Author: admin

கல்பாத்தி  ‘பிராமணர்களைவிட வெள்ளைக்காரரே மேல்’

கல்பாத்தி ‘பிராமணர்களைவிட வெள்ளைக்காரரே மேல்’

  கல்பாத்தியில் தீண்டாத வகுப்பாரென்று சொல்லப்படும் இந்து சகோதரர்களை அந்தத் தெருவில் நடக்கக்கூடாதென்று 144 தடை உத்திரவு பிறப்பித்தது பற்றி இச்செய்கைக்கு °தல அதிகாரிகள் பொறுப்பாளிகளல்ல வென்றும், சென்னை கவர்ன்மெண்டாரே இச்செய்கையின் பெரும் பாகத் திற்குப் பொறுப்பாளிகளென்றும், அதிலும் ஸ்ரீமான். ஸர்.சி.பி. இராமசாமி ஐயர் என்கிற ஓர் பிராமண கனவான் சட்ட இலாகாத் தலைவராயில்லாமலிருந்தால், இம்மாதிரி காரியங்கள் நிகழ்ந்திருக்காதென்றும், பொதுஜனங்கள் அபிப் பிராயப்பட்டிருந்த விஷயமானது, இப்போது அடியோடு பொய்யென்று சொல்வதற்கில்லாமல், ஸ்ரீமான் சத்தியமூர்த்தி, சென்னை சட்டசபையில் கேட்ட கேள்விகளினாலும், அதற்கு ஸர்.சி.பி. இராமசாமி அய்யர் அளித்த விடைகளினாலும் இருக்கிறது.  அதாவது:- பாலக்காடு மாஜி°திரேட் 144 உத்திரவு போடும்படி கவர்ன் மெண்டார் தூண்டவில்லையானால், கவர்ன் மெண்டுக்கும், பாலக்காடு மாஜி° திரேட்டுக்கும் நடந்த கடிதப் போக்கு வரத்துக்களை காண்பிக்கமுடியுமா என்ற கேள்விக்கு, ஸர்.சி.பி. இராமசாமி ஐயர், அக்கடிதப் போக்குவரத்துகள் இரகசியமானபடியால் காட்ட முடியா தென்று பதிலிறுத்தியிருக்கிறார். பாலக்காடு மாஜி°திரேட் கல்பாத்தியில் இவ்விதமான உத்திரவு போட...

ஸ்ரீமான் திரு.வி.கலியாணசுந்தர முதலியார்

ஸ்ரீமான் திரு.வி.கலியாணசுந்தர முதலியார்

காஞ்சீபுரம் மகாநாட்டு விஷயத்தைப் பற்றி நமது பத்திரிக்கையில் “காஞ்சீ மகாநாட்டுத் தலைவர்” என்னும் தலைப்பின் கீழ் எழுதி வந்தோம்.  இனி, திரு.வி.கலியாணசுந்தர முதலியார் என்னும் தலைப்பின் கீழ் எழுத அவசியமேற்பட்டுப் போனதைப் பற்றி நாம் இதுவரையில் அடைந்திராத வருத்தத்தையும், கவலையையும் உண்மையிலேயே அடைகிறோம்.   ஆனா லும்,  கடமையைவிட்டு நழுவி அசத்தியத்தைத் தாண்டவமாடச் செய்ய மனம் ஒருப்படேனென்கிறது. சென்ற வாரம் ஸ்ரீமான். முதலியாரவர்கள் தன்னுடைய தலைமைப் பதவியை மனச்சாட்சிப்படி நடத்தினாரா? என்கிற விஷயத்தைப் பொது ஜனங் கள் அறிவதற்காக, பல விஷயங்களுக்கு, ஸ்ரீமான். முதலியாரைப் பதிலெழு தும்படி எழுதியிருந்தோம்.  அவற்றிற்கு நேர்முகமாகப் பதில் சொல்லாமல், இரண்டு, மூன்று விஷயங்களை மாத்திரம் எடுத்துக்கொண்டு, அதைப் பற்றிச் சில விஷயங்களை எழுதியிருக்கிறார்.  அவைகளில் பெரும்பான்மை முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைப்பதுபோலவேயிருக்கிறது.  அதற்குப் பதில் ருஜுவோடு எழுத வேண்டியது நமது கடமையாய்ப் போய் விட்டதாதலால் பின்னால் அவற்றைப்பற்றி எழுதுவதோடு, ஸ்ரீமான். முதலியார் விடை அளிக்காமல் விட்டுவிட்ட விஷயங்களை,...

காங்கிர°

காங்கிர°

நமது நாட்டில் ராஜீய முன்னேற்றங்களுக்கும், சமுதாய முன்னேற் றங்களுக்கும், பொருளாதார முன்னேற்றங்களுக்கும், மகாத்மாவின் ஒத்துழை யாமை சம்பந்தப்படாததற்கு முன் உள்ள காங்கிர° காலங்களில், இவற்றிற்குத் தனித்தனியாக °தாபனங்களும், மகாநாடுகளும் நடந்து வந்தன. ஆனால் மகாத்மா அவர்கள் காங்கிரஸில் பிரவேசித்து காங்கிரஸின் மூலமாக ஒத்துழையாமையை வலியுறுத்தியபின், ராஜீய, சமுதாய, பொருளாதார விஷயங்களோடு மாத்திரமல்லாமல், இன்னும் அநேக நன்மைக்கான காரியங்களும் சேர்த்ததுதான் சுயராஜ்யமென்றும், அவ்வித சுயராஜ்யத்தை காங்கிர° மூலமாகவே அடையக்கூடிய நிலைமையில் கொள்கைகளும் திட்டங்களும் அமைத்து அவற்றிற்கனுகூலமான பல காரியங்கள் தேசத்தில் நடைபெற்று வந்தன. ஆனால், மகாத்மா அரசாங்கத்தாரால் சிறையிலடைப் பட்ட பின்பு, மகாத்மாவின் கொள்கைக்கும், திட்டங்களுக்கும் விரோதமா யிருந்து, அதை ஒழிக்கப்  பிரயத்தனப்பட்டுக்கொண்டு  சமயத்தை எதிர்பார்த்து, மகாத்மா கூடவே இருந்துவந்த சில பேர் மகாத்மா திட்டத்தை ஒழிக்க வெளிக்கிளம்பி பொதுச் சட்ட மறுப்புக்கு ஜனங்கள் தயாராய் இருக் கின்றார்களா? இல்லையாவென்பதைக் கண்டறிவதென்னும் சாக்கைக் கொண்டு ‘சிவில் டிசொபிடியன்°’ கமிட்டி என்ற சட்டமறுப்புக் கமிட்டி...

சுகோதயம் பத்திரிக்கை

சுகோதயம் பத்திரிக்கை

சுகோதயம் என்னும் தமிழ் வாராந்தரப் பத்திரிகை ஆரணியிலிருந்து ஸ்ரீமான். வி.என். ரெங்கசாமி ஐயங்காரவர்களை ஆசிரியராகக் கொண்டு சுமார் நான்கு வருட காலமாக தமிழ்நாட்டில் உலவி வருவது தமிழ் மக்கள் அறிந்த விஷயம். அப்பத்திரிக்கையின் ஆசிரியர் யாதொரு ஊதியமும் இல்லாமல் கௌரவ ஆசிரியராய் இருந்துகொண்டு குறைந்த சந்தாவாகிய வருடம். ரூ 2-8-0 வீதம் ஏழைகளும் படிக்கும்படியான கவலையின் பேரில், எவ்வளவோ கஷ்ட நஷ்டங்களுக்கிடையில் நடத்தி வந்திருப்பதைத் தமிழ் மக்கள் பாராட்டாமலிருக்க முடியாது. அதனுடைய ராஜீயக் கொள்கைகள் தமிழ் நாட்டிலுள்ள மற்ற பெரும்பான்மையான பத்திரிக்கைகள் போல் காற்றடித்த பக்கம் சாயாமல் ஒரே உறுதியாகவே இருந்துவந்தது மற்றுமோர் பாராட்டத்தக்க விஷயம். வகுப்பு விஷயங்களில் ஒருக்கால் நமக்கும் அதற்கும் அபிப்பிராய பேதம் ஏற்பட்டிருந்தபோதிலும், ராஜீய விஷயங்களில் பெரும்பாலும் மகாத்மாவையும், சில சமயங்களில் தீவிர ஒத்துழையா தத்துவத்தையுமே அனுசரித்து வந்திருக்கிறது. அவ்விதப் பத்திரிக்கை இது சமயம் சென்னை பிரசிடென்ஸி மாஜிஸ்திரேட் கோர்ட்டுக்கு ஒரு வழக்கில் இழுக்கப்பட்டு பத்திராதிபர்களின் உரிமைக்கும்,...

ஈரோடு முனிசிபாலிட்டி 

ஈரோடு முனிசிபாலிட்டி 

ஈரோடு முனிசிபல் சேர்மன் மீது சில கவுன்சிலர்கள் சென்ற மாதம் ஈரோடு முன்சீப் கோர்ட்டில், உண்மையில் நிறைவேறிய தீர்மானத்தை நிராகரித்து விட்டு , ஒழுங்கற்ற ஓர் தீர்மானத்தை நிறைவேற்றியதாக தனது மினிட் புஸ்த்தகத்தில் சேர்மன் குறித்துக் கொண்டாரென்றும்  ஆதலால் அதை அமுலுக்குக் கொண்டுவரக்கூடாதென்றும், ஓர் தற்காலத்தடை உத்தரவு பெற்றதைப்பற்றி 15. 11. 25 “குடி அரசு” பத்திரிக்கையில் வாசகர்கள் வாசித்திருக்கலாம். அவ்வழக்கு நாளது மாதம் 8 -ந்தேதி ஈரோடு டி.மு. கோர்ட்டில் மறுபடியும்  விசாரணைக்கு வந்தது. விசாரணையில் இது விஷயத்தில் பிரவேசிக்க முன்சீப் கோர்ட்டுக்கு அதிகாரமில்லை யென்றும், அக்ராசனாதிபதி என்ற ஹோதாவில் தான் செய்ததற்கு தானே தான் எஜமானென்றும், தன்னுடைய காரியத்தைச் சரியென்று நிரூபிக்க, சில கவுன் சிலர்களின்  பிரமாண வாக்கு மூலங்கள் ஆஜர் செய்யப்பட்டிருக்கின்ற தென்றும், பிரஸ்தாபத் தடை உத்திரவினால், சிங்காரவனத்தின் வேலைகள் தடைப்பட்டு  அதற்கென்று வாங்கி வைத்திருக்கும் செடிகளும், கொடிகளும் காய்ந்து வருகிறதென்றும், ஜில்லா கலெக்டரும் தனது காரியத்தைச்...

சுயராஜ்யக் கக்ஷிக்கு சாவுமணி

சுயராஜ்யக் கக்ஷிக்கு சாவுமணி

கவர்ன்மெண்டை முட்டுக் கட்டை போட்டு °தம்பிக்கச் செய்ய ஆரம்பித்த சுயராஜ்யக்கட்சி, கவர்ன்மெண்டுக்குக் கொஞ்ச நஞ்சம் இருந்த கட்டையும் அவிழ்த்து விட்டுவிட்டு, தனக்கே முட்டுக்கட்டை போட்டுப் பிரசாரம் கூட செய்ய முடியாமல் தன்னையே °தம்பிக்கச் செய்து கொண்டது.  சுயராஜ்யக் கட்சி இந்த நிலைமைக்குத்தான் வருமென்று முன்னமேயே பலர் சொல்லிவந்தது உலகம் அறிந்ததே. ஆனாலும், ஆசை வெட்கமறியாது என்பது போல் பதவிகளும், உத்தியோகங்களும் பெற ஆசை கொண்ட வர்கள், உலகத்தார் முன்னிலையில் தங்கள் சுயமரியாதை எவ்விதம் மதிக்கப் படுகிறது என்பதையே லக்ஷியம் செய்யாமல், ஒன்றுகூடி பொய்ப் பிரசாரத் தையும், பாமர ஜனங்களின் அறியாமையையும் தங்களுக்கு ஆ°தியாக வைத்துக்கொண்டு, பதவி வேட்டையையும், உத்தியோக வேட்டையையும் அடைய ஆரம்பித்தார்கள்.  இதன் பலனால் தேசத்தின் ராஜீய வாழ்விலுள்ள கட்டுப்பாடும், கண்ணியமும், மதிப்பும் நீங்கி சுயநலங்கள் மலிந்து, சுயராஜ்யக் கட்சிக்குள்ளாகவே போட்டிகள் ஏற்பட்டு, ஒருவரையொருவர் வெளிப் படுத்திக் கொள்ளவேண்டியதாயிற்று. சுயராஜ்யக் கட்சியார் பம்பாயில் கூடி ஒருவரையொருவர் வெளிப் படுத்தாமல் உத்தியோகம்...

கொல்லை வழிப்பிரவேசம், சாக்கடை வழிப்பிரவேசத்தைவிட மோசமானதா?

கொல்லை வழிப்பிரவேசம், சாக்கடை வழிப்பிரவேசத்தைவிட மோசமானதா?

