Author: admin

மற்றுமொரு  தொல்லை

மற்றுமொரு  தொல்லை

  மதங்களின்  பெயரால்  கடவுளின்  பெயரால் ஜாதிகளின்  பெயரால்  மனிதனை  மனிதன்  பிய்த்துப்  பிடுங்கித் தின்னும் இந்நாட்டில்  ஒரு  கவளம்  சோற்றுக்கு  வழியின்றி  எச்சிக்கல்லை  நாயோடு  சண்டை  போட்டுழலும்  ஏழைமக்கள்  பல்லாயிரக்கணக்காயுள்ள  இந்நாட்டில்  மத சம்மந்தமான  தெய்வ  சம்மந்தமான    ஆடம்பரத்  தொல்லைகள் வாரம் தோறும்  மாதம்  தோறும் வந்து கொண்டுள்ளன.  தீபாவளித்  தொல்லை வந்து  இன்னுந்  தீர்ந்த பாடில்லை.  முதலாளிகளின்  கோடியாடைகளின்னும்  மழுங்கவில்லை.  பலகார  பக்ஷணங்களின்  மப்பு  மந்தாரம்   இன்னும்  வெளியாகவில்லை. மயிலாடுவதைக்  கண்டு  கோழியாடிய மாதிரி  தாமும்  அம்முதலாளிகளைப்  பின்பற்றி  இமிடேஷன்  கொண்டாட்டம் நடத்திய  ஏழைகள்,  கூலிகள்,  அடிமைகள்,  பாட்டாளி  மக்கள்  அதனால்  பட்ட  கடன்  தொல்லைகள்  இன்னும்  தீர்ந்தபாடில்லை. இந்த  லக்ஷணத்தில்  “”கார்த்திகை  தீபம்”  என்று  மற்றொரு  தொல்லையும்  சமீபத்தில்  வந்துவிட்டது.  தீபாவளித்  தொல்லையாவது  இருந்த  இடத்திலேயே  மக்களைப்  பிடித்தாட்டி  விட்டு  போய்விட்டது. இதுவோ  ( அண்ணாமலை  தீபமோ)  கடவுளே  ( சிவன்)  ஜோதி  மயமாகக்  கிளம்புகிறாரென்பதாக  அண்ணாமலை ...

இனியாவது  உணருவாரா?

இனியாவது  உணருவாரா?

  காங்கிரஸ்காரர்  என்பவர்கள் 100க்கு  99 முக்காலே  மூன்று  வீசம்  பேரும்  பொய்,  புரட்டு,  சூட்சி,  தந்திரம்,  சமயத்துக்குத்  தகுந்தபடி  சரணம்  போட்டுக் கொள்வது ஆகிய  குணங்களையே  கொள்கையாகவும்,  திட்டமாகவும்  வைத்து அதற்கு  நீதியும்,  சத்தியமும்  என்று  பெயர்கொடுத்து  காங்கிரஸ்  காரியத்தை  அதாவது  தங்களது  வாழ்க்கையை  நடத்தி வருகிறார்கள்  என்கின்ற  அபிப்பிராயமானது  நமக்கு  நாளுக்கு  நாள்  பலப்படுவதுடன்  வளர்ந்து  கொண்டே  வருகிறது. பாமர  மக்களை  ஏமாற்றுவதற்கென்று  செய்யப்படும்  சூட்சிகளை  இன்றைய  காங்கிரஸ்  பிரசாரத்தின்  பயனாய்  மக்கள்  அறிய  முடியாமல்  இருந்தாலும்  கூட  அதற்கும்  ஒரு  அளவோ, மானம்  வெட்கமோ,  மனிதத்  தன்மையோ  இல்லாமல்போய் விட்டதை  வெளியாக்காமல் இருக்க முடியவில்லை. இந்த  5, 6 மாத  காலத்தில்  தமிழ்நாட்டில்  ஸ்தல  ஸ்தாபனங் களுக்குப்  பல  தேர்தல்கள்  நடந்திருக்கின்றன.  அவற்றிற்காக ஒவ்வொரு  ஊரிலும்  பார்ப்பனர்  பார்ப்பனரல்லாதார்  என்றும்,  காங்கிரஸ்காரர்  காங்கிரசுக்காரரல்லாதார்  என்றும்  சொல்லப்பட்ட  பிரிவுகளின் பேரால்  தேர்தல்கள்  நடந்தன.  அவற்றுள்  ஜெயித்தால்  “”காங்கிரசுக்கு  ஜெயம்” ...

“கெடுவான் கேடு நினைப்பான்”  – தோழர் ஈ.வெ.இராமசாமி

“கெடுவான் கேடு நினைப்பான்” – தோழர் ஈ.வெ.இராமசாமி

  கெடுவான் கேடு நினைப்பான் என்பது ஒரு பழமொழியாகும். இது இரு கக்ஷியாரும் ஒப்புக்கொள்ளக்கூடிய பழமொழியாகும். எந்தெந்த இரு கக்ஷியார் என்றால் பஞ்சேந்திரியங்களுக்குப் புலனா வதைத்தவிர வேறு வ°து கிடையாது என்கின்ற முடிவைக்கொண்ட “மெடீ ரியலி°டு” (ஆயவநசயைடளைவ) என்னும் கக்ஷியாரும், பஞ்சேந்திரியங்களுக்கும் எட்டாத ஒரு வ°து இருக்கிறது என்கின்ற முடிவைக்கொண்ட “°பிரிச்சு வலி°ட்டு” (ளுயீசைவைரயடளைவ) என்னும் கக்ஷியாரும் ஆகிய இரு கக்ஷிக்காரர் களும், அதாவது “நா°திகர்களும்” “ஆ°திகர்களும்” ஆகிய இரு கக்ஷிக் காரர்களும் ஒப்புக்கொள்ளக்கூடிய பழமொழியாகும். இந்தப் பழமொழியின் கருத்து என்னவென்று தெரிந்திருக்கின்றோ மென்றால், அன்னியருக்குக் கேடுசெய்யவேண்டுமென்றோ, கேடு உண்டாக வேண்டும்மென்றோ நினைப்பவன் கெட்டுப்போவான் என்பதாகும். இதை ஆ°திகர்கள் எந்த முறையில் ஒப்புக்கொள்ளுகின்றார்கள் என்றால், மனிதர்களில் ஒவ்வொருவருடைய நடவடிக்கைகளையும், எண்ணங்களையும் தனித்தனியே கவனித்து அந்தந்த நடவடிக்கைக்கும், எண்ணத்துக்கும் தகுந்த பலனைக் கொடுப்பதற்கு சர்வ சக்தியும், சர்வ வியாபகமும் உள்ள கடவுள் என்பதாக ஒரு ஜீவனோ ஒரு சக்தியோ உண்டு என்றும், அது...

காந்தியின்  புதிய  திட்டம்

காந்தியின்  புதிய  திட்டம்

  மக்களைக்  காட்டுமிராண்டி  வாழ்க்கைக்குத்   திருப்புதல் தோழர்  காந்தி  காங்கிரசை விட்டு  விலகியது  பொது  ஜனங்களுக்கும்,  தேசத்துக்கும்  பெரியதொரு  லாபகரமான  காரியமானாலும், வேறு  வழியில்  அவர்  செய்யப்  புகுந்திருக்கும்  காரியம்  மனித  சமூகத்துக்கே  மிகவும்  பிற்போக்கான  காரியமே  ஆகும். எப்படி  எனில்  தனது  கொள்கையில்  காங்கிரசில்  இருப்பவர்களுக்கு  நம்பிக்கையில்லை  என்பது  ஒரு  புறமிருக்க,  தான்  (காந்தியார்)  இனி  செய்யப்போகும்  காரியங்களை  அவர்கள்  தடை செய்யக்கூடும்  என்கின்ற  எண்ணத்தின் மீதே  விலகினாரானாலும்  இனி  அவர்  விலகிச் செய்யப் போகும்  காரியம்  என்பது பெயர் மாத்திரத்தில்  காதுக்கு  இனிமையானதாக  இருக்கின்றதே  ஒழிய,  காரியத்தில்  முழு  மோசமானதென்றே  சொல்ல வேண்டி இருக்கிறது. அதாவது,  கிராம  புனருத்தாரணம்  என்றும்,  கிராம  கைத்தொழில்  சங்கமென்றும் சொல்லிக் கொண்டு  பணம்  வசூல்  செய்ய ஆரம்பித்து  விட்டார்.  டில்லியில் ஏதோ  ஒரு கோடீஸ்வரர்  20  லட்சம்  ரூபாய்  கொடுத்ததாக  பத்திரிகைகளில் சேதி  வெளியாய்  இருக்கின்றது. ஆனால்  காந்தியார்  அதை  மறுக்கிறார்  என்றாலும். ...

சென்னை  பச்சையப்பன்  மண்டபத்தில்   ராமசாமியின்  முழக்கம்

சென்னை  பச்சையப்பன்  மண்டபத்தில்  ராமசாமியின்  முழக்கம்

  அ. ராமசாமி  முதலியாருக்கு  ஆதரவு “”இன்று  தோழர்  ஷண்முகம் இக்கூட்டத்திற்கு  வந்து  பேச  வேண்டும்  என்று  குறிப்பிட்டிருந்தது. ஆனால்  அவருக்குத் தேக  அசௌக்கியமேற்பட்டிருப்பதை  முன்னிட்டு அவரால்  வரமுடியவில்லை.   நமது  தேர்தல்  விஷயமாக  கவலைப்பட  வேண்டாமென்று  பலர்  பலவிதமாக  பத்திரிகைகளில்  எழுதி  வருவதை நம்ப  வேண்டாமென்றும்,  தாம்  வெற்றி  பெறுவது  நிச்சயமென்று  அவர்  உங்களுக்குத்  தெரிவிக்கும்படி  என்னிடம்  சொன்னார்.  (பலத்த  கரகோஷம்) இன்று  தொண்டர்களைக் கூட்டி  அவர்கள்  தேர்தலில்  எப்படி  நடந்து கொள்வதென்பது  பற்றி  அறிவுறுத்துவதே  இக்கூட்டத்தின்  நோக்கமாகும்.  ஆனால் இப் பெரிய  கூட்டத்தில்  அது  சாத்தியமல்ல வாகையால்  தொண்டர்களாகச்  சேர  விரும்புவோரெல்லாம் ஞாயிற்றுக்  கிழமை  மாலை  தியாகராய  மெமோரியல்  ஹாலுக்கு  வந்தால்  அவர்கள்  நடந்து கொள்ளவேண்டிய  முறையையும்  இதர  விவரங்களையும்  தெரிவிப்போம். தேர்தல்  பிரசாரப்  போக்கு தோழர் ராமசாமி  முதலியார்  தேர்தல்  விஷயத்தில் மிக்க  ஊக்கமுள்ள  ஏராளமான  வாலிபர்கள்  இங்கே  கூடியிருப்பது  நல்ல  அறிகுறியாகும்.  தேர்தல்  பிரசாரத்தின்  போக்கு   உங்களுக்கு ...

அகில கூட்டுறவாளர்கள் தினம்

அகில கூட்டுறவாளர்கள் தினம்

ரஷ்யாவின் கூட்டுறவு வாழ்க்கை விபரங்கள் ரஷியக் கூட்டுறவு முறை தலைவரவர்களே! தோழர்களே!! எனக்கு இன்று பேச சந்தர்ப்பம் கொடுத்து எனது அபிப்பிராயங்களை எடுத்துச்சொல்ல அனுமதி கொடுத்த தோழர் கணபதி ஐயர் அவர்களுக்கும், தலைவர் அவர்களுக்கும் எனது நன்றியறிதலை முதலில் தெரிவித்துக்கொள்கிறேன். நான் கடைசியாக பேசவேண்டியவனாக இருக்குமென்று கருதினேன். ஆனால் நான் முதலி லேயே பேச ஏற்பட்டுவிட்டது. ஆனபோதிலும் எனது அபிப்பிராயங்களை சொல்லிவிடுகிறேன். நான் (கோவாப்ரேடிவ்) கூட்டுறவு சங்கங்கள் என்ற விஷயத்தில் ஆதியில் கொஞ்சம் அக்கரை கொண்டவனாய் இருந்தவன். முதல் முதலாக நம்முடைய சென்னை ரிஜி°ட்ரார் தோழர் ராமச்சந்திரராவும், அதுசமயம் டிப்டி கலைக்டராக இருந்த தோழர் நாராயணசாமி அவர்களும் இங்கு கோவாப்ரேடிவ் °தாபனம் ஏற்படுத்த முதல் முதல் என்னிடமே வந்தார் கள். எங்கள் வீட்டில்தான் கூட்டம் கூட்டப்பட்டது. பாங்கு பு°தகத்தைப் பார்த்தாலும் நான்தான் முதல் பங்குக்காரனாக இருப்பது தெரியவரும். அதற்காகப் பெரிதும் நானும் அந்தக் காலங்களில் உழைத்திருக்கிறேன். என்றாலும் இன்றைய நிலைமையானது நான்...

