தோழர் காந்தியவர்கள் அரசியலில் தலையிட்டு தலைமை °தா னத்தை அடைந்ததற்கு முக்கிய காரணம் ஒருபுறம் அவர் போட்டுக்கொண்ட மத சம்மந்தமான வேஷமும், கடவுள் சம்மந்தமான பேச்சும் மற்றும் சத்தி யம், அகிம்சை, சத்தியாக்கிரகம், ஆத்ம சுத்தம், ஆத்ம சக்தி, பரித்தியாகம், தவம் முதலிய வார்த்தைகளும், மற்றொரு புறம் அவரது சிஷ்யர்கள் அரசிய லின் பேராலும், தேசீயத்தின் பேராலும், தங்கள் வாழ்நாளைக் கழிக்க ஏற்பாடு செய்துகொண்ட தொண்டர்கள், தேசீய வாதிகள், பத்திராதிபர்கள் ஆகிய கூட்டத்தார்கள் காந்தியாரைப்பற்றி அவர் ஒரு ரிஷி என்றும், முனிவர் என்றும், கிறி°து என்றும், நபி என்றும் மகாத்மா என்றும் விஷ்ணுவின் அவதாரமென்றும், சொல்லி பிரசாரம் செய்ததும், இனி ஒருபுறம் காந்தியைக் கடவுளாகவும், விஷ்ணுவாகவும் மற்றும் பலவிதமாகவும் சித்திரங்கள் எழுதி படம் போட்டு விளம்பரம் செய்ததும், மற்றும் லௌகீகத்திலும், வைதீகத் திலும் விளம்பரம் பெறவும் சுயகாரிய சித்தி பெறவும் ஆசைப்பட்ட பணக் காரர்களும், படித்தவர்களும் முறையே லக்ஷக்கணக்காகத் திரவிய சகாயமும்...