Author: admin

உத்தியோகத் தடை

உத்தியோகத் தடை

  “ஜஸ்டிஸ் கட்சி “தலைவர்களுக்கு” சர்க்கார் இனி பெரிய உத்தியோகங்கள் கொடுக்கக்கூடாது” என்பதாக சேலம் ஜஸ்டிஸ் – சுயமரியாதைத் தொண்டர்கள் வேலைக்கூட்டத்தில் ஒரு தோழரால் ஒரு தீர்மானம் பிரேரிக்கப்பட்டது. அதற்கு அத்தீர்மானம் கொண்டு வந்தவர் சொன்ன காரணம் மிகவும் கவனிக்கத் தக்கதாகும். காங்கிரஸ்காரர்கள் ஜஸ்டிஸ் கட்சி பிரமுகர்களுக்கு நாட்டில் செல்வாக்கில்லையென்றும் அவர்கள் நாட்டுக்கு ஒன்றும் செய்யவில்லை யென்றும் அவர்களுக்கு உத்தியோகங்கள் கொடுக்கக்கூடாது என்றும் சொல்லுகிறார்கள் என்றும், தான் அதில் ஒரு திருத்தம் செய்து அதே தீர்மானத்தையே பிரேரேபிக்கிறதாகவும் சொன்னார். அதாவது, உத்தியோகம் கொடுக்கக் கூடாது என்பதில் தனக்கு ஆட்சேபணை இல்லை என்றும் அதற்கு ஆக சொல்லப்படும் காரணத்தை மாத்திரம் மாற்ற வேண்டுமென்கிறேன் என்றும் சொன்னார். காரணம் என்னவென்றால் எந்தக் கட்சியின் பேரால் ஜஸ்டிஸ் கட்சி பிரமுகர்கள் தலைவர்கள் என்பவர் பெரும் பெரும் பதவி பெற்றார்களோ அந்தகட்சிக்கு அவர்கள் நன்றி காட்டவில்லை. பல வழிகளில் துரோகம் செய்துவிட்டார்கள். பொது ஜனங்களையும் சர்க்காரையும் திருப்தி...

காங்கிரசும் வரி குறைப்பும்

காங்கிரசும் வரி குறைப்பும்

காங்கிரஸ்காரர்கள் சமீப தேர்தலில் வெற்றி பெற்ற உடன் சர்க்காரார் தங்களைக் கண்டு நடுங்குவதாக பித்தலாட்டப் பிரசாரம் செய்து வருகிறார்கள். எதில் நடுங்குகிறார்கள் என்று பார்ப்போம். சட்டசபையில் “ஏராளமான வெற்றி” “வெற்றிமேல் வெற்றி” “எதிர்பாராத வெற்றி” என்பதெல்லாம் பெற்ற பிறகே டில்லி சட்டசபையில் சர்க்காரார் 3 வித வரிகளை அதிகமாகப் போட்டிருக்கிறார்கள். அதாவது வெள்ளிக்கு வரி, சர்க்கரைக்கு வரி, தபாலுக்கு வரி. இந்த மூன்றில் காங்கிரஸ்காரர்கள் வெள்ளி வரியைப் பற்றி கவலைப்படவில்லை. சக்கரை, தபால் வரியைப்பற்றி கூப்பாடு போட்டார்கள். ஒன்றும் ஜபம் சாயவில்லை. பட்ஜட்டில் கைவைக்கவிட மாட்டேன்” என்று சர்க்கார் மெம்பர் சொன்னார். வைசிராய் பிரபு மேலொப்பம் போட்டுவிட்டார். உளி முறிந்த ஷுமேக்கர் மாதிரி காங்கிரஸ் மெம்பர்கள் தலை குனிந்து கொண்டு வாய்ச் சவடால் அடிக்கிறார்கள். ஆகவே காங்கிரஸ்காரர்களால் வரி குறைக்கப்படும் என்பதற்கு ஏதாவது அர்த்தமிருக்கிறதா என்று கேட்கிறோம். அசம்பிளியில் காங்கிரஸ் கò தலைவர் தோழர் தேசாய் காங்கிரஸ் தீர்மானத்தை வைசிராய் குப்பைத்...

பதவியும் “நிபந்தனை”யும்

பதவியும் “நிபந்தனை”யும்

  கவர்னர்களிடம் வாக்குறுதி பெற்றுக்கொண்டு காங்கிரஸ்காரர்கள் மந்திரி பதவிகள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதாக அ.இ. காங்கிரஸ் கமிட்டி தீர்மானித்துவிட்டது. ஆனால் எந்த மாதிரி வாக்குறுதி பெறுவது என்பதும் அத்தீர்மானத்திலேயே இருக்கிறது. அதாவது “காங்கிரஸ்காரர் சட்டத்திற்கு கட்டுப்பட்டு அரசியலை நடத்திக்கொடுக்கும்போது கவர்னர் எதேச்சாதிகாரம் செலுத்தக்கூடாது” என்கின்ற வாக்குத்தத்த ஒப்பந்தம் பெற்று அரசியலை நடத்திக் கொடுப்பது. இதில் இரண்டு விஷயம் யோசிக்க வேண்யடிதாகும். சட்டத்துக்கு கீழ்பட்டு அரசியல் சட்டப்படி நடந்து அரசியலை நடத்திக்கொடுக்கும்போது கவர்னர் எதேச்சா (விசேஷா) திகாரத்தை ஏன் உபயோகிப்பார் என்பது. ஒருசமயம் உபயோகிக்க வேண்டிய அவசியம் வந்து விட்டால் என்ன செய்வது என்று சொல்லப்படுமானால் அந்த மாதிரி சந்தர்ப்பங்களில் கவர்னருக்கு சொந்த அதிகாரம் ஏதாவது உண்டா? பொதுஜன நன்மைக்கோ பிரிட்டிஷ் அரசியல் தத்துவத்துக்கோ விரோதமில்லாமல் நடத்தவே அரசியல் சீர்திருத்தம் கட்டுப்பட்டதாகும். அம்மாதிரி காரியம் மந்திரிகள் செய்யாமல் இருக்கும் வரை கவர்னர் எதேச்சாதிகாரம் செலுத்த ஏன் முற்படுவார்? மந்திரிகள் செய்யும் எந்தக்...

பார்ப்பானுக்கு ஏன் ஆத்திரம் வராது?

பார்ப்பானுக்கு ஏன் ஆத்திரம் வராது?

  சென்ற மாதம் நடந்த சட்டசபை தேர்தலில் பார்ப்பனர்கள் தங்கள் கட்சிக்கு வெற்றி ஏற்பட வேண்டுமென்று உத்தியோகப் பார்ப்பான் முதல் கொண்டு எச்சில் கிண்ணம் கழுவும் பார்ப்பான் வரை பெண்டு பிள்ளை குடும்ப சமேதமாய் கட்டுப்பாடாய் அக்கரையாய் ஆத்திரமாய் அலைந்து திரிந்து வேலை செய்தார்கள் என்பதைப் புகழ்ந்து அச்சமூகத்தை மெச்சிப்பேசுவதே இன்றைய எந்தக் கூட்டத்தினுடையவும் முதல் பேச்சாய் இருக்கிறது. அது உண்மைதான். ஆச்சரியப்படத் தக்கதுதான். ஆனால் அதன் காரணம் அவர்களுடைய பொது நல சேவை என்று சொல்ல முடியுமா? அல்லது அதிகாரம், பதவி ஆகியவற்றின் ஆசை என்று சொல்லிவிட முடியுமா? என்றால் இரண்டும் அல்ல என்று தான் சொல்லுவோம். மற்றென்னவென்றால் பார்ப்பனர்களை நாம், (ஜஸ்டிஸ் கட்சியும் சுயமரியாதைக் கட்சியும்) அந்த நிலையில் கொண்டு வந்து வைத்து விட்டோம். அவர்களது வாழ்க்கையை சமூகத்துறையிலும் அரசியல் துறையினும் மிக்க நெருக்கடியானதாக ஆக்கிவிட்டோம். சகல தொழிலிலும் பிரவேசிக்க அவர்கள் துணிந்தும் நாம் ஒவ்வொன்றிலும் தடுத்து கஷ்டமாக்கி...

தோழர் C.S.R.க்கு “5 வருஷம்”

தோழர் C.S.R.க்கு “5 வருஷம்”

  காங்கிரஸ்காரர்கள் என்னும் நமது பார்ப்பனர்கள் எந்த அளவுக்கு ஆணவம் படைத்தவர்களாக ஆகிவிட்டார்கள் என்பதற்கு அவர்கள் அடிக்கடி போடும் கரணங்களும் பித்தலாட்டங்களும் வஞ்சகங்களும் பாமர மக்களை ஏமாற்றும் சூழ்ச்சிகளும் ஒருபுறமிருந்தாலும் தங்களை ஒரு கொடுங்கோன்மை பழிவாங்கும் தன்மையினராக நினைத்துக்கொண்டு அடக்கு முறைத் திட்டங்களையும் கடுமையான தண்டனைகளையும் கையாளுவதாக மக்களுக்குக் காட்டி மிரட்டி வருகிறார்கள். இதனால் மற்றவர்களைக் காங்கிரசுக்குள் – தங்களுக்குள் அடங்கி சரணாகதியாய் நடக்கச் செய்ய இது ஒரு சூழ்ச்சிமார்க்கம் என்று கருதிச் செய்கிறார்கள். இந்த சூழ்ச்சி எந்த அளவுக்குப் போய்விட்டது என்று பார்த்தால் கோயமுத்தூர் தோழர் சி.எஸ். ரத்தினசபாபதி முதலியார் அவர்களை “5 வருஷகாலத்துக்குப் பொது வாழ்வில் காங்கிரசில் எவ்வித ஸ்தானத்துக்கும் தகுதி இல்லை” என்பதாகத் தீர்மானித்து விட்டார்களாம். இன்று காங்கிரசில் தலைவராயிருக்கும் தோழர் ராஜகோபாலாச்சாரியார் அவர்கள் தோழர் சி.எஸ்.ஆர். அவர்கள் வீட்டிற்கு நடையாய் நடந்து கடிதத்தின் மேல் கடிதம் எழுதி அவரை சட்டசபை அபேக்ஷகரிலிருந்து பின் வாங்கிக் கொள்ளும்படி...

விதவை கர்ப்பம்  சூதகக்கட்டி ஆய்விட்டது”

விதவை கர்ப்பம் சூதகக்கட்டி ஆய்விட்டது”

    காங்கிரஸ்காரர்கள் நாம் கூறி வந்தபடியே நிபந்தனையில்லாமல் மந்திரிபதவி ஏற்றுக்கொள்ளுவது என்கின்ற முடிவுக்கு வந்துவிட்டதோடு 5 வருஷ காலத்துக்கும் மந்திரி பதவி தங்களை விட்டுப் போகாமல் இருப்பதற்கு சர்க்காருக்கு தாங்களாகவே நிபந்தனையும் கொடுத்து விட்டார்கள். அதாவது மந்திரிகள் அரசியல் சட்டதிட்டங்களுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும் – நடப்போமாகவும் என்பதை காங்கிரஸ் மூலமே தீர்மானித்து சர்க்காருக்கும் தெரிவித்து விட்டார்கள். சட்டசபை மெம்பர் ஆகி சர்க்கார் கட்டிடத்துக்குள் பிரவேசிக்கும்போதே பிரிட்டிஷ் அரசருக்கும் அரச சந்ததிக்கும் அரச சட்டங்களுக்கும் ஆக்கினைக்கும் கட்டுப்பட்டு பக்தி விசுவாசமாய் நடக்கிறேன் என்று (ராஜவிசுவாச) பிரமாணம் செய்து ஆகவேண்டும் என்பது ஒருபுறமிருந்தாலும் அதற்கு காங்கிரஸ்காரர்கள் ஒரு மாதத்திற்கு முன் ஒரு வியாக்கியானம் செய்தது. அதாவது “மனதில் ஒன்றை வைத்துக்கொண்டு வாயில் ஒரு விதமாய் பிரமாணம் செய்தால் அந்த பிரமாணம் உண்மையான பிரமாணமாகாது” என்று வியாக்கியானம் செய்ததால் சர்க்கார் எங்கு தப்பிதமாய் நினைத்துக்கொண்டு மந்திரி சபை அமைக்க தங்களை கூப்பிடாமல் விட்டுவிடுவார்களோ...