சுயமரியாதை  இயக்கமும்    ஜஸ்டிஸ் கக்ஷியும்

சுயமரியாதை  இயக்கமும்   ஜஸ்டிஸ் கக்ஷியும்

  சுயமரியாதை  இயக்கம்  ஆரம்பித்த கால  முதல்கொண்டு  பார்ப்பனரல்லாதாரின்  சுயமரியாதைக்காக  உழைத்து  வருவதும்  ஜஸ்டிஸ்  கக்ஷிக்கு  உதவி  புரிந்து  வருவதும்,  ஜஸ்டிஸ் கக்ஷிப்  பிரமுகர்களுடைய  ஆதரவு  பெற்று  வந்ததுமான  காரியம்  எதுவும்  சுயமரியாதை  இயக்கத்திலுள்ள  எவரும்  அறியாததல்ல.   ஜஸ்டிஸ்  கக்ஷியானது  சென்ற  தேர்தலில்  நின்ற  காலத்தில்  சுயமரியாதை இயக்கம்  அதற்கு  உதவி  புரிந்து  வந்திருக்கிறது. செங்கல்பட்டில்  கூடின  சுயமரியாதை  மாகாண  கான்பரன்ஸ்  என்பது  முழுதும்  ஜஸ்டிஸ்  கக்ஷி  பிரமுகர் ஆதரவிலும், பிரசன்னத்திலும்  நடந்ததும்,  மற்றும்  ஜஸ்டிஸ்  கக்ஷியைச்  சேர்ந்த  இளைஞர்,  முதியோர்  ஆகியவர்கள்  பெரிதும்  சுயமரியாதை  இயக்கத்தில் இருந்து  வந்ததும்  சுயமரியாதை  இயக்கத்திலுள்ள  முதியோர்,  இளைஞர்  ஆகியவர்கள்  பெரிதும்  இன்னும்  ஜஸ்டிஸ்  கக்ஷியில்  இருந்து  வருவதும்  ஒருவரும்  அறியாததல்ல. மற்றும்  சுயமரியாதை  இயக்கம்  அதனுடைய சமதர்மக் கொள்கையைக் கூட பார்ப்பனரல்லாத  சமூகம்  சமூகத்துறையில்  சமதர்மம்  அடைய  வேண்டும்  என்பதை  முதன்மையாகக்  கொண்டது  என்பதை  அநேக  சுயமரியாதைக்காரர்  ஒத்துக்கொண்டும்,  அதை  அமுலில்  நடத்த ...

சர்.  ஷண்முகம்  வெற்றி

சர்.  ஷண்முகம்  வெற்றி

  தோழர்  சர். ஆர்.கே.  ஷண்முகம்  தேர்தல்  விஷயத்தில்  காங்கிரஸ்காரர்கள்  என்பவர்களும்,  காங்கிரஸ்  பத்திரிகைகள்  என்பவைகளும்  மனதறிந்த  பொய்யை  தைரியமாய்  பேசியும்,  எழுதியும்  வருவதானது  காங்கிரசின்  யோக்கியதையையும்  அதிலுள்ளவர்களின்  நாணையத்தையும்  தெரிந்துகொள்ள  ஒரு  சாதனமாகும். பாக்கி  இருக்கும்  தேர்தல்களில்  தங்களுக்கு  தோல்வி  ஏற்படாமல்  இருப்பதற்காகச்  சில  பொய்கள்  சொல்லலாம்  என்பது  ஒரு  அளவுக்கு  அனுமதிக்கப்பட்டதானாலும்  சத்தியமும்,  நீதியும்  அடிப்படையாகக்  கொண்ட  காங்கிரஸ்  என்பதைச்  சேர்ந்தவர்கள்  என்று  சொல்லிக்  கொள்ளும்  ஜனங்கள்  அந்த  ஒரு  அளவையும்  தாண்டி  மனதறிந்த  பொய்யைப்  பரப்ப  முயற்சிப்பது  என்பது  மிகவும்  வெறுக்கத்  தகுந்த  காரியமேயாகும். நிருபர்கள்  என்கின்ற  பெயரால்  எதையும்  எழுதிக்  கொள்வதற்கு  பத்திரிகை  உலகில்  பழக்கம்  இருந்து  வருகின்றது  என்றாலும்  ஒரு  வாரத்தில்  பொய்யாகப்  போகும்  விஷயங்களைக் கூட  எழுதுவது  என்பது  சீக்கிரத்தில்  பொது  ஜனங்களிடம்  மதிப்பை  இழப்பதற்குத்  தான்  பயன்படுமே  தவிர  காரிய  சித்திக்கு  அனுகூலமாகாதென்றே  சொல்லுவோம். கடசித்  தடவை  நடந்த  சென்னை  சட்டசபைத் ...

எது துவேஷம்?

எது துவேஷம்?

நவம்பர் 1-11-33ந்தேதி வெளியான சுதேசமித்திரன் பத்திரிகையில் கர்ப்பத்தடை ஆதரிப்புக்கூட்ட நடவடிக்கை வெளியாயிருப்பதில் பார்ப்பனர்கள் பேசியதை விபரமாய் பிரசுரித்துவிட்டு “வரதராஜலு நாயுடு தமிழில் பேசினார்” என்று ஒருவரியில் முடித்து விட்டது. ஆங்கிலத்தில் பேசிய பார்ப்பனர்களின் பேச்சை தமிழில் மொழிபெயர்த்து விரிவாகப் பிரசுரிப்பதும், தமிழில் பேசிய பார்ப்பனரல்லாதார் பேச்சை ஒரே வரியில் தமிழில் பேசினார் என்று பிரசுரித்திருப்பதையும் கவனித்தால் இந்த பார்ப்பன பத்திரிகையின் துவேஷ மனப்பான்மை நன்கு விளங்குகிறதல் லவா? இங்கிலீஷ் பேச்சுகளையெல்லாம் மொழி பெயர்த்து பிரசுரித்த இந்தப் பத்திரிகை தோழர் வரதராஜலுவின் தமிழ் பேச்சை பூராவாகப் போடாத தற்குக் காரணம் என்ன? தமிழ் மொழிமீதுள்ள வெறுப்பா? அல்லது பார்ப் பனரல்லாதார் மீதுள்ள பார்ப்பன துவேஷமா? என்றுதான் கேட்கிறோம். பார்ப்பனப் பத்திரிகைகளை ஆதரிக்கும் தமிழ் வாசகர்கள் இதைச் சிந்தனை செய்வார்களாக. குடி அரசு – செய்திக் குறிப்பு – 05.11.1933      

மீண்டும் பார்ப்பன சூழ்ச்சி

மீண்டும் பார்ப்பன சூழ்ச்சி

தேசீயத்தின் பேராலும், காங்கிரசின் பேராலும், இதுகாறும் சென்னை மாகாண பார்ப்பன அரசியல் வாதிகள் செய்து வந்த சூழ்ச்சிகளையும் புரட்டு களையும் நாம் அப்போதைக்கப்போது வெளிப்படுத்தி வந்திருக்கிறோம். இப்பொழுது தோழர் காந்தி முதலியவர்கள் காங்கிரசுக்கு தகனக்கிரியை செய்து பார்ப்பன தேசீயப் புரட்டுக்கு ஆதரவு இல்லாமல் செய்து விட்டதால். ஒரு புதிய ஏற்பாடு செய்யவேண்டிய அவசியம் பட்டம் பதவிகளை நாடும் காங்கிர° அரசியல் வாதிகளுக்கு ஏற்பட்டு விட்டது. அதற்காகவே தோழர்கள் சத்தியமூர்த்தி, சி.எ°. முத்துரங்க முதலியார், எம்.பக்தவத்சலம் ஆகியோர்களால் “காங்கிர° சுயராஜீயக் கட்சி” என்ற பேருடன் ஒரு புதிய கட்சி பழயபடி சென்னையில் °தாபித்திருப்பதாகத் தெரிகிறது. “அடுத்த தேர்தலிலே சட்டசபை °தாபனங்களையும், °தல °தாபனங்களையும் கைப்பற்ற முயற்சி செய்வதும், வெள்ளை அறிக்கையையும், சமூக தீர்ப்பை யும் எதிர்த்துப் பிரசாரம் செய்வதும், சுயராஜ்யத்துக்காகப் போராடுவதும் இந்தக் கட்சியின் நோக்க” ங்களென்று வெளியிடப்பட்டிருக்கிறது. இதை ஊன்றிக் கவனிக்கும் பொழுது இது மக்களுக்கு இப்பொழுது நன்றாய் தெரிந்து போய்...

விளம்பரப்  பிரசாரம்

விளம்பரப்  பிரசாரம்

  காங்கிரஸ்  திருவிழா  கூடிக்  கலைந்துவிட்டது.  அதன்  கொள்கையினால்  எவ்வித  மாற்றமும்  ஏற்பட்டு  விடவில்லை.  ஜஸ்டிஸ்  கட்சி  மகாநாட்டில்  அதன்  நிர்வாக  விதிகளில்  பார்ப்பனர்களைச்  சேர்க்கலாம்  என்ற  ஒரு  மாற்றம்  செய்யலாமா?  வேண்டாமா?  என்பதே  ஒரு  முக்கிய  பிரச்சினையாய்  இருந்து  அதன்  பேரிலேயே  எல்லா  விவாதமும்  நடந்து  எப்படி  அம்மகாநாடு  முடிந்ததோ  அது  போலவே  காங்கிரசிலும்  அதன்  நிர்வாக  வேலைத்  திட்டத்தில்  அஹிம்சை,  சத்தியம்,  ராட்டினம்,  கதர்  என்பன  போன்ற  பயனற்ற  வார்த்தைகளைப்  பேசுவதிலும்,  இயற்கைக்கு  விரோதமான  அனுபவ  சாத்தியமில்லாத  தத்துவங்களை  வலியுறுத்துவதிலுமே  5,  6  நாள்கள்  செலவழிக்கப்பட்டு  கடைசியாக  பெரும்பான்மையான  ஜனங்களுக்குப்  புரியாத  ஏதோ  சில  தீர்மானங்களுடன்  முடிவு  பெற்றது  என்றுதான்  சொல்ல  வேண்டி யிருக்கிறது. இதற்குப்  பொது  மக்களின்  பணம்  சுமார்  2,  3  லட்ச  ரூபாய்க்கு  மேலாகவே  செலவாகி  இருக்கலாம்.  பதினாயிரக்கணக்கான  மக்களுக்கு  4,  5  நாளாவது  வேலை  கெட்டு  இந்தத்  திருவிழாவில்  காலங்  கடத்தப்பட்டு  இருக்கலாம்....

கர்ப்பத்தடை ஐ

கர்ப்பத்தடை ஐ

கர்ப்பத்தடையைப்பற்றி இந்நாட்டில் சுயமரியாதை இயக்கமும், குடிஅரசுப் பத்திரிகையும் சுமார் 7,8 வருஷங்களுக்கு முன்பிருந்தே மகாநாடுகள் கூட்டி தீர்மானங்கள் மூலமாகவும், பிரசங்கங்கள் மூலமாகவும், வியாசங்கள், தலையங்கங்கள் மூலமாகவும், பொதுஜனங்களுக்கு எடுத்துச் சொல்லிப் பிரசாரம் செய்து வந்திருக்கின்றன. மேல்நாடுகளிலும் கர்ப்பத்தடையைப்பற்றி சுமார் 70, 80 வருஷ மாகப் பிரசாரம் செய்துவரப்படுவதாகவும் தெரியவருகிறது. தோழர் பெசண்டம்மையார் சுமார் 50 வருஷங்களுக்கு முன்பாகவே கர்ப்பத்தடைப் பிரசாரத்தில் கலந்திருந்து பிரசாரம் புரிந்ததாகவும், மற்றும் கர்ப்பத்தடை பிரசாரமானது, சட்டவிரோதமானதல்ல என்று வாதாடி கர்ப்பத் தடை பிரசாரத்துக்கு அரசாங்கத்தை அனுமதிக்கும்படி செய்ததாகவும், அவ் வம்மையார் சரித்திரத்திலிருந்தும் விளங்குகின்றது. இவைகள் மாத்திரமல்லாமல் மேல்நாடுகளில் இன்றும் பல தேசங் களில் தனிப்பட்ட நபர்களாலும், சங்கங்களாலும் கர்ப்பத்தடை பிரசாரங் களும், அது சம்மந்தமான பத்திரிகைகளும், புத்தகங்களும் ஏராளமாய் இருந்துவருகின்றன. இவைகளையெல்லாம்விட மற்றொரு முக்கியமான விஷயம் என்னவென்றால் கர்ப்பத்தடைப் பிரசாரம் செய்ய பல அரசாங் கங்கள் அதற்கென ஒரு இலாக்காவை ஏற்படுத்தி அதன்மூலம் பிரசாரங்கள் செய்தும் வருகின்றன....

சென்னை  பெண்கள்  சங்கத்தின்  அறியாமை

சென்னை  பெண்கள்  சங்கத்தின்  அறியாமை

  சென்னையில்  இந்திய  பெண்கள்  சங்கம்  என்பதாக  ஒரு  சங்கம்  இருக்கின்றது.  அது  சென்னை  செல்வவான்கள்  பெண்களும்,  அதிகாரிகள்  மனைவிகளும்,  வக்கீல்  மனைவிகளும்  பெரும்பான்மையாகக்  கொண்டதாக  ஒரு  சில  ஸ்திரீகளைக்  கொண்டதாக  இருந்து  வருகின்றது. இந்த  நாட்டுப்  பணக்காரர்கள்  ஜமீன்தார்கள்  ஆகியவர்களுக்கு  எப்படி  உண்மையான  விடுதலை  தேவை  இல்லையோ  அதேபோல்  இந்த  பெண்களுக்கும்  உண்மையான  விடுதலை  தேவை  இல்லை  என்பதோடு  தெரிவதற்குக்  கூட  முடியாத  நிலைமையில்  இருந்து  வருகிறார்கள். இந்த  லக்ஷணத்தில்  இவர்கள்  அரசியல்  துறையில்  பிரவேசித்து  தோழர்  சத்தியமூர்த்தியை  ஆதரிக்க  வேண்டுமென்று  ஆசைப்பட்டார்கள்  என்றால்  பெண்கள்  சமூகத்துக்கு  அதைவிட  வெட்கக்  கேடு  வேறு  இல்லை  என்றுதான்  சொல்ல  வேண்டும். தோழர்  சத்தியமூர்த்தி  அவர்கள்  ஆண்களும்  பெண்களும்  சரிசமானமான  சுதந்திரத்துக்கு  அருகதையுடையவர்கள்  என்பதையே  ஒப்புக்கொள்ளுவதில்லை  என்பதோடு  சாஸ்திரங்களிலும்,  புராணங்களிலும் பெண்களுக்குள்ள  இழிவையும்,  தாழ்வையும்  அப்படியே  நிலைநிறுத்தப்  பாடுபடுகின்றவர்  என்பது  யாவரும்  அறிந்ததேயாகும். உதாரணமாக  தேவதாசித்  தொழிலை  ஒழிக்கக்  கொண்டு  வந்த  சட்டத்தை ...