சென்னை ஜ°டி° கக்ஷியைச் சேர்ந்த ஸ்ரீமான். தணிகாசலம் செட்டியாரவர்கள், சென்னை கார்ப்போரேஷனுக்குள் நியமனம் மூலியமாய் பிரவேசித்ததைக் கொல்லை வழியென்று சில பிராமணப் பத்திரிகைகள் கூக்குரலிடுகின்றன.  ஆயினும் நமக்கு அதைப்பற்றிக் கவலையில்லை.  சுயராஜ்யக் கட்சியாரும், அதன் தலைவர்களும் சாக்கடை வழியில் பிரவேசிக்கிறார்களே, இதை விட ஜ°டி° கக்ஷிக்காரருடைய நடவடிக்கை எப்படி மோசமாகும்? கோயமுத்தூர் ஜில்லா காங்கிர° கமிட்டித் தலைவரும், சுயராஜ்யக்கக்ஷித் தலைவருமான ஓர் பிராமணர், பிராமணருக்கு விரோதமான கக்ஷியென்றும், நாட்டிற்குப் பிற்போக்கான கக்ஷியென்றும், சர்க்கார் உத்தியோகத்துக்கும், சுயநலத்துக்கும் ஆசைப்பட்ட கக்ஷியென்றும், தன்னால் சொல்லப்படுகிற ஜ°டி° கக்ஷியின் ஆதிக்கத்திலிருக்கிற இலாகாக்களிலொன்றான, ஜில்லாபோர்டு அங்கத்தினர் °தானத்துக்கு. ஒத்துழையாமையையும் முட்டுக்கட்டையையும் ஆதரிக்கிற தத்துவங்களைக் கொண்டவர், பனகால் இராஜாவைக் கெஞ்சி அவரை ஏமாற்றி, ஜில்லா போர்டுமெம்பர் பதவி பெறுவது சாக்கடை வழியில் செல்லுவதா? அல்லவா? ஜ°டி° கக்ஷியாரின் கொள்கைப்படி °தல °தாபனங்களில் நியமனம் பெறுவது கடுகளவு அறிவு உள்ளவனும் ஒருக்காலும் கொல்லைவழியென்று சொல்லவே மாட்டான்.  ஒருக்கால் தேர்தலில் தோற்றுப்போய்...

மநுநீதி கண்டமுறை  “உதைத்துக் கொன்றதற்கு ரூபாய் 200 அபராதம்”

மநுநீதி கண்டமுறை “உதைத்துக் கொன்றதற்கு ரூபாய் 200 அபராதம்”

  அஸாம் தேயிலைத்தோட்டத்தில், வேலை செய்த ஓர் இந்தியக் கூலியை உதைத்துக்கொன்ற ஓர் ஐரோப்பியருக்கு 200 ரூபாய் அபராதம் விதித்ததைக் கேட்க இந்தியர்கள் மனம் பதறுமென்பதில் ஆnக்ஷபனை யில்லை.  ஆனபோதிலும், இதுமுதல் தடவையல்ல.  இதற்கு முன் பல தடவை களில் இதைவிடக் கொடுமையான சம்பவங்கள் பலவற்றைப் பார்த்திருக் கிறோம். இரண்டொரு ஆண்டுகளுக்கு முன்பாக, செயில்காட் என்கிற இடத்தில் ஓர் இந்திய °திரீயை நிர்வாணமாய் இழுத்துக்கொண்டுபோய் இரத்தம் வரும் படியாகப் புணர்ந்த ஓர் ஐரோப்பிய சோல்ஜருக்கு, 25 ரூபாய் அபராதம் விதித்த மாஜி°திரேட் தீர்ப்பு எழுதுகையில், “ஓர் இந்திய °திரீயை, ஓர் ஐரோப்பியர் புணர்ந்ததை ஓர் பெரிய தப்பென்பதாக நான் எடுத்துக்கொள்ளவில்லை, ஆனால் இரத்தம் வரும்படி புணர்ந்ததற்காக அபராதம் விதிக்கும்படியிருக்கிறது.  ஆதலால் அதற்காக 25 ரூபாய் அபராதம் விதிக்கிறேன்” எனக் குறிப்பிட்டிருந்தது நேயர்கள் ஞாபகத் திலிருக்கும். வெள்ளைக்காரருடையவும்,  அரசாங்கத்தாருடையவும், இதுபோன்ற செய்கைகள், மதிக்கத்தகுந்ததும், இந்து தர்மத்திற்கே ஆதார மானதுமான மநுதர்ம சா°திரத்தை நமக்கு...

சேலம் தியாகராய நிலையம் திறப்பும் கதர்ச்சாலை திறப்பும்

சேலம் தியாகராய நிலையம் திறப்பும் கதர்ச்சாலை திறப்பும்

சிறந்த தேசபக்தரும், உண்மை சமூகத் தொண்டருமான காலஞ்சென்ற ஸ்ரீமான். தியாகராய செட்டியாரின் ஞாபகார்த்தத்திற்காக ஏற்பட்ட தியாகராய நிலயம் என்னும் கட்டிடத்தைத் திறந்து வைக்கும் பாக்கியம் நான் அடைந்ததைப்பற்றி அளவிலாத மகிழ்ச்சி எய்துகிறேன்.  இக்காரியத்தைச் செய்ய எனக்குக் கட்டளையிட்ட ஸ்ரீமான். கணபதியா பிள்ளையவர்களுடைய அன்பையும், விடாமுயற்சியையும் நான் பாராட்டுவதோடு, அவருக்கு எனது நன்றியைச் செலுத்துகிறேன்.  ஸ்ரீமான். கணபதியா பிள்ளையவர்களின் குணாதிசயங்களை ஸ்ரீமான். வரதராஜுலு நாயுடுவால் கேள்விப்பட்டிருக்கிறேன்.  ராஜீய விஷயத்தில் அவருக்கும், நமக்கும் அபிப்பிராயபேதமிருந்தாலும், அவருடைய அபிப்பிராயம் நமது அபிப்பிராயத்தில் குறுக்கிடுவதாயிருந்தாலும், அவரது உண்மைத் தத்துவத்தையும் ஊக்கத்தையும் நான் பாராட்டாமலிருக்க முடியாது. ஸ்ரீமான். தியாகராய செட்டியார் தென்னாட்டுக்கே பழுத்த தேசாபி மானி.  அவர் நமது சமூகத்துக்கு உண்மையாய்த் தொண்டு செய்தவர்.  பிராமணரல்லாதாருக்கு மறக்க முடியாத தலைவர்.  அவருடைய காரியங்க ளெல்லாம் கொஞ்சமும் சுயநலமற்றது.  ராஜீய விஷயங்களில் எனக்கும் அவருக்கும் அபிப்பிராய பேதங்களிருந்தாலும், சமூக முன்னேற்றத்தில் எங்களுடைய அபிப்பிராயம் ஒன்றாகவே இருந்து வந்தது.  சமூக விஷயத்தைப்...

காஞ்சீ மகாநாட்டுத் தலைவர்

காஞ்சீ மகாநாட்டுத் தலைவர்

  காஞ்சீ மகாநாட்டுத் தலைவர் ஸ்ரீமான். திரு.வி.கலியாணசுந்தர முதலியார், தமது ‘நவசக்தி’ பத்திரிகையில்  “மகாநாட்டுத் தலைவர் ஐயங்கார், ஆச்சாரியார் கைப்பிள்ளையாக நடந்தார் என்னும் உரைகளை ‘குடி அரசு’ பத்திரிகை திரும்ப வாங்கிக்கொள்வது அதன் பெருந்தகைமையைக் காப்பதாகும்.  ஒருவர் தனது மனச் சான்றுப்படி நடந்ததை மற்றொருவர் திரித்துத் தம் மனம் போனவாறு கூறுவது அறமாகா.  “குடி அரசு” ஆசிரியர்பால் எமக்கு நிரம்பிய அன்பு உண்டு.  அவ்வன்பு காரணமாகவே இவ்வாறு எழுதத் துணிந்தோம்” என்று எழுதியிருக்கிறார். ஆனால் ‘குடி அரசு’ அதன் பெருந்தன்மையைக் காப்பாற்றிக் கொள்வதிலோ, சிறுந்தன்மை அடையாதிருப்பதிலோ கருத்துவைத்து அது தமிழ் நாட்டில் உலாவவில்லை.  பெருந்தன்மையைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமானால், அனேக சிறுந்தன்மைக் காரியம் செய்யவேண்டுமென்பது அதற்குத் தெரியும்.  பெருந்தன்மை வந்தாலும் சரி சிறுந்தன்மை வந்தாலும் சரி அல்லது குடி அரசே மறைந்து போவதாயிருந்தாலும் சரி உண்மையை – தன்  மனதுக்கு உண்மை என்று பட்டதை – எடுத்துச் சொல்லுவதுதான் அதன் தொண்டாக...

தியாகராயர் திருநாள்

தியாகராயர் திருநாள்

இம்மாதம் 16, 17, 18-ந்தேதி ஆகிய மூன்று நாட்களையும், காலஞ் சென்ற பெரியாரான ஸ்ரீமான். பி. தியாகராய செட்டியாரின் நினைவுக்குறிய திரு நாளாகக் கொண்டாடவேண்டுமென்று, கனம். பனகல் இராஜா ஓர் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். இதனைப் பற்றி “லோகோபகாரி” பத்திரிக்கை பின்வருமாறு எழுதுகிறது:- “ டிசம்பர் மாதம் 16,17,18-ந்தேதிகளை காலஞ்சென்ற பெரியாரான திரு. பி. தியாகராய செட்டியாரவர்களின் திருநாளாகக் கொண்டாட வேண்டு மென்று தீர்மானித்திருக்கிறார்கள். காலஞ்சென்ற பெரியாருக்கு ஞாபகச் சின்னம் ஒன்று ஏற்படுத்தவேண்டுமென்றும், அவர் கொள்கைகளை நாடெங்கும் பரப்பவேண்டுமென்றும், அதற்காக நன்கொடைகள் வசூலிக்க வேண்டுமென்றும் முடிவு செய்திருக்கிறார்கள். காலஞ்சென்ற தியாகராயர் நாட்டின் நல்வாழ்வு கருதியும், சிறப்பாகப் பிராமணரல்லாதாரின் பெரு வாழ்வு கருதியும், பெருந்தொண்டு செய்தாரென்பதை யாரும் மறக்கமுடி யாது. அவர் திரு நாளைத் தக்கதோர் முறையில் கொண்டாடவேண்டும். அவர் நினைவை மற்றவர்கள் எவ்வாறு கொண்டாடினும் கொண்டாடட்டும். தியாகராயர் பெயரால் நாட்டிலே தகுதியான பல இடங்களில், கதர் நெசவுச் சாலைகள் ஏற்படுத்தவேண்டுமென்று நாம் சொல்லுவோம்....

ஸ்ரீமான் சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியாரின் 10 கற்பனைகள்

ஸ்ரீமான் சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியாரின் 10 கற்பனைகள்

27-11-25 -ல் ஸ்ரீமான். ராஜகோபாலாச்சாரியார் “நவசக்தி” பத்திரி கைக்கு ஒரு வியாசம் எழுதியிருக்கிறார்.  அதை நவசக்தி பொய்மான் வேட்டை என்ற தலைப்பில் பிரசுரித்திருக்கிறது.  இது நீண்ட வியாசமா யிருப்பதால், அதில் உள்ள முக்கிய 10 விஷயங்களை மாத்திரம் எடுத்து ஆராய்வோம். “பல காரணங்களால் உயர் பதவியடைந்த ஒரு ஜாதியாரைக்கண்டு பொறாமை கொண்டு மற்ற ஜாதியாரைச் சேர்ந்த பெரியோர்கள் அவர்களைத் தூஷித்து அவர்களை ஒடுக்குவதாக கிளர்ச்சி செய்தால் ……நன்மை விளைவதாக தோற்றம் காட்டலாம்;  விரைவில் அப்பொய்த் தோற்றம் மறைந்துபோய் பழைய கதையாய் முடியும்”. “நாட்டிலுள்ள மற்ற சமூகங்களின் வெறுப்புக்கும் துவேஷத் திற்கும் பார்ப்பனர் ஆளாகும்படி தீவிர பிரசாரம் சிலர் செய்து வருகிறார்கள். இக்கிளர்ச்சியும், இதனால் உண்டாகும் துவேஷமும், நாட்டிற்கு கேடு விளைவிக்குமென்பதில் ஐயமில்லை”. “வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் என்றால் ஒரு ஜாதியாரேயல்லாமல் பல ஜாதியார்கள் அதிகார சபையில் இருப்பது மாத்திரம் அல்லாததோடு, பிராமணர்களை பிராமணர் மாத்திரம் தெரிந்தெடுக்க வேண்டும் என்பதும், மற்ற ஜாதியார்கள் பிராமணரல்லாதார்களைத்தான்...

