Author: admin

குழந்தைகளுடன் மணமக்கள் திருமணம் 0

குழந்தைகளுடன் மணமக்கள் திருமணம்

  சகோதரிகளே! சகோதரர்களே!! இங்கு இன்று நடைபெறப்போகும் திருமணமானது நமது நாட்டில் இப்போது புதியதாய் தோன்றியிருக்கும் சுயமரியாதை இயக்கத்தின் கொள்கைகளில் ஒரு அம்சமாகிய மூடப்பழக்க வழக்கங்களை ஒழிப்பதென் னும் திட்டத்தில் சேர்ந்ததாகுமே தவிர இதில் புதிதாய் புகுத்தும் கொள்கை ஒன்றுமே இல்லை. தீண்டாமை ஒழிப்பதென்பதற்கு முக்கியமாய் வேண்டி யது எப்படி வெறும் மனம் மாற்றம் என்பதைத்தவிர அதில் வேறு தத்து வமோ, தப்பிதமோ, தியாகமோ இல்லையோ அதுபோலவே தான் இந்த விதவா விவாகம் என்பதற்கும் எவ்வித தியாகமும் கஷ்டமும் யாரும் பட வேண்டியதில்லை. ஒரு பெண்ணையோ, பல பெண்களையோ மனைவி யாகக் கட்டி அனுபவித்தவனும் ஒரு பெண்ணையோ, பல பெண்களையோ வைப்பாட்டியாக வைத்தோ தற்காலிக விபசார சாதனமாக அனுபவித்தோ வந்துள்ள, அனுபவித்துக் கொண்டிருக்கின்ற ஒரு புருஷனை ஒரு புதுப் பெண் மணப்பது இன்று எப்படி வழக்கத்தில் தாராளமாய் இருந்து வரு கின்றதோ அதுபோலத்தான் அப்படிப்பட்ட ஒரு பெண்ணையும் ஒரு புருஷன் மணப்பது...

தேர்தல் முடிவின் பலன் 0

தேர்தல் முடிவின் பலன்

  சென்னை மாகாணத்தில் நடைபெற்ற சட்ட சபையின் தேர்தல்களின் முடிவுகள் இந்த வாரத்தில் அநேகமாய் எல்லாம் வெளியாய் விட்டன. இதில் முக்கியமாய் நாம் மகிழ்ச்சி அடையத்தக்கது இரு விஷயங்க ளாகும். அதாவது தேசம், தேசியம், காங்கிரசு என்பவைகளின் பேரால் மக்களை ஏமாற்ற பலருக்கு தைரியமில்லாமல் போய்விட்டது ஒன்று. மற்றொன்று, பார்ப்பன சூட்சிக்கு செல்வாக்கில்லாமல் போய் விட்டதாகும். உதாரணமாக இதுவரை இந்திய சட்டசபைக்கு தமிழ்நாட்டி லிருந்து வெறும் அய்யங்கார்களே பெரும்பாலாய் போய்க் கொண்டிருப்பது வழக்கம். இவ்வருஷம் அது சற்று மாறிவிட்டது. அதாவது மதுரை இராம நாதபுரத்திற்கு திரு. சேஷயங்காருக்குப் பதிலாக திரு. ராஜாராம் பாண்டி யனும், சென்னைக்கு திரு. சீனிவாசய்யங்காருக்குப் பதிலாக திரு எ. இராம சாமி முதலியாரும், மலபார், தென் கன்னடத்திற்கு திரு. கே. வி. ரங்கசாமி அய்யங்காருக்குப் பதிலாக கொல்லங்கோடு வாசுதேவ ராஜாவும், சித்தூர், சென்னை வகையராவுக்கு துரைசாமி அய்யங்காருக்குப் பதிலாக திரு. இராம கிருஷ்ண ரெட்டியாரும் வந்திருப்பது குறிப்பிடத்...

நாகர்கோவிலில் சமதர்ம  சொற்பொழிவு 0

நாகர்கோவிலில் சமதர்ம  சொற்பொழிவு

  சகோதரிகளே! சகோதரர்களே! உலகத்தில் நமது நாட்டின் நிலை எப்படிப்பட்டதென்று நம்மில் அநேகருக்குத் தெரியாது. ஏனெனில் மற்ற நாடுகளின் நிலைமை எப்படி இருக்கின்றது என்று தெரிந்தால்தான் நமது நாட்டு நிலைமையின் தன்மை தெரியவரும். நமது நாட்டில் 100க்கு 90 பேர்களுக்கு கல்வி இல்லாமலும், அறிவு விருத்திக்கான ஆதாரமில்லாமலும், சமுதாய சம்மந்தமான விஷயங் களில் சுதந்திரமில்லாமலும் மத விஷயங்களில் மூடப் பழக்கங்களாலும், குருட்டு நம்பிக்கைகளாலும் கட்டுப்படுத்தப்பட்டுக் கிடக்கின்றபடியால் பெரும்பான்மையானவர்கள் உலக நிலையை அறிய சக்தியற்றவர்களாய் இருக்கின்றார்கள். உண்மையில் நடுநிலையிலிருந்து பார்ப்பீர்களானால் நமது நாட்டைப் பொறுத்தவரை ஆயிரக்கணக்கான வருஷங்களாகவே நமக்கு மனித சுதந்திரம் மறுக்கப்பட்டு நாய், கழுதைகளிலும் கீழாக மதிக்கப்பட்டு இழிவுபடுத்தப்பட்டு அடிமையாய் இருந்து வந்திருக்கின்றோம் என்று சொல்லலாம். (இந்த சமயத்தில் ஒருவர் சரித்திரத்தில் அப்படி இல்லை. சரித்திரம் படித்து விட்டு பிறகு பேசவேண்டும் என்று சொன்னார். அதற்கு பதிலாக திரு. இராமசாமி சொன்னதாவது.) நான் சரித்திரம் படிக்கவில்லையானாலும் என் அறிவுக்கும் கேள்விக் கும்...

பெரிய அக்கிரகாரத்தில் சுகாதார வாரக் கொண்டாட்டம் 0

பெரிய அக்கிரகாரத்தில் சுகாதார வாரக் கொண்டாட்டம்

    சகோதரர்களே! இன்றைய கொண்டாட்டத்தின் நிகழ்ச்சிக் குறிப்புகள் எல்லாம் நடந்தேறிவிட்டன. இனி இக்கொண்டாட்டத்திற்குத் தலைமை வகித்தவன் என்ற முறையில் என்னிடமிருந்து ஏதாவது சில வார்த்தைகளையாவது நீங்கள் எதிர்பார்ப்பீர்கள். இதனால் சுகாதார விஷயத்தைப் பற்றி அதிகம் சொல்ல எனக்கு சுகாதார விஷயத்தில் போதிய ஞானம் இல்லா விட்டாலும், அனுபவத்தைக் கொண்டு ஏதோ சில வார்த்தைகள் சொல்லுகிறேன். சுகாதாரம் என்பது மக்களுக்கு மிகவும் அவசியமானவைகளில் ஒன்றாகும். அதற்காகத்தான் இப்போது அரசாங்கத்தாரின் முயற்சியாலும், மற்றும் சில அறிவாளிகளின் முயற்சியாலும் சில வருஷங்களாக நமது நாட்டில் இந்தமாதிரி சுகாதார வாரக் கொண்டாட்டமென்பதாக பலவிடங்களில் நடை பெற்று வருகின்றனவென்றாலும், உலகத்திலேயே நாகரீகம் பெற்ற நாடுகள் என்று சொல்லப்படுபவைகளில் எல்லாம் நமது நாடே சுகாதார விஷயத்தில் மிக்கக் கவலையீனமாகவும், கேவலமாகவுமிருந்து வருகின்றது. இவ் விஷயங்கள் வெளிநாடுகட்குச் சென்று பார்த்தவர்களுக்குத்தான் தெரியும். வெளிநாட்டிற்கும் நமது நாட்டிற்கும் சுகாதாரக் கொள்கைகளும், அனுஷ் டிப்பு முறைகளும் நேர் தலை கீழாக யிருக்கின்றன. அதாவது...

ராஜி முறிவு 0

ராஜி முறிவு

  தற்காலம் இந்திய நாட்டில் நடைபெறும் அரசியல் கிளர்ச்சி சம்மந்தமான சட்டமறுப்பு சத்தியாக்கிரகம் முதலியவைகள் விஷயமாய் சர்க்காருக்கும், திரு. காந்தியாருக்கும் ராஜி செய்வதாக சில கனவான்கள் தோன்றி ஒரு மாத காலமாக மக்களின் கவனத்தை அதில் செலுத்தச் செய்து வந்தார்கள். ராஜி விஷயம் வெற்றி பெற்று விட்டால் அதன் பெருமை எங்கு தென்னாட்டுப் பார்ப்பனர்களுக்கு இல்லாமல் போய் விடுமோ என்று கருதி “ராஜிக்கு அஸ்தீவாரமானவர் மகாகனம் பட்டம் பெற்ற சீனிவாச சாஸ்திரி யவர்களே யாவார்கள்” என்று பார்ப்பனப் பத்திரிகைகள் பிரசாரம் செய்தன. அது மாத்திரமல்லாமல் சென்னையிலிருந்து திரு. எ. ரங்கசாமி ஐயங்கார் தனக்கும் அதில் பங்கிருக்கட்டும் என்று போய் உள்ளே கலந்து அநேக அசோசியேடட் பிரஸ் செய்தியும் பிரீபிரஸ் செய்தியும் “நமது நிருபர்” செய்தியும் கலம் கலமாய் வெளியிட்டு பிரபலப்படுத்தினார். கடைசியில் நடந்த காரியம் ரூ. 1க்கு 16 அணாவாக இருந்தது ரூ. 1க்கு 192 பையாக ஆனதைத் தவிர வேறில்லை....

கேரள சீர்திருத்த மகாநாடு 0

கேரள சீர்திருத்த மகாநாடு

  சகோதரிகளே! சகோதரர்களே!! இன்று இங்கு இவ்வளவு பெரிய கூட்டத்தையும், வாலிபர்களுடைய உற்சாகத்தையும் பார்க்க எனக்கு அளவிலா மகிழ்ச்சி ஏற்பட்டிருக்கின்றது. ஆனால் உங்கள் பாஷையாகிய மலையாளத்தில் பேச எனக்குத் தெரியாம லிருப்பதற்கு வருந்துகின்றேன். எனினும் ஏதோ எனக்குத் தெரிந்த சாதாரண தமிழ் பாஷையில் என்னுடைய அபிப்பிராயத்தை வெளியிடுகிறேன். ஒருவாறாக உங்களுக்கு அது புரியக் கூடும் என்று கருதுகின்றேன். சகோதரர்களே! மகாநாட்டைத் திறந்து வைத்த பொழுது நமது நண்பர் திருவாளர் ராமவர்மாத்தம்பான் அவர்கள் செய்த பிரசங்கத்தில் அநேக விஷயங்கள் சொல்லி இருக்கின்றார்கள். அவைகள் நான் உங்களுக் குச் சொல்ல வேண்டுமென்று கருதி இருந்தவைகளுக்கும் மேலாகவே சொல்லப் பட்டிருப்பவைகளாகும். ஆகையால் இப்போது நானும் அதைத் தான் திருப்பிச் சொல்ல வேண்டிய நிலையில் இருக்கின்றேன். இன்று இங்கு கூடிய இந்த மகாநாட்டிற்குக் கேரள சீர்திருத்தச் சங்க மகாநாடு என்று பெயர் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் திருவாளர் தம்பான் அவர்கள் சொன்னபடிக்கு நமது லக்ஷியத்தின்படி பார்ப்போ மானால் சீர்திருத்தம்...