பட்டேல் பட்டுவிட்டார்

பட்டேல் பட்டுவிட்டார்

தோழர் வித்தல்பாய்பட்டேல் அவர்கள் 22-10-33-ந்தேதி ஜினிவா வில் காலமாய்விட்டார் என்ற செய்தியைக்கேட்ட இந்தியமக்கள் மிகுதியும் வருத்தமடைவார்கள். பட்டேல் அவர்கள் அரசியல் உலகத்தில் மிக்க புகழப்பெற்றவர் வாக்குவல்லவர், யாவரும் பிரமிக்கத்தக்கபடி விஷயங்களுக்கு வியாக்கி யானம் செய்யும் கூர்மையான புத்திசாதுரியமுமுள்ளவர். பம்பாய் நகரசபைத் தலைவராகவும்  இந்திய சட்டசபைத் தலைவராகவும் இருந்து அவற்றுள் மிக்க கியாதி பெற்றவர். இந்தியாவில் மாத்திரமல்லாமல், ஐரோப்பா, அமெரிக்கா முதலிய நாடுகளிலும் இந்திய அரசியலின் மூலம் புகழ்பெற்ற வர். எப்படிப்பட்ட அரசியல் வாதியும் பட்டேலை எதிர்ப்பதென்றால் மிகவும் பயப்படுவார்கள். தோழர் காந்தியாருக்கு பட்டேலிடம் எப்பொழுதும் சிறிது பயம் உண்டு. ஒரு காலத்தில் பட்டேலின் துடையின்மீது தன் தலை இருக்கும் போது தனது உயிர் போக நேரிட்டால் அதுவே தனக்கு ஒரு பெரிய பாக்கிய மாகும் என்று தோழர் காந்தி பேசி பட்டேலை புகழ்ந்திருக்கிறார். உப்பு சத்தியாக்கிரகம், சட்டமறுப்பு முதலிய காரியங்கள் பட்டேலுக்கு இஷ்ட மில்லாத காரியங்களாகும். அதனாலேயே அவர் கடைசிகாலத்தில் பெரிதும்...

இந்திய  சட்டசபைத்  தேர்தலில் 

இந்திய  சட்டசபைத்  தேர்தலில் 

  தோழர்  சத்தியமூர்த்தி  அய்யர்  அவர்களுக்கு  சென்னை  ஓட்டர்களின்  பகிரங்கக்  கேள்விகள் தாங்கள் சிறை  சென்ற  “”தியாகத்”தைப்  பற்றி  “ஏ’  வகுப்புக்  கைதியாகப்  போடப்பட  வேண்டுமென்று  கேட்டுக்  கொண்டதும்,  பிறகு அதிலும்  பிறரைவிட  அதிக  வசதிகள்  வேண்டுமென்று  கேட்டு  வாங்கிக்  கொண்டதும்,  பிறகு  ஜஸ்டிஸ்  கட்சியாரைக்  கொண்டு  சிபார்சு  செய்து  ஆஸ்பத்திரிக்கு  வந்ததும்,  பிறகு  அதை  விட்டு  குறித்த  காலத்திற்கு  முந்தி  விடுதலையாவதற்கு  ஜஸ்டிஸ்  கட்சியார்  சிபார்சு  செய்ததுமான  விஷயங்கள்  இருக்கும்போது,  ஜஸ்டிஸ்  கட்சியைத்  தூற்றுவதும்  “தியாகம்’  என்று  சொல்லிக்  கொள்வதும்,  யோக்யமான  செயலாகுமா? பெண்களில் ஒரு  கூட்டத்தாராகிய  தேவதாசிகளை  கோவிலில்  ஆடவிட்டால்தான்  இந்து  மதம்  நிலைக்குமென்று  சொல்லி  பெண்  சமூகத்தை  இழிவுபடுத்திய  தங்கட்கு  பெண்களுடைய  ஓட்டுகளைக்  கேட்க  வெட்கமில்லையா? ஜஸ்டிஸ் கட்சியை  “வகுப்புவாதக்’  கட்சியென்று  கூறும்  தாங்கள்,  உங்களுடைய  இனத்தார்களாகிய  பிராமணர்களின்  வீடுகளில்  100க்கு  99ல்  “”கூணி  டூஞுt  ஞூணிணூ  ஆணூச்டட்டிணண்  ணிணடூதூ”  (“”பிராமணர்களுக்கு  மட்டும்  வாடகைக்கு  விடப்படும்”)  என்று ...

இன்றைய ஆக்ஷி ஏன் ஒழிய வேண்டும்?

இன்றைய ஆக்ஷி ஏன் ஒழிய வேண்டும்?

இந்தியாவில் இன்றைய அரசாங்கமானது ஆட்சி முறையில் எவ்வளவு தூரம் பாமர மக்களுக்கு விரோதமாகவும், பணக்காரர்களுக்கு அனுகூலமாகவும் இருக்கின்றது என்கின்ற விஷயம் ஒருபுறமிருந்தாலும், நிர்வாக முறையானது ஏழைக்குடி மக்களுக்கு மிகவும் கொடுமை விளை விக்கக்கூடியதாகவே இருந்து வருகின்றது. அரசியல் நிர்வாகத்திற்கென்று குடிகளிடம் இருந்து வசூலிக்கப்படும் தொகைகள் 100க்கு 75 பாகம் அக்கிரமமான வழிகளிலேயே-பெரிதும் செல்வவான்களுக்குப் பயன்படும் மாதிரியிலேயே-சிலரை செல்வவான் களாக்குவதற்குமே நடைபெறுகின்றன. பாமர மக்கள்-ஏழை மக்கள் ஆகிய வர்களின் உழைப்பெல்லாம் வரியாகவே சர்க்காருக்கு போய் சேர்ந்து விடு கின்றது. அந்த வரிகள் பெரிதும் சம்பளமாகவே செலவாகி விடுகின்றன. இதன் பயனாய் ஒரு நல்ல ஆட்சியினால் குடிகளுக்கு என்ன விதமான பலன்கள் ஏற்படவேண்டுமோ அப்பலன்களில் 100க்கு 5 பாகம் கூட ஏற்படாமல் இருந்து வருகின்றன. பிரிட்டிஷ் அரசாங்கம் இந்தியாவுக்கு வந்து சுமார் 175 வருஷ கால மாகிய பிறகும் இன்றும் கல்வித் துறையில் 100க்கு 8 பேர்களேதான் நம்மவர் கள் படிக்கத்தெரிந்தவர்களாக இருக்கிறார்கள் என்றால்...

முதல்  மந்திரியார்  சீக்கிரம்  கவனிப்பாரா?

முதல் மந்திரியார் சீக்கிரம் கவனிப்பாரா?

கோயம்புத்தூர்  ஜில்லா  போர்டு  பிரசிடெண்டு  மீது  சுமார்  30  மெம்பர்கள்  சேர்ந்து  “”நிர்வாக  ஊழல்”களைப்  பற்றியும்,  போர்டுக்கு  ஏற்பட்ட  நஷ்டத்தைப்  பற்றியும்  ஒரு  பிராது  தயாரித்து  கையொப்பமிட்டு  சர்க்காருக்கு  அனுப்பிய  விஷயமும்,  மற்றும்  பிரசிடெண்ட்  கனம்  வி.சி.  வெள்ளியங்கிரிக்  கவுண்டர்  மீது நம்பிக்கையில்லாத்  தீர்மானம்  கொண்டுவர  பட்டக்கார    கனவான்கள்  முதலியவர்கள்  முயற்சித்துக்  கொண்டிருந்த  விஷயமும்  நேயர்கள்  அறிந்ததாகும். பிறகு  உடனே  கனம்  பட்டக்காரர்களுக்கும்,  சில  மெம்பர்களுக்கும்,  கனம்  கவுண்டர்  அவர்களுக்கும்  ஒரு  வித  சமாதானம்  ஏற்பட்டு  விட்டதாகவும்,  அதன்  பயனாய்  அப்பிராதில்  கையெழுத்து  செய்திருந்த  கனவான்களில்  ஒரு  சிலர்  தங்கள்  கையெழுத்துக்களை  வித்ட்றா  செய்து கொண்டதாகவும்  தெரிய வருகிறதோடு  சமாதானத்தில்  ஒரு  நிபந்தனை,  கனம்  கவுண்டர்  அவர்கள்  பிரசிடெண்டு  ஸ்தானத்தை  ராஜீனாமா  செய்து  விடுவதாகப்  பெரிய  இடத்தில்  ஒப்புக்  கொண்டிருப்பதாயும்  சொல்லிக்  கொள்ளப்படுகிறது. இதன் உண்மை  எப்படி  இருந்தாலும்  அதைப்பற்றி  பொது  ஜனங்களுக்கு  அக்கரை  இருக்காது.  ஸ்தல  ஸ்தாபன  நிர்வாகங்களில்  கண்ட்றாக்ட்டு ...

கேள்வியும் – பதிலும்  – சித்திரபுத்திரன்

கேள்வியும் – பதிலும் – சித்திரபுத்திரன்

  கேள்வி:- பெண்களுக்கு புருஷர்கள் என்றைக்குச் சுதந்திரம் கொடுப்பார்கள். பதில்:- கற்பு என்கின்ற வார்த்தையும் விபசாரதோஷம் என்கின்ற வார்த்தையும் என்று ஒழிக்கப்படுகின்றதோ அன்றுதான் பெண்கள் முழு விடுதலையடைய முடியும். இன்று பெண்களிடம் புருஷர்கள் முழுவிடுதலையும் பெற்றிருப்ப தற்குக் காரணம் ஆண்கள் தங்களுக்குள் கற்பு என்பதையும், விபசார தோஷம் என்பதையும் அடியோடு ஒழித்துவிட்டதாலேயே சட்டப்படி முழுவிடுத லையும் பெற்று இருக்கிறார்கள். ஆதலால் பெண்கள் விடுதலை பெறவேண்டுமானால் ஆண்களைப் போல் நடக்கவேண்டும். மற்றபடி அப்படிக்கில்லாமல் “புல் என்றாலும் புருஷன், கல் என்றாலும் கணவன்” என்றோ, ஆண்கள் தங்கப்பாத்திரம் அதை யார் தொட்டாலும் கழுவக்கூடவேண்டியதில்லை துடைத்துவிட்டால் போதும்; பெண்கள் மண்பாத்திரம் வேறுயாராவது தொட்டால், கழுவினால் கூட தீட்டுப்போகாது. அதை உடைத்து குப்பைத்தொட்டியில் எறிந்தாக வேண்டும் என்கின்ற முறை இருக்கின்றவரை பெண்களுக்கு விடுதலையோ, சுதந்திரமோ கிடையாது. ஆதலால் பெண்களும் தங்களை மண்சட்டி என்று எண்ணாமல் தாங்கள் தங்கப்பாத்திரம் என்று எண்ணிக்கொள்ள வேண்டும். குடி அரசு – வினா...

வெங்கிட்டரமணா

வெங்கிட்டரமணா

  “”கோவிந்தாஆ  கோஓவிந்தா” “”வெங்கிடாசலபதிக்குத்  தர்மம்  செய்யுங்கள்” மானங்கெட்ட  பிழைப்பு காங்கிரசின்  பேரால்  எலக்ஷன்  நடத்துகின்றவர்கள்  தங்களுடைய  (அதாவது  அபேட்சகர்களாக  நிற்கும்  ஆசாமிகள்  தனிப்பட்ட  முறையில்  தங்களுடைய)  யோக்கியதைகள்  தேசத்தார்கள்  அறிந்திருப்பதால்  தங்களுக்குச்  சொந்தத்தில்  ஓட்டு  கிடைக்காது  என்று  தீர்மானம்  செய்து  கொண்டு  “”காந்திக்கு  ஓட்டுச்  செய்யுங்கள்”  என்று  கேட்டு  மக்களை  ஏமாற்றி  வருவது  ஒரு  புறமிருக்க,  இவ்வேமாற்றுதலை  ஜஸ்டிஸ்  கட்சியார்  வெளியாக்கும்  முறையில்  காந்தியார்  காங்கிரசை  விட்டுப்  போய்  விடுகிறேனென்று  சொல்லுவதையும்  அந்தப்படி  காங்கிரசை  விட்டு  அவர்  வெளியேறுவதற்கு  உண்டான  காரணங்களை  அவர்  எடுத்துச்  சொன்னபடியே  வெளியிடுவதையும்  பார்த்த  காங்கிரஸ்காரர்களும்,  பார்ப்பனப்  பத்திரிக்கைகளும்  அடக்க  முடியாத  ஆத்திரம்  கொண்டு  வாயில்  வந்தபடி  எல்லாம்  இழிதகமையில்  வைகின்றனர்.  இதை நாம்  ஒரு  வெட்கம்  கெட்ட  ஆத்திரம்  என்றும்,  மானங்கெட்ட  பிரசாரம்  என்றும்  தான்  சொல்ல  வேண்டியிருக்கிறது. காந்தியார்  வெட்ட  வெளிச்சமாக  முழு  முட்டாள்களுக்கும்,  புரியும்  மாதிரியில்  தான்  விலகும்  காரணங்களை  விளக்கியிருக்கிறார்....