காஞ்சீபுரம் பிராமணரல்லாதார் மகாநாடு

காஞ்சீபுரம் பிராமணரல்லாதார் மகாநாடு

“தேசத்தின் முன்னேற்றத்தை உத்தேசித்தும், தேசீய ஒற்றுமையை உத்தேசித்தும் அரசியல் சம்மந்தமான சகல பதவிகளிலும் இந்து சமூகத்தில் பிராமணர் – பிராமணரல்லாதார், தீண்டாதார் என்போர் ஆகிய இந்த மூன்று சமூகத்தாருக்கும் அவரவர் ஜனத்தொகையை அனுசரித்து பிரதிநிதி °தானம் கிடைக்கும்படி ஏற்பாடு செய்யவேண்டுமாய் மாகாண மகாநாட்டை கேட்டுக் கொள்வதோடு இத்தீர்மானத்தை மாகாண மகாநாடு மூலமாய் காங்கிரசையும் வலியுருத்தும்படி தீர்மானிக்கிறது” என்னும் தீர்மானத்தை பிரேரேபித்துப் பேசியதாவது:- நாம் ஒவ்வொருவரும், சுயராஜ்யம் அடைய பாடுபடுவதாய் சொல்லு கிறோம், அதற்காக எவ்வளவோ கஷ்டத்தையும் அனுபவிக்கிறோம்.  சுயராஜ் யம் கிடைத்தால் அது பொதுமக்கள் ராஜ்யமாயிருக்க வேண்டாமா? நாட்டின் தற்கால நிலைமையைப் பார்த்தால், சுயராஜ்யமென்பது பிராமண ராஜ்யம்தான் என்னும் பயம், இப்போது மக்களிடை உண்டாகி வருகிறது.  பிரிட்டிஷ்ஆட்சி புரிகிற இக்காலத்திலேயே, மனிதர்களைத் தெருவில் நடக்கவிடக்கூடாது குளம் குட்டைகளில் தண்ணீர் எடுக்கவிடக்கூடாது என்னும் பல கொடுமைகள் நடை பெறுகிறபோது ராஜ்ய அதிகாரம் ஒருவகுப்பார் கைக்கே வந்து விடுமானால் இனி என்ன  கொடுமைகள் செய்ய...

ஆதி முதற்கொண்டே சூழ்ச்சி

ஆதி முதற்கொண்டே சூழ்ச்சி

வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் கேட்பது நேற்றா ? இன்றா? காஞ்சீபுரம் மகாநாடு நடந்து இரண்டு வாரங்களாகிவிட்டது. மகாநாட் டின் சம்பவங்களும் பழைய கதை ஆகிவிட்டன. ஆனால் அம் மகாநாட்டின் சம்பவங்களால் ஒவ்வொரு நிமிஷமும் புதிய எண்ணங்களே தோன்றிக் கொண்டிருக்கின்றன. தமிழ்நாட்டு காங்கிர° ராஜீய நாடகத்தில் பிராமணரல் லாதவர்களின் சார்பாக ஸ்ரீமான்கள் வரதராஜுலு நாயுடு,  கலியாணசுந்திர முதலியார், ஈ.வெ.ராமசாமி நாயக்கர்  ஆகிய இம்மூவர்களின் வேஷமும், விளம்பரங்களும்தான் அடிக்கடி விசேஷமாய்த் தோன்றும். இம் மூவர்கள் தான் காங்கிரஸில் பிராமணரல்லாதாருக்கு உள்ள பற்றுதலுக்கும் காங்கிரஸை பிராமணரல்லாதார்  ஆமோதிக்கிறார்கள் என்பதற்கும் ஆதாரமாய் எடுத்துக் கொள்ளப்பட்டவர்கள். தென்னிந்திய நல உரிமை கூட்டுறவு சங்கம் அதோடு மாத்திரமல்லாமல், காங்கிர° “ பிராமண ராஜ்யம் ” °தாபிக் கத்தகுந்த சாதனமென்றும் சுய ஆட்சி என்பது –  பிராமண ஆக்ஷிதானென் றும் கருதிய பெரியோர்களான  டாக்டர் டி.எம்.நாயர், ஸர்.பி. தியாகராய செட்டி யார் போன்ற தேசாபிமானமும், அநுபவமும் வாய்ந்த பல பெரியோர்களால் சொல்லி, காங்கிரஸை...

வைக்கம் சத்தியாக்கிரக                          வெற்றிக் கொண்டாட்டம்

வைக்கம் சத்தியாக்கிரக                          வெற்றிக் கொண்டாட்டம்

“ எங்களுக்குச் ( தனக்கும் தனது மனைவிக்கும் ) செய்த  உபச்சாரத்திற் காக நன்றி செலுத்துவதோடு சத்தியாக்கிரக  இயக்கத்தின் ஜெயிப்பைப் பற்றியும், தோல்வியைப் பற்றியும் பேசுவதற்கு அதற்குள்ள காலம் வந்துவிட வில்லை ” . தெருவில் நடக்க உரிமை கேட்பவர்களைச் சிறைக்கு அநுப்பிய அரசாங்கம், தெருவில் நடப்பதற்கு இப்போது நமக்கு வேண்டிய உதவி செய்ய முன் வந்திருப்பதைப் பார்த்தால் சத்தியாகிரகத்திற்கும், மகாத்மா விற்கும் எவ்வளவு சக்தி இருக்கிறதென்பது விளங்கும். சத்தியாக்கிரக  ஆரம் பத்தில் பிராமணர்கள் கக்ஷியில் இருந்த அரசாங்கத்தார்,  இப்போது பிராமணர் களுக்கு விரோதமாகவே தீண்டாதாரென்போரை கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு சர்க்காரார் செல்லுவதை நாம் பார்க்கிறபோது நமக்கே சத்தியாக்கிரகத்தின் தன்மையைப் பற்றி ஆச்சரியப்படத்தக்கதாய் இருக்கிறது. சத்தியாக்கிரகத்தில் ஏற்பட்ட கஷ்டங்களை நாம் பொறுமையாய் அநுபவித்து வந்ததால் இவ்வித சக்தியை இங்கு காண்கிறோம். பலாத்காரத் திலோ, கோபத்திலோ, துவேஷத்திலோ நாம் இறங்கியிருப்போமேயானால் இச்சக்திகளை நாம் ஒருக்காலும் கண்டிருக்கவே மாட்டோம். சத்தியாக் கிரகத்தின் உத்தேசம்...

காஞ்சீபுரம் பிராமணரல்லாதார் மகாநாடு

காஞ்சீபுரம் பிராமணரல்லாதார் மகாநாடு

  இன்று தினம் பிராமணரல்லாதாராகிய நாம் எல்லோரும் இங்கு கூடியிருக்கிறோம்.  இத்தகைய பெரிய மகாநாடு எதன் பொருட்டு கூட்டப் பட்ட தென்பது பற்றியும் இதில் என்னென்ன விஷயங்களைக்குறித்து ஆலோசிக்கப்படும் என்பதைப் பற்றியும் அறிந்து கொள்ள இங்கு கூடியுள்ள பலரும் அவாக் கொண்டிருக்கக் கூடும்.  இம்மகாநாடு எந்த வகுப்பாரிடத்தும் அதிருப்தியாவது துவேஷமாவது காரணமாகக் கொண்டு கூட்டப்பட்டதன்று. தேசவிடுதலைக்காக ராஜீய விஷயத்தில் நமது நிலைமையைத் தெளிவாக்கி ஒரு திட்டம் நமக்கென அமைத்துக்கொள்வது நியாயமேயாம்.  நம்முடைய உரிமைகளையும் நன்மைகளையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டுவதன் நிமித்தம், இத்தகைய மகாநாடுகள் கூட்டவேண்டியது அத்தியாவசிய மென் றேற்படுகின்றது.  இதுபோன்ற மகாநாடுகள் சென்ற ஐந்தாறு ஆண்டுகளாக மாகாண மகாநாடும் காங்கிரசும் கூடும்போது அவ்வவ்விடத்திலேயோ பிறிதோரிடத்திலேயோ கூட்டப்படுவது வழக்கமாய் வருகிறது.  இத்தகைய மகாநாடுகளில் நமது முன்னேற்றத்திற்கான வழிகளைக் குறித்து ஆலோசித்து முடிவு செய்ய வேண்டுவது முதற் செய்ய வேண்டிய வேலைகளில் முக்கியமானதாகிறது.  தேசத்தில் பிராமணர் பிராமணரல்லாதார் என்ற தனிப்பட்ட கட்சிகள் தோன்றி பிணக்குறுவது...

* முதலாவது தீர்மானம்

* முதலாவது தீர்மானம்

  பாட்னாவில் கூடிய அகில இந்திய காங்கிர° கமிட்டி கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட தீர்மானத்தை கதராடை எப்போதும் கட்டாயமாய் உடுத்த வேண்டும் என்ற மாறுதலுடன் காங்கிர° உறுதி செய்யவேண்டுமாய் இம் மகாநாடு சிபார்சு செய்கிறது. இப்போது சுயராஜ்யக்கட்சியார் நடத்திவரும் ராஜீயத்திட்டத்தில் குறைவுபடாமல் இன்னும் தீவிரமாக காங்கிர° ராஜீய வேலைத்திட்டத்தை நடத்தி சட்டசபை தேர்தல்களையும் நடத்தவேண்டுமென்றும் இனி சுயராஜ் யக் கட்சி என்ற பெயரே வேண்டாமென்றும் இம்மகாநாடு கான்பூர் காங்கிர சுக்கு சிபார்சு செய்கிறது. என்ற தீர்மானத்தை ஸ்ரீமான். ளு. சீனிவாசய்யங்கார் பிரேரேபித்து பேசியதின் சுருக்கம். இத்தீர்மானமானது தமிழ்நாட்டிற்கே புதியது என்றும் அதனால்தான் தான் பிரேரேபிப்பதாயும் நமக்கு எதிரிகள் பலமாயிருப்பதால் காங்கிரசும், சுயராஜ்யக்கட்சியும் ஒன்றாகிவிடவேண்டும் என்றும் சுயராஜ்யக்கட்சி சட்ட சபை ஒத்துழையாமை செய்வதில்லை என்று சிலர் சொல்வதை கவனிக்கக் கூடாது என்றும் இதெல்லாம் நாம் சரிசெய்துகொள்ளக்கூடிய சிறு விஷயங் கள் என்றும் முட்டுக்கட்டை போடுவதுதான் சுயராஜ்யக்கட்சி கொள்கை யென்றும் வகுப்பு நன்மைகளைப் பற்றிக்கூட சுயராஜ்யக்கட்சியார்...

காஞ்சீபுரம் இராஜீய மகாநாடு

காஞ்சீபுரம் இராஜீய மகாநாடு

  ஸ்ரீமான். ஈ.வெ.ராமசாமி நாயக்கர் அடியோடு அசல் தீர்மானத்தையே* எதிர்த்து பேசுகையில் தீர்மானமே ஜனங்களை ஏமாற்றுகிற மாதிரியில் எழுதியிருக்கிறதென்றும் பாட்னா தீர்மானம் என்ன என்பதும் சுயராஜ்யக்கட்சி திட்டம் என்ன என்பதும் இங்குள்ள அனேகருக்கே தெரியவில்லை என்றும் தெரியும்படி யாரும் எடுத்து சொல்லவில்லையென்றும் காங்கிரசின் பெயர் கெடாமலிருக்கவே சுயராஜ்யக்கட்சி திட்டத்தை காங்கிர° ஒப்புக்கொள்ள வில்லை யென்றும் காங்கிரசுக்காவது மகாத்மாவுக்காவது சுயராஜ்யக் கட்சித் திட்டத்தில் நம்பிக்கையில்லையென்றும் டில்லி காகிநாடா முதலிய தீர்மானங்களாலும் மகாத்மாவின் சலுகையாலும் தாங்கள் வேண்டியளவு பிரசாரம் செய்ய சவுகரியமேற்படுத்திக்கொண்டதோடு வேறுயாரும் எதிர் பிரசாரம் செய்யக்கூடாதென்று மகாத்மாவிடம் சிபார்சு பெற்றுக்கொண்ட தாலும் மீறி எதிர் பிரசாரம் செய்பவர்களை சுயராஜ்யக் கட்சிக்காரரும் அவர்கள் பத்திரிக்கையும் தூற்றி வருவதாலும் அதற்கு பயந்து கொண்டு யாரும் வெளியில் வராமல் வெகுசிலரே துணிவாய் அதன் தந்திரங்களையும் தப்பிதங்களையும் எடுத்துச் சொல்வதாலும் பொது ஜனங்களுக்கு சுயராஜ்யக் கட்சி ரகசியம் ஒன்றுமே தெரிவதற்கில்லாமல் போய்விட்ட தென்றும் இதனால் ஜனங்களுக்கு சட்டசபை என்கிற...

காஞ்சீபுரம் மகாநாடுகள்

காஞ்சீபுரம் மகாநாடுகள்

காஞ்சீபுரத்தில், ராஜீய மகாநாடென்று ஒரு மகாநாடு கூடிக்  கலைந் தது. பெயர் ராஜீய மகாநாடென்று சொல்லிக்கொள்ளப் பட்டாலும்  அஃதொரு சூதாட்ட மகாநாடாகவே முடிந்தது. சூதாட்டமாட நன்கு தெரிந்த வர்கள் நல்ல லாபமடைந்தார்கள். அது தெரியாதவர்கள்  லாபமடையவில்லை. சூதாட்டத் தினால் சம்பாதித்த பொருள் எவ்வளவு காலம் நிற்குமென்பதையும் இச்சூதின் தன்மையை பொது ஜனங்கள் அறிந்து கொண்டால் பிறகு இவர்கள் யோக்கியதை என்னாகு மென்பதையும் இச்சூதாட்டக்காரர்கள் அறியாமல் போனது அவர்களுடைய பொல்லாத காலமேயல்லாமல் மற்றபடி யாருக்கும் ஒன்றும் நஷ்டமாய்ப் போய் விடவில்லை. தலைமை உபந்யாசங்கள் உபசரணைத் தலைவர் ஸ்ரீமான் முத்துரங்க முதலியார் வாசித்த வரவேற்பு பிரசங்கம் அவரெழுதியதல்லவென்றும் அவர் கருத்தல்ல வென்றும் அவர் வாசிக்கும் பொழுது கேட்டுக் கொண்டிருந்தவர்களுக் கெல்லாம் நன்றாய் விளங்கியிருக்கும். எவரோ ஒரு பிராமணர் தன்னிஷ்டம் போல் பிராமணரல்லாதாரை நன்றாய் வைது எழுதி அவர் கையில் கொடுத்து அவரை வாசிக்கச் சொல்லி அதை கேட்டுக் கொண்டிருந்தவர்களெல்லாம் ஐயோ பாவம்!   அவரை  வையும்...

வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம்

வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம்

இதைப்பற்றி கொஞ்சகாலத்துக்கு முன்பு நமது 16-8-25 குடி அரசின் இதழில் சித்திரபுத்திரன் யெழுதிய ஒரு கட்டுரை வாசகர்கள் பார்த்திருக்கலாம்.  இன்று நடக்கப்போகும் காஞ்சி மகாநாட்டில் ஒரு தீர்மானம் வருவதாய்த் தெரிகிறபடியால் அதனவசியத்தைப்பற்றி வாசகர்கள் மறுபடியும் அதைப் பற்றி அறியுமாறு சில வாக்கியங்கள் எழுதுகிறோம்.  வகுப்புவாரிப் பிரதிநிதித் துவம் என்பது ஒரு தேசத்தின் ஆட்சியின் பொது உரிமையும் அந்நாட்டின் குடிமக்களின்   உரிமை சகலமும் எல்லா வகுப்பாரும் ஏற்றத்தாழ்வின்றி சமமாய் அடையவேண்டிய தென்பதுதான்.  இதன் அரசாங் கத்தாரும் குடி மக்களுக்கு சரியாய் வழங்குவதாய் 1840-ம் வருஷத்திலேயே ஒப்புக்கொண்டு (போர்டு °டாண்டிங் ஆர்டர் 125 -ன் மூலமாய்) வெளியிட்டுமிருக்கிறார்கள்.  ஆதலால் இந்தியர்களுக்கு பெரிய உத்தியோகங்கள் ஏற்பட்டதன் பிறகோ சீர்திருத்தங்கள் ஏற்பட்டதன் பிறகோ வகுப்புவாரி பிரதிநிதித்துவம் என்ற பேச்சு பிறந்ததல்ல.  ஆனால் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் ஏற்பட்டால் யாருடைய செல்வாக்கும் போகங்களும் ஆதிக்கங்களும் குறைந்துவிடுமோ அவர்கள் வசமே அரசாங்கத்தின் ஆதிக்கமிருந்து அவர்களே அநுபவித்துக் கொண்டேவந்த தினால் வகுப்புவாரி பிரதிநிதித்துவமென்பது...

குமரனும் ஊழியனும்

குமரனும் ஊழியனும்

சுயராஜ்யக் கட்சியைப்பற்றி குமரன் தலையங்கத்திலுள்ள சில குறிப்புகள்:- “சுயராஜ்யக்கட்சியானது தற்போதைய நிலைமையில் மிகப் பாராட்டத் தக்கதாயிருந்தும் நமது மாகாணத்தைப் பொருத்தமட்டில் அக்கட்சியானது நல்ல நிலையிலில்லை.  அது இங்கு வளர்ச்சியடைகிறதென்று கூறவும் முடியவில்லை.  இக்கட்சியானது சென்னைப் பத்திரிகைகளின் ஆரவாரத் தாலும், வாசாலகமாகப் பேசும் வல்லமையுள்ள சத்தியமூர்த்தி போன்றவர் களாலும், செல்வாக்கு பெற்ற இரண்டொரு பிராமணத் தலைவர்களாலுமே இயங்கி வருகின்றதென்று கூறுவார் கூற்றை மறுப்பது எளிதன்று. சென்னை மாகாண சுயராஜ்யக்கட்சியாரின் செல்வாக்கு பிராமண ஜாதியின் ஆதிக்கத்தைப் பலப்படுத்துவதற்குப் பெரிதும் உபயோகப்படுத்தப் படுகிறதென்ற உரையும் பொய்யென்று மறுப்பதற்கில்லை.  இம்மாதிரியான நோக்கங்கள் அக்கட்சியின் முன்னணியில் நிற்பவர்களது உள்ளத்தில் பதிந்து கிடக்குமாயின் அக்கட்சி ஒரு நாளும் தமிழ்நாட்டில் வேரூன்றப் போவ தில்லை.  ஜாதிக் கொடுமையால் நைந்து புண்பட்டுக்கிடக்கும் தமிழ்நாட்டில் புதிய பிராமண சகாப்தத்தை உண்டாக்க சுயராஜ்யக் கட்சித் தலைவர்கள் எண்ணங் கொண்டு அரசியல் பேச  முன்வருகிறார்களென்பது உண்மை யானால் அத் தலைவர்களது செல்வாக்கை அடியோடு ஒழித்தற்கு முயலல் வேண்டும்....

தீண்டாமைக்கு யார் பொறுப்பாளி  பாலக்காட்டில் 144-க்கு யார் பொறுப்பாளி?

தீண்டாமைக்கு யார் பொறுப்பாளி பாலக்காட்டில் 144-க்கு யார் பொறுப்பாளி?

  தீண்டாமை யென்பது நமது நாட்டில் இந்து மதத்தில் மாத்திரம் மனிதனுக்கு மனிதன் பிறவியிலேயே உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்றும், மனிதனுக்கு மனிதன் பார்த்தால், கிட்டவந்தால், பேசினால், தெருவில் நடந்தால், தொட்டால், கோவிலுக்குள் நுழைந்தால், சாமியைப் பார்த்தால், மத தத்துவ மென்னும் வேதத்தைப் படித்தால் பாவம் என்னும் முறைகளில் அனுஷ்டிக்கப் பட்டு வருகிறது.  இதன் பலனாய் 33 கோடி ஜனசமூகத்தில் 60, 70 லக்ஷம் ஜனங்கள் உயர்ந்தவர்களென்றும், பிராமணர்கள் என்றும் தங்களை சொல்லிக் கொண்டு மற்றவர்களை சூத்திரர்களென்றும் பஞ்சமர் களென்றும் மிலேச்சர்க ளென்றும் அழைப்பதோடு மிருகங்களுக்கும். பட்சிகளுக்கும் பூச்சிபுழுக்களுக்கும் உள்ள சுதந்திரங்கூட கொடுப்பதற் கில்லாமல் கொடுமைப்படுத்தி வைத்திருப்பதை நாம் பார்த்து வருகிறோம்.  ஒற்றுமையினாலும் அரசாங்கத்தாருக்கு நல்ல பிள்ளைகளாய் நடந்து கொள்ளுவதினாலும் கிரு°துவர்களும் மகமதியர்களும் பிராமணர்களாலும் அவர்களது தர்மமான சா°திரங்களாலும் மிலேச்சர்களென்று அழைக்கப் பட்டாலும் தெருவில் நடத்தல் முதலிய சில உரிமைகளை பெற்றிருக்கிறார்கள்.  இதைப் பொருத்தவரையிலும் கிரு°தவர்களும் மகம்மதியர்களும் நமது அரசாங்கத்தாருக்கு நன்றி செலுத்த...

தேவ°தான மசோதா

தேவ°தான மசோதா

சென்னை மாகாணத்தில் தேவ°தானங்களும், தர்ம °தாபனங்களும், இந்து மத °தாபனங்களும், மொத்தத்தில் கோடிக்கணக்கான வரும்படி உடையவைகளாயிருந்தும், அவைகள் குறிப்பிட்ட காரியங்களுக்கு உபயோகப்படாமல் பெரும்பாலும் பிராமணர்களும், தாசி, வேசி முதலிய விபசாரிகளும், வக்கீல்களும் அனுபவிக்கவும் – தேவ°தான ‘ட்ர°டி’ என்போர்களும், மடாதிபதி யென்போர்களும், சமயாச்சாரி என்போர்களும், லோககுரு என்போர்களும், மகந்துக்கள் என்போர்களும் சுயமாய்த் தங்கள் இஷ்டம்போல் அனுபவிக்கவும் – கொலை, களவு, கள் குடி, விபசாரம் முதலிய பஞ்சமா பாதங்களுக்கு உபயோகப்படுத்தவும், சோம்பேறிகளுக்கும், விபசாரத்  தரகர்களுக்கும், பொங்கிப் போடவும், உபயோகப்படுத்திக் கொண்டு வருவதைத் தென்னிந்தியர்கள் வெகுகாலமாய் அறிந்து  வந்திருக் கிறார்களென்பதை  நாம்  கூறத்  தேவையில்லை. அதன் பலனாய், “காங்கிர° கான்பரன்°” என்று சொல்லப்படும் ராஜீய °தாபனங்களின் மூலமாயும், பல சமய சபைகள் மூலமாயும், இவ்வக் கிரமங்களையெல்லாம் அடக்கிக் கோடிக்கணக்கான வரும்படியுள்ள சொத்துக்கள் ஒழுங்காய் பரிபாலிக்கப்படவும், அதன் வரும்படிகள் குறிப் பிட்ட விஷயங்களுக்குக் கிரமமாய் உபயோகிக்கப்படவும் மீதியிருந்தால் இந்துமத சம்பந்தமான ஒழுக்கங் கற்பிக்க பொது...

சுயராஜ்யக் கட்சியும் அதன் தலைவர்களும்

சுயராஜ்யக் கட்சியும் அதன் தலைவர்களும்

  சுயராஜ்யக் கட்சியின் பொதுக்காரியதரிசியாகிய ஸ்ரீமான் ஏ.ரங்கசாமி ஐயங்கார் இந்திய சட்டசபையின் மெம்பராயிருப்பதன் பயனாய் இந்தியா கவர்ன்மெண்டின் தயவைப் பெற்று தப்பான வழியில் தன் மகனுக்கு ஓர் பெரிய உத்தியோகம் சம்பாதித்துக் கொண்டதையும், அரசாங்க கமிட்டிகளில் தான் மெம்பர் உத்தியோகம் பெற்றுக் கொண்டதையும் இதற்கு முன்பே “குடி அரசில்” குறிப்பிட்டது வாசகர்களுக்கு ஞாபகமிருக்கலாம். சுயராஜ்யக் கட்சியின் பெருந்தலைவரான ஸ்ரீமான் பண்டித நேரு அவர்களும் இதே மாதிரியே சர்க்காரின் ராணுவக் கமிட்டியில் அங்கம் பெற்றிருப்பதையும், அதற்காகச் சர்க்காருக்கு யோசனை சொல்ல பல விஷயங்களை அறிந்து வர என்கிற சாக்கின் பேரில் சர்க்கார் செலவிலேயே சீமைக்கு போகப் போகிறாரென்பதும் வாசகர்கள் அறிந்ததே. இவை மாத்திரமல்லாமல் இன்னொரு ரகசியத்தையும் ஸ்ரீமான் விபின சந்திர பாலரவர்கள் வெளியாக்கி விட்டார். அதாவது பண்டித நேரு அவர்கள் சட்டசபை உத்தியோகம் சம்பாதித்துக் கொடுத்தவரும் அவருக்கு நெருங் கின கட்டுப்பட்ட பந்துவுமான  ஒருவர் ஸ்ரீமான் ஏ.ரங்கசாமி ஐயங்காரைப் போலவே தனது பதவியின்...

தமிழ் தினசரி பத்திரிகை

தமிழ் தினசரி பத்திரிகை

இப்போது தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலராகிய ஆதித்தமிழ் மக்களுக்கு மிகவும் முக்கியமாயும் அவசரமாயும் வேண்டியது பொது நோக்குடைய ஒரு தமிழ் தினசரி பத்திரிகையே ஆகும். தமிழ்நாட்டில் தற் காலம் உலவிவரும் தமிழ் தினசரி பத்திரிகைகள் மூன்று. அதாவது சுதேச மித்திரன், திராவிடன், சுயராஜ்யா ஆகிய இவைகளே. இவற்றில் சுதேச மித்திரன் முதலில் தோன்றியது. இதன் முக்கியக் கொள்கை பழய காங்கிர° கொள்கைகளைப் போல அரசாங்கத்தினிடம் இருந்து பதவிகளும் உத்தியோகமும் மக்கள் அடையக் கிளர்ச்சி செய்வதாயிருந்தது. இதின்படி பதவிகளும் உத்தியோகங்களும் கிடைக்க கிடைக்க அவையெல்லாம் தங்கள் சமூகமாகிய பிராமணர்களுக்கே கிடைக்கும்படியாகவும் பிராமணர்கள்தான் உயர்ந்தவர்கள், அவர்கள்தான் அறிவாளிகள் என்றும் மற்றும் பிராமண மதம்  ஆக்கம் பெறவும் உழைத்து வந்தது. இம்மட்டோடல்லாமல் வரவர பிராமணரல்லாதாருக்கு உயர்ந்த உத்தியோகங்களும், பதவிகளும், அந்த°துகளும், கீர்த்திகளும் உண்டா வதைக் கூற்றுவன் போல் நின்று தடுத்துக் கொண்டேயும் வந்தது. இச்சூழ்ச்சி வெகுகாலமாய் பிராமணரல்லாதாருக்குத் தெரியாமல் இருந்துவிட்டதால் சகல பதவிகளும் அரசாங்க உத்தியோகங்களும், அந்த°தும்,...