கோவை முனிசிபல் நிர்வாகம் 0

கோவை முனிசிபல் நிர்வாகம்

  கோயமுத்தூர் முனிசிபாலிட்டியின் 1929 – 30ம் வருஷத்திய நிர்வாக ரிப்போர்ட் வரப்பெற்று அதை முற்றிலும் படித்துப் பார்த்தோம். சென்ற வருஷத்தை விட இவ்வருஷம் கல்வி, பொருளாதாரம், பொதுஜன சுகாதாரம் முதலிய எல்லாத் துறைகளிலும் முற்போக்கடைந்திருக்கிறது. வரி வருமானம் ரூ. 2, 74, 707-லிருந்து ரூ. 2, 96, 171க்கு உயர்ந்திருக்கிறது. பொது நிதி இருப்பிலிருந்து சிருவாணி தண்ணீர் சப்ளை வேலைத் திட்டத்திற்காக கொடுக்கப்பட்ட ரூ. 1,51,500ம் போக வருஷ முடிவில் ரூ 1. 64 லட்சம் இருப்ப தாகக் கணக்கிடப்பட்டிருக்கிறது. இம்முனிசிபாலிட்டியைப் பற்றி சர்க்கார் எழுதிய குறிப்பில் வெகுவாகப் புகழ்ந்து கோவை முனிசிபாலிட்டியின் நிர்வாகம் இம்மாகாண மற்றெல்லா முனிசிபல் நிர்வாகங்களை விட தலை சிறந்து விளங்குவதாய் குறிப்பிட்டு விட்டு அதன் தலைவர் திரு. இரத்தின சபாபதி முதலியாரவர்களையும் அவரது சகாக்களையும் பாராட்டி எழுதப் பட்டிருக்கிறது. தக்க பலனளிக்கும் முறையில் பொது ஜனசேவை செய்து வரும் கோவை முனிசிபல் தலைவரவர்களையும் அவரது...

தீண்டாதாரும் கல்வியும் 0

தீண்டாதாரும் கல்வியும்

  காஷ்மீர் மகாராஜா தனது சமஸ்தானத்தில் உள்ள மக்களில் தீண்டா தார் என்பதாக ஒரு பிரிவு இருக்கக் கூடாதென்றும் அவர்களுக்குக் குளம், கிணறு, பள்ளிக்கூடம், தெரு முதலியவைகளில் எவ்விதத் தடங்கலுமிருக் கக் கூடாதென்றும் ஒரு பொதுஉத்திரவு பிறப்பித்திருப்பதுடன் காஷ்மீர சமஸ்தானத்தில் தீண்டாதார் என்பவருக்கும் மற்ற வகுப்பாரைப் போலவே சமமான தகுந்த உத்தியோகங்கள் கொடுக்கப்பட வேண்டு மென்றும் தீர்மானித்திருப்பதுடன், அவர்கள் கல்வியில் பிற்போக்காய் இருப்பதை உத்தேசித்து எல்லோருக்கும் கல்வி ஏற்படும்படி செய்ய இது வரை கல்விக் காக உபகாரச் சம்பளம் முதலியவைகள் கொடுத்து வந்ததை இவ் வருஷம் இரட்டிப்பாக்கிக் கொடுத்து வருவதாகவும் எல்லாவிதத்திலும் இதர பிரஜை களுக்குச் சமமாகவே அவர்களையும் பாவிக்க வேண்டு மென்றும் அரசாங்க அறிக்கை வெளியிட்டு இருக்கிறார். இவ்விஷயத்தைக் கேள்விப்பட்ட சீர்திருத்தவாதிகள் ஒவ்வொரு வரும் ஆச்சரியத்தோடு மகிழ்ச்சியடைவார்கள் என்பதில் ஐயமில்லை. என்றாலும் இந்த உத்திரவிலிருந்து நாம் அதிகமாக மகிழ்ச்சி அடைவது எதுபற்றியென்றால் தீண்டாதார் கல்வி அபிவிருத்திக்கு உபகாரத் தொகை யை...

தீண்டாமையும்  பார்ப்பன உபாத்தியாயர்களும் 0

தீண்டாமையும்  பார்ப்பன உபாத்தியாயர்களும்

  விருத்தாஜலம் தாலூகா பெண்ணாடம் போர்டு எலிமெண்டரி பாட சாலையில் ஒரு பார்ப்பன தலைமை உபாத்தியாயர் இருப்பதாயும் அப் பள்ளி கூடத்தில் வாசிக்கும் ஆதிதிராவிட பிள்ளைகளை மேற்படியார் அதிகக் கொடுமையாகவும், கொஞ்சமும் இரக்கமின்றியும் நடத்துவதாகவும் பலர் நமக்கு செய்திகளனுப்பி பத்திரிகையில் வெளியிடும்படி வேண்டினர். இவ்விஷயத்தை மேற்படி போர்டு அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்திப் பின்னர் தக்கது செய்யலாமென்ற முடிவின் பேரில் அவ்வாறே போர்டு அதிகாரிகளுக்கு நிலைமையை விளக்கி எழுதியிருந்தோம். அவர்களிட மிருந்து வந்த பதிலில் முன்னமே ஒரு தரம் அது சம்மந்தமாய் கவனித் திருப்பதாயும் மீண்டும் அதை விசாரித்து உண்மையறிந்து தக்க நடவடிக்கை எடுத்துக் கொள்வதாயும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்படி பாடசாலையில் உண்மையாய் நடப்பவை என்ன? ஆதி திராவிடப் பிள்ளைகள் எவ்வாறு நடத்தப்படுகிறார்கள், எவ்வளவு காலமாக இவ்விதம் நடைபெறுகிறது, அது சம்மந்தமாக மேலதிகாரிகள் எவ்விதம் கவனித்து என்ன பரிகாரம் செய்திருக்கிறார்கள் என்ற முழு விபரத்தையும் நமக்கு எழுதியனுப்பும்படி அவ்வூர் அன்பர்களைக் கேட்டுக் கொள்ளு கிறோம். குடி...

சமதர்மமும் நாஸ்திகமும் 0

சமதர்மமும் நாஸ்திகமும்

அன்புள்ள தலைவர் அவர்களே! சகோதரர்களே! இன்று திருச்சி மருத்துவகுல சங்கத்தாரால் எனக்குச் செய்த மரியா தைக்கும் வாசித்துக் கொடுத்த வரவேற்பு பத்திரத்திற்கும் நான் உண்மை யிலேயே அருகநல்லவனானாலும், உங்களுக்கு என்னிடமும் எனது சிறு தொண்டினிடமும், கொள்கையினிடமும் உங்களுக்கு இருக்கும் அன்பும், ஆர்வமும் இம்மாதிரி செய்யும் படி செய்தது என்று கருதிக் கொண்டு அவைகளுக்காக எனது மனமார்ந்த நன்றியறிதலைச் செலுத்துகிறேன். எனக்கு முன்பு இங்கு பேசிய எனது நண்பர்களும் என்னைப் பற்றி மிகவும் புகழ்ந்து பேசியதற்கு நான் அவர்களிடம் மிக்க நன்றி காட்டுகிறேன். அன்றியும் நான் சமதர்மத்திற்கு உழைக்கிறேன் என்றும், என்னைப் பலர் நாஸ்தீகர் என்று சொல்லுகிறார்கள் என்றும், நான் நாஸ்தீகன் அல்லவென்றும் எனக்காக பரிந்து பேசினார்கள். அப்படிப் பரிந்து பேசியதற்காக நான் அவர்களுக்கு நன்றி செலுத்துகிறேன். ஆயினும் என்னை நாஸ்தீகன் என்று சொல்லுகிறவர்கள் நாஸ்தீகன் என்பதற்கு என்ன அர்த்தம் கொண்டு சொல்லுகின்றார்களோ அந்த அர்த்தத்தில் நான் நாஸ்தீகன் தான் என்பதை வலியுறுத்திச்...

தேர்தல்கள் 0

தேர்தல்கள்

  சென்னை சட்டசபைக்குத் தேர்தல் பிரசாரங்களும் ஓட்டுச் சேகரிப்பும் தமிழ் நாட்டில் நடைபெறுகின்றதானாலும் கிளர்ச்சி உண்டாக்கத்தக்க அளவுக்கு அவ்வளவு மும்முரமாய் இல்லை என்பது யாவரும் அறிந்த விஷயமாகும். இதற்குக் காரணம் என்னவென்றால் பொது ஜனங்களுக்கு இப்போதைய தேர்தலில் சிறிதும் உற்சாகம் இல்லாதிருப்பதேயாகும். ஏனெ னில் தேர்தல் கட்சிகளின் தத்துவமும் தேர்தலில் நிற்கும் அபேட்சகர்களும் பெரும்பாலும் தங்கள் தங்கள் சுயநலத்துக்கும் பெருமைக்கும் நிற்கின்றார் களே ஒழிய மற்றபடி அவற்றுள் உண்மையும், நாணயமும் பொது நல நோக் கமும் சிறிதும் இல்லை என்பதாக மக்கள் கருத நேரிட்டு விட்டதேயாகும். மற்றும் இரண்டாவதாக தேர்தலில் நிற்பவர்களில் 100க்கு 75 பேருக்கு மேலாகவே தங்கள் தங்கள் சாரும் கட்சித் தலைவர்களின் நன்மைக்காக அவர்களால் நிறுத்தப்படுபவர்கள் எனப்படுவது. மூன்றாவதாக, தேர்தலில் பிரசாரம் செய்யும் கூலிப் பிரசாரகர்களும் பெரிதும் தங்கள் தங்கள் சொந்த விருப்பு வெறுப்பு சுயநலம் காரணமாக முக்கியமாய் இன்னின்னாருக்கு ஆகக்கூடாது என்று பிரசாரம் செய்யப்படு கின்றார்களே தவிர...

ஈரோடு                                                        நபிகள் பிறந்தநாள் கொண்டாட்டம் 0

ஈரோடு                                                        நபிகள் பிறந்தநாள் கொண்டாட்டம்

  அக்கிராசனாதிபதிகளே! சகோதரர்களே! இந்த மாதிரியான முக்கிய சந்தர்ப்பத்தில் கூட்டப்பட்ட இப்பெரியக் கூட்டத்தில் என்போன்றவர்களது அபிப்பிராயத்தையும், தெரிவிக்கச் சந்தர்ப்பமளித்ததற்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு முன் இங்கு பேசிய இருவர்களில் முதலில்  பேசிய மௌலானா மௌல்வி அ. க. அப்துல் அமீது சாயபு (பாகவி) அவர்களைப் பற்றி நான் உங்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டியதில்லை. அவர்கள் இதற்குமுன் பலதடவை நம் ஈரோட்டிற்கு வந்திருந்தாலும் குறிப்பாக திரு. காந்திய வர்களும், மௌலானா அசாத் சோபானி அவர்களும் நம் ஈரோட்டிற்கு வந்திருந்தபோது மௌலானா அவர்கள், மௌலானா அசாத் சோபானி அவர்களின்  உருது உபந்நியாசத்தைத் தமிழில் மொழி பெயர்த்ததோடு தமிழ்நாடு முழுவதும் அவர்கள் கூடவே இருந்தவர் என்பது உங்களனை வருக்கும் ஞாபகமிருக்கலாம். அவர்கள் இதுவரை பேசியதிலிருந்து எதையும் எந்த  மதத்தையும் சரித்திரத்திலிருந்து தீர்மானிக்கக் கூடாது என்றும், அதன் பலனைக் கொண்டும், அது மக்களுக்கு என்ன நன்மை அளித்தது என்பதைக் கொண்டுதான் தீர்மானிக்க வேண்டுமென்றும், மதம் என்பது...