தோழர்கள் சிங்காரவேலுக்கும் பொன்னம்பலத்துக்கும் சமாதானம்

தோழர்கள் சிங்காரவேலுக்கும் பொன்னம்பலத்துக்கும் சமாதானம்

சென்ற வாரத்திற்கு முந்திய வாரம் தோழர் சிங்காரவேலு அவர்களால் ஒரு வியாசம் எழுதப்பட்டிருந்ததை நேயர்கள் அறிந்திருப்பார்கள். அதற்கு நாம் ஒரு சமாதானம் எழுதியிருக்கவேண்டும். ஆனால் பிறகு பார்த்துக் கொள்ளுவோம் என்று சற்று அசதியாக இருந்துவிட்டோம். இதற்குள் மற்றொரு வியாசம் தோழர் பொன்னம்பலம் அவர்களால் எழுதப்பட்டு இவ்வாரம் மற்றொரு பக்கம் பிரசுரிக்கப்பட்டிருக்கிறது. ஆகவே மேற்கண்ட இரண்டு வியாசத்தைப்பற்றியும் இவ்வாரம் நமத பிப்பிராயத்தை எழுதலாம் என்று கருதி இத்தலையங்கம் எழுதுகிறோம். தோழர் சிங்காரவேலுக்கு தோழர் சிங்காரவேலு அவர்களின் வியாசத்தின் கருத்தைச் சுருக்க மாகக் கூறவேண்டுமானால், “சமதர்மவாதி அல்லாதவர்களையும் சம யோசிதமாய் பேசுபவர்களையும், மேல் பூச்சுக்கு அனுகூலமாய் முகம் துடைக்கப் பேசுகின்றவர்களையும் நம் இயக்கத்தோடு சம்மந்தம் வைத்துக் கொள்ள இடங்கொடுக்கக் கூடாது” என்பதேயாகும். மேலும், “அப்படிப்பட்டவர்கள் நம் மகாநாடுகளில் தலைமை வகிக்கவிட்டு வருகின்றபடியால் கூட்டத்தில் குழப்பமும், மாச்சரியமும், விறோதமும் ஏற்படுகின்றன” என்பதும் அவரது வியாசத்தின் கருத்தாகும். இந்தக் கருத்துக்கள் சற்றேரக்குறைய திருநெல்வேலி மகாநாட்டு நிகழ்ச்சிகளை சரி...

ஏமாற்றுந்  திருவிழா  காங்கிரஸ்  கூத்து

ஏமாற்றுந்  திருவிழா காங்கிரஸ்  கூத்து

    காங்கிரஸ்  கூட்டங்களைப்  பற்றியும்,  அதன்  மகாநாடுகளைப் பற்றியும்  அவையெல்லாம்  ஏமாற்றுத்  திருவிழா  என்று  நாம்  அவ்வப்போது  எழுதி  வந்திருப்பதை  நேயர்கள்  மறந்திருக்க  மாட்டார்கள். அது  போலவே  காங்கிரஸ்  நேயர்கள்  பலருக்கும்  இவ்விஷயம்  இப்போது  வரவர  உண்மையாகி  வந்து காங்கிரசின்  பேரால்  தங்கள்  பிழைப்பை  நிர்த்தாரணம்  செய்து  கொண்டவர்கள்  தவிர,  மற்றபடி  தாங்கள்  சொந்தத்தில்  பாடுபடவும்,  வேறுவழியில்  அரை  வயிற்றுக்காவது  சம்பாதித்துக்  கொள்ள  மார்க்கமிருக்கிறதென்று  தைரியம்  கொள்ளவும்  உறுதியும்  ஊக்கமும்  உடையவர்கள்  பெரும்பாலும்  காங்கிரசிலிருந்து  விலகி வந்து  விட்டதும்,  வந்து  கொண்டிருப்பதும்  எவரும்  அறியாததல்ல.  கடைசியாக  பழம்பெரும்  காங்கிரஸ்வாதி  என்றும்,  காங்கிரசிற்கே  தனது  வாழ்நாள்  முழுவதையும்  ஒப்படைத்த  தியாகி  என்றும்  காங்கிரஸ் காரர்களாலும்,  பார்ப்பனர்களாலும்  சொல்லப்பட்டு  வந்த  தோழர்  மாளவியா  அவர்களும்  கூட  காங்கிரஸ்  கொள்கைகள்  தந்திரமானது  என்னும் காரணத்தால்  காங்கிரசோடு போட்டி  போடத்  துணிந்துவிட்டார். இது  அவ்வளவு  முக்கிய  விஷயமல்லவென்று  சொல்லி விடலாம். என்றாலும்  தோழர்  காந்தியவர்களே  இன்று ...

தேர்தல்  பிரசார  போக்கு

தேர்தல்  பிரசார  போக்கு

தோழர்  சத்தியமூர்த்தி பொய்ப் புகார்களுக்குப்  பதில் தேர்தலில்  போட்டி  அபேட்சகர்கள்  ஒருவரையொருவர்  இகழ்வதும்,  எதிர்  அபேட்சகர் மீது  வாக்காளர்களுக்கு  அவ நம்பிக்கை  ஏற்படும்படி  செய்வதும்  உலகம்  முழுதும் சகஜமாகி விட்டது.  ஆனால்  அவ்விதம்  செய்வதற்கும்  ஓர்  எல்லையுண்டு.  இப்போது  சென்னை  நகர் சம்பந்தப்பட்ட  வரையில்,  காங்கிரஸ்  பெயரைக்  கூறிக்கொண்டு  பிரசாரம்  செய்து  வருகிறார்கள்.  “அபேட்சகராக  நிற்கும்  ஆளை  கவனிக்காதீர்கள்.  மகாத்மா  காந்திக்காக  ஓட்டுப்  போடுங்கள்’  எனக்  கூறுகிறார்கள்.  இது  நாமம்  போட்ட  சோம்பேரிகள்  திருப்பதி  வெங்கிடாசலபதிக்கு  உண்டியல்  பிச்சை  கேட்பது  போலாகும்.  ஆனால்  நான்  அவ்விதம்  எதுவும்  கூற  விரும்பவில்லை.  சென்னை  மாகாணம்  சம்பந்தப்பட்ட  வரையில்  பார்ப்பனர்  அல்லாதார்  ஜாதியை  ஆதாரமாகக்  கொண்டே  தேர்தல்  இயக்கம்  நடந்து  வருகிறது.  நீங்களெல்லோரும்  சென்னை  நகரத்துக்கு  அபேட்சகராக  நிற்கும்  தோழர்  ராமசாமி  முதலியாரின்  அந்தஸ்தையும்,  யோக்கியதாம்சங்களையும்  தோழர்  சத்தியமூர்த்தி  யோக்கியதாம்சத்தையுமே  கவனிக்க  வேண்டும்.  அபேட்சகர்களில்  யார்  செய்வது  சரி,  யார்  செய்வது  தப்பு  என்பதைப் ...

சி.டி. நாயகம்

சி.டி. நாயகம்

தோழர் சி.டி.நாயகம் அவர்கள் கூட்டுறவு (கோவாப்பரேட்டிவ்) உதவி ரிஜி°ட்ராராக இருந்து அந்த இலாக்காவில் உள்ள பார்ப்பன ஆதிக்கத்தை யும் ஆக்ஷிகளையும் அறிந்து ஓரளவுக்காவது அவைகளை அகற்ற எவ்வளவோ அவர் முயற்சித்து வந்தது யாவருக்கும் தெரிந்த விஷயமாகும். இதன் பயனாய் பார்ப்பனர்களாலும் பார்ப்பனக் கூலிகளாலும் அவர் எவ்வளவோ தொல்லைகளைச் சமாளிக்க வேண்டியிருந்ததும் யாவருக்கும் தெரிந்த விஷயமாகும். அப்படிப்பட்ட வீரமும், தீரருமான நாயகம் இப்போது தனது 55-வது வயதில் உத்தியோகத்தைவிட்டு நீங்கி பென்ஷன்பெற்று வாழ்ந்துவரு கிறார். இனி இவரது வாழ்நாள் பெரும்பாலும் பொதுஜன வாழ்விலேயே கழிக்கப் படும் என்பதில் யாருக்கும் ஆnக்ஷபனையிராது. தோழர் நாயகம் அவர்களும் அவரது வாழ்க்கைத் துணையாரும் மக்களும் சுயமரியாதை இயக்க விஷயத்தில் மனப்பூர்வமாய் ஈடுபட்டு உழைத்து வந்ததும் யாவரும் அறிவர். ஆதலால் தோழர் நாயகம் அவர்கள் உத்தியோகத்திலிருந்து விலகி யது சுயமரியாதை இயக்கத்துக்கு ஒரு பெரும் ஆதரவு என்பதைத் தெரி வித்துக் கொள்ளுகிறோம். குடி அரசு – துணைத் தலையங்கம்...

காந்தி ஜயந்தி

காந்தி ஜயந்தி

கிருஷ்ண ஜயந்தி ஒழிந்து 8 நாள்கூட ஆகவில்லை. அதற்குள் காந்தி ஜயந்தி தோன்றிவிட்டது. “தட்டிப்பேச ஆளில்லாவிட்டால் தம்பி சண்டப் பிரசண்டன்” என்பது போல் ஜனங்களின் மூடத்தனத்தை ஆயுதமாக வைத்துக் கொண்டு அநேக அக்கிரமங்கள் நாட்டில் நடைபெறுகின்றன. தோழர் காந்தியவர்கள் இந்திய அரசியலில் தலையிட்டு இன்றைக்கு ஏறக்குறைய 15 வருஷங்கள் ஆகின்றன. இந்தப் பதினைந்து வருஷ காலங்களில் அவர் கோடிக்கணக்கான ரூபாய்களை வசூலித்து செலவு செய்யச் செய்தார். பதினாயிரக்கணக்கான நபர்களை அடி, உதை, வசவு முதலியவைகள் படச்செய்தார். 40 ஆயிரம் 50 ஆயிரக்கணக்கான பேர்களை சிறை செல்லச் செய்தார். இந்திய அரசியல் உலகில் மிதவாதிகள், அமித வாதிகள், ஜ°டி°காரர்கள், இந்து, மு°லீம்கள், சீக்கியர்கள் முதலிய எல்லாக் கூட்டத்தாரிடமும் சர்வாதிகாரப் பட்டமும் பெற்றார். மேல்ஜாதிக்காரர்கள், ஏழைகள், பணக்காரர்கள் முதலிய எல்லோருக்கும் தாமே தர்ம கர்த்தாவாக கருதப்பட்டார். காங்கிர° °தாபனம் என்பதைத் தனது கால் சுண்டுவிரலால் மிதித்து அடக்கித் தனது இஷ்டம் போல் ஆட்டிவைத்தார் என்கின்றதான...

தேர்தல்  ஜனப்பிரதிநிதித்துவத்திற்கா?  பித்தலாட்ட  வியாபாரத்திற்கா?

தேர்தல்  ஜனப்பிரதிநிதித்துவத்திற்கா?  பித்தலாட்ட  வியாபாரத்திற்கா?

  நாட்டில்  எங்கு  பார்த்தாலும்  இப்போது  இந்திய  சட்டசபை  ஸ்தானங்களுக்குத்  தேர்தல்  பிரசாரம்  தொடங்கி  விட்டது.  சட்டசபைகள்  மாய்கையென்றும்,  அங்கு  சென்று  மக்களுக்கு  எவ்வித  நன்மையும்  செய்ய  முடியாதென்றும்  சட்டசபைகள்  அரசாங்கம்  தங்களுடைய  பாதுகாப்புக்காக  ஏற்படுத்திக்  கொண்டிருக்கிற  அரண்களென்றும்,  சட்டசபையில்  சர்க்காருடைய  வலுவு  பிரதிநிதிகள்  வலுவைவிட  எவ்வளவோ  மடங்கு  மேல்பட்டதென்றும்  அரசாங்கத்தின்  வலுவைச்  சட்டசபை  மூலம்  சிறிதாவது  அசைக்கக்  கூட  முடியாதென்றும்  தோழர்கள்  காந்தியார்,  தாஸ்,  நேரு,  ராஜகோபாலாச்சாரியார்  ஆகியவர்கள்  மாத்திர மில்லாமல்  இன்று  சட்டசபைக்குக்  காங்கிரஸ் மாறலாய்  நிற்கும்  அபேட்சர்களுள்பட  எல்லோரும்  சொல்லியிருக்கிறார்கள். இந்த  அபிப்பிராயமானது  சட்டசபைக்கு  வெளியிலிருந்து  கொண்டு  சொன்னதென்று  எண்ணிவிட  முடியாதபடி காங்கிரஸ்  தலைவர்கள்,  தியாகிகள்,  மேதாவிகள்  பலர்  சட்டசபைக்குள்  தக்க  பலத்துடன்  சென்று,  ஒரு  கை  பார்த்துவிட்டு  வெளியில்  வரும்போதும்,  வந்த  பின்பும்  சொன்னது  என்பதை  நாம்  வாசகர்களுக்கு  நினைப்பூட்ட  வேண்டியதில்லை. அன்றியும்  சட்டசபைகளும்,  அதற்குள்  சென்று  நாம்  செய்யக்கூடிய  காரியங்களும்  அரசாங்கத்தாரால்  ஏற்படுத்தப்பட்டு  அனுமதிக்கப்பட்ட ...