காங்கிரசும் பார்ப்பனரல்லாதாரும்

காங்கிரசும் பார்ப்பனரல்லாதாரும்

– “ஜஸ்டிஸ்” எழுதுவது   தோழர் சி.ஆர். ரெட்டி அவர்களிடம் நமக்கு அனுதாபம் இல்லை. அவரும் நமது அனுதாபத்துக்கு உரியவரல்ல. ஆனால் அவரால் வெளிப்படுத்தப்பட்ட கடிதப்போக்குவரத்தானது காங்கிரசில் உள்ள பார்ப்பனரல்லாதாரின் கதியை நிச்சயிக்க மிகவும் முக்கியமான ஆதாரமாகும். நாம் வெகு காலமாகவே அதாவது நமது கட்சி ஆரம்பித்த காலம் முதல்கொண்டே நமது நாட்டில் பார்ப்பனர்கள் “தேசீயம்” “தேசாபிமானம்” “சுதந்திரப்போர்” என்று கூப்பாடு போட்டு வந்ததெல்லாம் பார்ப்பன சமூகத்தின் முன்னேற்றத்திற்கும் அச்சமூகம் மற்ற சமூகத்தை அடக்கி ஆள்வதற்கும் மற்ற வகுப்பார் சமீப காலமாக அரசியலிலும் சமூகத்துறையிலும் அடைந்து வரும் நலங்களை ஒழித்து பழய பார்ப்பனீய ஆட்சியை ஏற்படுத்தவும் தானே ஒழிய வேறில்லை என்று கூறி வந்திருக்கிறோம். ஜஸ்டிஸ் கட்சியானது பார்ப்பனர்களின் இவ்வெண்ணங்கள் நிறைவேறாமலிருக்கும்படியும் பார்ப்பனர்களின் ஏகபோக உரிமையை அழித்து அவர்களது ஆதிக்கத்திலிருந்து மக்கள் விடுதலை அடையும்படியும் தன்னால் ஆனதையெல்லாம் செய்து வந்திருக்கிறது என்றாலும் அதற்கு பார்ப்பனரல்லாத மக்கள் போதுமான ஆதரவும் ஒத்துழைப்பும் அளித்து...

என்ன?

என்ன?

“பார்ப்பனரல்லாதார் கட்சி தோற்று விட்டது” என்று நீலிக்கண்ணீர் விடும் தோழர்களே! தலைவர்களையும், பாடுபட்டவர்களையும் குறை கூறும் தோழர்களே!! நீங்கள் அக்கட்சி நலத்துக்கு ஆக என்று என்ன செய்தீர்கள்!!! ஆங்கிலம் கற்று உத்தியோகத்திலிருக்கும் பார்ப்பனரல்லாதாரும் வக்கீல் பார்ப்பனரல்லாதாரும் அக்கட்சியின் பேரால் மனிதர் என்று மதிக்கப்பட்டு பயன் பெற்றவர்களும் “ஜஸ்டிஸ்” பத்திரிகைக்கு சந்தாதாரராகிப் படித்திருப்பீர்களா? அல்லது வெட்கப்படும் தமிழ் மக்களாவது ஒவ்வொருவரும் “குடி அரசு” “விடுதலை” வாங்கி படித்திருப்பீர்களா? அப்படியானால் “ஜஸ்டிஸ்” பத்திரிகைக்கும், “விடுதலை” வார இருமுறை பத்திரிகைக்கும், “குடி அரசு”க்கும் முறையே N 2500, 1000, 250 ரூ.வீதம் நஷ்டம் ஏற்படுவானேன்? பார்ப்பனர்களைப் பாருங்கள், அவர்கள் முயற்சியை பாருங்கள், அவர்கள் பத்திரிக்கைகளை அவர்கள் எப்படி மதிக்கிறார்கள் ஆதரிக்கிறார்கள், பாருங்கள். ஆகவே கட்சி ஏன் ஜெயிக்கவில்லை? யாரால்? என்பதை இப்போதாவது உணருங்கள். ஆத்திரப்படுவதில் பயனில்லை. இப்படிக்கு கட்சியால் கடுகளவும் பயன் பெறாதவன். குடி அரசு – வேண்டுகோள் – 14.03.1937

காங்கிரஸ்காரர்களின் சமத்துவம்

காங்கிரஸ்காரர்களின் சமத்துவம்

– நேரில் கண்டோன் ஈரோடு தாலூகாவில் சென்னை சட்டசபைக்கு காங்கிரஸ் அபேட்சகராக நின்று வெற்றி பெற்ற தோழர் கே.எஸ். பெரியசாமி அவர்களுக்கு ஈரோடு காங்கிரஸ் தலைவர் ஒரு விருந்து நடத்தினார். அவ்விருந்தில் பார்ப்பனரைக் கொண்டே சமையல் செய்யப்பட்டது. அவ்விருந்திற்கு பார்ப்பன வக்கீல்களும், சில பார்ப்பனரல்லாதார்களும் சென்றிருந்தார்கள். பார்ப்பனர்களுக்குத் தனி யிடமும், பார்ப்பனரல்லாதார் களுக்கு தனியிடமுமாக அமைத்து சாப்பாடு போடப்பட்டது. இதையறிந்த சில பார்ப்பனரல்லாத மானமுள்ள வாலிபர்கள் வெறுப்புக் கொண்டு வெளியில் வர ஆரம்பித்தார்கள். பின் அவர்களை சமாதானம் செய்யப்பட்டது. மேலும் இந்த விருந்திற்கு ஒரு முஸ்லீம் தோழரும், ஒரு பார்ப்பன தோழரும் ஜோடியாகச் சேர்ந்து சென்றார்கள். விருந்து காரியங்களை கவனித்து வந்த மற்றொரு பார்ப்பனரல்லாத காங்கிரஸ் தலைவர் அந்த பார்ப்பன தோழரை நோக்கி “நீ அங்கே போய் சாப்பிடு” “நீ இங்கே போய் சாப்பிடு” என்று தனித் தனியான இடத்தைக் காண்பித்தார். அந்த முஸ்லீம் தோழர் வெற்றி பெற்ற காங்கிரஸ் சட்டசபை...

காங்கிரஸ் சாதித்தது

காங்கிரஸ் சாதித்தது

– வம்பளப்போன் காங்கிரஸ்காரர்கள் இந்திய சட்டசபைக்குப் போன பிறகு எவ்வளவு வரியைக் குறைத்தார்கள், என்ன காரியம் சாதித்தார்கள் என்பதை ஓட்டர்கள் அறிந்திருந்தால் அல்லது ஓட்டர்களுக்கு அறியும் சக்தி இருந்திருந்தால் அல்லது ஓட்டர்கள் அறியும்படி யாராவது செய்திருந்தால் சமீப தேர்தலில் பெரும்பான்மை ஓட்டர்கள் இம்மாதிரி தேசத்துக்குக் கேடு சூழத்தக்கதும் முட்டாள் தனமானதுமான காரியத்தைச் செய்திருக்கமாட்டார்கள். எப்படியோ மோசம் போய் விட்டார்கள். அயோக்கியர்களாலும், காலிகளாலும், கூலிகளாலும் ஏமாற்றப்பட்டு விட்டார்கள். அதைப் பற்றி இப்போது கவலைப்படுவதில் பயனில்லை. காங்கிரஸ்காரர்கள் இந்திய சட்டசபைக்குப் போனபின்பு வரிகள் மொத்தத்தில் பல துறைகளில் அதிகப்படுத்தப்பட்டதே தவிர காங்கிரஸ்காரர்களால் குறைவு படுத்தப்பட்டது என்று சொல்வதற்கு ஆதரவு இல்லை. சென்ற முந்தின வருஷங்களுக்கு அரிசி முதலிய உணவுப் பொருள்களுக்கு வரி போட்டது முதலிய காரியங்கள் ஒருபுறமிருக்க இப்போதும் தபால் இலாக்காவில் சில அய்ட்டங்களில் வரிகள் ஒன்றுக்கு இரண்டாய் மூன்றாய் அதிகப்படுத்தப்பட்டு விட்டது. அதாவது பர்மாவுக்கு – ரங்கூன் முதலிய ஊர்களுக்கு முன் கார்டுக்கு...

காங்கிரஸ்காரர்கள் பக்தி விசுவாசப் பிரமாணங்கள்

காங்கிரஸ்காரர்கள் பக்தி விசுவாசப் பிரமாணங்கள்

  சட்ட சபைகளுக்கு வெற்றிபெற்ற காங்கிரஸ்காரர்கள் இரண்டு பிரமாணங்கள் செய்ய வேண்டியதாக ஏற்படும் போல் இருக்கிறது. அதாவது:- தேசபக்திக்கும் காங்கிரஸ் கட்டுதிட்ட பக்திக்கும் ஒரு பிரமாணம் டெல்லியில் கூடப் போகும் கன்வென்ஷன் என்பதில் செய்ய வேண்டுமாம். ராஜாவுக்கும் ராஜ சந்ததிக்கும் அரசாங்கத்திற்கும் அரசாங்க சட்ட திட்டத்திற்கும் கட்டுப்பட்டு பக்தி விசுவாசமாய் நடந்துகொள்ளுவதாக ஒரு பிரமாணம் சர்க்கார் கோட்டைக்குள் சென்று செய்யவேண்டுமாம். ஆகவே இந்த இரண்டு பிரமாணமும் ஒன்றுக்கொன்று முரணானதாகும். இரண்டையும் காங்கிரஸ்காரர்கள் செய்வதாய் இருந்தால் எதாவது ஒன்றை “சும்மா வெறும் சத்தியம்” – “பொய் சத்தியம்” – “மனதுக்குள் வேறு ஒன்றை நினைத்துக் கொண்டு ஏமாற்றுவதற்கு ஆக செய்யப்பட்ட சத்தியம்” என்று (சைவப் பெரியார்களில் சுந்தரமூர்த்தி செய்தது போல்) கருதி செய்யப் போகிறார்களோ என்னமோ தெரியவில்லை. எப்படி இருந்தாலும் ஒரு சத்தியம் மாத்திரம் உண்மையானதும் உறுதியானதுமாய் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அதாவது சர்க்காரையும் ஏமாற்றி காங்கிரசையும் ஏமாற்றி மக்களையும் ஏமாற்றி தேசத்தையும்...

வேடிக்கை அல்லாத பேச்சு

வேடிக்கை அல்லாத பேச்சு

– சித்திரபுத்திரன்   “ராஜகோபாலாச்சாரிக்கும் ஜின்னாவுக்கும் வித்தியாசமில்லை”யாம் உண்மைதான், ஜின்னா முதலில் முஸ்லீம் சமூக நன்மை அப்புறம் தேசீயம் என்கிறார். ராஜகோபாலாச்சாரியும் முதலில் பார்ப்பன ஆதிக்கம், அப்புறம் தேசீயம் என்கிறார். இது தெரிந்துதான் ஜின்னா சொன்னார், ஆச்சாரியும் ஏற்றுக்கொண்டார்; தேசீயப் பத்திரிகைகளும் மேலொப்பம் செய்தன. ராஜபக்தி கூடாது பறையனும் பார்ப்பானும் கருப்பப் பறையன்:- ராஜ பக்திக்கு வருகிறாயா போகலாம். சுப்பையர்:- போன வாரம்தான் “ராஜாவையே விரட்டி விடுவது” என்ற பிரச்சினை மீது தேர்தல் நடந்து எலக்ஷனில் வெற்றிபெற்றுவிட்டோமே. இப்பொழுது வந்து ராஜபக்திக்குக் கூப்பிடுகிறாயே உனக்குப் புத்தி இல்லையா? கரு:- அடே பைத்தியமே! ராஜாவிடம் பக்தி காட்ட நான் கூப்பிட வில்லை. “ராஜ பக்தி” என்று நம்ம ஊரில் ஒரு சினிமா நடக்கிறது உனக்குத் தெரியாதா? அதற்குக் கூப்பிட்டேன். மகா பதிவிரதை மாதிரி பேசுகிறாயே. சுப்:- அதுகூட பார்க்கக் கூடாது. அந்தப் பேச்சே காதில் விழுகக் கூடாது தெரியுமா? கரு:- சரி, சரி....

முஸ்லீம் ஜட்ஜி

முஸ்லீம் ஜட்ஜி

சென்னை ஐகோர்ட்டுக்கு ஒரு முஸ்லீம் ஜட்ஜியை நியமித்திருக் கிறார்கள். ஹைகோர்ட் மூடி திறக்கப்பட்டவுடன் உத்தியோகத்தை ஏற்றுக்கொள்ளுவார். சர். அப்துல் ரகீமுக்குப் பின் சுமார் 20-வருஷ காலமாக சென்னை ஹைகோர்ட்டுக்கு முஸ்லீம் ஜட்ஜி நியமிக்கப்படவே இல்லை. சுமார் 20-வருஷம் பொறுத்து இப்போதுதான் சர். அப்துல் ரஹிமான் என்பவர் நியமிக்கப்பட்டிருக்கிறார். வகுப்புவாரி பிரதிநிதித்துவம் என்பது கேட்கப்பட்ட பின்பும் குறிப்பாக முஸ்லீம்கள் முஸ்லீம் லீக் ஆரம்பித்து அதன் மூலம் தாங்கள் சமூக உரிமைகளை வலியுறுத்த ஆரம்பித்த பிறகும் தான் நம் தமிழ்நாட்டில் மாத்திரம் அல்லாமல் இந்தியா எங்கும் முஸ்லீம்கள் அரசியலில் உரிமை பெற்று ஹைகோர்ட் ஜட்ஜி கவர்னர் முதலிய பதவிகள் பெற்று அதன் மூலம் நாட்டுக்கும் அச்சமூகத்திற்கும் சேவை செய்யும் சந்தர்ப்பம் பெறவும் தகுதி உள்ளவர்கள் பயன்பெறவும் சவுகரியம் ஏற்பட்டது என்பதை எவரும் மறுக்கமாட்டார்கள். வகுப்பு உரிமை தேசீயத்துக்கு விரோதமென்றும் வகுப்பு உரிமையை ஒழித்தாலொழிய தேசீயம் உருப்படாதென்றும் பார்ப்பனர்கள் கூப்பாடு போடுகிறார்கள். காங்கிரசையும் வகுப்பு உரிமை...