சி.இராஜகோபாலாச்சாரியாரின்                       ஜாதிப் பிரசாரம் 0

சி.இராஜகோபாலாச்சாரியாரின்                       ஜாதிப் பிரசாரம்

உயர்திரு சி.இராஜகோபாலாச்சாரியார் அவர்கள் செம்டம்பர் 10- தேதி “இந்து” பத்திரிகையில் ஜாதிக்கட்டுப்பாட்டின் மூலம் மதுவிலக்கு செய்வதை சட்டமாக்க வேண்டும் என்பதற்கு சமாதானம் எழுதும் முறை யில், ஒவ்வொரு ஜாதிக்கும், கிளை ஜாதிகளுக்கும் தம் தம் ஜாதியினரை ஜாதிப் பஞ்சாயத்து மூலம் அடக்கியாளுவதை ஆதரித்து எழுதியிருக் கிறார். உண்பது, பருகுவது மற்றும் நடை உடை பாவனைகள் முதலிய விஷயங்களில் ஒவ்வொரு ஜாதியாரும் அந்த ஜாதியில் பிறந்த மக்களை கட்டாயப் படுத்த உரிமையுண்டு என்று கூறுகிறார். ஜாதிக்கட்டுப் பாட்டை மீறுகிறவர்களை ஜாதிப்பிரஷ்டம் மூலமும், வேலையிலிருந்து நீக்குவதன் மூலமும் தண்டிப்பது நியாயமென்றும் வற்புறுத்துகிறார். மேற்கண்ட கூற்றை ஊன்றி கவனிக்கும்படி வாசகர்களைக் கேட்டுக் கொள்ளுகிறோம். “காங் கிரஸ் வருணாச்சிரமத்தை வளர்க்க ஏற்பட்டிருக்கும் ஒரு ஸ்தாபன”மென்று நாம் கூறிவருவதை மறுக்கும் அன்பர்கள் திரு. இராஜகோபாலாச்சாரியார் கூற்றில் பதிந்திருக்கும் கொள்கையை அலசிப் பார்க்கவேண்டும். காங்கிரஸ் ஸ்தாபனத்தில் தேசீயமும், மதுவிலக்கும் வெறும் போர்வைகளென்றும், வருணாசிரம பாதுகாப்பே காங்கிரசின் ஆணித்தரமான நோக்கமென்பதும் இப்பொழுதாவது...

உண்மைப் பிரதிநிதிகள் 0

உண்மைப் பிரதிநிதிகள்

  ராமனாதபுரம் ஜில்லா தேவஸ்தானக் கமிட்டியார் ¦³ “தேவஸ்தானத் திற்கு கட்டுப்பட்ட குளம், கிணறு, ரோட்டு, பள்ளிக்கூடம் ஆகியவைகளில் யாரும் எவ்விதத் தடையுமில்லாமல் செல்லலாம்” என்பதாக ஒரு தீர்மானம் கொண்டு வந்து ஏகமானதாக நிறைவேற்றி இருக்கின்றார்கள். அது மாத்திரமல்லாமல் மேற்படி “தேவஸ்தானத்திற்கு கட்டுப்பட்ட எல்லா கோவில்களிலும் தேவதாசிகளின் ஊழியத்தை அடியோடு நிறுத்தி விட வேண்டும்” என்றும் தீர்மானித்திருக்கிறார்கள். இவற்றிற்கும் மேலாக இன்னொரு முக்கியமான விஷயம் அக் கமிட்டியார் செய்திருப்பதென்னவென்றால் அக்கமிட்டியாரை ஸ்ரீவில்லி புத்தூர் செங்குந்த வாலிப சங்கத்தாரும், ஜில்லா சுயமரியாதை சங்கத்தாரும் ஒரு விண்ணப்பத்தின் மூலம் அந்த “ஜில்லாக் கமிட்டியின் ஆதிக்கத் திற்குட்பட்ட எல்லாக் கோவில்களிலும் இந்து மதத்தைச் சேர்ந்த எல்லா வகுப்பினருக்கும் பிரவேச உரிமை வழங்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்ட விண்ணப்பங்களை கமிட்டி கூட்டத்தில் யோசனைக் கொடுத்து ஆலோசித்து  அடியில் கண்ட விஷயங்களுக்கு பதில் தெரிவிக்கும்படி அக்கமிட்டிக்கு உட்பட்ட எல்லாக் கோவில்களின் டிரஸ்டிகளுக்கும் சுற்றுக் கடிதம் அனுப்பி இருக்கின்றார்கள்....

ஒரு பெண்ணுக்கு பல புருஷர்கள் 0

ஒரு பெண்ணுக்கு பல புருஷர்கள்

இந்தியாவில் ஒரு புருஷனுக்கு பல பெண்ஜாதிகள் இருந்து வருவது சாதாரணமாகவும், அவ்வழக்கம் சமூகத்தில் ஒப்புக்கொள்ளப்பட்டதாகவும், மதத்துடனும் மதச்சம்பந்தமான கடவுள்கள், மதாச்சாரியார் முதலியவர்களுக் குள்ளும் இருந்து வருவதாகவும் ஒப்புக்கொள்ளப்பட்டு வருகின்றது. ஆனால் ஒருவித சீர்திருத்தக்காரர்கள் என்பவர்கள் மாத்திரம், அதுவும் வெள்ளைக்கார தேசத்தை, அவர்களது நாகரீகத்தைப் பின்பற்றிய வர்கள் என்கின்ற முறையில் சிலர் ஒரு புருஷனுக்கு ஒன்றுக்கு மேல்பட்ட பெண்கள் கூடாது என்று சொல்லுவார்கள். அதற்குக் காரணம் சொல்லவும் தெரியாது. இரண்டு பெண்டாட்டிகள் கட்டின மதாச்சாரியாரை வணங்கு வார்கள். இரண்டு பெண்டாட்டிகள் கட்டின சாமியையும் கும்பிடுவார்கள். அதற்கு, கோயில்கட்டி, இரண்டு பெண்டாட்டிகளை வைத்து கும்பாபி ஷேகம் செய்து, பூசை உற்சவமும் செய்வார்கள். தாங்களும் பல பெண் களிடம் சாவகாசமும் செய்திருப்பார்கள். தங்கள் காதலிகளாக பயன் படுத்தியும் வருவார்கள். ஆனால் வாயில் மாத்திரம் இரண்டு பெண்டாட்டி களைக் கட்டிக்கொள்வது சீர்திருத்தத்திற்கு கொள்கைக்கு விரோதம் என்பார்கள். ஆகவே இக் கூட்டத்தார் சீர்திருத்தம் என்பதற்கு அருத்தம் தெரியாதவர்களும், அதில்...

இந்தியாவின் பொருள் நஷ்டத்திற்கு காரணம் 0

இந்தியாவின் பொருள் நஷ்டத்திற்கு காரணம்

இந்திய நாடு எவ்விதமான வளத்திலும் மற்ற நாடுகளை விட இளைத்ததல்ல என்பதும், இந்தியாவில் இராஜாக்கள் ஜமீன்தாரர்கள் முதலிய செல்வவான்களும், மற்றும் அவர்களுக்குச் சமானமான மடாதிபதிகள், ஆச்சாரிய பீடங்கள், கோடீஸ்வரர்கள் ஆகியவர்களும் ஆன பிரபுக்கள் மற்ற நாடுகளுக்கு இளைக்காத அளவில் தாராளமாய் இருந்து வருகின் றார்கள் என்பதும் யாவரும் அறிந்த உண்மையாகும். அதுபோலவே வியா பாரிகளும், வியாபாரப் பொருள்களும் கூட மற்ற நாடுகளைப் போலவேதான் இங்கு இருந்து வருகின்றன. விவசாயத்துறையிலும் ஏராளமான பூமிகள் இருப்பதும், அவற்றிற்கு அனுகூலமான இயற்கை நீர் பாசான வசதிகள் இருப்பதும், ஒவ்வொரு மிராசுதாரர்கள் 1000 ஏக்ரா, பதினாயிரம் ஏக்கரா, சிலர் லக்ஷம் ஏக்ரா -பூமிகளையும் உடையவர்களாக இருப்பதும், விவசாயம் செய்யப்பட வேண்டிய பூமிகள் இன்னும் எவ்வளவோ இருப்பதுமான நாடாகவும் இருப்பதின் மூலம் விவசாயத்துறையிலும் இந்தியா மற்ற நாடுகளுக்கு இளைக்காததாகவே இருந்து வருகின்றது. இப்படிப்பட்ட பல்வளமும் பொருந்திய இந்திய நாடு ஏன் தரித்திர மான நாடு என்றும், அடிமையான நாடு...

சத்திய மங்கலத்தில்                                                              திரு. நபிகள் பிறந்த நாள் 0

சத்திய மங்கலத்தில்                                                              திரு. நபிகள் பிறந்த நாள்

  அன்புள்ள சகோதரர்களே! பெரியோர்களே!! இஸ்லாமிய உலகத்திற்கு மிகவும் முக்கியமானதும், மக்களின் நன்மைக்காக உலகத்தில் தோன்றிய பெரியார்களில் மிக ஒப்பற்ற சிறந்த வருமான ஒருவரின் பிறந்த நாளைக் கொண்டாடுவதற்காகக் கூட்டப்பட்ட இக்கூட்டத்திற்குத் தலைமை வகிக்க இரண்டாம் தடவையாகவும் அழைத் தது பற்றி நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். இதற்காக சென்ற ஆண்டிலும் என்னை அழைத்து தலைமை வகிக்கச் சொன்னீர்கள். நிற்க, இன்றைய நிலைமையில் நாம் இந்து முஸ்லீம் ஒற்றுமைக்குப் பாடுபட ஆசை கொண்டிருக்கின்றோம் என்றாலும் இந்தியாவை இந்தியர் களே ஆளுவது என்று ஏதாவது ஒரு காலத்தில் நடக்கக் கூடியதானாலும் ஆகலாம். ஆனால் இன்றைய நிலையில் இந்து முஸ்லீம் ஒற்றுமை ஏற்படுவதென்பது சுலபத்தில் முடியாதென்பதே எனது அபிப்பிராயம். நான் இப்படிச் சொல்லுவது பற்றி உங்களில் சிலர் திடுக்கிடலாம். இரு சமூக ஒற்றுமைக்கும், என்றைக்கும் மதக் கொள்கைகள் என்பது முட்டுக்கட்டை யாகவேதான் இருக்கிறது. மதத்தைவிட மோட்சத்தைவிட மக்கள் ஒற்றுமை முக்கியமும் அவசியமுமானதாகும் என்று பட்டால்தான்...

ஆ.ஹ.,டு.கூ. உபாத்தியாரின் கடவுள் பாடம் 0

ஆ.ஹ.,டு.கூ. உபாத்தியாரின் கடவுள் பாடம்

உபாத்தியாயர்:- பெட்டியை தச்சன் செய்தான், வீட்டை கொத்தன் கட்டினான், சாப்பாட்டை  சமையற்காரன் சமைத்தான், உலகத்தைக் கடவுள் உண்டாக்கினார். தெரியுமா? மாணாக்கன்: – தெரிந்தது சார். ஆனால், ஒரு சந்தேகம் சார். உபாத்தியாயர்: – என்ன சொல்? மாணாக்கன்:- அப்படியானால், கடவுளை யார் உண்டாக்கினார் சார்? உபாத்தியாயர்:- முட்டாள்! இந்தக் கேள்வியை உனக்கு யார் சொல்லிக் கொடுத்தது? அவர்  தானாகவே உண்டானார். இனிமேல் இப்படி யெல்லாம் கேட்காதே. மாணாக்கன்:- ஏன் சார்? கேட்டால் என்ன சார்? உபாத்தியாயர்:- அது! நிரம்பவும் பாவம். மாணாக்கன்:- பாவம் என்றால் என்ன சார்? உபாத்தியாயர்:- சீ! வாயை மூடு. நீ அயோக்கியன், “குடிஅரசு” படிக்கிறாயோ? ஏறு பெஞ்சி  மேல். குடி அரசு – உரையாடல் – 13.09.1931

நவஜவான் தொண்டரும் தலைவரும் 0

நவஜவான் தொண்டரும் தலைவரும்

நவஜவான் பாரத வீரர்கள் ‘காந்தி ஒழிக’ என்று சொல்லி தடுத்து நன்றாய் அடிப்பட்ட சேதி ஒரு பக்கம் இருக்க, நவஜவான் பாரத வீரர் சபை தலைவரான திரு. சுபாஸ் சந்திரபோஸ் அவர்கள் திரு. காந்தி வட்ட மேஜை மகாநாட்டுக்குப் போவதைப் பற்றி தங்களது திருப்தியையும் தாங்கள் திரு. காந்தியவர்களையே பின்பற்றி வருவதாகவும் உறுதிகூறி தந்தி அடித்திருக்கின்றார். (இது 29.8.31 தமிழ்நாட்டு பத்திரிகையில் இருக்கிறது.) இதிலிருந்து பாரத நவஜவான் சபை கொள்கைகளின் யோக்கியதையும் தலைவர்களின் யோக்கியதையும் விளங்குகின்றது. நவஜவான் பாரத வீரர்கள் என்று சொல்லிக்கொள்ளும் வாலிபர்கள் கவனிக்கத் தக்கதாகும். குடி அரசு – செய்திக் குறிப்பு – 06.09.1931

காந்திஜீ 0

காந்திஜீ

திரு காந்திஜீ அவர்களோ உலகம் தோன்றியது முதல் காணப்படாத வேடிக்கை மனிதராக இருந்து வருகின்றார். அதாவது தான் அரை வேஷ்டி கட்டி இருப்பதற்குக் காரணம் உலக மக்களுக்குத் தேவையான துணி கிடையாதாம்! ஆதலால் சிக்கனத்தை உத்தேசித்து அரை வேஷ்டியுடன் இருக்கின்றாராம்!! இதை உலகம் ஒப்புக்கொண்டு அவரை சபர்மதி ரிஷி என்று சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள் நமது அரசியல் பாகவதர்கள். ஆனால் நம் நாட்டுமக்களில் அநேகருக்குக் கஞ்சிக்கே மார்க்கமில்லாமலி ருக்கும் போது ஆட்டுப்பாலும், ஆரஞ்சிப்பழரசமும் சாப்பிடுவது கவலைப் படக்கூடியதல்லவாம்! அது எப்படியோ போகட்டும். இதற்காக நாம் அவரை அவருக்குப் பிடிக்காத உணவை சாப்பிடச் சொல்லவில்லை. காந்திஜீ அவர்கள் தனது காலுக்குச் செருப்பு போட்டுக்கொள்ள வேண்டிய தற்காக தானாகவே செத்த மாட்டுத்தோலொன்றை கையில் கொண்டு போகின் றாராம்! ‘என்ன ஜீவகாருன்யம்!’ என்பதை நினைத்துப் பாருங்கள். உலகி லுள்ள 175 கோடி மக்களில் வேறு யாருக்காவது இந்த எண்ணம் தோன் றுமா? என்று பாருங்கள். சமணர்களுக்குக் கூட...