கோவையில்  தோழர்கள்  ஈணூ. வரதராஜுலு 

கோவையில்  தோழர்கள்  ஈணூ. வரதராஜுலு 

    ஈ.வெ. ராமசாமி 60007000  ஜனங்கள்  பிரம்மாண்டமான  கூட்டம் தோழர்களே!  இன்று  இந்தியாவெங்கும்  பல  தரங்களில்  கிளர்ச்சிகளும்,  முயற்சிகளும்  செய்யப்பட்டு  வருகின்றன.  அவற்றில்  இப்போது  மிகவும்  விளம்பரமாய்க்  காணப்படுவது  இந்திய  சட்ட சபைத்  தேர்தல்களாகும்.  அது  விஷயமாய்  பல  கட்சிக்காரர்களும்  பலவித  அபிப்பிராயக்காரர்களும்  சட்டசபைத்  தேர்தலுக்கு  நிற்பதால்  அவரவர்கள்  அபிப்பிராயங்களைப்  பொது  ஜனங்களுக்குச்  சொல்லி  ஓட்டுகள்  கேட்கவோ  அல்லது  எந்தப்படி  சொன்னால்  பொது  ஜனங்கள்  ஓட்டுகள்  தங்களுக்குக்  கிடைக்குமென்று  கருதி  அதன்படி  பேசி  ஓட்டுக்  கேட்கவோ  ஆன  காரியங்களை  அபேக்ஷகர்கள்  செய்து  வருகிறார்கள். இந்த  நிலையில்  எப்படிப்பட்ட  நியாயமான,  யோக்கியமான  கொள்கைகள்  கொண்ட  அபேக்ஷகரும்  ஜனங்களிடையில்  வந்து  தங்கள்  அபிப்பிராயங்களையும்,  நிலைமைகளையும்  சொல்லித்  தீர  வேண்டிய  நிர்ப்பந்தம்  ஏற்பட்டு  விட்டது. அதனாலேயே  தோழர்  வரதராஜுலு  அவர்கள்  இன்று  இங்கு  இந்திய  சட்டசபைத்  தேர்தலுக்குத்  தான்  நிற்பதைப்  பற்றியும்,  உங்கள்  எல்லோருடைய  ஆதரவும்  தனக்கு  வேண்டும்  என்பதைப்  பற்றியும்  தெரிவித்துக்  கொள்வார். ...

தீபாவளி – முட்டாள்தனம்

தீபாவளி – முட்டாள்தனம்

தோழர்களே! தீபாவளி கொண்டாடப்போகிறீர்களா? அதன் கதை தெரியுமா? பகுத்தறிவுள்ள மனிதனுக்குப் பிறந்தவர்களாய் இருந்தால் இம்மாதிரி இழி வும், பழிப்பும், முட்டாள் தனமுமான காரியத்தைச் செய்வீர்களா? தீபா வளியை விளம்பரம் செய்கின்றவர்கள் யார்? சோம்பேறியும், துரோகியும், அயோக்கி யர்களுமான கழுகுக் கூட்டமல்லவா? கதர் கட்டினால் தான் சரியான தீபாவளி என்று பல சுயநல சூக்ஷிக் காரர்கள் சொல்லுகிறார்கள். இது மகா மகா பித்தலாட்டமாகும். இதற்கும் பார்ப்பன அயோக்கியர்களுடன் அரசியல் அயோக்கியர்களும் சேர்ந்து அனுகூலமாயிருந்து மக்களை ஏமாற்றுகிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும். சொன்னதை எல்லாம் கேட்பதுதானா பார்ப்பனரல்லாத மக்களின் நிலை? மலம் சாப்பிட்டால் மோக்ஷம் வரும் சுயராஜ்யம் வரும் என்றால் கண்ணை மூடிக்கொண்டு சாப்பிடுவதுதான் மததர்மமா?  தேசீய தர்மமா? மதத்துக்காக மாட்டு மலம் சாப்பிடுவது போல் அரசியலுக்காக பணத்தை வீணாக்குவதா? சென்னையில் தீபாவளிக்கும், கதருக்கும் செய்யப்பட்டி ருக்கும் விளம்பரம் குச்சிக்கார தாசி விளம்பரத்தையும் தோற்கடித்து விடும் போல் காணப்படுகின்றன. இந்த செலவுகள் யார்...

முதல் மந்திரி கவனிப்பாரா?

முதல் மந்திரி கவனிப்பாரா?

சமீபத்தில் நடந்த திருப்பத்தூர் தாலூகா மகாநாட்டுக்காக வாணியம் பாடிக்குச் சென்றிருந்ததில் அங்குள்ள முனிசிபல் நிர்வாகம் மிக மோசமாய் இருக்கக்கண்டோம். முனிசிபாலிட்டியில் எப்பொழுதும் இந்து மு°லீம் உணர்ச்சி தகராறு இருப்பதால் அவ்விடத்திய அநேக முக்கிய காரியங் களை சரியாய் கவனிக்கமுடியாமல் போகின்றதாய் தெரிகிறது. ஊர் ரோட்டு கள் மிக சீர்கேடாய் இருக்கிறது. சுகாதாரம் நடுத்தெருவில் ஜலதாரை (கசு மாலத் தண்ணீர்) ஓடுகிறது. ரோட்டின் இரு மருங்கும் கச்கூசாக உபயோகப் படுத்தப்படுகின்றன. வேறு பல உள்துரைப் புகார்கள் இருப்பதாகச் சொல்லப் படுவதைக் கவனிக்காவிட்டாலும், மத உணர்ச்சித் தகராறுகள் இருப்பதாகச் சொல்லப்படுவதைக் கவனிக்காவிட்டாலும் இதன் பயனாகவே அல்லது வேராலோ நல்ல நிர்வாகம் கெட்டிருக்கிறது என்பது பிரத்தியட்சம். இதுசமயம் அங்கு காலரா பலமாக இருக்கிறது. 100 கேசுக்கு 80 கேசு இறந்து போகின்றது. இந்தக் கொடிய தொத்து வியாதிக்கு எவ்வித முயற்சி எடுத்துக் கொண்டதா கவும் காணப்படவில்லை. சுகாதார அதிகாரிகளைக் காணவே முடியவில்லை. தாலுகா ஜில்லா போர்டாவது...

மதக்கிறுக்கு

மதக்கிறுக்கு

உலகில் மதங்கள் ஏற்பட்டு பல ஆயிரக்கணக்கான வருஷங்கள் ஆகி இருந்தாலும் மதங்களை ஏற்படுத்தினவர்கள் எல்லாம், அல்லது மதங்களின் மூல புருஷர்கள் எல்லாம் தெய்வீகச் சக்தி பொருந்தியவர்களா யும், தெய்வ சம்மந்தமுடையவர்களாயும், தீர்க்கத் தரிசன ஞானமுள்ள மகாத்மாக்களாயும் இருந்தார்கள் என்று சொல்லப்பட்டும் எல்லா மதக் கட்டளைகளும் தெய்வங் களாலேயே மூல புருஷர்கள் மூலம் உலகத்திற்கு இறக்கப்பட்டது என்று சொல்லப்பட்டும் இருந்தாலும் சதா சர்வ காலமும் அந்த அந்த மதப் பிரசாரம் செய்யப்படாவிட்டால் மதம் ஒழிந்து போய் விடுமே என்கின்ற பயம் எல்லா மத°தர்களிடமும் இருந்துதான் வரு கின்றது. இந்தக் கருத்திலும், காரியத்திலும் உலகில் இன்னமதம் உயர்வு, இன்னமதம் தாழ்வு என்று சொல்லுவதற்கில்லை. சாதாரணமாக ஒரு கோடி ரூபாயோ, அல்லது இரண்டு கோடி ரூபாயோ கையில் வைத்துக் கொண்டு ஆயிரம் ஆளுகளோ, அல்லது இரண்டாயிரம் ஆளுகளையோ நியமித்து 5, 6 பாஷைகளில் பத்திரிகைக ளையும் வைத்துக் கொண்டு ஏதோ ஒரு தாழ்த்தப்பட்ட மிருகத்தின் பேரால்...

“”ஷண்முகத்தின்  அஹம்பாவம்”

“”ஷண்முகத்தின்  அஹம்பாவம்”

  தோழர்  ஷண்முகம்  அவர்கள்  தனது  தேர்தல்  சம்மந்தமாய்  ஆங்காங்கு  பிரசங்கம்  செய்து  வருவது  யாவரும்  அறிந்ததாகும்.  அவருடைய  எதிரிகளாகிய  காங்கிரஸ்காரர்கள்    தேசிய  பத்திரிகைக்காரர்கள்    பார்ப்பனர்  ஆகியவர்கள்  ஷண்முகத்தை  வைவதற்கும்  அவர்மீது  பழி சுமத்தி  விஷமப்  பிரசாரம்  செய்வதற்கும்  ஆட்டவா  ஒப்பந்தத்தையும்,  சட்டசபைத்  தலைவர்  பதவியில்  “”அவர்  வில்லிங்டன்  பிரபுக்கு  அடிமையாய்  இருந்தார்”  என்றும்,  இனியும்  அடிமையாய்  இருக்கப்  போகிறார்  என்றும்,  காங்கிரசுக்கு  துரோகியென்றும்,  வியாபாரிகளுக்கு  துரோகியென்றும்  சொல்லி  அவற்றைப்  பல்லவியாய்  வைத்து  எதிர்ப்  பிரசாரம்  செய்து  வந்தார்கள்.  இவற்றிற்கெல்லாம்  தக்க  பதில்  சொல்லப்பட்டவுடன்  இப்போது  அந்தப்  பல்லவிகளை  உபயோகிக்க  முடியாமல்  போய்விட்டதால்  ஷண்முகம்  பிரசங்கத்தில்  “”அப்படிச்  சொன்னார்”  “”இப்படிச்  சொன்னார்”  “”இது அகம்பாவம்”  “”இது  தலைவர்க் கழகல்ல”  “”இப்படிப்பட்டவர்  தலைவராகக்  கூடாது”.  இவர்  தெரிந்தெடுக்கப்பட்டால்  எப்படியும்  தலைவராகி  விடுவார்.  ஆதலால்  தெரிந்தெடுக்கக்  கூடாது”  என்று  புதிய  முறையில்  இப்போது  விஷமப்  பிரசாரம்  செய்ய  ஆரம்பித்து  இருக்கிறார்கள்.  தென்னிந்தியாவில்  உள்ள  காங்கிரஸ்வாதிகள் ...

பார்ப்பனரைச்  சேர்த்தது  ஏன்?

பார்ப்பனரைச்  சேர்த்தது  ஏன்?

  தோழர்களே!  பார்ப்பனர்களைச்  சேர்த்துக்கொள்ளலாமா?  என்கின்ற  பிரச்சினையானது  ஜஸ்டிஸ்  கட்சியில்  1926ம்  வருஷம்  முதல்  பேசப்பட்டு  வருகிறது. உதாரணமாக  மதுரை  மகாநாட்டில்  பனகால்  அரசர்  பார்ப்பனர் களைச்  சேர்த்துக்கொள்ள  வேண்டுமென்று  ஆசைப்பட்டு,  அதற்கு  ஒரு  கமிட்டியை  நியமித்துப்  பார்ப்பனர்கள்  விண்ணப்பங்களை  கமிட்டி  பரிசோதிக்கலாமா  என்றும்,  பூணூல்  இல்லாதவர்களைச்  சேர்த்துக்  கொள்வது  என்கின்ற  நிபந்தனை  வைக்கலாமா  என்றும்,  மற்றும்  பலவித  நிபந்தனைகளின்  மீதாவது  சேர்க்கலாம்  என்றும்  சொன்னார்.  பிறகு  கோயம்புத்தூர்  மகாநாட்டிலும்,  கடைசியாக  நெல்லூர்  மகாநாட்டிலும்  பேசப்பட்டது.  என்னைப்  பொறுத்தவரை  நான்  ஆ÷க்ஷபித்தே  வந்திருக்கிறேன்.  பொது  ஜனங்களுக்கும்  பிரியமில்லை  என்பது எனது  அபிப்பிராயம். ஆனால்  தலைவர்களுக்கு  ஏதோ  அவசியமிருப்பதாகத்  தெரிகின்றது.  அதை  உத்தேசித்தே  சென்ற  மாதம்  கூடின  ஒரு  சாதாரண  தனிப்பட்ட  கூட்டத்தில்  நான்  ஆ÷க்ஷபிக்கப்  போவதில்லை  என்று  கூறி  இருக்கின்றேன்.  ஏனெனில்  தலைவர்கள்  என்பவர்கள்  அதன்  பயனை  அடைந்து  பார்க்கட்டும்  என்று  கருதித்தான். இது  போலவே  முன்னமும்  ஒரு  சம்பவம்  நடந்திருக்கிறது. ...

