ஜஸ்டிஸ் கட்சி
ஜஸ்டிஸ் கட்சியைப் பற்றி பார்ப்பனர்கள் குறை கூறி வருவதையும், அதை “”வெட்டி 500 கஜ ஆழத்தில் புதைத்துவிட வேண்டு”மென்று தோழர்கள் சத்தியமூர்த்தி, ராஜகோபாலாச்சாரியார் முதலியவர்கள் சொல்லுவதையும் நமது பார்ப்பனரல்லாத மூடப் பாமர ஜனங்கள் நம்பிவிடுகிறார்கள் என்பது மாத்திரமல்லாமல் பார்ப்பனரல்லாதாரிலேயே படித்த பகுத்தறிவுள்ள மக்கள் என்பவர்களும் கூட அப்பார்ப்பனர்களுடன் கூடிக் கொண்டு குலத்துரோகிகளாய் நடித்து வருவதைப் பார்த்து வருகிறோம். பார்ப்பனரல்லாதார் இயக்கம் ஏற்பட்டு சுமார் 15 வருஷ காலமே ஆயிருந்தாலும் கூட அது ஏற்பட்ட பிறகு இந்த நாட்டுக்கு 100க்கு 97 பேர்களாய் உள்ள பார்ப்பனரல்லாதார் சமூகத்துக்கும், சிறப்பாக தாழ்த்தப்பட்ட சமூகத்துக்கும் எவ்வளவு பயன் அளித்து வந்திருக்கின்றது என்பதை உணர்ந்தால் பார்ப்பனர்களின் சூழ்ச்சியும், அவர்களுக்கு உதவி செய்யும் மூடர்களுடையவும் கூலிகளுடையவும், குலத்துரோகிகளுடையவும் யோக்கியதையும் சிறிதாவது விளங்காமல் போகாது. இதற்குச் சமீபத்தில் நடந்த ஒரு விஷயத்தை சின்ன உதாரணமாகக் காட்ட ஆசைப்படுகின்றோம். அதாவது இவ்வருஷம் போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் உத்தியோகத்துக்கு 87 பேர்கள் சர்க்காருக்கு தேவை ...