மாளவியாஜீ 0

மாளவியாஜீ

சேர்மாதேவி குருகுல சம்பந்தமாய் தூத்துக்குடி டி.ஆர். மகாதேவய் யர் என்கின்ற பார்ப்பனரை 100க்கு 90 பார்ப்பனரல்லாதார் நமது நாட்டில் குற்றம் சொன்னார்கள்-சொல்லுகின்றார்கள். இதனாலேயே அவரை அரசியல் உலகத்தை விட்டு ஓட்டியும் விட்டார்கள். அவரும் தனக்கும் அரசியலுக்கும் தகுதியில்லை என்று கருதி வாழ்க்கைக்கு வேறு வழியையும் தேடிக் கொண்டார். இதற்கெல்லாம் காரணம் என்ன? “பார்ப்பனன் சாப்பிடுவதை பார்ப்பனரல்லாதவன் பார்க்கக் கூடாது. பார்ப்பனனும் மற்றவனும் சமபந்தியாய் உட்காரக்கூடாது” என்று அவர் சொன்னதேயாகும். ஆனால் பண்டிதர் மதன்மோகன் மாளவியாஜீ அவர்கள் எந்த விதத்தில் திரு.மகா தேவய்யரைவிட  மேலானவர்? அரசியல் உலகத்திலிருக்கத் தகுந்தவர்? என்று கேட்கின்றோம். மகாதேவய்யராவது தன்னைப் பொறுத்தவரை நம் எதிரில் சாப்பிட்டார் – நம்முடன் உட்கார்ந்து சாப்பிட்டுமிருக்கிறார். மாளவியாஜீ  அவர்களோ, “கீழ்ஜாதிக்காரர்கள் கோயிலுக்குள் போகக் கூடாது” என்றும், “அவர்களுக்கு வேறு இடம் வேறு கோவில், வேறு பள்ளிக்கூடங்கள் இருக்க வேண்டும்” என்றும் சொல்லுகிறார். தனது சம்மந்தி பார்ப்பனரல்லாதவனிடம் உட்கார்ந்து சாப்பிட்ட வனிடம் உட்கார்ந்து சாப்பிட்டதற்கு ...

கல்யாண விடுதலை 0

கல்யாண விடுதலை

  ஆண் பெண் கல்யாண விஷயத்தில் அதாவது புருஷன் பெண்சாதி என்ற வாழ்க்கையானது நமது நாட்டிலுள்ள கொடுமையைப் போல் வேறு எந்த நாட்டிலும் கிடையவே கிடையாது என்று சொல்லலாம். நமது கல்யாண தத்துவம் எல்லாம் சுருக்கமாகப் பார்த்தால் பெண்களை ஆண்கள் அடிமை யாகக் கொள்வது என்பதைத் தவிர வேறு ஒன்றுமே அதில் இல்லை. அவ் வடிமைத்தனத்தை மறைத்து பெண்களை ஏமாற்றுவதற்கே சடங்கு முதலிய வைகள் செய்யப்படுவதோடு அவ்வித கல்யாணத்துக்கு தெய்வீக கல்யா ணம் என்பதாக ஒரு அர்த்தமற்றப் போலிப் பெயரையும் கொடுத்து பெண் களை வஞ்சிக்கின்றோம். பொதுவாக கவனித்தால் நமது நாடு மாத்திரமல்லாமல் உலகத் திலேயே அநேகமாய் கல்யாண விஷயத்தில் பெண்கள் மிக்க கொடுமை யும், இயற்கைக்கு விரோதமான நிர்ப்பந்தமும் படுத்தப்படுகிறார்கள் என் பதை நடுநிலைமையுள்ள எவரும் மறுக்க முடியாது. ஆனால் நமது நாடோ இவ்விஷயத்தில் மற்ற எல்லா நாட்டையும் விட மிக்க மோசமாகவே இருந்து வருகிறது. இக்கொடுமைகள் இனியும் இப்படியே...

கும்பகோணம் தாலூகா                 இரண்டாவது பார்ப்பனரல்லாதார் மகாநாடு 0

கும்பகோணம் தாலூகா                 இரண்டாவது பார்ப்பனரல்லாதார் மகாநாடு

  அன்புள்ள சகோதரிகளே! சகோதரர்களே!! நான் இங்கு வந்தது முதல் இதுவரையிலும்  எனக்காக வென்று செய்யப்பட்ட ஆடம்பரங்களையும், ஊர்வலங்களையும் என்னைத் தலை வனாக பிரரேபிப்பதன் முகத்தான் என்னைப் பற்றி பலர் பேசிய புகழுரை களையும் எனக்காக என்று இப்போது வாசித்துக் கொடுத்த உபசாரப் பத்திரங் களில் எழுதப்பட்டிருக்கும் வாக்கியங்களையும் கவனித்துப் பார்த்ததில் நான் மிக்க வெட்கப்பட வேண்டியவனாய் இருக்கிறேன். ஏனெனில்  எந்த மூட நம்பிக்கைகளையும், குருட்டு பக்தியையும் அடியோடு ஒழிக்க வேண் டுமென்று முயற்சி செய்கிறேனோ, அவற்றை அதை யொழிப்பதற்காகக் கூடிய  இந்த மகாநாட்டில் உங்களாலேயே என் விஷயத்தில்  உபயோகப் படுத்தப்படுவதை நான் பிரத்தியட்சமாகப் பார்க்கிறேன். இவற்றை அநு மதித்துக் கொண்டிருக்கிற நான் எந்த விதத்தில் இத் தொண்டில் வெற்றி யடைய முடியும்? அல்லது என்னைப் பொறுத்த அளவிலாவது அவற்றி லிருந்து  திருத்தமடைகிறேனென்று எப்படிச் சொல்ல முடியும்? ஆகவே இம் மாதிரியான செய்கைகளை தயவுசெய்து அடியோடு இனி விட்டுவிட வேண்டுமென்று கேட்டுக்...

கும்பகோணம் தாலூகா                 இரண்டாவது பார்ப்பனரல்லாதார் மகாநாடு 0

கும்பகோணம் தாலூகா                 இரண்டாவது பார்ப்பனரல்லாதார் மகாநாடு

  அதுபோலவே இராமராஜியமும், இராமாயணத்திலுள்ளபடி உண்மை யாயிருக்குமானால், அது வெறும் ஜாதி வித்தியாசத்தையும், பார்ப்பன உயர்வையும் கற்பிக்கின்றதல்லாமல் வேறு என்ன நீதி அதனுள் அடங்கி யிருக்கின்றதென்பதை யோசித்துப்பாருங்கள். பெண் கொடுமை இராமாய ணத்தைப் போல் வேறெதிலும் காண்பது அரிது. உதாரணமாகத் தாட கையைக் கொன்றது; சூர்ப்பநகையை மூக்கையும், முலையையும் அறுத்தது; கைகேசியையும் கூனியையும் இழிவுபடுத்தியது முதலிய வைகளும், சீதை கர்ப்பமாக இருக்கும் போது அவளினது கர்ப்பத்தில் சந்தேகம் ஏற்பட்டதற் காக அவளைக் கொண்டுபோய் வனாந்திரத்தில் தனியே விட்டுவிட்டு வரச்செய்தானென்பதும் கடைசியாக அவள் உயிருடன் புதைக்கப்பட்டது மான காரியங்களிலிருந்து பெண்களின் உயிரை எவ்வளவு அலட்சியமாகக் கருதப்பட்டிருக்கிறதென்பது விளங்கவில்லையா? அது போலவே ஒரு பார்ப்பனரல்லாதான் தவஞ்செய்ததற்காக அவனை இராமன் கொன்றானென் றால் அதில் ஜாதி ஆணவம் விளங்கவில்லையா? மற்றும் தசரதன் அறுபத னாயிரம் பெண்சாதிகளோடு இருந்தா னென்பதிலிருந்து பெண்களை எவ்வளவு கொடுமைப்படுத்தி இருக்கிறார் கள் என்பது விளங்கவில்லையா? மற்றும் பாதரட்சையை சிம்மாசனத்தில் வைத்து பரதன்...

சத்தியாக்கிரகம் 0

சத்தியாக்கிரகம்

“சுயமரியாதை இயக்கமானது எவ்வித சத்தியாக்கிரகமும் செய்ய வில்லை” என்பது இன்றைய தினம் அதன் மீது துவேசமும், பொறாமையும் கொண்டவர்களால் சொல்லப்படும் ஒரு பெரிய குற்றமாகும். மற்றபடி அதன் கொள்கைகளைப் பற்றி யாரும் இதுவரை எவ்விதக் குற்றமும் சொல்லவில்லை. அன்றியும் இந்த மேற்கண்ட குற்றத்தை மனதில் வைத்துக்கொண்டுதான் “சுயமரியாதை இயக்கம் இதுவரை என்ன சாதித்துவிட்டது?” என்பதாகவும் சிலர் நம்மைக் கேட்கின்றார்கள். சுயமரியாதை இயக்கம் “சத்தியாக்கிரகம்” என்பதாக ஒரு கிளர்ச்சியை ஆரம்பித்து, சில வாலிபர்களைச் சேர்த்து அவர்களுக்கு சாப் பாடும் விளம்பரமும் கொடுத்து, ஏதோ இரண்டொரு கோவில்களின் முன்போ, அல்லது குளங்களின் முன்போ கொண்டுபோய் நிறுத்தி, அவ் வாலிபர்களுக்கு கொஞ்சம் அடியும் உதையும் வசவும் வாங்கிக்கொடுத்து, ஜெயிலுக்கும் சிலரை அனுப்பி, அதற்குத் தகுந்த விளம்பரங்களும் பாராட்டுக் கூட்டங்களும் போட்டு ஆடம்பரங்கள் செய்வதுமான காரியங் களைச் செய்திருக்குமேயானால் அந்தக் காரியங்களால் நமது லட்சியம் வெற்றி பெற்றாலும்-பெறாவிட்டாலும் லட்சியத்திற்கே முட்டுக்கட்டையாக இருந்தாலும்கூட, சிறிதும் கவலை இல்லாமல் “சுயமரியாதை...