நமது வருத்தம்  – ஈ.வெ.ரா

நமது வருத்தம் – ஈ.வெ.ரா

  திருநெல்வேலியில் நடந்த தீண்டாமை மகாநாட்டிற்குத் தலைமை வகிக்க சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தலைமைத் தமிழா சிரியர் தோழர் எ°.சோமசுந்திரபாரதியார் ஆ.ஹ., க்ஷ.டு., அவர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தார். அம்மகாநாட்டிற்கு வரவேற்பு கழகத்தலைவராக இருக்க திருநெல்வேலி தோழர் சாவடி கூத்தநயினார் பிள்ளை அவர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தார். இவ்வேண்டுகோளுக்கிணங்க இரு தோழர் களும் தங்கள் கடமைகளை ஆற்ற மகாநாட்டிற்கு வந்திருந்தார்கள். இங்கு ஒரு விஷயம் குறிப்பிடவேண்டியதாகும். அதாவது அவர்கள் இருவரும் காங்கிர° கொள்கையில் பற்றுள்ள வர்கள், ஆ°திகர்கள், காங்கிர° தீண்டாமை விலக்கு (“ஹரிஜன முன் னேற்ற”) வேலை கமிட்டியில் அங்கம் வகிப்பவர்கள் ஆவார்கள். இவற்றை யெல்லாம் சுயமரியாதை மகாநாட்டைக் கூட்டிய தோழர்கள் அறிந்தே அவர்களை தலைமை வகிக்கக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதாகும். அன்றியும் மகாநாட்டில் தோழர் சோமசுந்திரபாரதியாரைத் தலைமைப் பதவிக்கு நான் பிரேரேபிக்கும் போதே தோழர் பாரதியாருக்கும் நமக்கும் விசேஷ அபிப்பிராய பேதங்கள் உண்டு என்றும், அப்படியிருந் தும் இம் மகாநாட்டிற்கு நாம் அவர்களை...

ஸ்தல  ஸ்தாபனச்  சீர்கேடு

ஸ்தல  ஸ்தாபனச்  சீர்கேடு

  ஸ்தல  ஸ்தாபனங்கள்  என்று  சொல்லப்படும்  ஜில்லா,  தாலூக்கா போர்டுகள்,  முனிசிபாலிட்டி,  யூனியன்,  கிராம  பஞ்சாயத்து  ஆகிய  ஸ்தாபனங் களைப்  பற்றி  நம்முடைய  அபிப்பிராயம்  யாவரும்  அறிந்ததேயாகும். இவைகளைப்  பற்றி  சுமார்  20,  25  வருஷகாலமாகவே  நமக்கு  நேரிட்ட  அனுபோகம்  உண்டு  என்பதையும்,  அதன்  பயனாகவே  ஸ்தல  ஸ்தாபனங்களில்  ஜனப்  பிரதிநிதிகள்  என்பவர்களுக்குள்ள  அதிகாரங்களையும்  அரசாங்கம்  திரும்பப்  பெற்றுக்  கொண்டு  பொறுப்புள்ள  சம்பள  ஆட்களிடம்  அவைகளை  ஒப்புவிக்க  வேண்டுமென்றும்  பேசியும்,  எழுதியும்  வந்ததோடு  இப்போதும்  அது  போலவே  பல  காரியங்கள்  நடந்தும்  வந்திருக்கின்றன. தாலூகா  போர்டுகள்  ஏற்பட்டு  விட்டன.  முனிசிபாலிட்டிகளில்  சேர்மென்களின்  அதிகாரங்கள்  பிடுங்கப்பட்டு  அவர்களை  நகரும்  யந்திரங்களாக  ஆக்கப்பட்டு  விட்டனர்.  சட்டத்தில்  சேர்மன்  என்று  இருந்த  இடங்களிலெல்லாம்  கமிஷனர்  என்று  போட்டாய்  விட்டது.  சில  கமிஷனர்கள்  யோக்கியப்  பொறுப்பற்றவர்களா  யிருக்கலாம்.  சில  சமயங்களில்  தவறுதல்கள்  செய்து  விடலாமென்று  வைத்துக்  கொண்டாலும்  10  கமிஷனர்களின்  யோக்கியப்  பொறுப்பற்ற  தன்மையையும்,  10  கமிஷனர்களின் ...

புதுக்கோட்டையில்  தோழர்  ஈ.வெ.ரா.

புதுக்கோட்டையில்  தோழர்  ஈ.வெ.ரா.

  ஆஸ்திகம்  நாஸ்திகம் தலைவரவர்களே,  தோழர்களே! இந்தப்  புதுக்கோட்டையில்  எங்களுக்காக  நடத்தப்பட்ட  ஆடம்பர  வரவேற்புகளுக்கும்,  விருந்துகளுக்கும்  இங்கு  நடைபெறுகிற  நடவடிக்கை களுக்கும்  நான்  நன்றி  செலுத்துவதுடன்  மிகவும்  மகிழ்ச்சி  அடைகின்றேன். தோழர்கள்  ரங்கம்மாள்  சிதம்பரம்  தம்பதிகள்  சீர்திருத்த  முறையில்  விவாகம்  செய்து  கொண்டவர்களாதலால்,  அவர்கள்  பாராட்டுதலுக்கும்,  வரவேற்புக்கும்  உரியவர்கள்  ஆவார்கள்.  ஆனால்  எனக்கு  எதற்காக  இந்த  ஆடம்பர  வரவேற்புகள்  என்பது  எனக்கே  விளங்கவில்லை. இந்த  ராஜ்யம்  ஒரு  சுதேச  சமஸ்தானமாதலால்  இங்கு  நமது  இயக்கத்தைப்  பிரசாரம்  செய்வதற்கு சமஸ்தானத்திலோ, அல்லது வேறு வகையிலோ  ஏதாவது  இடையூறு  ஏற்படுமோ  எனக்  கருதி,  இந்த  முறையில்  ஏதாவது  வகை  செய்யக்  கருதி  தோழர்  வல்லத்தரசும்  அவர்களது  தோழர்கள்  முரு.  தேனப்பன்,  அ.செ.சு.  சாமிநாதன்,  லெ.  சோமசுந்தரம்,  கா.ச.  சடையணன்,  சி.பெ.க.  பெரிய  கருப்பன்  முதலியவர் களும்  இந்த  ஏற்பாடு  செய்தார்களோ  என்று  எண்ணுகிறேன்.  (சிரிப்பு) இந்த  இரகசிய  ஏற்பாட்டிற்கு  இவ்வளவு  பேர்கள்  வந்து  கூடியிருப்பது ...

சென்னை  கடற்கரையில்  5000  பேர்  கூட்டம்

சென்னை  கடற்கரையில்  5000  பேர்  கூட்டம்

  தோழர்  எ.  ராமசாமி  முதலியார்  அவர்களுக்கு  விரோதமாய்  தோழர்  சத்தியமூர்த்தி  அய்யர்  நிறுத்தப்பட்டிருக்கிறார்.  முன்னவரை  விட  பின்னவர்  எந்த  விதத்தில்  யோக்கியதை  உடையவர்  என்று  நான்  கேட்கின்றேன்.  தோழர்  சத்தியமூர்த்தி  அவர்கள்  4000  ஓட்டிலிருந்து  எண்ணப்  போகிறேன்  என்று  சொல்லுகிறாராம்.  ஏனென்றால்  சென்னையில்  4000  பார்ப்பனர்கள்  ஓட்டுகள்  இருக்கின்றனவாம்.  அவர்கள்  அத்தனை  பேரும்  பார்ப்பனர்  சத்தியமூர்த்திக்கே  ஓட்டு  செய்யப்  போகிறார்களாம். இதை  ஒரு  பெருமையாகப்  பார்ப்பனர்களும்,  அவர்களது  கூலிகளும்  பேசிக்  கொள்ளுகிறார்கள். அப்படியானால்  தோழர்  ராமசாமி  முதலியார்  அவருடைய  ஓட்டுகள்  11000த்தில்  இருந்து  எண்ணக்  கூடும்  என்று  ஏன்  சொல்லக்  கூடாது?  4000  பார்ப்பனர்கள்  ஓட்டிருப்பதால்  4000த்தில்  இருந்து  எண்ணுவதானால்  11000  பார்ப்பனர்  அல்லாதார்  ஓட்டர்கள்  இருப்பதால்  ராமசாமி  முதலியார்  ஏன்  11000த்தில்  இருந்து  எண்ணக்  கூடாது  என்று  நான்  கேட்கின்றேன்.  மொத்தம்  15  ஆயிரம்  ஓட்டல்லவா? பார்ப்பனருக்கு  இருக்கும்  புத்தியும்,  ஜாதி  அபிமானமும்,  சுயமரியாதை  உணர்ச்சியும்,  பார்ப்பனரல்லாதாருக்கு  இல்லை ...

கொச்சி, திருவாங்கூர், திருநெல்வேலி  தொழிலாளர் மகாநாடு   

கொச்சி, திருவாங்கூர், திருநெல்வேலி  தொழிலாளர் மகாநாடு  

  தோழர்களே! உங்களுடைய மகாநாட்டில் தலைமை வகிக்கும் பேற்றை எனக் களித்து இந்த சந்தர்ப்பத்தில் எனது அபிப்பிராயத்தைத் தெரிவித்துக் கொள்ள வசதி அளித்ததற்கு எனது நன்றியறிதலை முதலில் தெரிவித்துக் கொள்ளுகிறேன். என்னைப்பற்றிப் பல தோழர்கள் கவிராயர்கள் போல் புகழ்ந்துகூறிய  தற்கு நான் நன்றி செலுத்தக் கடமைப்பட்டவனாகிலும் அப்புகழ்ச்சி உரை களுக்கு நான் தகுதியுடையவனல்ல என்றும், அப்புகழ்ச்சிகளில் ஏதாவது ஒரு பாகத்துக்காவது தகுதியுடையவனாக என்னை ஆக்கிக் கொள்வதற்கு அவைகளை உபயோகப்படுத்திக் கொள்ளுகிறேன் என்று உங்களுக்குத் தெரிவித்துக் கொள்ளுகிறேன். என்னைப்பற்றிப் பேசிய சிலர் வைக்கம் சத்தியாக்கிரகத்தைப் பற்றி பிர°தாபித்து அதை நடத்துவித்ததும் அது வெற்றியாய் முடிவு பெற்ற காரணமாய் இருந்ததும் நானேயாவேன் என்று பேசினார்கள். அதையும் ஒப்புக்கொள்ள முடியாமைக்கு நான் வருந்துகிறேன். வைக்கம் சத்தியாக் கிரகத்தில் பெயரளவுக்கு என் பெயர் அடிபட்டாலும் அதன் உற்சாகமான நடப்புக்கும், வெற்றிக்கும் வாலிப தோழர்களுடைய வீரம் பொருந்திய தியாகமும், சகிப்புத்தன்மையும், கட்டுப்பாடுமே காரணமாகுமென்று தெரிவித் துக் கொள்ளுகிறேன். நிற்க,...

சங்கராச்சாரிக்கு அவமரியாதையா?  டிப்டி கலைக்டர் தர்பார்

சங்கராச்சாரிக்கு அவமரியாதையா? டிப்டி கலைக்டர் தர்பார்

  சென்ற 22-9-33 வெள்ளிக்கிழமை இரவு தஞ்சையில் முகாமிட்டுள்ள சங்கராச்சாரியைப் பார்க்க அவ்வூர் டிப்டி சூப்ரெண்டெண்டான ஒரு பிராமணரல்லாத கனவான் குடும்ப சமேதராய் சென்றிருந்தார். அது சமயம் சங்கராச்சாரியாரின் முகாமில் நின்று கொண்டிருந்த – தஞ்சை டிவிஷன் ஹெட் குவார்ட்டர் டிப்டி கலைக்டர் அவர்கள் ³யாரை அழைத்து எவ்வாறு மேலே ஷர்ட் போட்டுக்கொண்டு போகலாமென்று வினவினார். அதன் பேரில் இருவர்களுக்கும் சில வாக்கு வாதங்கள் நிகழ்ந்தது. இதுவிஷயமாக தஞ்சையில் பெருத்த பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. சங்கராச்சாரியின் முன்பு சட்டை போட்டுக்கொண்டு போகக்கூடாதென்பது பழக்கத்தில் இருப்பதாகவே ஒத்துக்கொண்ட போதிலும், அதை அமுல் நடத்த (நுகேடிசஉந) டிப்டி கலைக்டருக்கு என்ன சம்மந்தமுன்டென்பதும், அதற்கு சங்கராச்சாரிக்கு ஆள் மாகாணம் இல்லையா என்றும், ³ டிப்டி கலைக்டர் அந்த வேலையைத்தானே வகித்துக் கொண்டு சங்கராச்சாரியா லும் அவர் சிப்பந்திகளாலும் செய்ய சாத்தியப்படாததான காரியத்தை தான் தன் அதிகார பதவியை கொண்டு அமுல் நடத்தி, மதத்தைக் காப்பாற்ற செய்யும் சூழ்ச்சி...