முஸ்லீம்கள் என்ன செய்யப்போகிறார்கள்?

முஸ்லீம்கள் என்ன செய்யப்போகிறார்கள்?

  முஸ்லீம்களுக்கு அனேகமாய் மதம் வேறு, சமூகம் வேறு, தேசம் வேறு என்கின்ற வித்தியாசம் கிடையாது. மூன்றையும் வேறு வேறாய்க் கருதும்படியான நிலை ஏற்பட்டு விட்டால் முதலில் மதத்தையும் பிறகு சமூகத்தையும் அப்புறம் தான் தேசத்தையும் கருதுவார்கள். அவர்களுக்கு மதம் ஒன்றேயாகும்; சமூகம் ஒன்றேயாகும்; தேசம் பலவாகும். துருக்கி, ஈஜிப்ட், பர்ஷியா, ஈராக், ஆப்கானிஸ்தானம் முதலிய பல தேசங்கள் உண்டு. கடவுளும் நபியும் ஒன்றேயாகும். இஸ்லாம் சமூகம் ஒன்றேயாகும். இஸ்லாம் சமூகத்துக்கு ஆபத்துண்டாக்கக்கூடிய அல்லது கேடுண்டாக்கக்கூடிய நிலையில் தேசத்தை இந்தியாவைக் காப்பாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டால் சமூகத்தைக் காப்பார்களே ஒழிய தேசத்தை லஷியம் செய்யமாட்டார்கள். அவர்கள் சமூகம் முன்னேறி வருவதற்கும் அவர்கள் மதம் தலை சிறந்து விளங்குவதற்கும் அதுதான் காரணம். அப்படிப்பட்டவர்கள் இன்று இந்தியாவில் ஜன சமூகத்தில் சுருங்கின எண்ணிக்கை உள்ளவர்களாய் இருந்தும் எப்படிப்பட்ட நெருக்கடியிலும் சமூகத்தை விட்டுக் கொடுக்காததாலேயே அவர்கள் தலை நிமிர்ந்து நடக்கிறார்கள். சமபங்கு – சில விஷயங்களில்...

வெற்றி – தோல்வி

வெற்றி – தோல்வி

  சட்டசபைத்தேர்தல் நடந்து இரண்டு வாரம் ஆகிவிட்டது. காங்கிரசுக்கு 5, 6 மாகாணங்களில் தோல்வியும் 5, 6 மாகாணங்களில் எண்ணிக்கையில் வெற்றியும் ஏற்பட்டிருக்கிறது. தோல்வி அடைந்த மாகாணங்களில் காங்கிரஸ் மந்திரிசபை ஏற்றுக்கொள்ளுவதில்லை என்கின்ற முடிவுக்கு வந்துவிட்டார்கள் காரணம் இவர்கள் (காங்கிரஸ்காரர்கள்) ஆசைப்பட்டாலும் முடியாது. ஆகவே இவ்விஷயத்தில் காங்கிரஸ்காரர்கள் பெரியதொரு “தியாகம்” செய்து விட்டார்கள். அதுமாத்திரமல்லாமல் தோல்வி அடைந்த மாகாணங்களில் ஏற்படப்போகும் மந்திரிகளுக்கு எதிர்க்கட்சியில் இருந்து மந்திரி சபை நடக்காமல் தடைமுறைகளை கையாளப் போகிறார்களாம். இதுவும் வெகுகஷ்டப்பட்டு கண்டு பிடித்த சங்கதியாகும். இல்லாவிட்டால் இவர்கள் தோல்வியுற்ற சபைகளில் வேறு என்னதான் செய்ய முடியுமோ தெரியவில்லை. ~subhead காங்கிரஸ் தடுமாற்றம் ~shend நிற்க, வெற்றி பெற்ற மாகாணங்கள் என்பவைகளில் என்ன செய்வது என்பதுபற்றி தலைவர்கள் முதல் வாலர்கள் வரை தைரியமாய் ஒன்றும் வெளியில் சொல்லமுடியாமல் ஆளுக்காள் உளறிக்கொட்டிய வண்ணமாக இருக்கிறார்கள். ஆனால் அந்தரங்கத்தில் அவரவர்கள் உள் எண்ணத்தில் தோழர் ஜவஹர்லால் முதல் எல்லோரும் ஆதிமுதற்கொண்டே...

அஞ்சேல்! அஞ்சேல்!! அஞ்சேல்!!!

அஞ்சேல்! அஞ்சேல்!! அஞ்சேல்!!!

  எந்த நாட்டிலும் எந்தக் கட்சியும் யுகாந்த காலம் வரை அதிகார பதவி வகித்ததில்லை. எந்தக் கட்சிக்கும் பொதுஜன கோரிக்கைகளை யெல்லாம் சரிவர நிறைவேற்றி வைக்க முடியாது. ஆகவே அதிகார பதவி வகிக்கும் கட்சி மீது பொதுஜனங்களுக்கு சில காலத்துக்குப் பிறகு அதிருப்தி ஏற்படுதல் இயல்பே. இந்நிலைமை எல்லாக் கட்சிகளுக்கும் பொதுவானதே. பிரிட்டனிலே மிகவும் முற்போக்குக் கட்சி எனக் கூறப்படும் தொழிற் கட்சி தோழர் ராமஸே மாக்டோனால்டு தலைமையில் அதிகார பதவி ஏற்றது. கொஞ்ச காலம் அக்கட்சி செல்வாக்குப் பெற்றும் இருந்தது. ஆனால் அந்தச் செல்வாக்கு நெடு நாள் நிலை நிற்கவில்லை. வெகு சீக்கிரம் மறுதேர்தலை நடத்தும் நிலைமை ஏற்பட்டது. தேர்தலிலே தொழிற்கட்சியார் முறியடிக்கப்பட்டார்கள். பிற்போக்குக் கட்சி எனக் கூறப்படும் கன்சர்வேட்டிங் கட்சியார் மெஜாரட்டி பெற்று அதிகார பதவி ஏற்றார்கள். தொழிற்கட்சித் தலைவர் தோழர் ராம்ஸே மாக்டோனால்டு தமது கட்சியை நட்டாற்றில் விட்டுவிட்டு கன்சர்வேட்டிங் கட்சியாரிடம் சரணாகதியடைந்தார். இன்று தொழிற்கட்சி மைனாரிட்டி...

காங்கரஸ் வாலாக்கள் திகைப்பு

காங்கரஸ் வாலாக்கள் திகைப்பு

  “காங்கரஸே இந்தியா, இந்தியாவே காங்கரஸ்” எனப் பொக்கம் பேசும் காங்கிரஸ் வாலாக்களுக்கு 11- மாகாணங்களில் 6- மாகாணங்களில் தான் இந்த தேர்தலில் மெஜாரட்டி கிடைக்குமாம். அந்த மெஜாரட்டியுங்கூட மாய மெஜாரட்டிதான். மந்திரி சபை அமைக்கும் தருணம் வரும்போதோ அல்லது மந்திரிசபை அமைத்துச் சில காலத்துக்குப் பிறகோ அந்த மெஜாரட்டிகள் மைனாரட்டிகளாகி விடவும் கூடும். ஏனெனில் தற்கால காங்கரஸ் ஒரு நெல்லிக்காய் மூட்டை. தேர்தலில் பேப்பர் மெஜாரட்டி காட்டி நாட்டை ஏய்க்கும் பொருட்டு காங்கிரஸ் பற்றே அணுவளவும் இல்லாதவர்களை காங்கரஸ் பிரகஸ்பதிகள் காங்கரசில் சேர்த்திருக்கிறார்கள். புதுச் சட்ட சபைகள் உருவான பிறகு ஏதேனும் நெருக்கடி ஏற்பட்டு சட்டசபை மெம்பர்கள் எல்லாம் ராஜிநாமாச் செய்ய வேண்டுமென்று அகில இந்திய காங்கரஸ் காரியக் கமிட்டியார் உத்தரவு பிறப்பித்தால் தற்காலக் காங்கரஸ் பக்தர்களாக விளங்கும் மாஜி ராவ்பகதூர்களும், மாஜி திவான்பகதூர்களும் அந்த உத்தரவுக்குக் கீழ்ப்படி வார்களா? அவர்கள் வீணாகவா திவான்பகதூர் பட்டங்களையும், ராவ்பகதூர் பட்டங்களையும் துறந்தார்கள்?...

ஆரம்பமுதல் ஜஸ்டிஸ் கட்சி

ஆரம்பமுதல் ஜஸ்டிஸ் கட்சி

  நாட்டின் முன்னேற்றத்திற்கே உழைத்திருக்கிறது ஒருநாளும் நாட்டைக் காட்டிக் கொடுத்ததில்லை மந்திரி கனம் செட்டிநாட்டுக் குமாரராஜா அவர்களின் வீரமுழக்கம் ~cmatter தோழர் ராஜகோபாலாச்சாரியாரின் வகுப்புச் சலுகை வெளியான மர்மம் காந்தியாரையும் காங்கிரசையும் தாக்கியவருக்கு ஓட்டுக்கொடுக்கவேண்டுமாம் காங்கிரஸ் வாக்கும் தற்கால போக்கும் காங்கிரஸ் இதுவரை தேசத்திற்கோ அல்லது குறிப்பாக நம் மக்களுக்கோ உருப்படியான காரியம் இன்ன செய்திருக்கிறது, செய்யப்போகிறது, அதற்கு திட்டங்கள் இன்னின்னவைகள் என்று பொது மக்களுக்கு எடுத்துக்காட்டி தங்கள் கட்சி அபேட்சகர்களுக்கு ஆதரவு தேடுவதற்கு பதிலாக ஜஸ்டிஸ் கட்சி தேசத்துரோக கட்சியென்றும், அதைச் சேர்ந்த பிரமுகர்கள் சுயநலமிகள், உத்தியோக வேட்டைக்காரர்கள் என்று சொல்லியும் வந்திருக்கிறார்கள். காங்கிரஸ்காரர்களில் சிலர் நினைத்துக்கொண்டிருப்பதுபோல் புதிய சீர்திருத்தத்தை தகர்த்துவிடப் போவதில்லை. சபையில் நுழைந்தவுடன் ராஜவிஸ்வாசப்பிரமாணம் செய்துகொண்டு சர்க்காரின் சட்டங்களுக்குக் கட்டுப்பட்டு அடங்கி இருக்கப்போகிறார்கள். ஏன் அவ்வளவு தூரம் போக வேண்டும்? தோழர் சத்தியமூர்த்தியாரையே எடுத்துக் கொள்ளுங்கள். அவர் இந்திய சட்ட சபையில் ராஜவிஸ்வாசப் பிரமாணம் செய்யவில்லையா? ஏமாளிகளாகிய...

தோல்வி ஆனால் நன்மைக்கே

தோல்வி ஆனால் நன்மைக்கே

  தேர்தல் தொல்லை ஒழிந்தது போலவே தேர்தல் முடிவுபற்றிய கவலையும் ஒழிந்தது. எண்ணிக்கையில் காங்கிரஸ் பெருமை அடித்துக் கொள்ளத்தக்க அளவுக்கு அதிகமாக அடைந்து விட்டது. ஜஸ்டிஸ் கட்சித் தலைவர்கள் கட்சிப் பிரசாரமில்லாமலும் எதிரிகளால் சுமத்தப்பட்ட ஈனப்பழிகளும் மனதறிந்து பொய்ப் பிரசாரங்களும் பாமரமக்கள் மனதைக் கெடுத்து விடுமே என்கின்ற கவலையே சிறிதும் இல்லாமல் அலட்சியமாயும் ஆணவமாயும் இருந்து வந்த பலனை அடைந்து விட்டார்கள் என்றாலும் நிலைமையில் எவ்வித மாறுதலும் ஏற்பட்டு விட்டதாக யாரும் சொல்ல முடியாது. ஜஸ்டிஸ் கட்சியின் கொள்கைகளுக்கு எவ்வித கெடுதியும் வந்து விட்டது என்றோ, இனிமேலாகிலும் வந்துவிடும் என்றோ யாரும் யோசிக்கவேண்டிய அவசியமில்லாத நிலைமையிலேயே இருக்கிறோம். எப்படியெனில் ஜஸ்டிஸ் கட்சியின் முக்கியமான கொள்கை எல்லாம் அரசியலில் வகுப்பு வாரிப்பிரதிநிதித்துவமும் சமுதாயத்துறையில் சமத்துவமும் அடையவேண்டும் என்பதேயாகும். மற்றபடி அரசியல் சுதந்திர விஷயத்தில் சாத்தியமான அளவுக்கு எவ்வளவு அதிதீவிரமான கொள்கையானாலும் அடைய ஆவலாகத்தான் இருந்து வருகிறது. ஆகவே வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தில் தக்க அளவுக்கு...