ஈரோடு சேர்மனின் அடாத செய்கை

ஈரோடு சேர்மனின் அடாத செய்கை

ஈரோடு முனிசிபாலிட்டியின் பொது ஜனங்களின் வரிப்பணம் தாறுமாறாகச் செலவழிக்கப்பட்டு வருவதைப் பற்றி இதற்கு முன் பல தடவைகளில் குறிப்பிட்டிருக்கிறோம்.  போதுமான அளவு ஜலதாரை கட்டாததனாலும் ஓடையில் விழுந்து தேங்கும் கசுமாலத் தண்ணீரை ஒழுங்காய் வெளிப்படுத்தாத காரணத்தாலும், அதிலிருந்து கொசுக்களும், விஷக்காற்றுகளும் உண்டாகி, ஊரெங்கும் பரவி, வீடுகள் தோறும் மலைக்காய்ச்சலாலும், குளிர் காய்ச்சலாலும் ஜனங்கள் அவ°தைப்படு வதைக் கொஞ்சமும் லக்ஷியம் செய்யாமல், நமது முனிசிபல் சேர்மன் அவர் கள் சிங்கார வனத்தின் பெயரால் வரிப்பணத்தைக் கண்டபடி வாரி இறைப் பதைப் பற்றியும், துர்விநியோகப்படுத்திக் கொள்வதைப் பற்றியும், இதற்கு முன் குறிப்பிட்டிருக்கிறோம்.  சென்ற 10-ந் தேதி ஈரோடு முனிசிபாலிட்டியில் சிங்காரவனத்திற்காக இது வரையில் கவுன்சிலர்க ளுடைய அநுமதி பெற்றும், அநுமதி பெறாமலும் செலவு செய்திருக்கும் பணத்தைப் பரிசீலனை செய்வதற்காகவும், சேர்மன் கேட்கிறபடி யெல்லாம் மேற்கொண்டு பணம் கொடுக்கலாமா வென்பதைப் பற்றியும் யோசிக்கவும், 10-11-25-ல் சேர்மனால் ஒரு மீட்டிங்கு கூட்டப்பட்டிருந்தது.  அந்த மீட்டிங்குக்கு அதிகப்படியான கவுன்சிலர்கள்...

சுயராஜ்யம்

சுயராஜ்யம்

சுயராஜ்யமென்னும் பதம் நமது நாட்டில் பெரும்பான்மையாய் ஒவ்வொருவருக்கும் தங்கள் தங்கள் சுயநலத்துக்கே பயன்படுத்தப்பட்டு வருவதோடு, பாமர ஜனங்கள் அதை அறியாதபடி சுயகாரியப் புலிகளால் சூழ்ச்சிகள் செய்யப்பட்டு வருகிறது. சுயராஜ்யமென்பதைப் பலர் பலவாறாக  நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். திருடர்கள் தாங்கள் திருடுவதைப் பிறர் கவனியாமல் விட்டுவிடுவதுதான் சுயராஜ்யமென்று நினைக்கிறார்கள். சிறை யிலிருக்கும் கைதிகள் தங்களை வெளியில் விட்டு விடுவது தான் சுயராஜ்ய மென்று நினைக்கிறார்கள். குடிகாரர்கள் தாங்கள் தாராளமாகவும், விலை நயமாகவும்  வேண்டிய அளவு குடிக்க வசமுள்ளதாய் கலால் வரி எடுபட்டுப் போவதுதான் சுயராஜ்யமென்று நினைக்கிறார்கள். பாமர  ஜனங்கள்  பலர் இந்தியாவை விட்டு வெள்ளைக்காரரை விரட்டி விடுவது தான் சுயராஜ்ய மென்று நினைக்கிறார்கள். ஏழைகள் ரூபாய் 1-க்கு 8 படி  அரிசி விற்பதுதான் சுயராஜ்யமென்று நினைக்கிறார்கள். தரித்திரர்கள் பணக்காரர் சொத்துக்களை யெல்லாம் பிடுங்கித் தங்களுக்குச் சரி சமானமாய்ப் பங்கிட்டுக் கொடுப்பது தான் சுயராஜ்யமென்று நினைக்கிறார்கள். இவையெல்லாம் அறியாமையால் நினைப்பதாக வைத்துக் கொண்டா லும் அறிந்தவர்கள்,...

சுதேசமித்திரனின்  சின்னபுத்தி

சுதேசமித்திரனின்  சின்னபுத்தி

நாளது 1925-ம் ´ அக்டோபர் µ 30-ம் ² சுதேசமித்திரன்  4-வது பக்கம் 3- வது பத்தியில் ‘ தர்ம சொத்திலிருந்து கக்ஷிப் பிரசாரமா’  “நாம் எதிர்பார்த்தபடி ஜரூராக காரியங்கள் நடக்கின்றன ”   என்ற வாசகத்தின் தொடர்ச்சியாக  “இந்துமத தர்ம சொத்து பரிபாலன சட்டம் ஜ°டி° கட்சி மந்திரி பிடிவாதமாக இயற்றியது” பரிசுத்தமான நோக்கமுடன் செய்யப் பட்டதாக சொல்லப்படுவதானது எலக்ஷனுக்கு ஓர் முக்கியக் கருவியாக செய்யப்பட்டிருக்கிறதென்று நிரம்பிய அனுபோகம் பெற்ற நிரூபர் சொல்லுகின்றார். அதன் உண்மையாதெனில் ³ சட்டப்படி நியமிக்கப்பட்ட கமிஷ னர்களில் ஒருவராகிய ஸ்ரீமான் பி.வி.நடராஜ முதலியார் அவர்கள் சில தினங் களுக்கு முன் கோயமுத்தூர் டவுன் ஹாலில் ஸ்ரீமான் ஆ.சம்பந்த முதலியார் க்ஷ.ஹ.,க்ஷ.டு. அவர்கள் தலைமையின் கீழ் சில பொது °தாபனங்களிலிருந்து கமிஷனர் அவர்களுக்கு உபசாரப் பத்திரம் படித்துக் கொடுக்கும் காலத்தில் கமிஷனர்  ஸ்ரீமான் முதலியார் அவர்கள் நிகழ்த்திய சொற்பொழிவின் சாரமாவன :- “இந்துமத தர்ம பரிபாலன சபைகளிலும்,...

காஞ்சீபுரம் தமிழர் மகாநாடுகள்

காஞ்சீபுரம் தமிழர் மகாநாடுகள்

காஞ்சீபுரத்தில் 31 – வது ராஜீய மகாநாடு  நாளது நவம்பர் மாதம் 21,   22 -ந் தேதிகளான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சென்னை நவசக்தி ஆசிரியர் ஸ்ரீமான் திரு.வி.கலியாணசுந்தர முதலியாரவர்கள் அக்கிராசனத் தின் கீழ் கூடும். அது சமயம் சர்வ கக்ஷியார்களும்  அடங்கிய பிராமணரல்லாதார் மகாநாடொன்றும் கூடும். பிராமணரல்லாதார் முன்னேற்றத்தில் கரிசனமுள்ள தமிழ் நாட்டுப் பிராமணரல்லாதார் அனைவரும் வந்திருந்து, தங்களது முன்னேற்றத்திற்கான ஒரு திட்டத்தைக் காணவும், அதைச் சரிவர அமுலுக்கு கொண்டு வரவும், ஏற்பாடு செய்ய வேணுமாய்க் கேட்டுக் கொள்ளுகிறேன். இது விஷயத்தில் ஒவ்வொருவரும் தங்கள் ராஜீய அபிப்பிராய பேதங் காரணமாகவாவது, சொந்த அசவுரியங் காரணமாகவாவது அலக்ஷியமாய் இருந்துவிடாமல் கண்டிப்பாய் வரவேண்டுமாய் மறுபடியும் வினயத்துடன் கேட்டுக் கொள்ளுகிறேன். தீண்டாமையை ஒழிக்க வேண்டியது பிராமணரல்லாதாருக்கு மிகவும் முக்கியமானதொரு கடனாகும். ஏனெனில், தீண்டாதார்களின் முன்னேற்றந் தான் பிராமணரல்லாதார்களின் முன்னேற்றமாகும். தீண்டாதார்களின்  துன்பந்தான்  பிராமணரல்லாதாரின்  துன்பமாகும். தீண்டாமை ஒழிவதன் மூலமாய்த்தான் பிராமணரல்லாதார் கடைத் தேற முடியும். தீண்டாமை...

காஞ்சீபுரம் மகாநாட்டுத் தலைவர்

காஞ்சீபுரம் மகாநாட்டுத் தலைவர்

ஓர் பிராமணர் காஞ்சீபுரம் மகாநாட்டிற்கு அக்ராசனம் வகிக்க வேண்டு மென்று சில பிராமணர்களும், சில பிராமணப் பத்திரிக்கைகளும் அவர்களால் ஆட்கொள்ளப்பட்ட மற்றவர்களும் எவ்வளவோ சூழ்ச்சிகளும், தந்திரங்களும் ஒழுங்கீனமான முறைகளும் செய்தும் கடைசியாக ஓர் பிராமணரல்லாதாரே மகாநாட்டுக்கு அக்ராசனம் வகிக்கத் தேர்ந் தெடுக்கப்பட்டுப் போனதைப்பற்றி பிராமணரல்லாதார் இரண்டொருவர் தவிர மற்ற எல்லாரும் ஏகமனதாய் சந்தோஷப்படுவார்களென்பதை நாம் சொல்லத் தேவையில்லை.  அத்துடன் இதற்கு விரோதமாயிருந்த சிலர் வருத்தப்ப டுவார்களென்பதைப் பற்றியும் நாம் சொல்லத் தேவையில்லை.  தமிழ் நாட்டிலுள்ள மொத்தம் 13 ஜில்லாக்களில் 10 ஜில்லாக்களே வோட் செய்திருப்பதாய்த் தெரியவருகிறது.  இவற்றில் ஸ்ரீமான். வி.சக்கரைச் செட்டியாரை சென்னையும், ஸ்ரீமான். தங்கப்பெருமாள் பிள்ளையை திருச்சியும் தெரிந்தெடுத்தது.  பாக்கி 8 ஜில்லாக்களில் ஸ்ரீமான் முதலியாருக்கு 4 ஜில்லாக்களும், ஸ்ரீமான் ஏ.ரெங்கசாமி அய்யங்காருக்கு 4 ஜில்லாக்களும் வோட் செய்திருப்பதாகத் தெரியவருகிறது.  ஸ்ரீமான் அய்யங்காருக்கு வோட் செய்த நாலு ஜில்லாக்களில் கும்பகோணமும் சேலமும் சேர்ந்துதான் நாலு ஜில்லாக்களானதாகத் தெரியவருகிறது.  கிரமப்படி இந்த...

தீண்டாமை  சென்னை மாகாண தீண்டாமை மகாநாடு

தீண்டாமை சென்னை மாகாண தீண்டாமை மகாநாடு

  சென்னையில் தீண்டாமை மகாநாடென்று ஓர் மகாநாடு சென்ற மாதம் 31-ந் தேதி கூடிற்று.  பல பெரியோர்களும், பல தீண்டாதார்களும் மற்றும் பலரும் விஜயம் செய்திருந்தார்கள்.  பல கனவான்கள், வெகு உக்ரமாகவும் பேசினார்கள்.  தீண்டாமையை விலக்கவேண்டுமென்று பல தீர்மானங்களும் செய்தார்கள்.  இவற்றினால் தீண்டாமை ஒழிந்து விடுமென்று, நாம் நம்புவதற்கில்லை.  இவ்வித மகாநாடு இதற்கு முன் ஆசாரத்திருத்த மகா நாடென்ற பெயரால் எவ்வளவோ நடந்திருக்கிறது.  எவ்வளவோ சா°திர ஆதாரங்களெல்லாம் எடுத்துக் காட்டப்பட்டிருக்கின்றது.  எத்தனையோ தீர்மானங்களும் செய்யப்பட்டிருக்கிறது.  இவற்றின் பலனாய் என்ன நடந்தது? தீண்டாமை என்னும் கொடுமை நம் நாட்டிலிருந்து நீங்கி மக்கள் எல்லோரும் பிறவியில் சமம் என்கிற உணர்ச்சி பரவி ஒத்து வாழ வேண்டுமானால், ஸ்ரீமான்கள். டி.வி.சேஷகிரி ஐயரும், டி.விஜயராகவாச்சாரியாரும், மகாதேவ சா°திரியாரும், பனகால் இராஜாவும், பாத்ரோவும் போன்றவர்கள் மீட்டிங்கு கூட்டி உபந்யாசம் செய்து தீர்மானங்கள் செய்துவிட்டுப் போவதினால், ஒருக்காலும் நன்மை யேற்படவே மாட்டாது.  அல்லாமலும், சட்டசபை முதலிய இடங்களில் போய் உட்கார்ந்து...