ஒரு எச்சரிக்கை

ஒரு எச்சரிக்கை

தமிழ்நாட்டில் உள்ள பார்ப்பனப் பத்திரிகைகள் எல்லாவற்றிற்கும் இன்று தோழர் ஷண்முகத்தின் பதவி மிக்க வயிற்றுக் கடுப்பாய் இருந்து வருகின்றதை நாம் உணர்ந்து வருகின்றோம். இவற்றுள் ஒரு விகடப் பத்திரிகை மிக்கக் கேவலமான முறையில் நடந்து கொண்டிருக்கிறதைப் பற்றிப் பல தோழர்கள் நமக்குப் பல வியாசங்கள் எழுதி இருக்கிறார்கள். அவற்றை இப்போது நாம் பிரசுரிக்கவில்லை. தயவு செய்து அப்பத்திரிகை அம்மாதிரி நடந்து கொண்டதற்காக வருந்தாதவரை அந்த வியாசங்களை நாம் பிரசுரித்துத் தீரவேண்டிய நிலையில் இருக்கிறோம். விகடத்துக்கும் விஷமத்துக்கும் குரோதத் தன்மைக்கும் வித்தியாசம் கண்டுபிடிக்கப்பட மாட்டாது என்று நினைப்பது ஏமாற்றத்தைத் தரும் என் பதை எச்சரிக்கை செய்தே, அந்தச் செய்கையைப் பின்வாங்கிக் கொள்ளும் படி வேண்டிக் கொள்ளுகிறோம். குடி அரசு – செய்திக் குறிப்பு – 24.09.1933          

இரண்டு  மகாநாடுகள்

இரண்டு  மகாநாடுகள்

  சென்ற  மாதம்  கடைசி  வாரத்தில்  தமிழ்  நாட்டில்  இரண்டு  மகாநாடுகள்  நடைபெற்றிருக்கின்றன.  ஒன்று  சென்னையில்  நடந்த  தென்னிந்திய  நல  உரிமைச்  சங்க  மகாநாடு.  மற்றொன்று  கோவையில்  நடந்த  தமிழ்நாடு  காங்கிரஸ் மகாநாடு.  முன்னையதற்கு  பொப்பிலி  ராஜா  தலைவர்.  பின்னையதற்கு  தோழர்  சி.  ராஜகோபாலாச்சாரியார்  தலைவர்.  இருவர் களுடைய   பேச்சுச்  சுருக்கமும்  வேறு  பக்கத்தில்  பிரசுரிக்கப்பட்டிருக்கிறது. ஜஸ்டிஸ்  மகாநாட்டில்  ஒரு  பெரிய  மாறுதல்.  அதாவது  அது  தன்  அஸ்திவாரத்திலிருந்தே  ஒரு  பெரிய  மாறுதலை  ஏற்படுத்திக்கொண்டது.  இனி  அதைப்  பார்ப்பனரல்லாதார்  மகாநாடு  என்றோ,  வகுப்புவாதிகள்  மகாநாடு  என்றோ,  பார்ப்பனத்  துவேஷிகள்  மகாநாடு  என்றோ  ஒருவராலும்  சொல்ல  முடியாதபடி  செய்து  கொண்டதுடன்  எவ்வித  வகுப்பு நிபந்தனையும்  இல்லாமல்  எல்லா  வகுப்புகளுக்கும்  சம  சுதந்திரமும்,  சம  சந்தர்ப்பமும், சம  நீதியும்  வழங்குவதை  முக்கிய  நோக்கமாகக்  கொண்டு  இருக்கிறது. இதற்குக்  காரணம்  “”வகுப்பு  வாதம்”  என்று  பார்ப்பனர்கள்  போட்ட  கூச்சலாயிருந்தாலும்  இருக்கலாம்.  அல்லது  பிரிட்டன்  அதிகார  வர்க்கத்துக்கோ, ...

பெசண்டம்மையாரின் முடிவு

பெசண்டம்மையாரின் முடிவு

தோழர் அன்னிபெசண்ட் அம்மையார் 20-9-33ந் தேதி மாலை 4-மணிக்கு சென்னை அடையாற்றில் முடிவெய்தி விட்டார்கள். அம்மை யாரின் வாழ்வு பெண்மணிகளுக்கு ஒரு படிப்பினையாகும். ஆண்களுக் கும் ஓர் அறிவுருத்தல் ஆகும். பெண்கள் “பாபஜென்மம்” என்றும், “பேதமையென்பது மாதர்க் கணிகலம்” என்றும், பெண்கள் ஆண்களின் காவலுக்குட்பட்டு இருக்க வேண்டியவர்கள் என்றும், அறியாமையும், அயோக்கியத்தனமும், முட்டாள் தனமும், மூர்க்கத்தனமும் கொண்ட வாக்கியங்களை பொய்யாக்கி அவற்றில் பொதிந்துள்ள சூழ்ச்சிகளை வெளியாக்கவென்றே தோன்றியவர் என்று கருதும்படியானவர் நமது பெசண்டம்மையார். தோழர் பெசண்டம்மையார் ஒரு பாதிரியாரின் மனைவியாவார். பாதிரி களின் கொடுமையும், பித்தலாட்டமும் அம்மையாரை நா°திகமாக்கி, தெய்வம் இல்லை என்று பிரசாரம் செய்யும்படி செய்தது. பிறகு புருஷனை விட்டுப் பிரிந்தார். பிறகு கர்ப்பத்தடையை யாவருக்கும் பிரசாரம் செய்து வந்தார். கர்ப்பத்தடையை சட்ட சம்மந்தமாக்கினார். அக்காலத்திலேயே அரசாங்கத்தையும் எதிர்த்து பிரசாரமும் செய்தார். பின்னர் தனது 32-ம் வயதுக்கு மேல் மறுபடியும் பள்ளிக்கூடத்தில் சேர்ந்து படித்தார். பிறகு பல புத்தகங்களை எழுதினார்....

ஜவஹர்லால் – காந்தி

ஜவஹர்லால் – காந்தி

தோழர் ஜவஹர்லால் அவர்கள் காந்தியாருக்கு எழுதியகடிதத்தின் ஆரம்பத்தில், ராஜீய கோரிக்கை என்ன என்பதில் வாசகம் தெளிவாயில்லை என்றும், மக்களை தப்பான வழியில் நடக்கும்படியான பிரசாரம் நடந்து வருகிறதென்றும் ஆதலால் அதை தெளிவுபடுத்த வேண்டும் என்றும் சொல்லிவிட்டு ராஜீய கோரிக்கைகளை தெளிவுபடுத்தும் முறையில் பூரண சுயேட்சை என்று காங்கிர° தீர்மானித்திருப்பதற்கு பொருள், ராணுவம் அன்னியநாட்டு சம்மந்தம் பணம் ஆகியவைகளில் பூரண ஆதிக்கம் இருக்க வேண்டுமென்பதே என்றும் விளக்கி இருக்கிறார். அதன்பிறகு தன்னைப் பொருத்தவரையில் இப்பொழுது அவர் இன்னும் அதிகமாகப் போகவேண்டி இருப்பதாகவும், அந்த நிலைமையையும் தெளிவுபடுத்துவ தாகவும்  சொல்லி, மேல்கண்ட அதிகம் என்பதின் கருத்தை விளக்குகையில் பாமரமக்களுடைய வாழ்க்கை நிலைமையை உயர்த்தவும், அவர்களுக்கு பொருளாதார சௌகரியம் ஏற்படுத்தவும், அவர்கள் சுதந்திரத்தோடு வாழ வும், வேண்டுமானால் இந்தியாவில் அதிகமான உரிமைகளையும், சலுகை களையும், அனுபவித்து வரும் கூட்டத்தார்கள் அவற்றை விட்டுக்கொடுத்தா லொழிய வேறு எவ்வழியிலும் முடியாது என்றும் விசேஷ தனி உரிமையை யும், சலுகை...

சென்னை  கடற்கரையில்   5000  பேர்  கூட்டம்

சென்னை  கடற்கரையில்  5000  பேர்  கூட்டம்

  வரப்போகும்  தேர்தல் தோழர்களே!  இன்று இங்கு எலக்ஷன்  சம்மந்தமாகப்  பேசுவதற் கென்றே  இந்தக்  கூட்டம்  கூட்டப்பட்டதாக  எனக்குத்  தெரிகின்றது. கட்சி  கிடையாது எனக்கு  எலக்ஷனில்  கக்ஷிப்  பிரச்சனை   கிடையாது.  கட்சிகள்  என்பது  கொள்கைகளைப்  பொருத்ததாக  இருப்பது  இயல்பு.  ஆனால்  நம்  நாட்டில்  எந்தக்  கட்சியையும்  கொள்கையை  ஆதாரமாய்க்  கொண்டதாக  ஒப்புக்கொள்ள  முடியவில்லை. நமது  மாகாணத்தில்  வெகுகாலமாகவே  கட்சிகள்  உத்தியோக  ஆசைக்கும்,  வகுப்பு  ஆதிக்கத்துக்குமாகவே  இருந்து  வருகின்றனவே  ஒழிய,  பொது  ஜன  நலக்  கொள்கைக்காக  இருந்து  வரவில்லை. முதலில்  உத்தியோக  ஆசையை  முன்னிட்டு  ஏற்பட்ட  கட்சியின்  பயனாய்  பல  கொழுத்த  சம்பளமுள்ள  உத்தியோகங்களும்,  அதிகாரங்களும்  நமது  மக்களுக்குக்  கிடைக்க  சௌகரியமானவுடன்  இப்போது  இந்து,  முஸ்லீம்,  கிறிஸ்தவர்,  தீண்டாதவர்,  பார்ப்பனர்,  பார்ப்பனரல்லாதார்  என்கின்ற  வகுப்பு  நலத்தைப்  பிரதானமாய்க்  கொண்ட  கக்ஷிகள்  தலை  விரித்தாடுகின்றன.  ஒவ்வொரு  வகுப்புக்  கக்ஷியும்  மற்ற  வகுப்பை  ஏமாற்றுவதற்கு  அனுகூலமான  விஷயங்களைத்  தான்  கக்ஷிக்  கொள்கைகளாய்க்  கொண்டிருக்கின்றனவே  ஒழிய  வேறில்லை....

கோவையில்  சுயமரியாதைத்  திருமணம்   சு.ம.  திருமணமும்  பு.ம.  திருமணமும்

கோவையில்  சுயமரியாதைத்  திருமணம்  சு.ம.  திருமணமும்  பு.ம.  திருமணமும்

  தோழர்களே! இன்று  இங்கு  நடக்கும்  இத்திருமணத்திற்கு  சுயமரியாதைத்  திருமணமென்றும்  சீர்திருத்தத்  திருமணம்  என்றும்  சொல்லப்படுகிறது.  சுயமரியாதைத்  திருமணம்  என்றால்  சிலருக்குப்  பிடித்தமில்லாமல்  இருக்கலாம்  என்று  சீர்திருத்தத்  திருமணம்  எனச்  சொல்லப்படுகிறது. சீர்திருத்தம்? எப்படி  இருந்தாலும்  ஒன்றுதான்.  சீர்திருத்தம்  என்றால்  என்ன?  இருக்கின்ற  நிலைமையில்  இருந்து  மாற்றம்  செய்வதையே  சீர்திருத்தம்  என்றும்,  நாகரீகமென்றும்  சொல்லுகிறோம்  என்றாலும்,  இந்த  சீர்திருத்தமும்,  நாகரீகமும்  வெறும்  மாறுதலுக்காகவே  ஏற்படுவதும்  உண்டு.  மற்றும்  பல  விஷயங்களில்  சௌகரியத்தையும்,  நன்மையையும்,  அவசியத்தையும்,  பகுத்தறிவையும்  உத்தேசித்து  மாற்றப்படுவதும்  உண்டு.  மாறுதலும்  சீர்திருத்தமும்  மக்களுக்கும்  உலகத்துக்கும்  புதிதல்ல.  உலகம்  தோன்றிய  நாள்  முதல்  ஒவ்வொரு  துறையிலும்  எவ்வளவு  மாறுதல்  அடைந்து  வந்திருக்கிறது  என்பதை  சரித்திரங்களையும்,  பழைய  சின்னங்களையும்  பார்த்து  வந்தால்  நன்றாய்  விளங்கும்.  அது  போலவே  மனித  சமூகமும்  சகலத்  துறைகளிலும்  எவ்வளவு  மாறுதல்  அடைந்து  வந்திருக்கின்றது  என்பதும்  வாழ்க்கையில்  எவ்வளவு  மாறுதல்கள்  அடைந்து  வந்திருக்கின்றது  என்பதும்  நம்  குறைந்த  கால ...

நமது  தலைவர்  ஈ.வெ.ராவும்

நமது  தலைவர்  ஈ.வெ.ராவும்

  சென்னை பார்ப்பனரல்லாதார் மகாநாடும் “”புரட்சி”  நின்று  போவதற்கு  சற்று  முன்,  நமது  தலைவர்  ஈ.வெ.ரா.  அவர்கள்,  ஜஸ்டிஸ்  (ஒதண்tடிஞிஞு)    கட்சியோடு  சரச  சல்லாபம்  காட்டுவதாக  பாவித்து,  அது,  சமதர்மிகளுக்குப்  பொருந்தாது  என்று,  ஒரு  சிறு  கட்டுரை  எழுதி  இருந்தேன்.  அதைப்  பிரசுரிப்பதற்கு  முன்  “”புரட்சி”  நின்று  விட்டது.  அதனை  பிறகு  வந்த  “”பகுத்தறிவில்”  அதை  அச்சிட்டார்களோ,  அது  எனக்குத்  தெரியவில்லை.  அந்தக்  கட்டுரையில்,  நமது  நாட்டிலுள்ள  பலவித  அரசியல்  கட்சிகள்  சம்பந்தமாக,  நாமாகிய  சமதர்மிகள்  நடந்து  கொள்ளும்  முறையைப்  பற்றியும்  எழுதியதாகவும்  ஞாபகமிருக்கிறது.  இது  நிற்க,  சுயமரியாதை  சமதர்மியர்,  தற்காலம்  நடந்து  வரும்  தேர்தல்களில்  நடந்து  கொள்ள  வேண்டிய  முறையையும்,  ஜோலார்ப்பேட்டை  “”சமதர்மம்”  என்ற  பத்திரிகையிலும்  குறிப்பாக  எடுத்துக்  காட்டியுள்ளேன்.  இதனை  அச்சஞ்சிகையில்  பிரசுரித்தார்களோ  அதுவும்  தெரியவில்லை. எந்தக்  கட்சியினர்களாயினும்  அவர்களுக்கு  ஓர்  திட்டம்  இருக்க  வேண்டும். அந்தத் திட்டத்திற்குள் தான் அவரவர்கள்  நடந்து  தீர வேண்டும்.  வேண்டுமானால் ஒரு...