ஈணூ. நடேசன் நலிந்தார்

ஈணூ. நடேசன் நலிந்தார்

  டாக்டர் சி. நடேச முதலியார் நலிந்தார் என்ற சேதி கேட்டு நம்நாட்டில் திடுக்கிடாத பார்ப்பனரல்லாத தமிழ் மக்கள் எவரும் இருக்கமாட்டார்கள். அவரது சேவையைப் பாராட்டி அவருக்கு நன்றி விஸ்வாசம் காட்டக் கடமைப்படாத தமிழ் மகன் எவனும் எந்நாட்டிலுமிருக்கமாட்டான். தோழர் நடேச முதலியாரிடம் உள்ள அருங்குணங்களில் சூது வஞ்சகம் அற்ற தன்மையே முதலாவதும் இரண்டாவதும் மூன்றாவதுமாகும். சூதற்றவனும் வஞ்சகமற்றவனும் உலகப்போட்டியில் ஒரு நாளும் வெற்றிபெறமாட்டான் என்கின்ற தீர்க்கதரிசன ஆப்த வாக்கியத்திற்கு எடுத்துக்காட்டாக இருந்த நடேசன் அவர்கள் தனது தொண்டிற்கும் ஆர்வத்திற்கும் உண்மையான கவலை கொண்ட ஊக்கத்திற்கும் உள்ள பலனை தன் சொந்தத்துக்கு அடையாமல் போனதில் நமக்கு சிறிதும் ஆச்சரியமில்லை. ஏன்? தனக்கென வாழாதார் தான் பிறர்க்கு என வாழ முடியும். ஆதலால் நடேசன் அவர்களால் தமிழ் மக்களுக்கு எண்ணரிய நன்மைகள் ஏற்பட்டிருப்பதை அவரது எதிரிகளும் மறுக்கார். சென்னை வாசிகள் யாரும் கோபித்துக் கொள்ளக்கூடாது என்கின்ற வேண்டுகோளின் மீது ஒருவார்த்தை சொல்லுகிறோம். அதாவது...

தேர்தல் கொந்தளிப்பு முடிந்து விட்டது

தேர்தல் கொந்தளிப்பு முடிந்து விட்டது

  சாகப்போகும் காயலாக்காரனுக்கு கோமாரி ஜன்னி கண்டால் பத்துப்பேர்கள் போட்டு அமிழ்த்தினாலும் திமிரிக்கொண்டு எழுந்திருக்கும் படியான பலம் ஏற்படுவதுண்டு. அதுபோல் காங்கிரஸ் கூப்பாட்டுக்கும் காலித்தனங்களுக்கும், பொய் பித்தலாட்டங்களுக்கும் போலி ஆணவங் களுக்கும் சாவுகாலம் நெருங்கிவிட்டது. இன்னும் சில நாளில் பிணமாகி சுட்டுக்கொளுத்தப்பட்டு சாம்பலாக்கி கரைத்து விடப்படக்கூடிய நிலை காங்கிரசுக்கு எய்திவிட்டது. காங்கிரஸ்காரர்கள் தங்களால் ஆன சகல காரியங்களையும் செய்து பார்த்து விட்டார்கள். காங்கிரஸ் தேர்தல் கொந்தளிப்பு அடங்கி முடிவு தெரிவதற்கு முன்னாலேயே காங்கிரஸ் கொள்கையும் சவடால் வீரமும் செத்து அரசாங்கத்தின் காலுக்குள் நுழைந்து “வார்த்த அளவுக்குக் கஞ்சி வாருங்கள்” என்று இரு கை நீட்டிக் கெஞ்சும் நிலையைக் கொண்டுவந்து விட்டது என்பதில் யாரும் இனிச் சிறிதும் சந்தேகம் கொள்ள வேண்டியதில்லை. இதை ஆரம்ப காலத்திலிருந்தே நாம் எதிர்பார்த்ததே ஒழிய இந்த நிலை நாம் திடீரென்று மகிழ்ச்சி அடையத்தக்க சேதியல்ல. பட்டம் விடுதல், பள்ளி விடுதல், பதவி விடுதல், சட்டசபை விடுதல், சீர்திருத்தத்தைத்...

தோழர் சின்னயா பிள்ளை காங்கிரசிலிருந்து ஏன் விலகினார்?

தோழர் சின்னயா பிள்ளை காங்கிரசிலிருந்து ஏன் விலகினார்?

– ஒரு நிருபர்   தோழர் சி. ராஜகோபாலாச்சாரியார் காங்கிரசின் கட்டுப்பாட்டுக்கு விரோதமாய் காங்கிரசு அல்லாதவர்களுக்கு ஓட்டுப்பிரசாரம் செய்ததால் தனக்கு காங்கிரசில் இருக்க பிடிக்கவில்லை என்று சொல்லி விலகிவிட்டார். ஆச்சாரியார் தோழர் டி.ஆர். வெங்கிட்டராம சாஸ்திரியாருக்கு ஒரு ஓட்டுப்போடுங்கள் என்று பிரசாரம் செய்தார். காங்கிரசுக்கு மாறாக வேறு பல அபேட்சகர்கள் நிற்கும் போது காங்கிரஸ் ஓட்டு வேறு அபேட்சகரை பலப்படுத்தினால் காங்கிரஸ் அபேட்சகர் பலவீனமடைய முடியாதா என்று கேட்டார். ஒவ்வொருவருக்கு மேல் சபைக்கு மூன்று ஓட்டுகள் இருந்தாலும் அந்த மூன்றையும் காங்கிரசு அபேட்சகரில் யார் பலவீனமானவர்களோ அவருக்கு ஒரு ஓட்டு அதிகமாய் போடும்படி செய்யாமல் அதை சாஸ்திரியாருக்கு போடும்படி சொன்னால் வேறு அபேட்சகரான தோழர் சாமியப்ப முதலியார் அவர்கள் மூன்று ஓட்டுகளும் தனக்கே போடும்படி சிலரைப் பிடித்து சரி செய்து கொண்டால் தனது சொந்த ஓட்டுக்களுடன் காங்கிரஸ் ஓட்டும் சேர்ந்து சாஸ்திரியார் வெற்றி பெறுவதுதான் நிச்சயமாகுமே தவிர மற்ற காங்கிரஸ் அபேட்சகரில்...

திருத்துறைப்பூண்டியில் ஈ.வெ.ரா.  சாமியப்பாவுக்கு வாழ்த்துக்கூட்டம்

திருத்துறைப்பூண்டியில் ஈ.வெ.ரா. சாமியப்பாவுக்கு வாழ்த்துக்கூட்டம்

  நான் பிரசாரத்திற்குப் புறப்பட்டுப்போகும் வழியில் இங்குள்ள பிரசாரகர்களுக்கு ஏதோ சில திட்டங்களை வகுத்து விட்டுப் போகலா மென்றுதான் வந்தேன். இது ஒருவர் பட்டம் பெற்றதன் மகிழ்ச்சியைத் தெரிவிக்கும் ஒரு பாராட்டு விருந்துக் கூட்டம். அதிலும் சமீபத்தில் நடக்கவிருக்கும் சட்டசபைத் தேர்தலில் என்னுடைய பிரசங்கத்தைக் கேட்டுத் தங்கள் பகுத்தறிவை உபயோகிக்கக்கூடிய எளிய அறிவுடையவர்களாக இந்தக் கூட்டத்திற்கு வந்திருக்கும் தோழர்கள் இருப்பார்கள் என்று நான் நம்பவில்லை. இருந்தாலும் ஒரு நண்பரால் காண்பிக்கப்பட்ட “ஆனந்தவிகடன்” பிரதியை (7.2.37ந் தேதி) புரட்டிப் பார்த்ததில் அதில் சில விஷயங்கள் என் கண்களுக்குப் புலப்பட்டன. ஏதோ அவைகளைப் பற்றி சில வார்த்தைகள் கூறுகிறேன். “ஆனந்தவிகடன்” தனது தலையங்கக் குறிப்பில் 1920ம் வருஷத்தில் இம்மாகாணத்தில் எல்லா சர்க்கார் உத்தியோகஸ்தர்களுக்கும் சேர்ந்து சம்பளம் நாலுகோடி ரூபாய்; 1934-ம் வருஷத்தில் அதே சர்க்கார் உத்தியோகஸ்தர்களின் சம்பளம் பத்தரைக்கோடி ரூபாயென்றும், குறிப்பிட்டிருப்பதோடு, இவ்வளவு சம்பள உயர்வுக்கும் காரணம் ஜஸ்டிஸ் மந்திரிகளின் நிர்வாகம் தான் என்றும்...

காங்கிரஸ் ஏன் ஏற்பட்டது?  சம்பளம் உயர்ந்ததே காங்கிரசால்தான்

காங்கிரஸ் ஏன் ஏற்பட்டது? சம்பளம் உயர்ந்ததே காங்கிரசால்தான்

    சைமன் கமிஷனை பஹிஷ்கரித்தவர்கள் அவரால் சிபார்சு செய்த சட்டசபைக்குப் போகலாமா? தோழர்களே! நான் யாருக்கு ஓட்டுப்போட வேண்டும் என்று சொல்ல இங்கு வரவில்லை. வரும் தேர்தலுக்கு கஞ்சா குடிக்கிறவன் கூட ஒரு அபேட்சகராய் நின்று சட்டசபைக்குப் போக உரிமை உண்டு. புதிய சீர்திருத்தத்தில் ஏழெட்டு மந்திரிகள் உண்டு. யார் மந்திரியாய் வந்தாலும் ஒரு காரியம்தான் செய்ய முடியும். யார் சட்டசபைக்குச் சென்றாலும், முதலில் இந்த இராஜாவுக்கும் அவர்கள் பின் சந்ததிக்கும், அவர்கள் சட்டங்களுக்கும் கட்டுப்பட்டு பக்தி விசுவாசத்துடன் நடக்கிறேன் என்று சத்தியம் செய்து இராஜ விஸ்வாசப் பிரமாணம் எடுத்தக்கொள்ள வேண்டும். இன்று நடக்கப் போகிற தேர்தலில் காங்கிரசின் பேரால் நிற்கிறவர்கள் தனிப்பட்ட தங்கள் சொந்த யோக்கியதையைப் பற்றிக் கூறாமல், கட்சியின் பேரை உபயோகித்து ஓட்டுக்கேட்கிறார்கள். ஏன்? ஆசாமிகள் யோக்கியதை வெளியானால் காங்கிரஸ் புதைக்கப்பட்டு விடும். இதனால்தான் எங்கு பார்த்தாலும் கட்சியின் பேர் அடிபடுகிறது. அதுவும் பொய்யும் புளுகும் கூறி...

முஸ்லீம்களும் கிறிஸ்தவர்களும் கயவர்களா?

முஸ்லீம்களும் கிறிஸ்தவர்களும் கயவர்களா?

முஸ்லீம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் ஷெட்யூல் (தாழ்த்தப்பட்ட) வகுப்பாருக்கும் காங்கிரஸ் இழைத்துவந்த கொடுமைகள் அச்சமூகத்தில் சுயமரியாதை உள்ள மக்கள் அறியாததல்ல. அவர்களுக்கு இன்று கிடைத்துள்ள தனித்தொகுதி உரிமைகளை ஒழிப்பதற்கு ஆக காங்கிரஸ்காரர்கள் ஆதியில் இருந்தே பட்டபாடும் செய்த சூழ்ச்சிகளும் கொஞ்ச நஞ்சமல்ல. அப்படியிருந்தும் அவ்வவ் சமூகங்களில் உள்ள வீரர்களான சில தலைவர்களால் அது பெறப்பட்டு காப்பாற்றப்பட்டு இன்று அச்சமூகங்கள் அரசியலிலும் அரசியல் சேவைகளிலும் பங்குபெற முடிந்தது. ஒரு நாட்டில் அரசியல் சீர்திருத்தமோ, உரிமையோ, சுதந்திரமோ எது கிடைப்பதானாலும் எவ்வளவு கிடைப்பதானாலும் அவற்றில் பங்கு பெற அந்நாட்டிலுள்ள ஒரு மதத்துக்கோ, ஜாதிக்கோ, வகுப்புக்கோ இடமில்லாமல் அவ்வகுப்பை ஒடுக்கி அழுத்தி எப்பொழுதும் ஆதிக்கம் செலுத்தும் வகுப்புக்கே பெரும்பங்கும் போவதாய் இருந்தால் அச் சுதந்திரங்கள் எப்படிப்பட்டவையானாலும் எதற்குதவும் என்று கேட்கின்றோம். இந்நாட்டில் முஸ்லீம்கள் அரசியலில் தனி உரிமை பெறுவதற்கு முன் இந்துக்களிடையில் தீண்டப்படாதவர்களாய் இருந்ததை எந்த மனிதனாவது “எந்த கயவ”னல்லாதானாவது மறுக்க முடியுமா என்று கேட்கின்றோம். “துலுக்கனைத் தொட்டால்...