தமிழர் மகாநாடு

தமிழர் மகாநாடு

நமது நிலை இவ்வாண்டு  காஞ்சீபுரத்தில் நடக்கும் தமிழ்நாட்டு 31 – வது ராஜீய மகாநாடானது தென்னிந்தியத் தமிழ் மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் மிகவும் நெருக்கடியான சந்தர்ப்பத்தில் கூடுகிறது. அதன் முக்கிய நோக்கம் நமது நாடு சுயராஜ்யம் பெறுவதற்கென்று சொல்லிக் கொள்ளப்பட்டாலும் சுயராஜ்ய மென்பது சுயமரியாதையும்  சுயேச்சையும் உள்ள சமூகத்துக்குத்தான் பயன் படுமேயல்லாது அஃதில்லாதவருக்கு சுயராஜ்யமென்பதும் பர ராஜ்ய மென்பதும் வித்தியாசமற்றதேயாகும். தென்னாட்டுத் தமிழ்மக்கள் பெரும் பாலும் சுயமரியாதையற்று சுயேச்சையற்று மிருகங்களுக்கும், பக்ஷிகளுக் கும், புழுக்களுக்கும், பூச்சிகளுக்குமுள்ள சுதந்திரமும், சுயாதீனமும் இன்றி கோடிக்கணக்கான மக்கள் உழல்வதை யாரும் மறுக்கமுடியாது. இவர்களின் பொருட்டும்,தேச முழுவதிலுள்ள இவர் போன்றார் பொருட்டும் விடுத லையை உத்தேசித்து மகாத்மா காந்தியடிகளால் ஐந்து வருடங்களுக்கு முன்  துவக்கப்பட்ட ஒத்துழையா  இயக்கமானது பல்வேறு காரணங்களால் டெல்லி யில் ஆக்கங் குன்றி நாளுக்கு நாள் கருகி வந்து பாட்னாவில் வேருடன் களைந்தெறிந்தாகிவிட்டது. இதன் பலனாய் ஏற்பட்ட நிலைமையானது சுயேச்சையும் சுயமரியாதையும்  சுவாதீனமுமற்ற சமூகத்துக்கு அதிலும்...

மீண்டும் சத்தியமூர்த்தியின் அட்டகாசம் “சௌந்திரிய மஹாலின் இரகசியம்”

மீண்டும் சத்தியமூர்த்தியின் அட்டகாசம் “சௌந்திரிய மஹாலின் இரகசியம்”

“மீண்டும் சத்தியமூர்த்தியின் அட்டகாசம்” என்னும் தலைப்பின் கீழ் சௌந்திரிய மஹாலில் சில தினங்களுக்கு முன் நடந்த மீட்டிங்கைப் பற்றி ஒரு நிருபர் அக்டோபர் µ 15-ந்தேதி ஜ°டி° பத்திரிகையில் எழுதி யிருப்பதின் சாராம்சமாவது:- சென்னை சுயராஜ்யக் கட்சியின் பிரதம புருஷராகிய ஸ்ரீமான் சத்தியமூர்த்தியும், வைதீகப் பிராமண கோஷ்டியின் தலைவரும், சமுதாய முன்னேற்றத்துக்கு எதிரிடையாயுள்ளவருமான, ஸ்ரீமான் எம்.கே. ஆச்சாரியாரும், புதிதாக இக்கோஷ்டியில் சேர்க்கப்பட்ட ஸ்ரீமான்.டி.குழந்தையும் சில நாட்களுக்குமுன் சௌந்திரிய மஹாலில் நடைபெற்ற மீட்டிங்குக்கு வந்திருந்தனர்.  ஸ்ரீமான். எம்.கே. ஆச்சாரியார் அக்கூட்டத்தில் தலைமை வகித்தார்.  இவர் முன்னுரை பேசுகையில் ஜ°டி° கட்சித் தலைவர்கள் சிலரைத் தாக்கிச் சில வார்த்தைகளுரைத்தார்.  இங்ஙனம் கூறியதற்குக் காரணமென்னவென்றால், காலஞ்சென்ற டாக்டர்.டி.எம்.நாயர், ஸர்.பி.டி.செட்டியார் முதலிய தலைவர்களின் முயற்சியால் ஏற்படுத்தப்பட்ட ஜ°டி° கட்சியானது பிராமணர்களின் செல்வாக்கை ராஜீய விஷயத்திலும், சமூக விஷயத்திலும் மற்றும் இரண்டொரு துறைகளிலும் குறைத்துக் கொண்டு வருகிறதினாலேயாம்.  பிராமணரல்லாதாரும், ஆதிதிராவிடர்களும் தங்கள் நிலைமையை நன்கறிந்து உஷாராய் நடந்து கொள்ளச்...

ஈரோடு முனிசிபாலிட்டி

ஈரோடு முனிசிபாலிட்டி

  ஈரோடு முனிசிபாலிட்டியைப் பற்றி அதன் கொடுமைகளை வெளி யிடாமல் கொஞ்சநாளாக “குடி அரசு” மௌனம் சாதிப்பதாகவும் இதற்கு ஏதோ காரணங்கள் இருப்பதாகவும் சிலர் குறை கூறுகிறார்கள். மற்றும் சிலர் தற்கால முனிசிபல் நிர்வாகத்தை குறை கூற வேண்டுமென்றே பத்திரிகை ஆரம்பிக்கப்பட்டதாகவும் பழி சுமத்துகிறார்கள். இவ்விரண்டையும் நாம் பொருட்படுத்தவில்லை.  நமக்கு தோன்றியதை யாருடைய விருப்பு வெறுப்பையும் லக்ஷியம் செய்யாமல் அவசியம் நேரும்போது வெளியிட்டு வருவோம்.  உள்ளூர் விஷயத்தில் இன்னும் பல பொது °தாபனங்களும் புகாருக்கு இடம் வைத்துக் கொண்டு ஒழுங்கீனமாகவும் நடந்து வருகிறது.  அவற்றில் பல விஷயங்களை பத்திரிக்கைகளில் வெளியிடாமலே திருத்திக்கொள்ளலாம் என்கிற நம்பிக்கை கொண்டே விட்டு வைத்திருக்கிறதே அல்லாமல், வேறு எவ்வித தயவுக்கோ தாக்ஷண்ணியத்துக்கோ அல்ல.  இவ்விஷயமாக நிரூபர்கள் அனுப்பிய பல நிரூபங்கள்கூட பிரசுரிக்காமல் இருப்பதற்கும் இதுவே முக்கிய காரணம்.  ஆதலால் உள்ளூர் நிரூப நேயர்கள் மன்னிக்க வேண்டுகிறோம். நமது ஈரோடு முனிசிபாலிட்டியானது மிக சிறிய முனிசிபாலிட்டி, ஆனால் வரும்படியில்...

சுதேசமித்திரனின் ஜாதிப் புத்தி

சுதேசமித்திரனின் ஜாதிப் புத்தி

  சென்ற வாரம் இத்தலையங்கத்தின் கீழ் “சுதேசமித்திரன்” என்னும் பிராமணப் பத்திரிக்கை, பிராமணரல்லாதாருக்கும், மிக முக்கியமாய்ப் பிராமணரல்லாத தேசத் தொண்டர்களுக்கும், விரோதமாய் வேண்டுமென்றே செய்து வரும் சூழ்ச்சிகளைப் பற்றி எழுதி, மற்றும் மறுமுறையென்று எழுதியிருந்தோம்.  அவற்றில் முக்கியமாக ஸ்ரீமான்.ஈ.வெ.இராமசாமி நாயக்கரைப்பற்றி தன்னாலும் தான் ஆட்கொண்டவர்களாலும் பொது ஜனங்களுக்கு எவ்வளவு கெட்ட அபிப்பிராயத்தைக் கற்பிக்க வேண்டுமோ, அவ்வளவையும் செய்து பார்ப்பதென்றே முடிவு கட்டிக்கொண்டிருக்கிறது.  ஸ்ரீமான். நாயக்கர் எந்த ஊருக்குப் போயிருந்தாலும், என்ன பேசினாலும் அவற்றைத் திரித்துப் பொதுஜனங்களுக்குத் தப்பபிப்பிராயப்படும்படி கற்பனை செய்து பத்திரிக்கைகளிலெழுதுவதும் அவற்றிற் கேற்றார்போலவே சில ஈனஜாதி நிருபர்களை அங்கங்கே வைத்துக்கொள்ளுவதும், அவர்கள் பேரால் ஸ்ரீமான் நாயக்கர் சுயராஜ்யம் வேண்டாமென்கிறார்.  ஜ°டி° கட்சி யில் சேர்ந்துவிட்டார்,  அதிகார வர்க்கத்தோடு கலந்துவிட்டார், காங்கிர° கொள்கைக்கு விரோதமாயிருக்கிறார் என்று இவ்வாறாக அப்பத்திரிக்கை எழுதி வருகிறது.  உதாரணமாக, பொள்ளாச்சி, மதரா°, அநுப்பபாளையம், தஞ்சை, மாயவரம் இந்த இடங்களில் ஸ்ரீமான் நாயக்கர் பேசிய பேச்சைப் பற்றி சுதேசமித்திரன்...

நமது பத்திரிக்கை

நமது பத்திரிக்கை

நமது “குடி அரசுப்” பத்திரிக்கை ஆரம்பித்து ஆறு மாதங் களாகின்றது.  அது முக்கியமாய் நமது நாட்டுக்கு சுயராஜ்யமாகிய மகாத்மா வின் நிர்மாண திட்டத்தை அமுலுக்குக் கொண்டு வரவும், தமிழர்களாகிய தீண்டாதார் முதலியோருடைய முன்னேற்றத்துக்கென்று உழைக்கவுமே ஏற்படுத்தப்பட்டது.  இத்தொண்டில் “குடி அரசு” சிறிதுங் கள்ளங் கபடமின்றி யாருடைய விருப்பு வெறுப்பையும் பொருட்படுத்தாது தனது ஆத்மாவையே படம் பிடித்தாற்போல் தைரியமாய் வெளிப்படுத்தி தொண்டு செய்து வந்திருக் கின்றது – வரவும் உத்தேசித்திருக்கிறது.  “குடி அரசு” குறிப்பிட்ட கருத்தைக் கொண்ட பிரசாரப் பத்திரிகையேயல்லாமல்; வெறும் வர்த்தமானப் பத்தி ரிக்கை அல்லவாதலால், வியாபார முறையையோ பொருள் சம்பாதிப் பதையோ தனது சுயவாழ்வுக்கு ஓர் தொழிலாகக் கருதியோ சுயநலத்திற்காக கீர்த்திபெற வேண்டுமென்பதையோ ஆதாரமாய்க் கொள்ளாமலும் வாசகர் களுக்கு போலி ஊக்கமும் பொய்யான உற்சாகமும் உண்டாகும்படியாக வீணாய் கண்ட கண்ட விஷயங்களையெல்லாம் கூலிக்கு எழுதச் செய்வித்தும், குறிப்பிட்ட அபிப்பிராயமில்லாமல் சமயத்திற்கேற்றாற்போல் ஜனங்களின் மனதைக் கலங்கச் செய்து வருவதுமான பொறுப்பில்லாத ஓர்...

சென்னை லோகல் போர்டு சட்டம்  ஸ்ரீமான். வீரையனின் திருத்த மசோதா

சென்னை லோகல் போர்டு சட்டம் ஸ்ரீமான். வீரையனின் திருத்த மசோதா

  1920-ம் வருடத்திய °தல °தாபன போர்டு சட்டத்தைத் திருத்தும்படி, ஸ்ரீமான். வீரையன் எம்.எல்.ஸி. கீழ்கண்ட மசோதாவை அடுத்த சட்டசபையில் கொண்டு வரப்போவதாகவும், அதை எல்லா அங்கத்தினர்களும் ஆதரிக்க வேண்டுமென்றும் அறிவிக்கிறார். சென்னை °தல °தாபன போர்டு சட்ட திருத்த மசோதா 1920-ம் வருடத்திய சென்னை °தல °தாபன போர்டு சட்டத்தை அடியிற் கண்டவாறு மாற்றவேண்டும். (1) இந்தச் சட்டமானது 1925-ம் வருடத்திய சென்னை லோகல் போர்டு திருத்தப்பட்ட சட்டம் என்று அழைக்கப்படலாம். (2) 157-வது பிரிவுக்குப் பின் 17(ஏ) எந்த பொது ர°தா, தெரு அல்லது பாதை வழியாக நடந்து போகிற அல்லது அதைச் சட்டப் பிரகாரம் உபயோகிக்கிற எந்த நபரையும்  எவரும் தடை செய்யக்கூடாது  என்னும் புதிய பிரிவு ஒன்று சேர்க்கப்படவேண்டும். (3)124 -1-பிரிவில் “குடியிருப்பவர்களின் சௌகரியம்” என்னும் வாசகத்திற்கு அடுத்தாற்போல் “மேற்கண்ட காரணங்களுக்காக அவை ஜாதி மத வித்தியாசமின்றி, சகல ஜனங்களாலும் தாராளமாய் உபயோகிக் கப்பட்டதாய் இருக்க...

சுதேசமித்திரனின் ஜாதி புத்தி

சுதேசமித்திரனின் ஜாதி புத்தி

சுதேசமித்திரன் பத்திரிக்கை   “அதிகார வர்க்கத்திற்கு ஒரு யோசனை” என்கிற தலைப்பின்கீழ்  “ ஸ்ரீமான் ஈ.வெ.ராமசாமி நாய்க்கர் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பாட்னா முடிவுக்கு விறோதமாய் தஞ்சையில் சுயராச்யக் கக்ஷியார் தேசத்திற்கு நன்மை செய்ய ஏற்பட்டவர்கள் அல்லவென்றும் சுயராச்யக் கக்ஷியாரும் இதரர்களும் கோருகிற சுயராச்யம் இந்தியாவுக்கு வேண்டியதில்லை என்று சொன்னாராம் என்றும், காங்கிர°காரர் இப்படிச் சொல்லுவது அழகல்லவென்றும் சென்னை கீழ்ப்பாக்கம் தேர்தல் ஸ்ரீமான் நாயக்கர் மனதை வாட்டி வருகிறதென்றும் இப்படிப்பட்டவர் ஜ°டி° கட்சி யிலோ வேறு கட்சியிலோ சேர்ந்து கொள்ளலாம் என்றும் எழுதி, நாயக்கர் சுயராச்யமே வேண்டாமென்று பேசியதாக பொது ஜனங்கள் நினைக்கும்படி எழுதியிருக்கிறது. இவ்வெழுத்துக்களில் எவ்வளவு அயோக்கியத்தனமும் அற்பத்தனமும் நிறைந்திருக்கிறது என்பதை வாசகர்களே கவனித்துக் கொள்வார்கள். இதற்குமுன் பல தடவைகளில் நாம் குறிப்பிட்டிருப்பதை, இந்த பிராமண பத்திரிகை கவனிக்காமல் மானம் ஈனமின்றி மறுபடி அதே காரியத்தைச் செய்கிறது. தஞ்சையில் நமக்கு வேண்டிய சுயராச்யம் என்ன என்பதைப் பற்றியும், நமக்கு வேண்டாத...