திருச்சங்கோட்டில்                         உபன்யாசம் 0

திருச்சங்கோட்டில்                         உபன்யாசம்

நான் இங்கு இப்படி ஒரு கூட்டத்தில் பேசவேண்டியிருக்கும் என்று கருதவேயில்லை. ஜமீன்தாரர் (டாக்டர் சுப்பராயன்) அவர்கள் ஒரு காரியமாய் என்னை இங்கு வரவேண்டுமென்று 10, 15 நாட்களுக்கு முன்னமே எழுதியதை உத்தேசித்து அவர்களைக் காண நான் வந்தேன். சற்று முன்புதான் இங்கு ஒரு மீட்டிங்கு கூட்டப்பட்டிருப்பதை அறிந்தேன். இக்கூட்டம் ஜமீன்தாரர் அவர்களையும் திரு. கண்ணப்பர் அவர்களையும் உத்தேசித்தே கூட்டப்பட்டது என்பதையும் அறிந்தேன். இதில் நான் பேசுவது என்பது அசௌகரியமான காரியம் என்றாலும் நண்பர் நடேச முதலியார் அவர்கள் சொல்லையும் ஜமீன்தாரர் அவர்கள் சொல்லையும் தட்ட முடியாமல் ஏதோ சிறிது பேச வேண்டியவனாக இருக்கிறேன். இன்று பேசவேண்டிய விஷயம் “தற்கால இராஜ்ய நிலைமை” என்பதாக நோட்டீ சில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. நானோ இராஜிய திட்ட சம்பந்தமான விஷயங்களில் மாறுபட்ட ஒரு அபிப்பிராயம் கொண்டிருப்பவன். இராஜிய துறையில் சிறிதுகாலம் இருந்து பார்த்துவிட்டு அதன் கொள்கைகளில் அதிருப்தி கொண்டு வெளியேறி என் சொந்த இஷ்டப்படி சமூகத்துறையில் வேலை...

ஆர். கே. ஷண்முகம் 0

ஆர். கே. ஷண்முகம்

  உயர்திருவாளர் கோவை ஆர். கே. ஷண்முகம் அவர்களை இந்தி யரில் அறியாதார் யாரும் இருக்க முடியாதென்றே கருதுகின்றோம். மேல் நாட்டவர்களும், அவரைப்பற்றி விசேஷமாக அறிந்திருப்பார்கள். சிறப்பாக தமிழ் நாட்டில் தெருவில் விளையாடும் குழந்தைகள் முதல் அரசர் வரை அவரைப் பற்றி நன்றாய் உணர்ந்திருக்கிறார்கள். அன்றியும் சுயமரியாதை உலகத்திலும், சீர்திருத்த உலகத்திலும் திருவாளர் சௌந்தரபாண்டியன் அவர்களைப் போலவே – சில விஷயங்களில் அவருக்கு மேலாகவே திரு. ஷண்முகம் அவர்கள் பெயரும் ஒவ்வொரு வீட்டிலும் சாதாரணமாக தங்கள் தங்கள் வீட்டு நபர்களைப் போலவே வழங்கப்பட்டு வருகின்றது என்பதைப் பற்றி நாம் யாருக்கும் எடுத்துக்காட்ட வேண்டியதில்லை. திரு. ஷண்முகம் அவர்கள் அறிவு, திறன், ஆராய்ச்சி, அனுபவ ஞானம், முயற்சி, கல்வி, செல்வம் ஆகிய அருங்குணங்களும், தன்மை களும் ஒன்று போலவே அமையப் பெற்றவராவார். அப்பேர்ப் பட்டவரின் சேவையானது பொதுவாக சீர்திருத்த உலகத்திற்கும், அரசியல் என்கிற உலகத்திற்கும் மிக்க இன்றியமையாதது என்பதை எடுத்துக்காட்ட வேண்டி யதில்லை....

மலாய் நாட்டு வக்கீல்களின்                     ‘தேசியம்’ 0

மலாய் நாட்டு வக்கீல்களின்                     ‘தேசியம்’

  மலாய் நாட்டில் மலாக்கர் என்கின்ற பட்டணத்தில் கள்ளிக்கோட்டை திருவாளர் கே.பி. கேசவமேனன் அவர்கள் சுமார் 3, 4 ஆண்டுகளாக பிரபல பாரிஸ்டராக இருந்து வருகின்றார்கள். அவர் இப்போது தன்னை கு.ஆ.ளு. பாரிலும்  வக்கீலாக சேர்த்துக் கொள்ள வேண்டுமென்று கோலாலம்பூர் சீப் ஜட்ஜிக்கு விண்ணப்பம் போட்டதில் அவரைச் சேர்த்துக் கொள்வதற்கு கோலாலம்பூர் வக்கீல்கள் ஜட்ஜிக்கு ஆட்சேபனை சொன்னதாகவும் அவ் வாட்சேபனை என்ன வென்றால் திரு. கே. பி. கே. மேனன் அவர்கள் ராஜத் துரோக விஷயமாய் சிறைசென்றவர் என்று சொன்னார்களாம். அதற்கு பாரிஸ்டர் திரு. கே. பி. கே. மேனன் அவர்கள் தான் வைக்கம் சத்தியாக்கிர கத்தில் ஈடுபட்டதால்  சிறை செல்ல நேரிட்டதென்றும்  மதராஸ் ஹைகோர்ட் டில் மிக்க செல்வாக்குப் பெற்ற பாரிஸ்டர் என்றும் எடுத்துக் காட்டினாராம். இதற்காக கனம் ஜட்ஜி அந்த விண்ணப்பத்தை பைசல் செய்ய 2 µ வாய்தா தள்ளிப் போட்டிருப்பதாகத் தெரியவருகின்றது. மலாய் நாட்டு வக்கீல்கள் இந்த...

சுயமரியாதைக்காரனுக்கும் புராணமரியாதைக்காரனுக்கும் சம்பாஷணை                                                                                                                          – சித்திரபுத்திரன் 0

சுயமரியாதைக்காரனுக்கும் புராணமரியாதைக்காரனுக்கும் சம்பாஷணை                                                                                                                         – சித்திரபுத்திரன்

  சுயமரியாதைக்காரன்:-      வாருங்கள் ஐயா புராணமரியாதைக் காரரே! வெகுநாளாய்க்காணோமே,        எங்கு சென்றிருந்தீர்கள்? புராண மரியாதைக்காரன்:- எனது வயிற்றுக் கொடுமை தான் உமக்குத் தெரியுமே! புராணக் காலnக்ஷபம் செய்யப் போயிருந்தேன். சு-ம:-          அப்படியா? உங்கள் புராணக் காலnக்ஷபம் சரியாய் நடக் கின்றதா? ஜனங்கள் முன்போல் புராணங்களை மரியாதை செய்து கேட்கின் றார்களா? பு-ம:-அதை ஏன் கேட்கின்றீர்கள்? வரவர புராணம் என்றாலே மக்களுக்கு ஒருவித வெறுப்பு ஏற்பட்டுவிட்டது. நம்மை யாரும் லட்சியம் செய்வதே கிடையாது. சு-ம:-ஏன் அப்படிச் சொல்லுகிறீர்கள்? புராணங்கள் எல்லாம் பகவான்கள், ரிஷிகள், பரமசிவன், மகாவிஷ்ணு முதலியவர் வாக்கு என்ப தாக இருக்கும்போது புராணங்களுக்கு மரியாதைப் போய் விட்டது என்பது அதிசயமாகவல்லவா இருக்கிறது? பு-ம:- என்னைப் பரிகாசம் செய்கின்றீர்களா? என்ன? நீங்கள் போடு கின்றபோடுதான் நாட்டையே பாழாக்கி விட்டதே. நம்மைக் கண்டால் பையன்கள் கல்லெடுத்துப்போடுகின்றார்கள்? “ரிஷிகள் சொன்னார், பக வான் சொன்னார்” என்றால் “உனக்கு எப்படித் தெரியும்?” என்று கேட்...

தேர்தல்                                                          -II 0

தேர்தல்                                                          -II

  சட்டசபை தேர்தல்களுக்கு நிற்பவர்கள் தங்களது நியமனச் சீட்டுகளைத் தாக்கல் செய்து விட்டார்கள். அவர்களில் பெரும்பாலோரும் ஏதாவது ஒரு கட்சியின் பெயரைச் சொல்லிக் கொண்டே நியமனச் சீட்டுத் தாக்கல் செய்திருப்பார்கள். சிலர் ஜெயிக்கும் கட்சியை எதிர்பார்த்து எதில் வேண்டுமானாலும் சேருவதற்கு வசதி வைத்துக் கொண்டு நியமனச் சீட்டைத் தாக்கல் செய்திருப்பார்கள். பொதுவாக தேர்தல்களில் நிற்கப்படுபவர்களில் பெரும்பான்மை யோரின் யோக்கியதைகளையும் நாணயங்களையும் குறித்து முன் ஒரு தலையங்கத்தில் விவரமாய் கூறியிருக்கிறோம். கொள்கையும் நாணயமும் எப்படி இருந்தபோதிலும் தேர்தல் சமயங்களில் கட்சியின் பேரால் நிற்பவர் கள் தங்கள் கட்சிக்காக என்று கட்சியின் சார்பாய் பொதுமக்களின் மனதைக் கவரத்தக்க ஏதாவது சில கொள்கைகளை வெளியிடுவது என்பது எங்கும் நடைபெற்று வரும் வழக்கமாகும். அதுபோலவே இத்தேர்தலிலும் நமது மாகாண சட்ட சபைக்கு நிற்கும் இரண்டு முக்கிய கட்சியாரும் தங்கள் தங்கள் கொள்கைகள் என்பதாக சில விஷயங்களை அறிக்கையின் மூலம் வெளி யிட்டு விட்டார்கள். இவ்விரு கக்ஷி அறிக்கைக்...

மாயவரம் – சீயாழி                        மிராசுதாரர்கள் மகாநாடு 0

மாயவரம் – சீயாழி                        மிராசுதாரர்கள் மகாநாடு

  அக்கிராசனாதிபதி அவர்களே! சகோதரிகளே! சகோதரர்களே! இன்றையதினம் இந்த பொதுக் கூட்டத்தில் தற்கால நிலைமையைப் பற்றி நானும் சில வார்த்தைகள் சொல்ல வேண்டுமென்று இத்தாலூகா பிரபல மிராசுதாரர்களானவர்களால் அழைக்கப்பட்டு பேசக் கேட்டுக் கொண்டதற்கு மிக்க நன்றியுடையவனாக யிருக்கின்றேன். இதற்கு முன் இந்தக் கூட்டத்தில் பேசிய கனவான்களின் பேச்சை நீங்கள் கேட்டீர்கள். நாட்டின் தற்கால நிலைமையைப் பற்றி அவர்கள் பேசியதை நான் ஒப்புக் கொள்ளுகிறேன். ஆனால் மனிதன் சட்ட மறுப்பு செய்யக் கூடாதென்பதையும், சட்டத்திற்கடங்க வேண்டியதென்பதையும் இராஜாவுக்கு பக்தியாய் நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் நான் ஒப்புக் கொள்ள முடியவில்லை. இவ்விஷயத்தில் எனது கொள்கை உங்கள் எல்லோருக்கும் ஏற்கனவே தெரிந்தேயிருக்கலாம். சுயமரியாதை மகாநாட் டிலும் தீர்மானித்திருக்கின்றோம். அதாவது மனிதனுக்கு இராஜ பக்தியும், கடவுள் பக்தியும் கற்பிக்கப்படுவதானது மனிதனை அடிமைத் தனத்தி லாழ்த்தும் அறிகுறியேயாகும் என்பதாக வெகுநாளாகவே நான் பேசியும் எழுதியும் வந்திருக்கிறேன். ஆனால் இதிலிருந்து துரோகியாகவோ, துவேஷியாகவோ இருக்க வேண்டுமென்பதான பொருள் அதிலில்லை...