தமிழ்நாட்டில் ஈ.வெ.ரா. சுற்றுப்பிரயாணம்

தமிழ்நாட்டில் ஈ.வெ.ரா. சுற்றுப்பிரயாணம்

  தோழர்களே! சமீபத்தில் நடக்கப்போகும் சென்னை சட்டசபை தேர்தல் பிரசாரம் பலமாய் நடைபெறுகிறது. இதுவரை நடந்த பிரசாரங்களைவிட இந்த சீர்திருத்த விஷயத்தில் அதிகக் கிளர்ச்சி இருந்து வருகிறது. அதற்கேற்ப குழப்பமும் பலாத்காரமும் கூட நடைபெறுகின்றன. தோழர்கள் ஜவஹர்லால், மாளவியா, ஜின்னா கூட்டங்களில் குழப்பம், கலவரம் நடப்பதோடு மாளவியா, ஜவஹர்லால் கூட்டங்களில் செருப்புகளும், கற்களும், அழுகு முட்டைகளும், சாணி உருண்டைகளும் விழுந்துவிட்டன. அடிதடிகள், குத்து வெட்டுகள், கொலைகள் நடந்துவிட்டன. பணங்களும் கோடிக்கணக்கில் செலவு செய்யப்பட்டு வருகின்றன. வசவுகளோ மீன்கடை, கள்ளுக்கடைகள் போல் நடைபெறுகின்றன. கூட்டங்களில் பேசப்படும் பேச்சுகளும் பொய்யும், பித்தலாட்டமும், ஈனப்பழிகளும் அபாண்டப் புரட்டுகளும் கொண்டவைகளாகவே இருக்கின்றன. மறைந்து நின்று கொன்ற புராண சூழ்ச்சி இழிதன்மை நிகழ்ச்சிக் கதைகள் போலவே “தலைவர்கள்” நடத்தைகள் இருந்து வருகின்றன. இவைகளின் பயனால் கிடைக்கும் வெற்றி தோல்விகளின் பயன்களோ மிகமிக அற்பமான பயனைக் கொடுக்கக்கூடியதும் ஒரு குறிப்பிட்ட வகுப்பு ஆதிக்கத்துக்கு அரணா அழிவா என்பதைத் தவிர வேறு...

எல்லா மாகாணங்களிலும் காங்கிரசிற்குத் தோல்வி

எல்லா மாகாணங்களிலும் காங்கிரசிற்குத் தோல்வி

சட்டசபை எலக்ஷன் நாள் நெருங்கிவிட்டது. காங்கிரஸ்காரர்களின் பிரசாரம் அளவிட்டுச் சொல்ல முடியாத மாதிரியில் நடைபெறுகின்றது. இன்னது தான் பேசுவது, இன்ன கொள்கையைத்தான் சொல்லுவது என்று இல்லாமல் குடிகாரர்கள் வெறிகாரர்கள் போல் வாயில் வந்ததை எல்லாம் உளறிவருகிறார்கள். எப்படியாவது வெற்றி அடைய வேண்டும் என்கின்ற கவலையால் எதை வேண்டுமானாலும் சொல்லவும் என்ன வேண்டுமானாலும் செய்யவும் காங்கிரசுக்காரர்கள் துணிந்து விட்டார்கள். தோழர்கள் சத்தியமூர்த்தியாரும் ராஜகோபால ஆச்சாரியாரும் தங்களால் கூடுமான அளவு எல்லாவித தந்திரங்களையும் கையாண்டு பார்த்து விட்டார்கள். பஞ்ச தந்திரத்தையும் கையாண்டுவிட்டார்கள். பார்ப்பனர்கள் கட்டுப்பாடாய் கூடி சகல முயற்சியும் செய்துவிட்டார்கள். இனிச் செய்ய வேண்டிய காரியம் ஒன்றும் இல்லை என்று சொல்லத்தக்க வண்ணம் செய்து இப்போதே ஓய்வடைந்துவிட்டார்கள் என்று கூடச் சொல்லலாம். இதன் பலன் மாத்திரம் சைபர் (0) என்பதை நாம் உணர்ந்து விட்டோம். அவர்களும் ஒரு அளவுக்கு உணர்ந்து தங்கள் ஸ்வரத்தை குறைத்துக்கொண்டார்கள். ஆனால் அந்த ஆத்திரத்தில் செய்வது இன்னது என்று தோன்றாமல்...

காங்கிரசின் தோல்வி

காங்கிரசின் தோல்வி

காங்கிரசானது எவ்வளவுதான் பொய்ப்பிரசாரங்கள் செய்து பாமர மக்களை ஏமாற்றி வந்த போதிலும் எவ்வளவுதான் கட்டுப்பாடாக எல்லாப் பார்ப்பனர்களும் எல்லா பத்திரிகைகளும் ஒன்று சேர்ந்து சூழ்ச்சி செய்து வந்திருந்த போதிலும் கடைசியாக புதிய சீர்திருத்தத் தேர்தலில் நல்ல பரிசுத்தமான தோல்வியை அடைந்து விட்டது என்பதை காங்கிரஸ்காரர்களே ஒப்புக்கொண்டு விட்டார்கள். இந்தத் தோல்வியை அறிவதற்கு யாரும் தேர்தல் வரை காத்திருந்து தேர்தல் முடிவைக்கொண்டு தெரிந்துகொள்ள வேண்டிய அவசியமில்லாமலே முடிவு வெளியாகிவிட்டது. இந்த விபரத்தை “தினமணி” பத்திரிகையில் கண்டபடியே மற்றொரு புறம் பிரசுரித்திருக்கிறோம். அதாவது இந்தியாவில் உள்ள 11 மாகாணங்களுக்கும் உள்ள சட்டசபைகளின் அசம்பளி என்னும் கீழ் ஸ்தானங்களுக்கு மொத்த ஸ்தானங்கள் 1585 ஆகும். அவற்றிற்கு காங்கிரஸ்காரர்கள் போட்டி போட முன் வந்திருப்பது 758 ஸ்தானங்களுக்கு மாத்திரமேயாகும். 758 ஸ்தானங்களிலும் வெற்றி பெற்றாலும் அது மொத்த ஸ்தானங்களில் பகுதியைவிடக் குறைந்த ஸ்தானங்களேயாகும். ஆகையால் காங்கிரஸ் தோல்வி அடைந்தது என்பதற்கு வேறு என்ன அத்தாட்சி வேண்டும் என்று...

காங்கிரஸ்காரர்கள் காலித்தனம்  யாரும் மறந்துவிடமாட்டார்கள்

காங்கிரஸ்காரர்கள் காலித்தனம் யாரும் மறந்துவிடமாட்டார்கள்

  தலைவர் அவர்களே! தோழர்களே! இந்தப் பக்கங்களில் நாங்கள் வருவதாகத் தெரிந்தவுடன் காங்கிரஸ்காரர்கள் வெகு தடபுடலாக அவசர அவசரமாக ஓடி எங்களைப் பற்றி விஷமப் பிரசாரம் செய்து எங்கள் கூட்டங்களுக்கு யாரும் போகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று காலிகளுக்கு உத்திரவு செய்து கொண்டே ஓடுகிறார்களாம். அது போலவே இரண்டு ஒரு இடங்களில் எங்கள் கூட்டத்திற்கு கொஞ்ச தூரத்தில் காலிகளும் குடிகாரர்களும் நின்று கொண்டு வரும் ஆட்களைத் தடுத்து திருப்பி அனுப்பிக் கொண்டிருப்பதையும் கெட்ட வார்த்தைகள் பேசி வைவதையும் பார்த்தோம். ஒரு கூட்டத்தில் கல்லுகள் போட்டதுடன் செருப்பும் வீசி எறியப்பட்டது. அது உள்ளூர்க்காரர் மீது விழுந்து செருப்பு போட்டவனை மறுநாள் உள்ளூர்க்காரர்களே நன்றாய் செருப்பாலடித்ததாகவும் கேள்விப்பட்டேன். சென்றவாரம் நானும் தோழர் பாண்டியனும் அய்யம்பாளையத்துக்குப் போனபோதும் அங்கு சிலர் மூக்கில் கள்ளு ஒழுகக் குடித்துவிட்டு கண்டபடி கூப்பாடு போட்டும், சிறு பையன்களைக் கொண்டு கூப்பாடு போடச் செய்தும் சுமார் 1000ம் பேர் வரை கூட்டத்தில்...

ஆச்சாரியார்

ஆச்சாரியார்

  தோழர் ராஜகோபாலாச்சாரியார் போர் முனைக்கு வந்துவிட்டார். என்ன போர் என்றால் வீரப்போர் அல்ல, மற்றென்னவெனில் சூழ்ச்சிப்போர், வஞ்சப்போர் என்றுதான் சொல்ல வேண்டும். ஆச்சாரியார் என்றும் இதற்குத்தான் அருகதையானவர், ஏனெனில் அவருக்கு உடல் வலிமை கிடையாது. தோல்வியைச் சகிக்கும் மனவலிமையும் கிடையாது. ஆதலால் இப்படிப்பட்டவர்கள் என்றும் சூழ்ச்சியைத்தான் நம்புவார்கள். அவர்களுக்குத்தான் சூழ்ச்சித்திறமும் ஏற்படக்கூடும். ஆச்சாரியார் வெற்றிபெற்று மந்திரி ஆசனத்தில் அமர்வாரானால் மற்ற விஷயங்களையெல்லாம் மறந்துவிட்டு மகிழ்ச்சியடைவதில் முதல்வராக இருக்க நாமே முயலுவோம். அம்மகிழ்ச்சி ஏதாவது ஒரு நன்மையை எதிர்பார்த்து என்று சொல்ல முடியாது. ஆனால் பரிதாபத்தால். ஆச்சாரியார் திடமான தியாகி, மகத்தான தியாகம் செய்தவர். அவர் மந்திரி பதவி ஏற்றால் அவர் விஷயத்தில் யாரும் பொறாமைப்பட வேண்டியதில்லை, அவரது சூழ்ச்சிக்குப் பலர் ஆத்திரப்படக்கூடும் தான். அப்படிப்பட்ட ஆத்திரங்கள் கூட தோல்வி அல்லது சக்தியற்ற தன்மையின் எதிரொலி என்றுதான் சொல்லுவோம். ஏனெனில் ஆத்திரப்படுகிறவர்களும் தங்களாலான சூழ்ச்சிகள் செய்து பார்த்துத்தான் முடியாமல் போய் ஆத்திரப்படுபவர்களாய்...

காந்தியார்

காந்தியார்

    இனியும் உங்களுக்கு காந்தி பைத்தியமா? இன்று காங்கிரசின் பேரால் தேர்தலில் நிற்கும் பித்தலாட்டக்காரர்கள் காந்தி பெயரைச்சொல்லி ஓட்டுக் கேட்கிறார்கள். ஆனால் நாம் இந்த 3 வருஷ காலமாகவே காந்தியாருக்கும் காங்கிரசுக்கும் சம்மந்தமில்லை என்று சொல்லி வருகிறோம். அதை பார்ப்பனர்களும் அவர்களது கூலிகளும் மறைத்து மக்களை ஏமாற்றி வந்திருக்கிறார்கள் – வருகிறார்கள். அப்படிப்பட்ட புரட்டுகளை வெளியாக்க இப்போது ஒரு சந்தர்ப்பம் கிடைத்ததற்கு மகிழ்ச்சி அடைகிறோம். அதாவது 22.1.37ந் தேதி தோழர் காந்தியாரை சென்னையில் “சுதேசமித்திரன்” நிருபர் பேட்டி கண்டு பேசியபோது அவர் சொன்னதாவது:- “ராஜீய விஷயத்தில் எனக்கு சிரத்தை கிடையாது.” “அவற்றைப் பற்றி விவாதிக்க எனக்கு இஷ்டம் இல்லை.” “உண்மை சத்தியாக்கிரகி என்கிற முறையில் இதை சொல்லுகிறேன்.” “வரப்போகும் தேர்தல் முடிவுகள் உத்தியோக பிரச்சினைகள் முதலிய விஷயங்களில் எனக்கு எவ்வித அபிப்பிராயமும் இல்லை” என்று பேசி இருக்கிறார். (இவ்வாக்கியங்கள் 22.1.37ந் தேதி “சுதேசமித்திரன்” 6-வது பக்கம் 3-வது கலம் “சென்னையில்...

