தூத்துக்குடியில் கழகம் சமூக நீதி பரப்புரை
27.08.2016 அன்று தூத்துக்குடி மாவட்ட தி.வி.க. சார்பில் நவீன சம்பூகர்களின் வகுப்புரிமை மீட்புப்பரப்புரை பயணம் தொடங்கியது. ஒருநாள் பயணமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திவிக பரப்புரை செயலாளர் தோழர் பால் பிரபாகரன் தலைமையில் அணிவகுத்த தோழர்கள் பயணத்தின் கருத்துகளை அடங்கிய துண்டறிக்கை விநியோகித்து மக்களிடம் எழுச்சியை உருவாக்கினர் மாலை 6 மணிக்கு காவை இளவரசன் ‘மந்திரமா தந்திரமா’ நிகய்ச்சியோடு பொதுக்கூட்டம் துவங்கியது. பெரியார் முழக்கம் 01092016 இதழ்