முஸ்லீம்கள் பிரச்சினை 0

முஸ்லீம்கள் பிரச்சினை

தனித்தொகுதிக்கு ஜனாப் ஜமால் மகமது ஆதரவு சென்னையில் பிரபல வியாபாரியும், இந்திய தோல் அரசரும் (ஐனேயை டுநயவாநச முiபே) முஸ்லீம் சமூக பிரமுகருமான திரு. ஜமால் மகமது சாயபு அவர்கள் தலைச்சேரி மாப்பிள்ளை முஸ்லீம்கள் மகாநாட்டில் தலைமை வகித்துப் பேசியதில் “ஸ்தானங்கள் ஒதுக்கி வைக்கப்பட்ட கூட்டுத் தொகுதி நல்லதானாலும் பல காரணங்களால் சென்னை முஸ்லீம்கள் செய்துள்ள தனித்தொகுதித் திட்டத்தைத் தான் ஆதரிப்பதாகவும் எல்லா முஸ்லீம் களும் ஆதரிக்கவேண்டு”மென்றும் சொல்லி இருக்கிறார். ஆகவே, தனித்தொகுதிக்கு எந்த முஸ்லீம் பிரமுகர் விரோதமாக இருக்கின்றார் என்பதை விளக்க வேண்டியது தேசீய முஸ்லீம்கள் என்பவர் களின் கடமையாகவும் தேசீய இந்துக்கள் என்பவர்களின் கடமையுமாகும். குடி அரசு – செய்தி விளக்கம் – 30.08.1931

ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் மாற்றம் 0

ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் மாற்றம்

ஈரோடு ரயில்வே ஸ்டேஷனானாது 25-8-31 தேதி முதல் இப்போது இருந்து வந்த ஸ்டேஷனுக்கு சுமார் ஒரு மைல் தூரம் மேற்கு புறமாகத் தள்ளி கட்டப்பட்டு அங்கு மாற்றப்பட்டுவிட்டது. சுமார் ஒருகோடி ரூபாய் வரை செலவு செய்து கட்டடங்கள் பல கட்டப்பட்டிருக்கின்றன. தென் இந்தியாவில் உள்ள பெரிய ஸ்டேஷன்களில் இதுவும் ஒரு பெரியதும் அதிக செலவிட்டு கட்டப்பட்டதுமாகும். நாளாவட்டத்தில் ஈரோடு தென் இந்திய ரயில்வே பெரிய வண்டிப்பாதைகளுக்கு ஒரு முக்கிய ஸ்தலமாக செய்யப்படக்கூடும். இதன் பயனாக சுமார் ஆயிரம் குடிகள் ஈரோட்டிற்கு அதிகமாகலாம். ஆனால் பிரயாணம் செய்கின்ற ஜனங்களுக்கு சிறிது கஷ்டம் ஏற்பட்டுவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். என்னவெனில் ஸ்டேஷனுக்கும் ஊருக்கும் முன்னையைவிட சற்று அதிக தூரமாகி விட்டது. ஸ்டேஷனுக்கு இரவு காலங்களில் முன்போல் தைரியமாய் போக முடியாமல் பயப்பட வேண்டியதாய் விட்டது. மோட்டார் கூலி வண்டி வாடகை முதலியவைகள் அதிகமாய் விட்டன. ரயிலுக்கு போவது வரு வதில் பிரயாணிகளுக்கு அரைமணி நேரம்...

க த ர் 0

க த ர்

  கதர் பிரசாரத்தின் பலனால் வேஷக்காரர்கள் டெம்பரரியாய் கதர் கட்ட ஆரம்பித்து எப்போதும் வழக்கமாய் கதர் கட்டி வந்தவர்களுக்கும் கதர் கிடைக்க வழி இல்லாமல் போய் வேறு துணி கட்ட நிர்பந்தப்படுத்தி விட்டது. இது ஒரு புறமிருக்க கதர் வியாபாரிகள் இந்த சமயத்தில் அடிக்கின்ற கொள்ளைக்கு அளவில்லை. துணியோ சாணித்துணிக்கும் உதவாது. விலையோ டக்கா மசிலினுக்கு மேல் விற்கப்படுகின்றது. பஞ்சு விலை கண்டி 1.க்கு 320 ரூபாயிலிருக்கும் போதும் நூற்புக் கூலியும் நெசவுக் கூலியும்  அரிசி ரூ. க்கு இரண்டரை பட்டணம் படி விற்றுக் கொண்டும் இருந்த போது போட்ட விகிதப்படியே இப்போதும் விற்கின்றார்கள். இப்போது பஞ்சு பாரம் 150 முதல் 160ரூ. க்குள் மிக்க சவதமாக இருக்கின்றது. அரிசி ரூ. 4 பட்டணம் படிக்கு மேலாகவே விற்கின்றது. 520 ராத்தல் கொண்ட பாரம் பஞ்சு 160 ரூ. விலையானால் பவுன் ஒன்றுக்கு 8 அணாவே பஞ்சு விலை அடங்கும். 10...

விருதுநகர் மகாநாடு  ஐஐஐ 0

விருதுநகர் மகாநாடு  ஐஐஐ

மத நடுநிலைமைக் கொள்கை கண்டனத் தீர்மானம் விருதுநகர் மகாநாட்டில் நிறைவேற்றிய தீர்மானங்களில் மதங்கள் ஒழிக்கப்படவேண்டும் என்னும் தீர்மானத்தைப்பற்றி சென்ற வாரம் விளக்கி இருந்தோம். இவ்வாரம் மதநடுநிலைமை கொண்ட ஸ்தாபனங்களை மறுத்தும் மத நடுநிலைமை கொள்கையைக் கண்டனம் செய்தும் தீர்மானிக்கப்பட்ட தீர்மானத்தைப் பற்றி சற்று விளக்குவோம். தீர்மானமாவது:- “சமுதாய முற்போக்குகள் ஏற்படுவதற்கு ஆன முயற்சிகள் செய்யப் படும்போதெல்லாம் “மதம்போச்சு மதம் போச்சு” என்று பிற்போக்காளர்கள் கூப்பாடு போட்டுக்கொண்டே முட்டுக் கட்டையாய் இருந்து வருவதால் அரசாங்கத்தார் அனுசரித்து வரும் மத நடுநிலைமையை கண்டிப்பதோடு அதை ஆதரிக்கும் எந்த அரசியல் ஸ்தாபனங்களையும் ஒப்புக்கொள்ள முடியாது என்பதாக இந்த மகாநாடு தீர்மானிக்கிறது” என்பதாகும். அது போலவே “வர்ணாச்சிரம தர்மத்தை ஒப்புக்கொள்ளும் எந்த அரசியல் ஸ்தாபனத்தையும் ஒப்புக்கொள்ள முடியாது” என்பதுமாகும். இவை காங்கிரசையும் திரு.காந்தியையும் கண்டித்து செய்யப்பட்ட தீர்மானம் என்றே சொல்லலாம். ஏனெனில் மத நடுநிலைமையை காங்கிரஸ் ஒப்புக்கொள்ளுகின்றது. வருணாச்சிரம தர்மத்தை திரு.காந்தியவர்கள் ஒப்புக் கொள்ளுகிறார். ஆகவே இவ்விரு...

காந்தியின் யாத்திரை                         போனாலென்ன?  போகாவிட்டாலென்ன? 0

காந்தியின் யாத்திரை                         போனாலென்ன?  போகாவிட்டாலென்ன?

உயர்திரு. காந்தியவர்கள் இங்கிலாந்து போகும் விஷயமாய் போகா மல் தப்பித்துக் கொள்ள முயற்சித்துச் சர்க்காரார் மீது எவ்வளவோ குற்றப் பத்திரிகை வாசித்துப் பார்த்தும் கடைசியாக இப்போது அந்தப் பிரச்சினை யானது ஒன்று, “போய்த் தீரவேண்டியது” அல்லது “தாம் குற்றவாளியாக வேண்டியது” என்கின்ற நிலைமைக்கு வந்து விட்டதால் போவதா? இல்லையா? என்பது ஒவ்வொரு வினாடியும் ஒரு பெரிய விடுகதையாகவே இருந்து வந்தது. திரு. காந்தியவர்கள் சர்க்காரார் மீது ஒரு வண்டி குற்றங்கள் சுமத்தி நீண்டதொரு குற்றப் பத்திரிகை படித்தார். ஆனால் சர்.சி.பி.இராமசாமி அய்யரை சட்ட மந்திரியாகக் கொண்ட சர்க்காரார் அவ்வளவுக்கும் ஒரே அடியில் பதில் சொல்லி குற்றப்பத்திரிகை ஏற்படுத்தினவர்களை நடுங்கச் செய்து விட்டார்கள். அதன் சுருக்கமாவது:- “திரு.காந்தியவர்களே! நீங்கள் சாட்டிய குற்றப் பத்திரிகையை சர்க்காரார் ஒப்புக்கொள்ள முடியாது. காங்கிரஸ் ஒப்பந்தத்தை மீறி தப்பு செய்து வந்திருப்பவைகளை சர்க்காரார் அவ்வப்போது உங்களுக்கு எடுத்துக் காட்டி வந்திருக்கின்ற விபரம் தங்களுக்கே தெரிந்ததாகும்”. “காங்கிரஸ் செய்த தப்பிதங்களுக்கு...

காந்தியார் 0

காந்தியார்

  திரு. காந்தியார் சிறையில் மூன்று வேலைகள் செய்கிறார். அவற்றுள் ஒன்று தக்ளியில் நூல் நூற்பது. மற்றொன்று பகவத் கீதையை ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பது. வேறொன்று இந்த இரண்டும் செய்து மீதி இருக்கும் நேரத்தில் ராமநாம பஜனை செய்வது. ஆகவே அவரது பகுத்தறிவுக்கு நாம் வேறு உதாரணம் காட்ட வேண்டியதில்லை யென்றே நினைக்கின்றோம். இம் மூன்று காரியங்களும் இந்தியாவின் பொது வாழ்க்கையையும் முன்னேற்றத் தையும் முன்னுக்குக் கொண்டு போகுமா? பின்னுக்குக் கொண்டு போகுமா வென்பதை யோசிக்கத்தக்கது. திரு. காந்தியிடம் குருட்டுப் பக்தியுள்ளவர் களுக்கு நாம் இப்படிக் கேட்பது சற்று கஷ்டமாக இருக்கலாம். தக்ளியில் நூல் நூற்பது எதை உத்தேசித்து என்று இதுவரை யாராவது தெரிந்தார்களா? தக்ளி நூல் வெள்ளைக்கார ஆட்சியின் கொடுமையையும் இந்தியாவின் பொருளாதார கொள்ளையையும் என்ன செய்து விடக்கூடும் என்பது நமக்கு விளங்க வில்லை. என்ன சொன்னாலும் தட்டிச் சொல்லாமல் கேட்பதற்குச் சில மக்கள் இருக்கின்றார்கள் என்பதைத் தவிற மற்றபடி...

ராஜி 0

ராஜி

  திருவாளர்கள் ஜயக்கர் அவர்களும், சாப்ரூ அவர்களும் திரு. காந்திக் கும் கவர்ன்மெண்டுக்கும் ராஜி ஏற்படுவதற்காக முயற்சி செய்கிறார்கள். இம் முயற்சியின் முடிவு எப்படி இருந்தாலும், தேசிய பத்திரிகைக் காரர்களும், பொதுஜனங்களும் வெகு மகிழ்ச்சியுடன் இம்முயற்சியைப் போற்றி ஏதாவது ஒரு வழியில் ராஜி ஏற்பட்டால் போதுமென்று ஆசைப்படு கின்றார்கள். இதிலிருந்து சட்டமறுப்பும், சத்தியாக்கிரகமும் மக்களுக்கு சலிப்புத் தோன்றிவிட்டது என்பது வெளிப்படை. திரு. காந்தி எவ்வளவு விட்டுக் கொடுத்தாகிலும் ராஜி செய்து கொள்ள வேண்டு மென்பதே தேசீய பத்திரிகைகளின் கவலையாகி விட்டது. சத்தியாக்கிரகத்திற்கு இன்னும் சில நாள்களுக்குள்ளாக பலமான எதிர்ப்புகள் கிளம்பிவிடும் என்பதை “தேசீய வாதிகள்” உணரத் தலைப் பட்டு விட்டார்கள். அனேக வியாபாரிகள் கெட்டுப்போய் விட்டார்கள். கஷ்டத்தில் சிக்கி விழித்துக் கொண்டிருந்த வியாபாரிகளும் இனியும் நாலு இரண்டு வருஷங்கள் தாட்டலாம் என்று நினைத்துக் கொண்டிருந்த வியாபாரிகளும் சட்ட மறுப்பின் மீது பழிபோட்டு சீக்கிரத்தில் தீபாவளி ஆக இதை ஒரு சாக்காகக் கொண்டு...