“சுயராஜ்யக் கட்சியின் பரிசுத்தம்”

“சுயராஜ்யக் கட்சியின் பரிசுத்தம்”

விளம்பரம் பாட்னா முடிவிற்குப் பிறகு, சுயராஜ்யக் கக்ஷியார் வெற்றிக்கொடி பிடித்து திக்விஜயம் செய்ய ஆரம்பித்து விட்டார்கள். காரியத்தில் எப்படி யிருந்த போதிலும், இவர்கள் போகிற பக்கங்களில் எவ்வளவு இழிவு பட்டுக் கொண்டு வந்தாலும் பத்திரிகைகளில் மாத்திரம், “சுயராஜ்யக் கட்சிக்கு வெற்றி மேல் வெற்றி, சுயராஜ்யக் கட்சி °தாபனம் செய்தது, சுயராஜ்யக் கட்சியில் அவர் சேர்ந்தார், இவர் சேர்ந்தார்” என்கிற விளம்பரங்களுக்குக் குறை வில்லை. ஆனால் கட்சிக்குள்ளிருக்கிற பழைய தலைவர்களோ ஒருவ ருக்கொருவர்  அபிப்பிராய  பேதங்களால் சண்டைபோட்டுக் கொண்டிருக் கின்றார்கள். தினந்தோறும் விடிந்தெழுந்தால் சுயராஜ்யக் கக்ஷியாரின் நடபடிக் கைக்குச் சமாதானம் சொல்லுவதும், சரியான சமாதானம் ஒன்றும் கிடைக்காத சந்தர்ப்பங்களில் மகாத்மாவின் பெயரைச் சொல்லி மழுப்பி விடுவதுமான தந்திரங்களோடே,  பாமர  ஜனங்களை ஏமாற்றிக் கொண்டு வரப்படுகிறது. அச்சில்லாமல் தேரோட்டம் சுயராஜ்யக் கக்ஷி, சுயராஜ்யக் கக்ஷியென்ற பேர் மாத்திரம் இருக்கிற தேயல்லாமல், சுயராஜ்யக் கட்சிக்கென ஏற்பட்டிருக்கும் திட்டமென்ன? ராஜீயத் திட்டம் ஏதாவது இருக்கிறதா? பொருளாதாரத் திட்டம்...

அம்பலத்து அதிசயம்  ( தேசீய பிராமணர்களின் கண்டனம் )

அம்பலத்து அதிசயம் ( தேசீய பிராமணர்களின் கண்டனம் )

  தேச விடுதலை விஷயத்தில், பிராமணரல்லாதார் பொது நன்மையை உத்தேசித்து, அநேக பிராமணர்களுடைய, கொடுமைகளையும், சூழ்ச்சி களையும் கூட்டாக்காமல் கபடமற்று பிராமணர்களுடன் ஒத்துழைத்து வந்தி ருந்தாலும், அவர்களுடைய உழைப்பையெல்லாம் தாங்கள், தங்கள் வகுப்புச் சுயநலத்திற்கென்று அநுபவித்து கொள்வதல்லாமல் உழைக்கின்ற பிராமண ரல்லாதாருக்கு எவ்வளவு கெடுதிகளையும், துரோகங்களையும் செய்து வந்திருக்கின்றார்களென்பதை – செய்து வருகின்றார்களென்பதைப் பொறு மையோடு படித்து அறிய வேண்டுமாய்க் கோருகிறோம். முதலாவது, பழைய காலத்திய தேசீயவாதிகளில் சிறந்தவர்களில்  ஸர்.சி. சங்கரன் நாயர் என்கிற பிராமணரல்லாதார் முக்கியமானவர் ஆவார்.  அவர் காங்கிரஸிலும் தலைமை வகித்தவர். அப்பேர்ப்பட்டவரை முன்னுக்கு வரவொட்டாமல் தடுப்பதற் காகப் பிராமணர்கள் எவ்வளவோ சூழ்ச்சிகள் செய்து வந்தார்கள். அவருக்கு கிடைக்கவிருந்த ஹைக்கோர்ட் ஜட்ஜ் பதவியை கிடைக்கவொட்டாதபடிக்குச் செய்ய எவ்வித பொது நலத்திலும் தலையிட்டிராத, ஸர்.வி.பாஷ்யம் ஐயங்கார் போன்றவர்களும் மற்றும் அநேக பிராமண வக்கீல்களும் சீமைக்கெல்லாம் தந்தி கொடுத்த தோடல்லாமல், அவர் பேரில் எவ்வளவோ பழிகளை யெல்லாம் சுமத்திக் கஷ்டப்படுத்தினார்கள். அதன்...

தென்  ஆப்பிரிக்கா தினம்

தென்  ஆப்பிரிக்கா தினம்

தென் ஆப்பிரிக்காவில் இந்தியர்களைத் தாழ்வாய் நடத்துவதைப் பற்றியும், இந்தியர்களை அந்நாட்டைவிட்டு ஒழிப்பதற்கென ஏற்படுத்திய சட்டத்தைப் பற்றியும், சென்ற 11- ந் தேதி இந்தியாவெங்கும் பொது தினமாகக் கொண்டாடி, தேசமெங்கும் கண்டனத் தீர்மானங்கள் நடைபெற்றன. அக்கண் டன விஷயத்தில் நாமும் கலந்து கொள்ளுகிறோம். ஆனால், நமது நாட்டில் கோடிக்கணக்கான சகோதரர்களைத் தீண்டாதாரென்றும், பார்க்கக் கூடாதா ரென்றும், தங்களுடைய வேதங்களையே படிக்கக் கூடாதாரென்றும், தங்களு டைய தெய்வங்களையே கண்டு வணங்கக் கூடாதென்றும் கொடுமை செய்திருக்கிற ஒரு நாட்டார் இக்கண்டனத் தீர்மானம் செய்வதில் ஏதாவது பலன் உண்டாகுமா? இதையறிந்த தென்னாப்பிரிக்கா வெள்ளையர்கள் இக்கண்டனத் தீர்மானங்களை மதிப்பார்களா? அல்லது குப்பைத் தொட்டியில் போடுவார் களா? என்பதை வாசகர்களே கவனித்துப் பார்த்தால் வீணாக ஓர் நாளை இப்போலிக் கண்டனத் தீர்மானங்களுக்காகப் பாழாக்கினோமே யென்ற முடிவுக்குத்தான் வருவார்கள். குடி அரசு – தலையங்கம் – 18.10.1925            

அனுப்பபாளையம்

அனுப்பபாளையம்

°தல °பனங்களின் நிர்வாகங்களில் பலவித ஊழல்களிருக்கின் றது.  அவைகளை நிவர்த்தி செய்யவேண்டுமானால் தேர்தல்கள் ஒழுங்கான முறையில் நடைபெற வேண்டுமென்றும், தேர்தல் மன°தாபத்தின் காரண மாகவே °தல °தாபனங்களின் நடவடிக்கைகளில் கட்சி வேற்றுமைகளும், காரியக் கெடுதிகளும் ஏற்படுகின்றதென்றுங் கூறியதுடன், இக்குறைகள் அகற்றப்பட வேண்டுமானாலும், பொதுஜனங்களின் வரிப் பணமானது முறை யுடன் செலவழிக்கப்பட வேண்டுமானாலும், நிர்வாகத்தை யோக்கியமாய் நடத்தக்கூடிய திறமைசாலிகளையே தெரிந்தெடுக்க வேண்டுமெனக் கூறினார்.  மற்றும் °தல °தாபனங்களின் நிர்வாகத்தில் அரசியல் கட்சி களைப் புகவிடுவது, வேலைக்கே கெடுதியைத் தருமென்றும், இதை மகாத்மா வும் பலதடவைகளில் வற்புருத்தியிருக்கிறாரென்றும் சொன்னார். பின்னர் கதர், மதுபானம் தீண்டாமை முதலியவைகளைப்பற்றி சுருக்க மாகவும் தெளிவாகவும் கேட்போர் மனதில் உணர்ச்சி உண்டாகக்கூடிய வாறு பேசியபின் காங்கிரஸைப்பற்றி ஸ்ரீமான் நாயக்கர் கூறியதின் சாரமாவது:- காங்கிரஸைப்பற்றி நீங்கள் அதிகமாகக் கவலை கொள்ளவேண்டிய தில்லை, ஒத்துழையாமைக் கொள்கைக் காங்கிரஸினின்று எடுபட்டபிறகு காங்கிரஸினால் படித்தவர்களுக்கும் அவர்கள் பிள்ளை குட்டிகள் இரண் டொருவருக்கும் உத்தியோகம் கிடைக்கலாமே தவிர...

ஆரியாவின் அபிப்பிராயம்

ஆரியாவின் அபிப்பிராயம்

ஸ்ரீமான் சுரேந்திரநாத் ஆரியாவை நேயர்கள் நன்கறிவார்கள்.  இவர் உத்தம தேசாபிமானி.  அரிய தியாகம் பல நம் நாட்டிற்கென்று செய்தவர்.  இவர் சமீபத்தில், சென்னை “ஜ°டி°”  பத்திரிகையின் நிருபருக்குப் பேட்டி கொடுத்து தம் அபிப்பிராயத்தை வியக்தமாகக் கூறியிருக்கின்றார்.  இதன் சாராம்சத்தை வாசகர்கள் நமது பத்திரிகையின் வேறொரு பக்கத்தில் காண லாம்.  பிராமணரல்லாதாரின் இப்போதுள்ள தற்கால நிலைமை எதுவோ, இனி நாம் செய்யவேண்டிய வேலை என்னவுண்டோ, அவைகளை நன்றாய் ஆராய்ச்சி செய்து தீர்க்கதரிசனத்துடன் ஸ்ரீமான் ஆரியா அவர்கள் கூறி யிருப்பதை நமது நாட்டிலுள்ள ஒவ்வொரு பிராமணரல்லாதாரும் கவனிக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்ளுகிறோம். வைதீகப் பிராமணர்கள் ஜாதிச் செருக்குக்கொண்டு மதவிஷயத்திலும், தேசீய பிராமணர்கள்  அரசியலிலும் பிராமணரல்லாதாரை தாழ்த்திவைத்து பொய்ப்பிரசாரம் செய்வதையும், இதில் தங்கள் காரியம் வெற்றி பெருவதற்கு அநுசரணையாக, இரண்டொரு பிராமணரல்லாதாரை சேர்த்துக்கொள்வ தையும்  நாம் வன்மையுடன் பலதடவைகளில் கண்டித்து வருகின்றோம். கடவுளால் படைக்கப் பெற்றுள்ள மாந்தரில் ஒருசாரார் மட்டும் ஏகபோகமாக சுதந்தரங்களை அனுபவித்துக்கொண்டு, பிறரை தாழ்த்தி...

பாட்னாத் தீர்மானம்

பாட்னாத் தீர்மானம்

சென்ற மாதம் 22 -ந் தேதி பாட்னாவில் கூடிய, அகில இந்திய காங்கிர° கமிட்டியின் தீர்மானத்தையும், அதைப்பற்றி மகாத்மாவின் தனி அபிப்பிராயத்தையும் நிதானமாய் யோசனை செய்து பார்த்தோம். அவற்றுள் காணப்படும் தத்துவத்தை  சுருக்கமாய்ச் சொல்ல வேண்டுமானால் மகாத்மா காந்தி அவர்கள் காங்கிரஸை சுயராஜ்யக் கட்சியார் வசம் ஒப்படைத்து விடவேண்டும் என்பதாக முடிவு செய்துக்கொண்டு, அந்தப்படியே ஒப்புவித்துவிட்டாரென்றுதான் சொல்ல வேண்டும். தீர்மானத்தின் சாரம் என்னவென்றால் நான்கணா கொடுத்தவர்க ளெல்லாம் காங்கிர° மெம்பராகலாம். காங்கிரஸில் பதவி வேண்டியவர்கள் காங்கிர° காரிய சமயங்களில் கதர்கட்டிக் கொண்டிருக்க வேண்டும். சட்ட சபை முதலிய தேர்தலுக்கு நிற்கிறவர்கள் சுயராஜ்யக் கட்சியாரின் தயவைப்  பெறவேண்டும். இந்தத் தீர்மானத்தின் மேல் மகாத்மாவின் அபிப்பிராயமோ, இதற்குச் சம்மதமில்லாதவர்கள் காங்கிரஸை விட்டு விலகிக் கொள்ள வேண்டுமேயல்லாமல், உள்ளே இருந்துகொண்டு சுயராஜ்யக் கட்சியின் வேலைகளுக்கு இடையூறாயிருக்கக் கூடாதென்பது தான். அத்துடன் பழைய நிலை ஒன்றும் மாறவில்லையென்றும், நிர்மாணத் திட்டம் பாதிக்கப்பட வில்லையென்றும் கூறுகிறார். மற்ற விஷயங்களைப்பற்றி...

