Tagged: மனுஷ்ய புத்திரன்

உடன்கட்டை ஏற முடியாது…

உடன்கட்டை ஏற முடியாது…

ஒரே மதம்; ஒரே ஜாதி உனக்கும் எனக்கும் ஒரே ஊர் – வாசுதேவ நல்லூர்… நீயும் நானும் ஒரே மதம்… திருநெல்வேலிச் சைவப் பிள்ளைமார் வகுப்பும்கூட… உன்றன் தந்தையும் என்றன் தந்தையும் சொந்தக் காரர்கள்… மைத்துனன் மார்கள். எனவே செம்புலப் பெயல்நீர் போல அன்புடை நெஞ்சம் தாம்கலந் தனவே. – மீரா   ‘சாமி’க்கு மாலை போட… என்னை விட்டுவிட்டு சாமிக்கு மாலைபோட உனக்கு உரிமை உண்டென்றால் உன்னை விட்டுவிட்டு வேறு ஆசாமிக்கு மாலைபோட எனக்கும் உரிமை உண்டுதான் – அறிவு மதி   இல்லாத போது… நான் உன்னை நேசிக்கிறேன் ஏற்றுக் கொள்கிறேன் நான் உன்னைப் புரிந்து கொள்கிறேன் நான் உன்னை சுதந்திரம் உள்ளவளாக்குகிறேன் நீ இங்கே இல்லாதபோது மட்டும் – மனுஷ்ய புத்திரன்   அலையும் மீன் அகப்பட்டுக் கொள்ளத்தான் இந்த மீன் அலைகிறது! தொட மாட்டோம் என்று தூண்டில்கள் சொல்லிவிட்ட பிறகும்! – மு. மேத்தா  ...