பயமுறுத்தல் கடிதங்கள் 0

பயமுறுத்தல் கடிதங்கள்

அன்பர் திரு. ஜார்ஜ் ஜோசப் அவர்களை காங்கிரஸ் “பக்தர்”களில் யாரோ ஒருவர் வெட்டிப் புதைத்து விடுவதாய் அவருக்கு ஒரு கடிதம் எழுதி யிருப்பதாகவும் அது திரு.ஜோசப் அவரது மனைவியாரால் போலீசில் ஒப்பு விக்கப்பட்டதாகவும் பத்திரிகையில் பார்த்தோம். இக்கடிதம் எழுதக் காரணம் ‘குடி அர’சில் வார வாரம் வெளியான திரு.ஜோசப் அவர்களின் “காந்தியின் இராமராஜியம்” என்பது பற்றிய வியாசங்களின் காரணமாகவே இருக்கலாம். இருந்தாலும், இம்மாதிரி கடிதம் நமக்கும் பல வந்து கொண்டிருக்கின்றன. நண்பர்கள் திரு.ஏ.இராமசாமி முதலியார், திரு.பி.வரதராஜுலு நாயுடு ஆகியவர்களுக்கும் பல வந்ததாக நாம் சென்னையில் இருக்கும்போது பத்திரிகைகளில் பார்த்தோம். நமக்கு வந்த கடிதங்கள் 100க்கு மேற்பட்ட தாகும். வசவு கடிதங்கள் வர்ணிக்க முடியாத கருத்துக்களால் எழுதப்பட்ட வைகளும் இரத்தத்தினால் துவைத்து கையெழுத்துப் போடப்பட்டவை களும் ஆபாசமான சித்திரம் எழுதிக் காட்டியவைகளுமாக அநேக கடிதங் களுண்டு. இவை பெரிதும் பார்ப்பனர்களால் எழுதப்பட்டவைகள் என்று கருதக் கூடியவைகளானாலும் சில பார்ப்பனர்களல்லாத வாலிபர்களாலும் இருக்கலாம். ஒன்றிரண்டு...

சாரதா சட்டத்தை ஒழிக்க சூழ்ச்சி 0

சாரதா சட்டத்தை ஒழிக்க சூழ்ச்சி

சாரதா சட்டத்தை ஒழிப்பதற்காக இப்போது தென்னாட்டுப் பார்ப் பனர்கள் முஸ்லீம்களை தங்களுடன் சேர்த்துக்கொண்டு சூட்சி செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். சமீபத்தில் கூடும் சட்டசபைக்கு தஞ்சை, திருச்சி ஜில்லாக்களின் பிரதிநிதியான திரு. கிருஷ்ணமாச்சாரியார் என்னும் பார்ப்பனர் திருத்தம் என்னும் பெயரால் ஒரு தீர்மானம் அனுப்பி இருக் கிறாராம். அதில் சாரதா சட்டத்தில் இருந்து முஸ்லீம்களையும், பார்ப்பனர் களையும் பிரித்து விட வேண்டுமென்று குறிப்பிட்டிருக்கின்றதாம்.  ஆகவே “சீர்திருத்தங்களுக்கு சர்க்காரார் முட்டுக்கட்டையாக இருக்கிறார்கள்” என்று சொல்லும் தேசீயவாதிகள் இதற்கு என்ன பதில் சொல்லுவார்களோ தெரியவில்லை. இது ஒரு புறமிருக்கட்டும். இத்திருத்தத்திற்கு சர்க்காரார் இணங்கி னால்தான் அது நிறைவேறக்கூடுமென்று தெரிய வருவதால் சர்க்காரார் இதற்கு இணங்கமாட்டார்களென்பதோடு நடுநிலைமையும் வகிக்காமல் எதிர்த்துத் தோற்கடிப்பார்களென்றே நம்புகின்றோம். ஏனெனில், இந்திய தேசீயவாதிகளால் மகாத்மா என்றும், சத்திய கீர்த்தி என்றும் சொல்லப்படும் லார்ட் இர்வினிடம் முஸ்லீம்களும், பார்ப்பனர்களும் இது விஷயமாய் தூது சென்ற காலத்தில் லார்ட் இர்வின் அவர்கள், “சாரதா சட்டம் என்பது மதப்...

மலாய் நாட்டில் சுயமரியாதைச் சங்கம் உண்மைத் தர்மம் 0

மலாய் நாட்டில் சுயமரியாதைச் சங்கம் உண்மைத் தர்மம்

  மலாய் நாட்டின் முக்கிய பட்டணமாகிய சிங்கப்பூரில் “தமிழர் சீர் திருத்தக்காரர்கள் சங்கம்” என்பதாக ஒரு சுயமரியாதைச் சங்கம் ஏற்படுத் தப் பட்டிருப்பதைப் பற்றிய விவரம் மற்றொரு பக்கம் பிரசுரித்திருக்கின் றோம். இதற்காகக் கூட்டப்பட்டுள்ள முதல் கூட்டத்திற்கு அவ்வூர் பிரமுகர் கள் சுமார் 150 பேர்களுக்கு மேலாகவே கூட்டினதும், தலைமை வகித்த திரு. ராமசாமியார் பேசிய தலைமைப் பேருரைப் பேச்சுகளும் மிகவும் குறிப் பிடத்தக்கதாகும். அதாவது சங்கத்தின் நோக்கங்களைக் குறிப்பிடுகையில், மக்கள் பிறவியில் உயர்வு தாழ்வு கற்பிக்கும் வருணாச்சிரம தர்மத் தையும், தீண்டாமையையும் ஒழித்தல். பெண்களுக்கு உரிமை அளித்தல். அறிவு விருத்திக்கான கல்வியைப் போதித்தல். சிக்கன முறையைக் கைக் கொள்ளுதல். அறிவிற்குப் பொருத்தமற்ற பழக்க வழக்கங்களை நீக்குதல். என்று சொன்னதிலிருந்து அவைகள் சுயமரியாதைக் கொள்கைகளை எவ் வளவு நுட்பமாக உணர்த்திச் சொல்லப்பட்ட உரைகள் என்பது யாவருக் கும் எளிதில் விளங்கும். தவிரவும் “சிங்கப்பூரில் நிறுவப்பட்ட சங்கங்கள் அனேகம் உடனுக் குடன் மறைந்து...

ஈரோடு அர்பன் பாங்குத் தேர்தல் 0

ஈரோடு அர்பன் பாங்குத் தேர்தல்

ஈரோடு அர்பன் பாங்கி டைரக்டர்கள் (நிர்வாகஸ்தர்கள்) தேர்தல் இம் மாதம் 22-ந்தேதி நடைபெற்றது. அதில் இப் பாங்கி ஏற்பட்டு இதுவரை இல்லாத அளவு ஊக்கமும் பரபரப்பும் காணப்பட்டது. கடைசியாக 9 பார்ப்பனரல்லாதாரும் 2 பார்ப்பனரும் தெரிந்தெடுக் கப்பட்டார்கள். பார்ப்பனக்கோட்டையாயும் அவர்களது உண்மை சிஷ்யர் களுக்குத் தவிர மற்றவர்களுக்கு மழைக்குக்கூடத் தங்குவதற்கு இடமில்லா திருந்த இந்த அர்பன்பாங்கி பார்ப்பனரல்லாதார் இரண்டொருவரின் தியாகத்தின் காரணமாய் அவர்கள் வெளிப்படையாய் “கெட்டபேர்” வாங்கத் துணிந்ததின் காரணமாய் 9 பார்ப்பனரும் இரண்டு பார்ப்பனரல்லா தவருமாய் இருந்த ஸ்தாபனம் நாளாவட்டத்தில் சுயமரியாதை உணர்ச்சி யேற்பட்டு இப்போது 11-பேர்களில் 9-பேர் பார்ப்பனரல்லாதார் டைரக்டர் களாய் வர முடிந்தது. இதுவும் சரியான தேர்தல் என்று நம்மால் சொல்லிவிட முடியாது. தீண்டாதார் வகுப்புக்கு ஒரு டைரக்டரும் பெண்கள் வகுப்புக்கு குறைந்தபக்ஷம் ஒரு டைரக்டரும் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தால் அது உண்மையான பார்ப்பனரல்லாதார் உணர்ச்சியென்றே சொல்லலாம். அன்றி யும் இப்போது தெரிந்தெடுக்கப்பட்ட 11 பேர்களிலும் வக்கீல்களும் பாங்கர் களுமே ...

சட்டசபையில் திரு.பாண்டியன் தீர்மானம் 0

சட்டசபையில் திரு.பாண்டியன் தீர்மானம்

உயர்திரு. று.ஞ.ஹ சௌந்திரபாண்டியன், எம்.எல்.சி. அவர்கள் “இராமனாதபுரம் ஜில்லா தேவகோட்டை முதலிய சுற்றுப்பக்கங்களிலுள்ள ஆதி திராவிடர்கள் என்பவர்களை அங்குள்ள உயர்ந்த ஜாதியார் களென்பவர்கள் மிகவும் கொடுமைப்படுத்தி வருவதால் அரசாங்கத்தார். அதை விசாரித்து உண்மை அறிந்து அதன்மேல் தக்க நடவடிக்கை எடுத்துக்கொள்ள ஒரு கமிட்டி நியமிக்க வேண்டு” மென்று சென்னை சட்டசபையில் ஒரு தீர்மானம் கொண்டு வந்தார். அதை அரசாங்க இந்திய அங்கத்தினரும் பார்ப்பன சட்டசபை அங்கத்தினர்களும் எதிர்த்தும், மந்திரிகள் விரோதமாய் ஓட்டுக் கொடுத்தும் தீர்மானம் நிறைவேறியது குறித்து மகிழ்வெய்துகின்றோம். ஆயினும் சர்க்காரார் அத்தீர்மானத்தை மதித்து ஒரு சரியான கமிட்டி நியமிக்கக் கவலையெடுத்து கொள்வார்களோ, அல்லது தீர்மானத்தை குப்பைத் தொட்டியில் போட்டு விடுவார்களோ என்பது சந்தேகமேயாகும். எனினும் திரு.பாண்டியன் அவர்களின் இம் முயற்சி போற்றத்தக்கதேயாகும். குடி அரசு – செய்திக் குறிப்பு – 23.08.1931

கோடைக்கானல் காஸ்மாபாலிட்டன்     வாசகசாலைத் திறப்பு விழா 0

கோடைக்கானல் காஸ்மாபாலிட்டன்     வாசகசாலைத் திறப்பு விழா

  பெருமை மிக்கத் தலைவர் அவர்களே! சகோதரிகளே!! சகோதரர் களே!!! இந்த சிறிய ஊரில் இவ்வளவு பெரிய கூட்டம் கூடியிருப்பது எனக்கு அதிசயமாயிருக்கிறது. நீங்கள் செய்த வரவேற்பு ஆடம்பரங்களுக்கும் நான் சிறிதும் தகுதியில்லை என்பதை யான் உணர்கிறேன். ஆனாலும் அவை களையெல்லாம் எனது கொள்கைக்கு நீங்கள் அளிக்கும் ஒரு நற்சாட்சிப் பத்திரமென்றே கருதுகிறேன். நீங்கள் இங்கு ஆரம்பித்திருக்கும் வாசக சாலையானது மிகவும் பாராட்டக்கூடியதாகும். நமது நாட்டில் கோயில் கட்டுவதற்கும், கும்பாபிஷேகம் செய்வதற்கும், பூஜை, உற்சவம் நடத்து வதற்கும் நாசமாகிற பணங்களும், இடங்களும், நேரங்களும் இம்மாதிரி வாசக சாலைகளுக்கு உபயோகப்படுத்தப் பட்டிருக்குமானால் மக்களுடைய அறிவு கல்வி இன்றைக்கிருப்பதைப் போல் நூறுமடங்கு அதிகமாக வளர்ச்சி பெற்று மக்கள் சுயமரியாதையோடு வாழ முடிந்திருக்கும். நமது நாட்டில் வாசகசாலையின் பெருமை மக்கள் அறியாமலிருப் பதற்கு இரண்டு காரணம். ஒன்று வாசகசாலையின் அவசியம் மக்களுக்கு இருக்கும்படியான அளவு கல்வியில்லாமலிருப்பது. மற்றொன்று மக்க ளுக்கு பகுத்தறிவில்லாமலிருப்பது. இந்த இரண்டும் வாசகசாலையை...