கடற்கரைக் கூப்பாடு

கடற்கரைக் கூப்பாடு

  தேர்தல் போர் ஆரம்பமாகிவிட்டது. அபேக்ஷகர் பெயர்கள் வெளிவரத் தொடங்கிவிட்டன. ஏற்கனவே நாம் கூறியுள்ளபடி நமது கட்சிக்கு அபேக்ஷகர் பஞ்சம் ஏற்படவில்லை; ஏற்படவும் செய்யாது. காங்கரஸ் பகட்டு வெற்றியில் மயங்கி – காங்கரஸ் ஆர்பாட்டங்களுக்கு அஞ்சி – தன் காலில் நிற்க ஆண்மையின்றி – காங்கிரசில் சரணாகதி அடைந்து இச்சகம் பாடும் துடை நடுங்கிகள் சிலர் போனாலும், நம் கட்சிக் கொடிக் கீழ்நின்று போராடத் துணிவுகொண்டு நிற்கும் வீரர்கள் ஏராளமாக இருந்து வருவது மகிழத்தக்கதே. நமக்குப் பத்திரிகைகள் குறைவாக இருக்கலாம்; தொண்டர்கள் குறைவாக இருக்கலாம்; பிரசாரகர்கள் குறைவாக இருக்கலாம். எனினும் நாம் அஞ்சத் தேவையில்லை. ஏன்? அபிமானிகள் ஏராளமாயிருக்கிறார்கள். நமது கட்சியால் நலம் பெற்றவர்களும் ஏராளமாயிருக்கிறார்கள். நாம் நாட்டுக்குச் செய்துள்ள நன்மைகளோ அனந்தம். நமது எதிரிகள் எதிர்பார்க்கிறபடி தமிழ் நாட்டார் முச்சூடும் அப்பாவிகள் அல்ல. அப்பாவிகளாயிருந்தால் நமது கட்சிப் பெயரால் அந்தஸ்துடையவர்கள் தேர்தலுக்கு முன்வரத் துணிவு கொண்டு இருக்க மாட்டார்கள். தென்னாட்டாருக்கு...

திருவாரூரில் கேள்விகளுக்கு  ஈ.வெ.ரா. பதில்

திருவாரூரில் கேள்விகளுக்கு  ஈ.வெ.ரா. பதில்

    கேள்விகள் ~shend சமதர்மம் விரும்பும் தாங்கள் தனித்தொகுதி பிரதிநிதித்துவம் கேட்பது அழகா? காங்கிரசு மகாசபை பிராமணர்களுக்கு மாத்திரம்தான் சொந்தமா? ஜவஹர்லாலை ஏன் கண்டிக்கிறீர்கள்? பணக்காரர்களை நீங்கள் ஆதரிக்கலாமா? “ஆலய நிந்தனை, விக்கிரக நிந்தனை செய்கிற ராமசாமியுடன் மற்றவர்கள் சேரலாமா?” என்று கேட்கப்பட்ட அச்சு நோட்டீசும் கொடுக்கப்பட்டது. ~subhead பதில்கள் ~shend வகுப்புவாரி பிரதிநிதித்துவம் கேட்பது சமதர்மக் கொள்கையைச் சேர்ந்ததேயாகும். இன்றைய சீர்திருத்தம், அரசியல், சுதந்திரம் என்பவைகள் எல்லாம் அதிகாரம், பதவி, உத்தியோகம் ஆகியவைகளாகத்தான் இருக்கின்றன. எனக்குத் தெரிய 1900 முதலே இன்று வரை அப்படித்தான் இருந்து வந்திருக்கிறது. இந்தியாவில் பல மதம் பல ஜாதியாக மக்கள் பிரிந்திருக்கிறார்கள். அவர்களில் பலர் பிறவியினால் இழி மக்களாகக் கருதப்பட்டு அரசியலில் உத்தியோகம், பதவி அதிகாரம் ஆகியவைகளில் 100க்கு ஒருவர் இருவர் கூட இருப்பதற்கு இல்லாமல் விலக்கப்பட்டிருக்கிறார்கள். அதன் காரணமாய் கல்வி செல்வம், நல்வாழ்வு ஆகியவைகள் அடைவதற்கில்லாமல் அநேக காலமாக மிருகங்களிலும் கேவலமாக...

சத்தியமூர்த்தியாரின் மாயாமாலம்

சத்தியமூர்த்தியாரின் மாயாமாலம்

  தோழர் சத்தியமூர்த்தியார் நிலக்கோட்டை தாலூகாவிற்குள் பிரசாரத்துக்குப் போனபோது அங்கு ஏதோ சில காலிகளோ அல்லது பொறுப்பற்ற வேடிக்கைப் பிள்ளைகளோ ஒரு மோட்டார் கார் மீது கல் போட்டார்களாம். அதற்காக பத்திரிகைகள் தனது அடிமையாய் இருக்கின்றன என்கின்ற ஆணவத்தால் நீண்ட அறிக்கைகளை வெளியிட்டு மக்களுக்கு ஜஸ்டிஸ் கட்சி மீது துவேஷத்தைக் கிளப்பி வருகிறார். அறிவுள்ள மக்கள் யாரும் இந்த விஷமும் மாய மாலமும் கொண்ட அறிக்கையை லட்சியம் செய்யமாட்டார்கள் என்பது நமக்குத் தெரியும். ஆனால் இந்த சின்ன காரியத்துக்காக (அதுவும் உண்மையாய் நடந்ததோ இல்லையோ) இவ்வளவு “ஆத்திரம்” காட்டி தடபுடல் செய்யும் சத்தியமூர்த்தியாற் காங்கிரஸ் காலிகள் கதர் குல்லாயுடனும் கொடியுடனும் செய்த எத்தனையோ காலித்தனங்களைப் பற்றி ஏன் ஆத்திரப்படவில்லை என்று கேட்கின்றோம். சேலத்தில் தான் பிரசன்னமாயிருந்த கூட்டத்திலேயே எதிர்க்கட்சிப் பிரமுகர்களை கேள்விகள் கேட்டதற்காக கதர் குல்லாயும் கொடியும் பிடித்திருந்த காங்கிரஸ் காலிகள் கடினமாய்த் தாக்கித் துன்பப்படுத்தியதற்கு தன்னைப் பொறுத்தவரை ஒரு மாதகாலம்...

காங்கிரஸ் மிரட்டலுக்கு சர்க்கார் பதில்

காங்கிரஸ் மிரட்டலுக்கு சர்க்கார் பதில்

  காங்கிரசானது இதுவரை நாட்டில் பொய்ப் பிரசாரத்தாலும் காலித்தனத்தாலும் உயிர் வாழ்ந்து வந்தது என்பது அறிஞர்கள் உணர்ந்ததேயாகும். இப்போது தேர்தல் காலம் நெருங்கி வருவதால் காங்கிரசின் காலித்தனத்தைப்பற்றி பொது ஜனங்களும் எதிர் அபேட்சகர் களும் அதிகமாகக் கூப்பாடு போட்டு அரசாங்கத்தாருக்கு தகவல் கொடுக்க ஆரம்பித்தார்கள். சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு சுற்று அறிக்கைகள் அனுப்பி பொதுக் கூட்டங்களில் காலித்தனம் நடக்காமல் பார்த்துக்கொள்ளும்படியும் தெரிவித்திருக்கிறார்கள். இதை அறிந்த காங்கிரஸ் தலைவர்கள் பொதுக்கூட்டங்களில் போலீசுக்காரரை மிரட்டி பலவிதமாகப் பயமுறுத்திப் பேசினார்கள். அதாவது, தேர்தலில் தாங்களே ஜெயிக்கப்போகிறார்கள் என்றும், போலீஸ் அதிகாரம் தங்கள் கைக்கு வரும் என்றும், அப்போது போலீசுக்காரர்கள் விஷயத்தில் கடினமான முறைகள் கையாளப்படும் என்றும், பல போலீஸ் அதிகாரிகள் வீட்டுக்கு அனுப்பப்பட்டு விடுவார்கள் என்றும் பலவாறாகப் பேசினார்கள். சூசனை காட்டினார்கள். இதனால் உண்மையிலேயே சில போலீஸ்காரர்கள் பயந்து கொண்டேதோடு சில போலீசார் காங்கிரசுக்கு அனுகூலமாய் இருந்து காலித்தனத்துக்கு உதவி செய்தும் வந்ததானது அரசாங்க தகவலுக்கு எட்டியபின்...

காங்கிரசுக்கு ஏன் ஓட்டு செய்யக்கூடாது?

காங்கிரசுக்கு ஏன் ஓட்டு செய்யக்கூடாது?

  அதற்கு கொள்கை இல்லை அது ஒரு சமூகம் தவிர மற்ற சமூக முன்னேற்றத்தைத் தடுக்கவே வேலை செய்கிறது. வருணாச்சிரமம் சம்மந்தப்பட்ட பழைய முறைகளை புதுப்பிக்கவே வேலை செய்கிறது. அதனிடத்தில் ஒரு காலத்திலாவது நாணயம் இருந்ததில்லை. அதில் சமய சஞ்சீவிகளும், காலிகளும், வருணாச்சிரமிகளுமே ஆதிக்கம் செலுத்துகிறார்கள். அதன் தலைவர்கள் சொல்லுகின்ற காரியங்கள் எதுவும் அனுபவ சாத்தியமானதல்ல. அதனால் இதுவரை ஒரு பலனும் ஏற்பட்டதில்லை. அது ராஜபக்தி – சர்க்கார் பக்தி பிரமாணம் செய்து ராஜாவை சர்க்காரை கவிழ்த்து விடுகிறேன் என்று பொய் சொல்லுகிறது. ஓட்டு செய்துவிட்டு பின்னால் முட்டாள் தனமாக ஏமாந்து போனோமே என்று விசனப்படப் போகிறீர்கள். குடி அரசு – வேண்டுகோள் – 17.01.1937 ~cstart ஜஸ்டிஸ் கட்சிக்கு ஏன்   ஓட்டு செய்ய வேண்டும்? ~cmatter அது சமூக முன்னேற்றத்தையும் மக்கள் சமத்துவத்தையும் கொள்கையாய் கொண்டு பாடுபடுகிறது. வருணாச்சிரம முறையை மாற்றி மக்களை சுயமரியாதையுடன் வாழ வேலை செய்து கொண்டு...

பார்ப்பனர்களின் விளம்பர முறை

பார்ப்பனர்களின் விளம்பர முறை

  தோழர் ஜவஹர்லால் காரில் போகும்போது ஒரு மாட்டு வண்டி குறுக்கே நின்றதாம். அதை அந்த வண்டிக்காரனால் விலக்க முடியவில்லையாம். தோழர் ஜவஹர்லால் கீழே இறங்கி வண்டியை மூங்கிலைப் பிடித்து ஒரு ஓரமாய் தள்ளி விட்டுவிட்டு தன் வண்டியை ஓட்டிக்கொண்டு போனாராம். மாட்டு வண்டிக்காரன் “நான் அதிர்ஷ்டசாலி” என்றானாம். இது அசோசியேட் பிரசில் வெளியாகி பார்ப்பனப் பத்திரிகைகளில் பெரிய எழுத்தில் போடப்பட்டிருக்கிறது. இது எவ்வளவு பெரிய பரோபகார காரியம்? எவ்வளவு பெரிய மனிதன் ஜவஹர்லாலைப் புகழ்ந்து விட்டான் பாருங்கள். ஆகவே ஒரு ஆசாமியை பார்ப்பனர்கள் பெரிய ஆள் ஆக்க வேண்டுமானால் எவ்வளவு மானமற்ற முறையில் விளம்பரம் செய்து பாமர மக்களை ஏமாற்ற முயற்சிக்கிறார்கள் என்பதை குறிப்பிடவே இதை எழுதுகிறோம். இது போலவே “காந்தியார் பூனைக் குட்டியுடன் விளையாடினார்!!” “ஒரு பழுத்த கிழவி ஜவஹர்லாலை கும்பிட்டாள்!!!” “ஒரு பெண் பட்டேலுக்கு ஆலாத்தி எடுத்தாள்!!!!” என்பது போன்ற அற்ப பிரசாரம் செய்து பாமர மக்களை...

பாஞ்சாலத்தில் “ஜஸ்டிஸ்” கட்சி

பாஞ்சாலத்தில் “ஜஸ்டிஸ்” கட்சி

  “100க்கு 50 விகிதமாவது உத்தியோகம் அளிக்க வேண்டும் “உருது அரசியல் பாஷையாக இருக்க வேண்டும்” பஞ்சாப் யூனியனிஸ்ட் கòக்குத் தலைவரான முஸ்லீம் சமூகத் தலைவர் சர். சிக்கந்தர் அயாத்கான் அவர்கள் ஒரு கூட்டத்தில் பேசும்போது “நாங்கள் வகுப்புத் தீர்ப்பை ஆதரிப்போம், அதிகாரத்துக்கு வந்தால் அந்தப்படியே நடப்போம், குறைந்தபக்ஷம் 100க்கு 50 வீதமாவது உத்தியோகங்கள் முஸ்லீம்களுக்கு அளிப்போம். உருது பாஷையை தான் அரசியல் பொது பாஷையாக ஏற்படுத்துவோம்” என்று கூறியிருக்கிறார். அதற்கு ஆக அங்குள்ள காங்கிரசுக்காரர் முஸ்லீம் கò வகுப்பு வாதக் கò என்றோ தேசத்துரோக கò யென்றோ கூறி முஸ்லீம் கòயை யூனியனிஸ்ட் கòயை வெட்டிப் புதைக்கவேண்டும் என்று கூறியிருந்தால் என்ன நடந்திருக்கும் என்பது வாசகர்களுக்குத் தெரியாததல்ல. அப்படிக் கூறுகிறவர்களின் பல்லைத் தட்டிக் கையில் கொடுத்திருப்பார்கள். ஏன் வகுப்புரிமை கேட்பதையும் ஜனத்தொகைக்குத் தகுந்த உத்தியோகம் அந்தந்த வகுப்புகளுக்கு வழங்குவதையும் அரசியல் திட்டத்தை ஏற்று நடத்துவதையும் உருது பாஷை வேண்டுவதையும் தேசத்...

