பார்ப்பனர்களும் வஞ்சிக்கப்படும் விவசாயமும்
விவசாயத் துறை இந்தியாவில் நலிவடைவதற்குக் காரணம் அதில் ஈடுபட்டுள்ளவர்கள் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள், பார்ப்பனர்கள் விவசாயம் செய்வதை ‘மனு சாஸ்திரம்’ தடை போட்டுள்ளது. சாஸ்திரத்தை மீறி விவசாயம் செய்த இரண்டு “பிராமணர்களை” குடந்தையில் மூத்த சங்கராச்சாரி, ஜாதி நீக்கம் செய்ததாக வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன. விவசாயம் என்ற அறிவியலின் வளர்ச்சியை சமூகப் பார்வையில் முன் வைக்கும் இக்கட்டுரையை எழுதியவர் சமூக ஆய்வாளர் காஞ்சா அய்லையா. நமக்கு உணவு தரும் உழவுத் தொழிலுக்கு நன்றி சொல்லும் திருநாள்தான் பொங்கல் பண்டிகை. மனிதனின் ஆதித் தொழில்களில் ஒன்றான விவசாயம் எப்படித் தோன்றியது? ஆதிகாலத்தில் மனிதர்கள் விலங்குகளை வேட்டையாடியும், காய், கனி போன்றவற்றைச் சேகரித்தும் சாப்பிட்டு வாழ்ந்து வந்தனர். பிறகு காட்டு விலங்குகள் சிலவற்றை வீட்டு விலங்குகளாகப் பழக்கி மேய்க்க ஆரம்பித்தார்கள். ஒரே இடத்தில் குழுக்களாக வாழத் தொடங்கிய மனிதர்கள், தங்களைச் சுற்றியிருந்த நிலத்திலிருந்தே உணவைப் பெற முயற்சித்தனர். அந்த முயற்சிதான், மனித இனம் பெரிய...