவிட்டதோ, அவ்வாறே அரசியல்வாதிகளாக இருக்கின்றவர் கள் மிதவாதிகளானாலும் சரி, அமிதவாதிகளானலும் சரி, மற்றும் எந்த வாதி பிரதிவாதிகளானாலும் சரி எல்லோரும் ‘சுயராஜ்யம்’ என்று சொல்லிப் பாமர மக்களை ஏமாற்றுவது சகஜமாக இருந்து வருகிறது. இதன் உண்மையை அறிவதற்கு நமது நாட்டின் தற்கால அரசியல் நிலைமையைக் கவனித்துப் பார்ப்பது ஒன்றே போதுமானதாகும். நமது நாட்டில், இப்பொழுது உள்ள அரசியல்வாதிகள் அனைவரும் ஐக்கிய ஆட்சி என்பதைப் பற்றியே எங்கும் பேசிக் கொண்டு வருகிறார்கள். இந்தியாவுக்கு எத்தகைய சீர்திருத்தம் ஏற்படுத்துவது என்பதைப் பற்றி யோசனை செய்வதற்காகக் கூட்டப்பட்ட வட்டமேசை மாநாடுகளின் பயனால் உண்டான வார்த்தையே இந்த “ஐக்கிய ஆட்சி” என்பதாகும். காங்கிரசின் சர்வாதிகாரியான திரு. காந்தியுள்பட மற்ற எல்லா அரசியல் கட்சிக்காரர்களும், இந்தியாவுக்கு “ஐக்கிய ஆட்சித் திட்டம்” ஏற்படுத்துவதை ஒப்புகொண்டு விட்டனர். ஆனால்...

காங்கிரசும் – சுயமரியாதையும் 0

காங்கிரசும் – சுயமரியாதையும்

அன்புள்ள தலைவரவர்களே! சகோதரிகளே!!  சகோதரர்களே!!! இன்று, இங்கு சுயமரியாதை வாசகசாலை ஆண்டுவிழாவை உத்தே சித்து நடைபெறும் உபந்யாசங்களில் நான் “காங்கிரசும் சுயமரியாதையும்” என்பதுபற்றி பேசவேண்டும் என்பதாய் குறிக்கப்பட்டிருக்கின்றது. இது விஷயமாய் எனது அபிப்பிராயங்கள் அனேகமாக தமிழ்நாடு முழுவதும் அறிந்ததேயாகும். எப்படியெனில் “குடி அரசு” பத்திரிகை வாயிலாகவும் அனேக உபந்யாசங்கள் மூலமாகவும், சுமார் 5, 6 வருஷங்க ளாக வெளிப்படுத்திக் கொண்டே வந்திருக்கின்றேன். அவற்றில் இருந்து மாறும்படியான நிலைமை இப்போது ஒன்றும் ஏற்பட்டுவிடவில்லை. சமீபகாலத்தில், அதாவது இந்த ஒருவருஷ காலத்தில் காங்கிரசிற்கு செய்யப்பட்ட விளம்பரத்தின் காரணமாய் பொது ஜனங்களில் பலருக்கு ஒரு உணர்ச்சி தோன்றி அதைப்பற்றி பேசப்படுகின்றது என்பதை தவிர வேறில்லை. ஒரு நாட்டில் புதிதாக ஏதாவது விஷயம் தோன்றினால் அதைப் பற்றி எங்கும் பேச்சாய் இருப்பது சகஜமேயாகும். அதுபோல்தான் இப்போது காங்கிரசைப் பற்றியும் பேசப்படுகின்றது. ஆதலாலேயே தான் நீங்களும் என்னை அதைப்பற்றியே பேசக்கேட்டு இருக்கின்றீர்கள் என்று கருதுகின்றேன். காங்கிரஸ் ஏற்பட்டு சுமார்...

தொழிலாளர்களும் காங்கிரஸ் இயக்கமும் 0

தொழிலாளர்களும் காங்கிரஸ் இயக்கமும்

“ காங்கிரஸ் தலைவர்கள் வீழ்க! டில்லி ஒப்பந்தக்காரர்கள் ஒழிக!!” சுபாஸ் சந்திரபோஸ் மீது நம்பிக்கையில்லை!!!  ” சக்லத்வாலா சேதி. – யார் எழுதினாலென்ன கல்கத்தாவில் தொழிலாளர்காங்கிரஸ் ஒன்று திரு. சுபாஸ்சந்திரபோஸ் தலைமையில் கூடிற்று. அது சமயம் பம்பாய் தொழிலாளர்கள் பிரதிநிதிகள் “காங்கிரஸ் தலைவர்கள் ஒழிக, டில்லி ஒப்பந்தக்காரர்கள் (அதாவது காந்தி) ஒழிக” என்று கோஷித்துக்கொண்டிருந்தார்கள். லண்டனிலிருந்து பொது உடைமைக்கட்சி திரு. சக்லத்வாலா அவர் கள் “சென்ற தடவை நான் இந்தியாவுக்கு வந்திருந்த பொழுது காந்தியின் வண்டவாளத்தையும் அவரைப் பின்பற்றுகின்றவர்களின் புரட்டுகளையும், துரோகங்களையும் வெளியிட்டேன். ஆனால் இந்த சமயம் பிரிட்டன் என்னை அங்குவர அனுமதிக்கவில்லை. ஆனாலும் இந்தியாவில் உள்ள பொது உடைமை மக்கள் காந்தியின் பித்தலாட்டத்தை தைரியமாய் வெளிப் படுத்தவேண்டும்” என்று எழுதியிருந்தார். சுபாஸ் சந்திரபோஸ் தலைமை பிரசங்கத்தில், கராச்சி காங்கிரஸ் தீர்மானத்தை வரவேற்று, அதில் காணும் வார்த்தைகளைவிட கருத்து நல்லதென்று சொன்னதுடன் ருஷிய மாஸ்கோ கட்டளைக்கு சரணாகதி அடைய வேண்டியதில்லை என்றும்...