பரமசிவனுக்கும் பார்வதிக்கும் நடந்த சம்பாஷணை  -நாரதர்

பரமசிவனுக்கும் பார்வதிக்கும் நடந்த சம்பாஷணை -நாரதர்

  பார்வதி:-        பிராணனாதா ! பரமசிவன்:- என்ன பிராணனாயகி.   பா-தி:-  சில முனிசிபாலிட்டிகளில் சேர்மெனும், வை°சேர்மெனும் சண்டைபிடித்துக் கொள்ளுகிறார்களே அது எதற்காக? ப-சி:-    என் கண்ணே! இது உனக்குத் தெரியாதா? திருடர்கள் இரண்டுபேர் தங்களுக்குள்ளாகவே சண்டைப்போட்டுக்கொண்டால் அது எதற்காக?   பா-தி:- நாதா! இது எனக்குத் தெரியாதா? திருட்டு சொத்தை இருவரும் பங்கிட்டுக் கொள்வதில் வித்தியாசம் ஏற்பட்டால் இருவரும் சண்டை போட்டுக்கொள்ள வேண்டியதுதான்.  முனிசிபாலிட்டிகளில் எப்படி சண்டை வரும்? ப-சி:- அதே மாதிரிதான் முனிசிபாலிட்டியிலும் பொதுஜனங்களி டம் இருந்து வாங்கும் லஞ்சத்திலும் உத்தியோகம் கொடுப்பதற்கு ஆக வாங்கும் தரகிலும் காண்டிராக்டர்களிடமிருந்து வாங்கும் வீதாச்சாரத்திலும் இருவரும் பிரித்துக் கொள்வதில் வித்தியாசம் ஏற்பட்டால் சண்டை வரவேண்டியது தானே?   பா-தி:-  இதெல்லாம் சேர்மெனுக்கும் முனிசிபல் சிப்பந்திகளுக்கும் தானே சேரவேண்டியது.  வை°சேர்மெனுக்கு இதிலென்ன பாத்திய மிருக்கிறது? ப-சி :- நீ என்ன திரேதாயுகத்து சங்கதி பேசுகிறாய்? அந்த மாதிரி இருவருக்குள்ளும் ஒப்பந்தம் ஏற்பட்டிருந்தால்? அல்லாமலும்...

தமிழ்நாடு பத்திரிகையின் வம்புச் சண்டை

தமிழ்நாடு பத்திரிகையின் வம்புச் சண்டை

  சுயராஜ்யா, சுதேசமித்திரன் முதலிய பிராமணப் பத்திரிகைகளும் ஸ்ரீமான் சீனிவாச அய்யங்கார் போன்ற பிராமணத் தலைவர்களும் நம்முடன் தொடுக்கும் போர் முடிவுபெறாமல் இருக்கும்பொழுதே தமிழ்நாடு பத்திரிகை யும் இதுதான் சமயமென்று நம்மை வம்புச்சண்டைக்கிழுக்கின்றது.  இம்மாதிரி வம்புச் சண்டைகளுக்கும் நாம் இடம் கொடுக்கக்கூடாதென்று எவ்வளவோ காரியங்களை சகித்துக்கொண்டு நமது உத்தேச காரியத்தை மாத்திரம் பார்த்துக்கொண்டு வந்தாலும் வேண்டுமென்றே வலிய வரும் சண்டை களுக்கு நாம் என்ன செய்யலாம்? தற்காலம் தமிழ்நாட்டில் சுயராஜ்ஜியக்கட்சி என்கிற பெயரை வைத்துக்கொண்டு பிராமணர் அல்லாதாரின் செல்வாக்கை அடியோடு ஒழிக்க வேண்டுமென்கிற கருத்தோடு சில பிராமணர்களும், அவர்கள் பத்திரிகைகளும் காங்கிர° பெயரையும், மகாத்மா பெயரையும் மற்றும் உள்ள அநேக தியாகிகளின் பெயரையும் உபயோகப்படுத்திக் கொண்டு °தல °தாபனங்களிலும், தேர்தல்களிலும் காங்கிரசிலும் செய்து வரும் கொடுமைகளையும், சூழ்ச்சிகளையும் கண்டு உண்மையிலேயே மனம் பொறாதவராகி எவ்வளவோ கஷ்ட நஷ்டங்களுக்கிடையில் இவற்றைத் தடுக்க செய்துவரும் ஒருசிறு தொண்டிற்கும் பிராமணரல்லாதாரில் சில தலைவர்கள் என்போர் நமக்கு...

°தல °தாபனங்களில் லஞ்சம்

°தல °தாபனங்களில் லஞ்சம்

வரவர நமது நாட்டு முனிசிபாலிட்டிகளும், டி°டிரிக்ட் போர்டு களும், தாலூகா போர்டுகளும், மனிதர்கள் பதவியை அனுபவிக்க ஒரு சாதன மாயிருப்பதோடல்லாமல் அதன் தலைவர்கள் பணம் சம்பாதிப்பதற்கும் ஒரு சாதனமாகிக்கொண்டு வருகிறது.  இவை கொஞ்ச காலங்களுக்கு முன்பாக நூற்றுக்கு பத்து பதினைந்து பேர்கள்தான் இம்மாதிரி தப்புவழியில் நடக்கக் கூடிய தலைவர்களை உடைத்தாயிருந்தன.  இப்பொழுது பணம் சம்பாதிக்கும் தலைவர்களின் எண்ணிக்கை அதிகப்பட்டுக்கொண்டு வருவதோடல்லாமல் பொதுஜனங்களுக்கும் சர்க்கார் காரியங்களில் நீதி பெறுவதுபோல் பணம் கொடுத்தால் எந்தக் காரியத்தையும் °தல °தாபனங்களில் சாதித்துக் கொள்ள லாம் என்கிற தைரியம் வந்துவிட்டது.  இம்மாதிரியான காரியங்கள் இரட்டை ஆட்சி ஏற்பட்டபிறகு  அதிகப்பட்டுப்போய்விட்டது.  இரட்டை ஆட்சிக்கு முன்பாகவும் இம்மாதிரி காரியங்கள் இருந்துவந்தது என்றாலும் சேர்மன் முதலானவர்கள் இவ்வளவு தைரியமாய் அந்தக் காலத்தில் லஞ்சம் வாங்கத் துணியவே இல்லை.  லஞ்சம் வாங்குவதென்பது சகஜமாய் போய்விட்டால் பிராதுகளும், புகார்களும் எப்படி உண்டாகும்? இம்மாதிரியான காரியங்களை அடக்குவதற்கு அரசாங்கத்தால் பிராது எதிர்பார்த்துக்கொண்டிருப்பது சுத்தப் பயித்தியக் காரத்தன...

ஊன்றிப்படித்து உண்மையை அறியுங்கள்

ஊன்றிப்படித்து உண்மையை அறியுங்கள்

சென்றவாரம் ஸ்ரீமான் ஸ்ரீனிவாசய்யங்காரின் விஷமப் பிரசாரத்தைக் குறித்து எழுதிய தலையங்கம் முடிவுபெறவில்லை. அதாவது, நன்னிலத்தில் ஸ்ரீமான் அய்யங்கார் பேசியதாக முன் இதழ் தலையங்கத்தில் எழுதியிருந்த 10 குறிப்புகளில் 6-வது குறிப்புவரையிலும் தான் விளக்கியிருந்தோம்.  ஆறாவது குறிப்புக்கும் கொஞ்சம் சமாதானம் எழுதினோம். அதாவது சென்னை அரசாங்க பிரதமமந்திரி கனம் பனகால் ராஜா அவர்கள் ஸ்ரீமான் நாயக்கரை சென்னை முனிசிபல் தேர்தலில் ஜ°டி° கக்ஷியாருக்கு அனுகூலமாய் பிரசாரம் செய்யக்கூப்பிட்டு விட்டதாகவும், அதற்காக ஸ்ரீமான் நாயக்கர் சென்னைக்குச் சென்று பிரசங்கம் புரிந்ததாகவும், பிறர் நினைக்கும்படி ஸ்ரீமான் அய்யங்கார் பேசியிருக்கிறார். இந்த வாக்கு மூலத்தின்பேரில் ஸ்ரீமான் அய்யங்காரை கோர்ட்டுக்கு இழுத்து அதன்மூலமாய் ஸ்ரீமான் அய்யங்காருக்கு புத்தி கற்பிக்க பலர் ஸ்ரீமான் நாயக்கருக்கு அறிவுறுத் தினார்கள். இம்மாதிரியான விஷயங்களில் விசேஷ சந்தர்ப்பங்களல்லாது அரசாங்க நீதி°தலத்தை நாடுவது அவசியமில்லாதது என்பது நாயக்கரின் அபிப்பிராயம்.  அல்லாமலும் வெள்ளைக்காரருக்கும் இந்தியருக்கும் வழக்கேற்பட்டால் இந்தியர்களுக்கு நியாயம் கிடைப்பது எப்படியோ அதே மாதிரிதான் பிராமணர்களுக்கும் பிராமணரல்லாதாருக்கும்...

கோயமுத்தூர் ஜில்லாவில் பஞ்சம்

கோயமுத்தூர் ஜில்லாவில் பஞ்சம்

இந்த ஜில்லாவின் தென்பாகம் அதாவது ஈரோடு கோயமுத்தூர் இருப்புப்பாதைக்கு தெற்கேயுள்ள எல்லா தாலூக்காக்களிலும் ஜனங்கள் பஞ்சத்தால் வருந்துகின்றனர். இவ்வருஷம் மழையில்லாததால் புஞ்சை வெள்ளாமைகள் செய்யமுடியாமல் போயிற்று.  தோட்டக்கால் புஞ்சைகளில் கிணர் வற்றிப்போய் விட்டமையால் விளைவு கிடையாது.  ஒவ்வொரு ஊரிலும் ஜனங்கள் தாகத்துக்குத் தண்ணீரில்லாது தவிக்கின்றனர்.  தென்னை மரங்களும் பனைமரங்களுங்கூட பட்டுப் போயின.  கால் நடைகளுக்கு ஓலைகளையும் வேம்பிலைகளையும் முறித்துப் போட்டு மரங்களும் மொட்டையாயிற்று.  மனிதர்களுக்கும் மாடுகளுக்குமாக சேர்ந்து கஷ்டம் வந்துவிட்டது.  ஒவ்வொரு குடித்தனக்காரரும் கையிலிருந்த காசும் கடன் வாங்கினதும் எல்லாம் செலவு செய்து கிணர்கள் வெட்டியும் பலனில்லாது கைக்காசுகளையும் இழந்தனர்.  ஏழை மக்களாயுள்ளவர்கள் ஊருக்கு 20, 30 குடிகள் பெண்டு பிள்ளைகளுடன் மலைப் பிரதேசங்களுக்கு போகிற கொடுமை பார்த்து சகிக்க முடியவில்லை.  தாராபுரம் தாலூகாவிலிருந்து மட்டிலும் சுமார் மூவாயிரம் குடும்பங்கள் ஓடிவிட்டன.  கோயமுத்தூர் ஜில்லாக் கலெக்டரும், அதிகாரிகளும் கஞ்சித் தொட்டி வைப்பதாக கிராமங் கள்தோறும் போகின்றனர்.  கொலைகளும் வழிப்பறிகளும் திருடர்களும் அதிகமாக...

உண்மையான தீபாவளி

உண்மையான தீபாவளி

தமிழ்நாடு கதர்போர்டு அக்கிராசனர் ஸ்ரீயுத ஈ.வெ.ராமசாமி நாய்க்கர் எழுதுகிறார். தீபாவளி என்பது வருஷத்திற்கொருமுறை வந்து பெருவாரியான இந்து குடும்பங்களுக்கு சந்தோஷத்தையும், ஆனந்தத்தையும் கொடுத்து தங்கள் குழந்தை குட்டிகள் மக்கள் மருமக்கள் முதலானவர்களோடு களிக்கும் ஒரு பெரிய பண்டிகையாகும்.  அப்பண்டிகையன்று ஏழையானாலும் பணக்காரனானாலும், கூலிக்காரனானாலும், முதலாளியானாலும் பண்டி கையை அனுபவிப்பதில் வித்தியாசமில்லாமல் தங்கள் தங்கள் சக்திக்குத் தகுந்தபடி °நானம் செய்வதும், புது வ°திரங்களை அணிவதும், பல காரங்கள் உண்பதும் முக்கிய கொள்கையாகும்.  இக்கொள்கைகள் எந்த தத்துவங்களைக் கொண்டு ஏற்படுத்தப்பட்டது என்பதில் எவ்வளவு அபிப்பிராய பேதங்கள் இருந்தபோதிலும் பொதுவாய் மக்கள் சந்தோஷத் திற்கு புதிய வ°திரங்களையே அணிய வேண்டுமென்றிருப்பதனால் ஏழைத் தொழிலாளருக்கு ஒரு விடுதலையும் ஏற்பட்டு வந்ததென்பது அபிப்பிராய பேதமில்லாமல் ஒப்புக்கொள்ளப்பட்ட விஷயம்.  தற்கால அனுபவத்திலோ சந்தோஷமும் களிப்பும் பலவிதமாயிருந்தாலும் பெரும்பாலும் மேற்படி தீபாவளியானது ஏழை தொழிலாளர்களுக்கு பெருந் துரோகத்தை செய்வ தற்கே வருவதாகவும் போவதாகவும் ஏற்பட்டுவிட்டது. இவ்வித துரோகத் திற்கு பணக்காரர்களும், உத்தியோக°தர்களுமேதான்...