தமிழ்நாடு பத்திரிகையின் வம்புச் சண்டை
சுயராஜ்யா, சுதேசமித்திரன் முதலிய பிராமணப் பத்திரிகைகளும் ஸ்ரீமான் சீனிவாச அய்யங்கார் போன்ற பிராமணத் தலைவர்களும் நம்முடன் தொடுக்கும் போர் முடிவுபெறாமல் இருக்கும்பொழுதே தமிழ்நாடு பத்திரிகை யும் இதுதான் சமயமென்று நம்மை வம்புச்சண்டைக்கிழுக்கின்றது. இம்மாதிரி வம்புச் சண்டைகளுக்கும் நாம் இடம் கொடுக்கக்கூடாதென்று எவ்வளவோ காரியங்களை சகித்துக்கொண்டு நமது உத்தேச காரியத்தை மாத்திரம் பார்த்துக்கொண்டு வந்தாலும் வேண்டுமென்றே வலிய வரும் சண்டை களுக்கு நாம் என்ன செய்யலாம்? தற்காலம் தமிழ்நாட்டில் சுயராஜ்ஜியக்கட்சி என்கிற பெயரை வைத்துக்கொண்டு பிராமணர் அல்லாதாரின் செல்வாக்கை அடியோடு ஒழிக்க வேண்டுமென்கிற கருத்தோடு சில பிராமணர்களும், அவர்கள் பத்திரிகைகளும் காங்கிர° பெயரையும், மகாத்மா பெயரையும் மற்றும் உள்ள அநேக தியாகிகளின் பெயரையும் உபயோகப்படுத்திக் கொண்டு °தல °தாபனங்களிலும், தேர்தல்களிலும் காங்கிரசிலும் செய்து வரும் கொடுமைகளையும், சூழ்ச்சிகளையும் கண்டு உண்மையிலேயே மனம் பொறாதவராகி எவ்வளவோ கஷ்ட நஷ்டங்களுக்கிடையில் இவற்றைத் தடுக்க செய்துவரும் ஒருசிறு தொண்டிற்கும் பிராமணரல்லாதாரில் சில தலைவர்கள் என்போர் நமக்கு...