ஐயோ, பட்டாபிஷேகம்  நின்று விடுமே!  பொம்மனுக்கும் – திம்மனுக்கும் சம்பாஷணை

ஐயோ, பட்டாபிஷேகம்  நின்று விடுமே! பொம்மனுக்கும் – திம்மனுக்கும் சம்பாஷணை

  – சித்திரபுத்திரன் ~cmatter பொம்மன்:- ஐயோ! பட்டாபிஷேகம் நின்று விடுமே! இனி நமக்கு ராஜாவே இல்லாமல் போய் விடுமே! நாம் என்ன செய்கிறது? திம்மன்:- ஏன் – ஏன் அப்படி அழுகிறாய்? அழாதே. பொ:- இல்லே-ஏ காங்கிரசில் பட்டாபிஷேகத்தை பகிஷ்கரிக்க வேண்டுமென்று சொல்லிவிட்டார்களே ராஜகுடும்பத்தார் இதை லட்சியம் செய்யாவிட்டாலும் பார்லிமெண்டார் இதை லட்சியம் செய்து பட்டாபிஷேகத்தை நிறுத்தி விடுவார்களே! பிறகு நமக்கு ராஜா வேண்டாமா? அதுதான் அழுகை ஆனந்தக்கண்ணீராய் வடிகிறது. தி:- அட போடா மடையா! யாரோ பட்டாபிஷேகத்தை பஹிஷ்கரித்தால் யாரோ நிறுத்திவிடுவார்களா? உனக்கு புத்தியில்லையா? இதற்காக அழுகிறாயே. பொ:- யாரோவா? ஜவஹர்லால் என்ன, சத்தியமூர்த்தி என்ன? கமலாதேவி என்ன இப்படிப்பட்ட தேசாபிமான ரத்தினங்கள் தீர்மானித்திருக்கிறார்கள்! அதுவும் 1000000000 இன்னம் எத்தனையோ சைபர் கொண்ட ஜனங்கள் கைதூக்கி இருக்கிறார்கள்! அப்படி இருக்க பட்டாபிஷேகம் எப்படி நடக்கும்? பொ:- நமக்கு ஆகத் தீர்மானித்திருக்கிறார்களே ஒழிய பிரிட்டிஷாருக்கு ஆக தீர்மானிக்கவில்லை. அதற்கு உதாரணமாக...

தேர்தல் தொல்லை

தேர்தல் தொல்லை

  ஜஸ்டிஸ் இயக்கம் ஏற்பட்டு சுமார் 20 வருஷம் ஆகின்றது. அக்கட்சிப்பிரமுகர்கள் பதினாறு வருஷகாலமாய் அதிகாரத்தில் இருந்து வருகிறார்கள். அதன் பயனாக அக்கட்சியின் முக்கிய கொள்கைகளான வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் என்பதிலும் அனுபவ சாத்தியமான கிளர்ச்சியால் தகுதியுள்ள அளவுக்கு அரசியல் முன்னேற்றம் பெறுவது என்பதிலும் சிறிதும் பிற்போக்கில்லாமல் கூடுமானவரை பலன் ஏற்பட்டிருக்கிறது என்பதில் நமக்கு சிறிதும் ஐயமில்லை. பதினாறு வருஷகாலம் அதிகாரத்தில் இருந்து வருகிற இயக்கம் எதுவானாலும் பாமரஜனங்களிடம் செல்வாக்குப் பெற்றிருப்பது என்பது மிகவும் கஷ்டமான காரியம்தான். அதுவும் மக்களின் நித்திய வாழ்க்கைத் திட்டங்களில் கலந்துள்ள அதிகாரத்துவம் எப்படிப்பட்டதானாலும் எவ்வளவு நன்மை பயப்பதானாலும் பாமரமக்களின் மகிழ்ச்சிக்குப் பாத்திரமாவது என்பது மிக மிக கஷ்டமான காரியமேயாகும். அதுவும் முக்கியமாக நம் நாட்டில் அது முடியாத காரியம் என்றே தான் சொல்லித் தீரவேண்டும். ஏனெனில் பொது மக்களில் 100க்கு 90பேர் கல்வி அறிவில்லாதவர்கள். மற்றும் பல மதம், பல ஜாதி, பல உள் வகுப்பு என்று...

காங்கிரஸ் என்றால் என்ன?

காங்கிரஸ் என்றால் என்ன?

  ஜெயிலுக்குப் போவது கல்லுளி மங்கன் வேலை மொண்டி பிள்ளையை வாடகைக்கு  வாங்கி காட்டி பிச்சை கேட்பதா? தலைவரவர்களே! தோழர்களே! இங்கு நாங்கள் வந்த சமயத்தில் எங்களுக்கு செய்த வரவேற்புக்கு மிகுதியும் நன்றி செலுத்த வேண்டியவன். ஊர்வலங்களும் வாத்தியங்களும் ஜே கோஷங்களும் வழி நெடுகச் செய்த வரவேற்பு ஆடம்பரங்களும் இந்த ஜஸ்டிஸ் இயக்கத்தில் உங்களுக்கு உள்ள பற்றுதலையும் ஊக்கத்தையும் உற்சாகத்தையும் காட்டுகின்றன. நமது ஊக்கமும் உற்சாகமும் இப்படி செலவழிக்கப்படுவது எனக்கு விருப்பமில்லை. காரியத்தில் மக்களுக்குள் இயக்கத் தன்மையையும் அது செய்த வேலையும் எடுத்துச் சொல்லுவதில் செலவழிக்கப்பட வேண்டும். ஆச்சரியமில்லை ஜஸ்டிஸ் இயக்கம் என்றால் தீண்டாமை போல் மக்கள் பாவிக்கிறார்கள் என்று தலைவர் எடுத்துக் கூறினார். அதற்கு பொது ஜனங்களும் நம் எதிரிகளுமே காரணமல்ல. நாம் பொது ஜனங்களுக்கு வேலை செய்கிறோம் என்கின்ற மமதையில் இருந்து விட்டோமே ஒழிய நமது வேலையை பாமர ஜனங்கள் உணர்ந்தார்களா என்பதைப்பற்றி கவலைப்படவில்லை. நமது எதிரிகள் செய்யும்...

காங்கிரசின் பிற்போக்கு

காங்கிரசின் பிற்போக்கு

இந்திய மக்கள் கால்நடையில் இருந்து மாட்டுவண்டி பிரயாணம் ஆகி குதிரைவண்டியாகி ரயில் வண்டி ஆகி சைக்கிள் வண்டி ஆகி மோட்டார் வண்டி ஆகி ஆகாயத்தில் பறக்கும் ஏரோப்ளான் பிரயாணத்துக்கு வந்திருக்கிற காலத்தில் இன்றைய காந்தி சகாப்தத்திலும் ஜவஹர் அயனத்திலும் பழயபடி மாட்டு வண்டிப் பிரயாணம் மறுபடியும் துவக்கப்பட்டுவிட்டது. அதாவது பெய்ஸ்பூர் காங்கிரசில் தலைவர் ஜவஹர்லாலை 6 காளைமாடு பூட்டிய வண்டியில் வைத்து ஊர்வலம் செய்தார்களாம். காங்கிரஸ்காரர்களின் இந்த பிற்போக்கு உணர்ச்சியில் நாம் ஆச்சரியப்படத்தக்கது ஒன்றும் இல்லை. ஏனெனில் ஒரு மணி நேரத்திற்கு ஒரு ராத்தல் நூல் பூச்சிக்கூடு இழைபோல் நூற்கும் யந்திரங்கள் வந்திருக்கும் இந்தக் காலத்தில் ஒரு வாரத்துக்கு ஒரு ராத்தல் நூல் மொந்தம் பழம் மொத்தம் நூற்கும்படியான கைராட்டினத்தை வைத்து பூஜிக்கிற தலைவரான காந்தியாரின் சிஷ்யர் மாட்டு வண்டிக்கு போவதில் எப்படி அதிசயமிருக்க முடியும்? காந்தியார் இன்று மக்களை ஏமாற்றி மகாத்மா ஆன ரகசியமே பழய காட்டுமிராண்டித் தனத்தை –...

தர்மபுரி தேர்தல் வண்டவாளம்  அழுவதற்கு வெட்கமில்லையா?

தர்மபுரி தேர்தல் வண்டவாளம் அழுவதற்கு வெட்கமில்லையா?

    சேலம் ஜில்லா போர்டு பிரிவினையான விஷயம் யாவரும் அறிந்ததேயாகும். அதில் சேலம் ஜில்லா போர்டு என்பதற்கு காங்கிரஸ்காரர் பிரசிடெண்டாக வந்துவிட்டார். அதற்கும் நாமினேஷன் கொடுத்த பிறகுதான் தேர்தல் நடந்திருக்கிறது. அது போலவே சென்னை மாகாணத்தில் மற்றும் எவ்வளவோ ஜில்லா போர்டுகள் பிரிக்கப்பட்டு நாமினேஷன்கள் கொடுக்கப்பட்ட பிறகே இதுவரை பெரிதும் பிரசிடெண்ட் தேர்தல்கள் நடந்திருக்கின்றன. இனியும் நடக்கப்போகின்றன. கோயமுத்தூர் ஜில்லா போர்டும் அப்படியே நடந்தது. ஈரோடு ஜில்லா போர்டும் அப்படியே நடந்தது. முன் சொன்ன சேலத்திலும் அப்படியே நடந்தது. அதுபோலவே தான் தருமபுரி ஜில்லா போர்டும் நடந்திருக்கிறது. இந்த நிலையில் பிரசிடெண்ட் தேர்தலில் காங்கிரஸ் அபேக்ஷகர் தோல்வி அடைந்துவிட்டதற்கு பார்ப்பன பத்திரிக்கைகள் ஜஸ்டிஸ் கட்சி மீது ஆத்திரத்தைக் காட்டி வசவு மாலை சூட்டுகின்றன. தர்மபுரி நடவடிக்கையைப் பார்த்தவர்களுக்கு ஜில்லா போர்டுக்கு காங்கிரசிற்கு இயற்கையிலேயே மெஜாரட்டி கிடையாது என்பது விளங்கும். ஓட்டு ஒன்றுக்கு 2000, 3000, 4000 ரூபாய் கொடுத்து சில...

புறமுதுகு கொடுத்தோடிய ஆச்சாரியார்

புறமுதுகு கொடுத்தோடிய ஆச்சாரியார்

  மறுபடியும் போர் முனைக்கு  வந்து விட்டார் இதில் ஆச்சரியமொன்றுமில்லை ~cmatter தோழர் சி. ராஜகோபாலாச்சாரியார் வட ஆற்காடு ஜில்லா போர்ட் தேர்தலிலும் திருச்சி முனிசிபல் தேர்தலிலும் காங்கிரஸ்காரர்களின் அயோக்கியத்தனம் வெளியாகி தலைவர்கள், மகா தியாகிகள், பாரத மாதாவின் அருந்தவப் புதல்வர்கள் என்கின்றவர்களின் யோக்கியதையும் வெளியாகி காங்கிரஸ் என்றால் சீ என்னும்படியான நிலைமைக்கு வந்து விட்டவுடன் (தோழர் ராஜகோபாலாச்சாரியார்) மனம் நொந்து “இன்றிலிருந்து சென்னையிலோ (சென்னை மாகாணத்திலோ ப-ர்) அல்லது வெளியிடங்களிலோ (வெளிமாகாணத்திலோ – என்றுதான் அப்போது காங்கிரஸ் பத்திரிகைகளும் காங்கிரஸ் தலைவர் களும் கருதி விசனப்பட்டிருக்கிறார்கள் ப-ர்) உள்ள எந்த காங்கிரஸ் கமிட்டி அலுவல்களுக்கும் எனக்கும் யாதொரு சம்மந்தமும் இல்லை.” என்று 11-8-36ந் தேதியில் ஒரு அறிக்கை எல்லா பத்திரிக்கைகளுக்கும் வெளியிட்டு விட்டு துறவு பூண்டுகொண்ட விஷயம் அந்த தேதி பத்திரிகை களில் இன்றும் யாவரும் காணலாம். நாம் அன்றைய தினமே மறுபடியும் ஆச்சாரியார் பார்ப்பன பிரசார அரசியலுக்கு வருவார்...

வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்துக்கு ஜே!

வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்துக்கு ஜே!

வங்காளம் “தேசீயத்துக்கு” படு தோல்வி ஆனால் சமூக ஒற்றுமை ஏற்பட்டது வங்காளத்தில் இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் “இருந்த வகுப்பு வாதப் பேய்” “மாண்டு மடிந்து” தீர்க்காயுள் பெற்று விட்டது. அதாவது ராஜி ஏற்பட்டு விட்டது. வகுப்புரிமைக்கு சிரஞ்சீவிப்பட்டம் கிடைத்து விட்டது. “தேசீயம்” செத்து ஒழிந்தது. இரு கட்சித் தலைவர்களும் கூடி இரு சமூகத்துக்குள்ளும் ராஜி செய்துகொண்டார்கள். ராஜி நிபந்தனை இன்று அரசாங்கம் முஸ்லீம்களுக்கு அளித்துள்ள விகிதாச்சார வகுப்புரிமை வகுப்புத் தீர்ப்பு அதில் கண்டபடி 10 வருஷ காலத்துக்கு ஆக்ஷேபிக்கப்படக்கூடாது. இரு சமூகத்தார் சம்மதித்தால் மாத்திரம் அதைப்பற்றி மத்தியில் யோசிக்கலாம். மந்திரிசபை அமைக்கப்படுவதில் முஸ்லீம்களுக்கு ஜனத்தொகுதிக்கு தகுந்தபடி பகுதி எண்ணிக்கை கொடுக்கப்படவேண்டும். சர்க்கார் உத்தியோகம் மற்ற பிரதிநிதித்துவம் ஆகியவைகளில் முஸ்லீம்களுக்கு ஜனத்தொகை விகிதப்படி பகுதி விகிதாச்சாரம் ஒதுக்கப்படவேண்டும். யோக்கியதாம்சப் பரீøை குறைந்த அளவுக்கே ஏற்படுத்தப்படவேண்டும் என்பதாகும். இந்த நிபந்தனைகள் 1933ம் வருஷத்திலேயே பார்லிமெண்ட் கூட்டுக் கமிட்டியில் எடுத்துரைக்கப்பட்டனவாம். அப்போதே முஸ்லீம்கள் ஒப்புக்கொண்டார்களாம். ஆனால் இந்துக்கள்...

காங்கிரஸ் “ஜெயித்தது”

காங்கிரஸ் “ஜெயித்தது”

காங்கிரஸ் சட்டசபைத் தேர்தலுக்கு இதுவரை தமிழ் நாட்டில் அபேக்ஷகர்களை நிறுத்தப்பட்டதிலிருந்தே ஒரு அளவுக்குக் காங்கிரசின் கொள்கை வெற்றி பெற்று விட்டதென்றே கூறலாம். என்னவெனில் இன்று தென்னாட்டில் சிறப்பாகத் தமிழ் நாட்டில் காங்கிரஸ் பார்ப்பன ஆதிக்க ஆயுதம் என்பதும் அவ்வாதிக்கத்துக்கு ஜஸ்டிஸ் கட்சியால் ஏற்படப் போகும் ஆபத்திலிருந்து தப்புவதற்காகவே காங்கிரஸ் நடத்தப்படுகிறது என்பதும் அறிஞர் அறியாததல்ல. அதற்கு ஆகவே காங்கிரஸ் இன்று சட்டசபை வேட்டை ஆடுகின்றது. முடிவு எப்படி இருந்தாலும் பார்ப்பன ஆதிக்கத்துக்கு வெற்றி ஏற்பட்டுவிட்ட தென்றுதான் சொல்லவேண்டும். என்ன வெற்றி என்றால் தமிழ் நாட்டைப் பொறுத்தவரை சட்டசபைக்குப் பொதுத் தொகுதி மெம்பர்கள் பெண்கள் உள்பட 64 பேர்களேயாகும். இந்த 64 ஸ்தானங்களுக்கு இதுவரை காங்கிரஸ் 62 ஸ்தானங்களுக்கு ஆட்களை நிறுத்தி இருக்கிறது. இவற்றிலும் தோழர்கள் சுப்பையா, சொக்கலிங்கம், அண்ணாமலை, காமராஜ நாடார், கிருஷ்ணசாமி பாரதி, ஆதிகேசவ நாயக்கர், சேலம் சுப்பிரமணியம், ராமநாதன், கிருஷ்ணசாமி பாரதி மனைவி முதலிய சுமார் பதின்மர்களை அவர்கள்...

காங்கிரஸ் தீர்மானங்கள்

காங்கிரஸ் தீர்மானங்கள்

பெய்ஸ்பூரில் கூடிக் கலைந்த 50 – வது காங்கிரசைப் பற்றிக் “குடி அரசி”ல் நமது அபிப்பிராயத்தை எழுதிவிட்டு காங்கிரஸ் தீர்மானங்களின் தன்மையைப் பற்றி பின்னால் எழுதுவதாக எழுதியிருந்தோம். காங்கிரசின் 20 தீர்மானங்களில் ஒரே ஒரு தீர்மானம் மாத்திரம் பொதுஜனங்களின் கவனத்துக்குக் கொண்டு வரத்தக்கதாகும். மற்ற தீர்மானங்கள் சடங்குத் தீர்மானங்களேயாகும். ஆதலால் அவற்றைப் பற்றி குறிப்பிடாமல் முக்கிய தீர்மானத்தைப் பற்றியே கவனம் செலுத்துவோம். அதாவது, சட்டசபை தேர்தலைப் பற்றிய தீர்மானம். “1935-ம் வருஷத்து இந்திய கவர்ன்மெண்ட் ஆக்ட் என்னும் அரசியல் சீர்திருத்தமானது இந்தியருடைய விருப்பத்துக்கு மாறானது. ஆதலால் அதை இந்த காங்கிரஸ் நிராகரிக்கிறது. அதனோடு ஒத்துழைப்பது இந்திய சுதந்திர எழுச்சிக்கு துரோகம் செய்ததாகும். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு இந்தியாவின் மீது உள்ள ஆதிக்கத்தைப் பலப்படுத்துவதாகும். பிரிட்டிஷ் ஏகாதிபத்திய ஆதிக்கத்தினால் ஏற்கனவே சுரண்டப்பட்டுள்ள இந்திய மக்களை இந்த புதிய அரசியல் இன்னும் கசக்கிப்பிழிந்து வேலை வாங்கி தரித்திரர்களாக்கும் என இக்காங்கிரஸ் அபிப்பிராயப்படுகிறது. ஆகையால், இந்த புதிய...

கோடம்பாக்கம் பகுத்தறிவு சங்க ஆண்டுவிழா

கோடம்பாக்கம் பகுத்தறிவு சங்க ஆண்டுவிழா

  தோழர்களே! இன்று இவ்வாண்டு விழாவில் தோழர்கள் ஊ.பு.அ.செளந்திரபாண்டியன், என்.சிவராஜ், எஸ்.குருசாமி, டி.என்.ராமன், குஞ்சிதம், வித்துவான் முனிசாமி, ஆரோக்கியசாமி, கல்யாணசுந்தரம் ஆகியவர்கள் பேசினார்கள். என்னுடைய முடிவுரையுடன் ஆண்டு விழா நிகழ்ச்சி முடிவு பெற்றதென்றே கருதுகிறேன். ஆனால் நான் பேசவேண்டும் என்று கருதி இருந்தவற்றை எல்லாம் உபன்யாசகர்கள் பேசிவிட்டார்கள். ஆதலால் நான் அதிகம் பேசுவேன் என்று நீங்கள் எதிர்பார்க்க மாட்டீர்கள். நீங்கள் ஒற்றுமையாய் இருக்க வேண்டும். பெண்களை அதிகமாக அங்கத்தினர்கள் ஆக்க வேண்டும். ~subhead பகுத்தறிவு ~shend உண்மையிலேயே எல்லோரும் பகுத்தறிவுக்கு இடம் கொடுக்க வேண்டும். பகுத்தறிவை வளர்க்க வேண்டும். எந்த விஷயத்தையும் ஆராய்ச்சி செய்துபார்க்க வேண்டும். மனதிற்குத் தோன்றியதை எல்லாம் பகுத்தறிவு என்று சொல்லிவிடக்கூடாது. புஸ்தகத்தைப் படித்து ஒப்புவிப்பது பகுத்தறிவாகிவிடாது. சாத்தியம் அசாத்தியம் இன்னதென்று அறியவேண்டும். அனுபவ பலன் இன்னதென்று தெரியவேண்டும். நமது சக்தி எப்படிப்பட்டது? அது எவ்வளவு? என்பதை உணரவேண்டும். காலதேச வர்த்தமானங்களைக் கவனிக்க வேண்டும். நமது அறிவுக்கு ஒரு...

சீர்திருத்தத்தை உடைப்பது சம்பாஷணை

சீர்திருத்தத்தை உடைப்பது சம்பாஷணை

  – சித்திரபுத்திரன் ~cmatter சுப்பு:- மணி என்ன விஷேசம்? சும்மா யோசிக்கிறாயே? மணி:- ஒன்றும் இல்லை, இந்த தேவதாசி முறையை ஒழிக்க வேண்டுமே என்று பார்க்கிறேன். சுப்பு:- அதற்கு ஆக என்ன செய்யப் போகிறாய்? மணி:- நம்ம பெண்களுக்கெல்லாம் பொட்டுக்கட்டி (முத்திரை போட்டு) விடலாம் என்று யோசிக்கிறேன். சுப்பு:- என்ன முட்டாளாய் இருக்கிறாயே? தேவதாசி முறையை ஒழிப்பவன் பொட்டுக் கட்டுவதை நிறுத்துவானா? தன் பெண்களுக்கும் பொட்டுக் கட்டுவானா? மணி:- இல்லைய்யா, அப்படிச் செய்யாவிட்டால் வேறு சிலர் தங்கள் பெண்களுக்கு பொட்டுக்கட்டிவிடுவார்கள். ஆதலால், நாம் நம் பெண்களுக்கு பொட்டுக்கட்டிவிட்டால் அவர்களது பொட்டுக் கட்டும் தொழிலும் அவர்கள் தேவதாசித் தொழில் செய்வதும் தடுக்கப்பட்டுவிடாதா? சுப்பு:- அதனால் நமக்கு என்ன லாபம்? எப்படியாவது அந்தத் தொழிலை நிறுத்துவதா அதை நாம் மேற்கொள்ளுவதா? மணி:- நாம் பொட்டுக்கட்டி நம்ம பெண்களை விவசாரித்தனம் செய்ய வேண்டாம் என்று சொல்லிவிட்டால் அந்தத் தொழில் நின்றுவிடாதா? சுப்பு:- இது என்ன...

அருஞ்சொல்  பொருள்

அருஞ்சொல்  பொருள்

  அந்தணாளன்                            பார்ப்பான் அசார்சமாய்                                அசட்டையாய் அரசிறை                        அரசாங்க  வரி அயனம்                          வரலாறு ஆகுதி                               பலி  (வேள்வித் தீயில்  இடுதல்) அந்தர்த்தானம்                         மறைவு,  மறைகை உச்சாஹம்                  உற்சாகம் ஏதேஸ்டமாக                           விருப்பமாக ஏகாலி                              வண்ணான் கடாக்ஷம்                      கடைக்கண்  பார்வை கண்டனை                    கண்டனம் காலாடிகள்                  தொழிலற்றுத்  திரிவோர்கள் கியாதி                              புகழ் கிஸ்து                              நிலவரி குதவைப்பத்திரம்                  அடமானப்  பத்திரம் குமரி  இருட்டு                          விடியற்கு  முன்  உள்ள  இருள் கொடிவழிப்பட்டி                    வம்ச  பரம்பரை  விவரம் சதிபதி                              கணவன் மனைவியர் சமேதரன்                      கூடியிருப்பவன் சரமக்கிரியை                            இறப்புச்  சடங்கு சலூன்  வண்டி                          உயர்நிலையில்  உள்ளவர்கள்  பயணம்  செய்வதற்கான  தனி  பெட்டி  (தொடர் வண்டியில்) சிங்காதனம்                                அரியணை சிஷ்ட  பரிபாலனம்                              நல்லவற்றைக்  காப்பாற்றுதல் சீஷர்கள்                         மாணவர்கள் சுமரும்படி                    சுமக்கும்படி சுவானம்                        நாய் தவக்கம்                         தாமதம் தனதானியாதி                          பணம்  தானியம்  போன்றவை துஷ்ட  நிக்கிரகம்                   தீயவற்றை  அழித்தல் தொண்ணை                               பாதுகாப்புக்கென  வைத்திருக்கும்  கனமான  தடி;  பெரிய  தடி நட்டத்தில்                    கோவணம் மட்டும் கட்டிக்கொண்டு...