Tagged: 33 சதவீத இடஒதுக்கீடு சட்டம்

தலையங்கம் : பெண்கள் உரிமைகளை மறுக்கும் தேர்தல் களம்

தலையங்கம் : பெண்கள் உரிமைகளை மறுக்கும் தேர்தல் களம்

ஆண்களுக்கு இணையாகப் பெண்களும் வாக்காளர்களாக இருந்து என்ன பயன்? அரசியலைத் தீர்மானிக்கும் அதிகாரங்கள் பெண்களுக்கு முற்றாகவே மறுக்கப்பட்டுத்தான் வருகின்றன. 33 சதவீத இடஒதுக்கீடு சட்டம், பாதிக் கிணற்றில் தொங்கிக் கொண்டிருக்கிறது. அந்தச் சட்டத்தை நிறைவேற்ற விடாமல் தொடர்ந்து ஆண் ஆதிக்க அரசியல் தலைவர்கள் தடைபடுத்தியே வருகிறார்கள். நாட்டின் பிரதமர் பதவிக்கான வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ள மோடி, தனக்குத் திருமணமாகி, ஒரு மனைவி இருக்கிறார் என்ற உண்மையைக்கூட வெளிப்படுத்திடாமல் மறைத்து வைத்துள்ளார். மூன்று முறை சட்டமன்றத் தேர்தலுக்கான போட்டியிடும் விண்ணப்பப் படிவத்தில் இதை மறைத்துவிட்டு, இப்போது, நாடாளுமன்றத் தேர்தலுக்கான விண்ணப்பத்தில் மட்டும் குறிப்பிடுகிறார். “மோடி ஏன் மறைத்தார்; இவர் பதவிக்கு வந்தால், பெண்களுக்கு பாதுகாப்பு இருக்குமா?” என்ற கேள்விகள் எதிர்முகாம்களில் முன் வைக்கப்படுகின்றன. நாம் ஒரே ஒரு கேள்வியை முன்வைக்க விரும்புகிறோம். பிரதமர் பதவிக்கான வேட்பாளராக ஒரு பெண் களத்தில் இறக்கப்பட்டு, அந்தப் பெண் மூன்று முறை தாக்கல் செய்த தேர்தல் விண்ணப்பப் படிவத்தில்...