“வகுப்புவாதம்” 0

“வகுப்புவாதம்”

இன்றைய அரசியலில்-தேசீயத்தில் ஒரு மனிதன் அரசியல் ஞானி யாகவும், தீவிர தேசீயவாதியாகவும் ஆகவேண்டுமானால் அவன் எவ்வளவு அயோக்கியனாகவும், எவ்வளவு சுயநலக்காரனாகவும், சமயத்திற்குத் தகுந்தபடி குட்டிக்கரணம் போடுபவனாகவும் இருந்தாலும் ஒரு வார்த்தையை மாத்திரம் சொல்லிவிட்டால் போதும். அதாவது, “வகுப்புவாதம் கூடாது” என்றால், உடனே அவனுக்கு வேண்டிய விளம்பரங்களும் தேசாபிமானி-தேசபக்தன் என்கின்ற பட்டங்களும், அரசியல் ஞானி-தீவிர தேசீயவாதி என்கின்ற நாமகரணங்களும் ஏற்பட்டுவிடும். நமது பார்ப்பனர்களும் அப்படிப்பட்டவனை ஊரூராய் இழுத்துக் கொண்டு போய் உபசாரப் பத்திரங்கள் வாங்கிக்கொடுத்து, கூட்டம் கூட்டு வித்து, மாலைகள் போட்டு மறியாதை செய்து புகழ்மாலை பாடி அனுப்பி விடுவார்கள். மற்றபடி ஒருவன் எவ்வளவு யோக்கியனாயிருந்தாலும் நாணையக் காரனாகவும் உண்மையில் தேசத்திற்காகவே மக்களுக்காகவே பாடுபடு கின்றவனாகவும் பல தியாகங்கள் செய்து கஷ்ட நஷ்டப்பட்டவனாகவும் இருந்தாலும், “வகுப்பின் பேரால் கொடுமைப்படுத்தப்பட்டு மக்களோடு, மக்களாய் சேர்க்கப்படாமல் சட்டத்தின் படியும் சமூகப்பழக்க வழக்கத்தின் படியும் பிறித்து வைத்திருக்கும் மக்களுக்கு மற்ற மக்களுக்குண்டான வகுப்புரிமை கொடுக்கவேண்டமா”  என்று கேட்டுவிட்டால்...

சட்ட மறுப்பு இயக்கம் 0

சட்ட மறுப்பு இயக்கம்

  தலைவர்களுக்குள் எங்கும் ராஜிப் பேச்சும் ராஜிக் கோரிக்கையுமே முழங்குகின்றது. ஆனால் சர்க்கார் ராஜிக்கு இடம் இல்லை என்று தீர்மானமாகச் சொல்லிவிட்டார்கள் குறைந்த அளவு ராஜி நிபந்தனையாக, சிறையிலிருப்பவர்களை விடுதலை செய்தால் சட்ட மறுப்பு இயக்கத்தை நிறுத்துவதாக திரு. மாள வியா சொல்ல ஆரம்பித்துவிட்டார். தேசீயப் பத்திரிக்கைகளும் அதை வலியுறுத்தி ராஜி! ராஜி!! என்று கதர ஆரம்பித்து விட்டன. எனவே தோல்வி கண்ணுக்குத் தெரிய ஆரம் பித்து விட்டது. ஜோசியப் புரட்டினாலாவது அதாவது திரு. காந்தி நாளைக்கு விடுதலை, நாளன்னைக்கு விடுதலை என்று எழுதி சிறு பிள்ளைகளையும் பாமர மக்களையும் ஏமாற்றி சிறைக்கனுப்பிக் கணக்குக் கூட்டி வந்ததும் கூட இப்போது சில ஜோசியர்களுக்கும் 144 போட்டுவிட்டதால் அவர்களும் அடங்கும்படியாய் விட்டது. மற்றபடி ஜவுளிக்கடை, கள்ளுக்கடை, பள்ளிக் கூட மரியல்களோ வென்றால் “தொண்டர்கள் எண்ணிக்கை போதாததால்” நிறுத்த வேண்டிதாய் விட்டது. வேதாரண்யத்திற்கு யாத்திரைக்குப் போகும் ஜனங்கள் பெயர்களை கூட பத்திரிக்கைகளுக்கு வெளிப்படுத்த முடியாமல்...

சாரதா சட்டம் 0

சாரதா சட்டம்

சாரதா சட்டம் பிறந்து அமுலுக்கு வந்து 3µ ஆகி 4வது µ முடிவதற்குள்ளாகவே அதற்குப் பாலாரிஷ்டம் வந்து விட்டது. என்னவெனில் ராஜாங்க சபையில் அச்சட்டத்தின் ஜீவ நாடியை அருத்தெரியும் மாதிரியில் அதாவது பெண்களுக்கு 14 வயதுக்குள்ளும், ஆண்களுக்கு 18 வயதிற்குள்ளும் விவாகம் செய்ய மனச்சாக்ஷியோ குடும்பநிலையோ அவசியப்பட்டால் அந்தபடி செய்ய சட்டத்தில் இடம் கொடுக்க வேண்டும் என்று ஒரு திருத்த மசோதா கொண்டுவரப்பட்டு அதற்கு சர்க்கார் சலுகை காட்டி அம்மசோதாவை மாகாண கவர்மெண்டுக ளுடையவும் பொதுஜனங்களுடையவும் அபிப்பிராயம் தெரிவதற்காக வெளியில் விநியோகிக்க வேண்டும் என்று சர்க்காராரே ஒரு திருத்தம் கொண்டு வந்து நிறைவேற்றி வைத்திருக்கின்றார்கள். இந்த பிரேரேபனை சர்க்காரார் கொண்டுவந்ததால் அவர்கள் அதற்கு அனுகூலமாய் ஓட்டுக் கொடுத்து நிறைவேற்றிக் கொண்டதில் அதிசய மொன்றுமில்லை. ஆனால் இப்படிப்பட்ட திருத்தம் கொண்டுவர வேண்டிய அவசியம் சர்க்காருக்கு என்ன ஏற்பட்டது என்பதுதான் நாம் இப்போது யோசிக்க வேண்டியதாகும். ஏதோ ஒரு சாக்கைச் சொல்லி இந்த சந்தர்ப்பத்திலிருந்து...

ஏன் பார்ப்பனர் கூடாது? 0

ஏன் பார்ப்பனர் கூடாது?

  பார்ப்பனரல்லாதார் ஸ்தாபனத்தில் பார்ப்பனர்களை ஏன் சேர்க்கக் கூடாது என்னும் விஷயம் தஞ்சாவூர் ஜில்லா பாபநாசம் தாலூகா போர்டு தேர்தலைப் பற்றிய இரகசியத்தை தெரிந்தால் அதன் உண்மை ஒருவாறு விளங்கும். பாபநாசம் தாலூகா போர்டுக்கு சுமார் 15 அங்கத்தினர்கள் உண்டு. இதில் பார்ப்பனர்கள் 3 பேர் பார்ப்பனரல்லாதார்  12 பேர்கள்.  இந்தப் பன்னி ரண்டு பேர்களில் 6 பேர் திரு. பன்னீர்செல்வம் கட்சியைச் சேர்ந்தவர்கள். மற்ற ஆறு பேர் திரு. வீரய்யா வாண்டையாரைச் சேர்ந்தவர்கள். இதில் எந்தக் கட்சி ஜெயிக்க வேண்டுமானாலும் பார்ப்பனர் தயவில்லாமல் முடியாத நிலைமையாகிவிட்டது. ஆக திரு. பன்னீர் செல்வம் கட்சியார் எப்படியாவது திரு. வீரய்ய வாண்டையார் ஜில்லா போர்டுக்குள் நுழை யாமல் இருந்தால் போதும் என்று கருதி பார்ப்பனர் இடம் ராஜி பேசப் புறப் பட்டு மூன்று பார்ப்பனரில் ஒருவருக்கு தாலூகா போர்டு தலைமை ஸ்தானம் கொடுப்பதாகவும் அதற்கு பதிலாக தங்கள் கட்சியாருக்கே இரண்டு ஜில்லா போர்டு...

விருதுநகர் மகாநாடு  ஐஐ                                                                    மதமொழிப்புத் தீர்மானம்     0

விருதுநகர் மகாநாடு  ஐஐ                                                                   மதமொழிப்புத் தீர்மானம்    

விருதுநகரில் கூடிய மூன்றாவது சுயமரியாதை மகாநாட்டு நடவடிக் கைகள் விஷயமாகவும், மகாநாடுகளின் வரவேற்புத் தலைவர்கள், தலைவர் கள் ஆகியவர்கள் உபன்யாசங்களைப் பற்றியும் சென்ற வாரம் எடுத்து எழுதி யிருந்தோம். மற்றும் அங்கு நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களைப் பற்றி மறு முறை எழுதுவதாகவும் குறிப்பிட்டிருந்தோம். ஆகவே அங்கு நிறை வேற்றப்பட்ட சில தீர்மானங்களைப்பற்றி இதில் ஆராய்வோம். “மனிதத் தன்மையைத் தடைப்படுத்துவதற்கு மதங்களின் பேரால் உள்ள பழக்க வழக்கங்கள் காரணமாயிருப்பதாலும், மதங்கள் ஒழியாமல் சகோதரத்தன்மை வளராதாதலினாலும் எல்லா மதங்களும் ஒழிந்து போக வேண்டுமென்று இம்மகாநாடு தீர்மானிக்கின்றது.” என்பது முதல் தீர்மான மாகும். இத்தீர்மானமானது இந்தியாவில் உள்ள தேசீய வாதிகள் என்பவர்கள் யாருக்குமே விரோதமானதாகும் என்பதோடு, தேசீயத் தலைவர்களுக்கும் தேசீயத்தொண்டர்களுக்கும் மிகமிக விரோதமானதாகும். மற்றும், “இந்தியத் தொழிலாளர்கள் தலைவர்களான”, திரு. கிரி திரு. சிவராவ் போன்றாருக்கும், சமதர்மத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கின்ற “நவஜவான் பாரத சபை வீரர்கள்” என்று சொல்லிக் கொள்ளும் திரு.போஸ் கூட்டத்தாருக்கும், இந்தியாவில் பூரண சுயேச்சையையும்,...

சட்டசபை தேர்தல் 0

சட்டசபை தேர்தல்

  சட்டசபை தேர்தல்கள் வேலைகள் துவக்கமாகிவிட்டது. அபேக்ஷ கர்கள் ஆகஸ்ட் முதல் தேதியில் நியமனச் சீட்டுகள் தாக்கல் செய்தாக வேண்டும். செப்டம்பர் 9 தேதியில் தேர்தல் (எலக்ஷன்) ஆனதால் நியமனச் சீட்டு தாக்கல் செய்தவுடன் பிரசாரம் துவக்க வேண்டும். ஆதலால் அபேக்ஷ கர்களாய் நிற்பவர்களுக்கு இன்னம் சுமார் ஒன்னரை மாதங்களுக்கு ஓய்வு உரக்கம் இருக்காது. அது மாத்திரமல்லாமல் அவர்களிடம் நாணயமும் இருக்க முடியாது. அதோடு அவர்களுக்கு தங்கள் மனதிற்கும் வாக்குக்கும் செய்கைக்கும் சிறிதும் சம்மந்தமும் இருக்க முடியாது. யார் யாரிடம் எப்படி எப்படி நடந்து எந்த எந்த சமயத்திற்கு எதை எதைச் செய்தால் – சொன்னால் ஓட்டுக் கிடைக்குமோ அந்தபடியெல்லாம் நடந்தும் பேசியும் ஓட்டுச் சம்பாதிக்க வேண்டியதே அவர்களது எலக்ஷன் தர்மமாகும். ஏனென்றால் ஓட்டர்கள் பெரிதும் 100-க்கு 90 பேர்கள் மூடர்கள் ஆன தாலும், எஞ்சியுள்ள 100-க்கு 10ல் 7 பேர்கள் சுயநலக்காரர்கள் ஆனதாலும் மீதி 3 பேர்கள் தங்க ளால்...