கேரளத்தில் சுயமரியாதை இயக்கம்

கேரளத்தில் சுயமரியாதை இயக்கம்

கேரளம் என்பது மலையாள நாட்டைக் குறிப்பிடுவதாகும். மலையாள நாடு என்பது திருவாங்கூர் ராஜ்யத்தையும், கொச்சி ராஜ்யத்தை பிரிட்டிஷில் மலையாள ஜில்லாவையும் சேர்த்து குறிப்பிடுவதாகும். இவற் றுள் நமது சுயமரியாதை இயக்கமானது எவ்வளவு தூரம் பரவியிருக்கின்றது என்பதை விளக்கவே இதை எழுதுகின்றோம். கொச்சி, திருவாங்கூர் ஆகிய இரு ராஜ்யங்களும் “சுதேச சம° தானங்கள்” ஆகும். இந்த இருநாடும் சுதேச ராஜாக்கள் என்பவர்களால் இந்து மத சம்பிரதாயங்களைப் பிரதானமாய் கருதி ஆட்சிபுரியப் படுவதா கும். ஹிந்து மதத்தை அதன் உண்மைத் தத்துவமான வருணாச்சிரம தரும முறைப்படி ஜாதி வித்தியாசங்களைக் கடுமையாய் அனுஷ்டித்து வந்ததின் பயனாகவே மேல் ஜாதிக் கொடுமைகள் தாங்காமல் அந்த இரு நாடுகளிலும் மொத்த ஜனத்தொகையில் கிட்டத்தட்ட சரிபகுதி ஜனங்கள் இந்து மதத்தை விட்டு இந்துக்கள் அல்லாதவர்களாய் விட்டார்கள். அதாவது, அவர்கள் கிறி°த்தவர்களும், இ°லாமானவர்களும், யூதர்களும், புத்தர்களுமாய் இருந்து வருகிறார்கள். பாக்கியுள்ள பகுதியில் அரையே அரைக்கால் வாசிப்பேர்கள் இன்றும் தாழ்ந்த ஜாதி மக்களாய்...

ஈரோடு  அர்பன்  பாங்கி  தேர்தல்

ஈரோடு  அர்பன்  பாங்கி  தேர்தல்

  ஈரோடு  அர்பன்  பாங்கியைப்  பற்றியும்,  அதன்  நிர்வாகத்தைப்  பற்றியும்  “”குடி  அரசு”  பத்திரிகையில்  ஒரு  குறிப்பு  வந்திருந்ததை  வாசகர்கள்  கவனித்திருக்கலாம். ஈரோடு  அர்பன்  பாங்கி  வெகு  காலம்  பார்ப்பனர்  ஆதிக்கத்திலிருந்து  வந்ததும், அது  பார்ப்பனர்  பாங்காகவே  இருந்து  வந்ததும்,  பார்ப்பனர்களுக்கும்,  பார்ப்பன  சிஷ்யர்களுக்கும்,  அடிமைகளுக்கும்  மாத்திரமல்லாமல்  மற்றவர்களுக்கு  அதில்  இடம்  கிடைப்பதே  கஷ்டமாய்  இருந்ததைப்பற்றி  அவ்வப்போது  பல  குறிப்புகள்  குடி  அரசில்  வந்து  கொண்டிருந்ததும்  யாவருக்கும்  தெரியும். இப்போது  சுமார்  4,5  வருஷ  காலமாக  சுயமரியாதை  இயக்கத்தின்  பயனாய்  பார்ப்பனரல்லாத  மக்கள்  விழிப்பெய்தி  பலதுறைகளிலும்  முன்னேற்றம்  அடைந்து  வருவது  போலவே  இந்த  அர்பன்  பாங்கி  விஷயத்திலும்  கண்  விழித்தும்  முன்னேற்றமடைந்து  பாங்கியின்  பயனை  பார்ப்பனரல்லாத  மக்களும்  பங்கு  வீதம்  இல்லாவிட்டாலும்  ஒரு  குறிப்பிடத்தகுந்த  அளவுக்காவது  அடைந்து  வருகிறார்கள்  என்பதைக்  கேட்க  பார்ப்பனரல்லாதார்  எல்லோருமே  மகிழ்ச்சி  அடையக்கூடும்.  நிற்க சமீபகாலமாய்  அதாவது  2,3  வருஷ  காலமாய்  ஈரோடு  அர்பன்  பாங்கி  டைரக்டறேடானது ...

சமதர்ம வெற்றி

சமதர்ம வெற்றி

நாம், சமதர்ம இயக்கத்திட்டம் அடி கோலி, சட்டசபைகளையும், °தல °தாபனங்களையும் கைப்பற்ற வேண்டும் என்றுதீர்மானித்தபொழுது நம் எதிரிகள் தம் பத்திரிகைகளில் “இந்த நா°திக சு.ம.காரர்களின் இத் திட்டத்தின் படி நமது நாட்டில் ஒரு சிறு °தானத்தையும், எந்த °தல °தாபனத்திலும் அடையமுடியாது என்பதையும் அப்படியடைய முயற்சிக் கும்படி நாம் பகிரங்கமாய் அறை கூவி அழைக்கின்றோம்” என்று எழுதின. ஆனால் அதன் பின், நமது தோழர்களால் பல ஜில்லா போர்டு, தாலுக்காப்போர்டு, முனிசிபால்டி முதலியவைகளில் பல °தானங்கள் கைப்பற்றப்பட்டதுடன் சென்ற மாதம் நமது இயக்கப் பிரமுகர் தோழர் பி.சிதம்பரம் திருவிதாங்கூர் ஸ்ரீமூலம் அஸம்பிளிக்கு போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டார். இப்பொழுது நமது இயக்கப்பிரமுகர்களில் ஒருவரும்புதுக்கோட்டை பெரும் கலகத்திற்கே காரண பூதரென்று சிலகாலம் தேசப் பிரஷ்டம் செய்யப்பட்டவரும் இளைஞரேறுமான தோழர் அட்வகேட் கே. முத்துசாமி வல்லதரசு பி.எ.பி.எல். மறுமுறையும் புதுக்கோட்டை சட்டசபைக்குஅபேட்ச கராக நின்று அதிகப்படியான ஓட்டுகளால் நமது மாற்றலர் தலைகவிழ வெற்றி பெற்றது கண்டு நாம்...

சர்க்கார்  காங்கிரசைவிட  மோசமானதா?

சர்க்கார்  காங்கிரசைவிட  மோசமானதா?

  பட்டேலின் “”ஸ்ரீ  முகம்” தோழர்  வல்லபாய்  பட்டேல்  அவர்கள்  சென்னை  மாகாண  காங்கிரஸ்காரர்கள்  தேர்தலில்  முனைந்து  நிற்பதைப்  பார்த்து  மகிழ்ச்சி  அடைவதாகவும்,  சென்னை  மாகாணக்காரர்கள்  காங்கிரஸ்காரருக்கே  ஓட்டு  செய்ய  வேண்டும்  என்றும்  அதற்கு  காரணம்  அடக்கு  முறையைக்  கண்டிக்க  வேண்டியும்,  வெள்ளை  அறிக்கையை  நிராகரிக்க  வேண்டியும்  காங்கிரஸ்காரர்களே  தெரிந்தெடுக்கப்பட  வேண்டும்  என்றும்  சொல்லுகிறார்.  மற்றும்  காங்கிரஸ்வாதி  அல்லாத  மற்றவருக்குக்  கொடுக்கும்  ஓட்டு  சர்க்காருக்கு  கொடுத்தது  போல்  ஆகுமென்றும்  சொல்லுகிறார்.  முதல்  விஷயத்தை  ஒப்புக்கொண்டாலும்  இரண்டாவது  விஷயம்  ஒப்புக் கொள்ளப்படாதது  என்பதுடன்,  அதில்  நாணையமும்  நியாயமும்  இல்லை  என்றும்  சொல்ல  வேண்டியிருப்பதற்கு  வருந்துகிறோம். ஏனெனில்  இந்த  நாட்டிலுள்ள  சுமார்  35  கோடி  மக்களில்  காங்கிரசில்  அங்கத்தினர்களாய்  இருக்கிற  சுமார்  ஒரு  பத்தாயிரம்  அல்லது  இருபதாயிரம்  மக்களைத்  தவிர  மற்றவர்கள்  எல்லாம்  சர்க்காரைச்  சேர்ந்தவர்கள்,  தேசத்துரோகிகள்  என்பது  தோழர்  பட்டேல்  அவர்களின்  ஸ்ரீமுகத்தின்  கருத்தாகிறது. தோழர்  ஷண்முகம்  அவர்கள்  விருதுநகரில்  தெரிவித்தது  போல் ...

பாராட்டுகிறோம்  “குச்சுக்காரி”கள் தொல்லை ஒழிப்பு

பாராட்டுகிறோம் “குச்சுக்காரி”கள் தொல்லை ஒழிப்பு

  ஈரோட்டில் குச்சுக்காரிகள் தொல்லை என்பதாகவும், விபசாரிகள் தொல்லை என்றும் தலையங்கங்கள் கொண்ட இரண்டு வியாசங்கள் “குடி அரசி”ல் உபதலையங்கங்களாக எழுதி அதைக் குறித்து போலீசாரும், முனிசிபாலிட்டியாரும் முயற்சியெடுத்து “விபசார ஒழிப்பு” சட்டத்தை ஈரோட்டிற்கு அமுலில் வரும்படி செய்யவேண்டுமென்று வேண்டிக் கொண்ட விஷயம் நேயர்களுக்குத் தெரியுமென்றே நினைக்கிறோம். அந்தப்படியே ஈரோடு முனிசிபல் கௌன்சிலில் கௌன்சிலர் தோழர் கேசவலால் அவர்களால் ஒருதீர்மானம் கொண்டுவரப்பட்டு தோழர் ஈ.எ°.கோவிந்தசாமி நாயுடு அவர்களால் ஆமோதிக்கப்பட்டு மற்ற எல்லா கௌன்சிலர்களாலும் ஏகமனதாய் ஆமோதிக்கப்பட்டு சேர்மென் அவர் களுடைய பலமான குறிப்பின்மேல் கவர்ன்மெண்டுக்கு அனுப்பப்பட்ட தில் கவர்ன்மெண்டார் அதை ஏற்று ஈரோட்டிலும், கோயமுத்தூரிலும் இந்தச் சட்டம் அமுலுக்குவரும்படி ஏற்பாடு செய்யப்பட்டு அடுத்த மாதம் அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் அமுலுக்குவர விளம்பரம் செய்யப் பட்டாய்விட்ட விபரம் நமக்குத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதுவிஷயமாய் ஈரோடு முனிசிபல் கௌன்சிலர்களையும், பிரத்தி யேகமாய் தோழர் கேசவலாலையும், சேர்மென் அவர்களையும் பாராட்டு வதுடன் அவர்களுக்கு நமது மனமார்ந்த...

பார்ப்பனீய  ஒழிப்புத்  திருநாள்

பார்ப்பனீய  ஒழிப்புத்  திருநாள்

  சுயமரியாதை  இயக்கத்தின்  சுமார்  10  வருஷகால  வேலையின்  பயனாய்  பார்ப்பனீயம்  ஒரு அளவுக்காவது  ஆட்டம்  கொடுத்துவிட்ட  விஷயம்  நாம்  எடுத்துக்  காட்ட  வேண்டிய  அவசியமில்லை  என்றே  கருதுகிறோம். ஆன  போதிலும்,  சமுதாய  விஷயங்களில்  பார்ப்பனீயம்  எவ்வளவு  பகிஷ்கரிக்கப்பட்டிருக்கின்றதோ,  அதில்  8ல்  ஒரு  பங்கு  கூட  அரசியல்  விஷயத்தில்  பகிஷ்கரிக்கப்பட்டிருப்பதாகச்  சொல்ல  முடியாது. அரசியலில்  ஜஸ்டிஸ்  கட்சி  பார்ப்பனர்களுக்கு  விரோதமாய்  வேலை  செய்வது  என்று  பெயர்  வைத்துக்  கொண்டிருந்தாலும்  அதன்  தலைவர்கள்  என்பவர்கள்  பலர்,  தனிப்பட்ட  முறையில்  தங்கள்  சுயநலத்திற்காக  எதையும்  விற்றுக்  கொண்டு  வந்திருக்கிறார்கள். தோழர்  முத்தையா  முதலியார்  அவர்கள்  வகுப்புவாரி  பிரதிநிதித்துவத்  திட்டம்  அரசாங்க  உத்திரவு  மூலம்  போட்ட  காரணத்திற்காகவே  பார்ப்பனர்கள்  அவரை  ஒழிக்கச்  செய்த  சதியில்  சில  ஜஸ்டிஸ்  கட்சிக்காரர்களும்  உள்  உளவாய்  இருந்ததோடு,  பார்ப்பனரல்லாதார்  கட்சியின்  பயனாய்  முதல்  மந்திரி  ஸ்தானம்  பெற்ற  தோழர்  முனிசாமி  நாயுடு  அவர்கள்  வகுப்புவாரிப்  பிரதிநிதித்துவத்திற்கு  விரோதமாய்  இருந்து  வந்ததுடன் ...