46 ஜாதி மறுப்பு இணையர்களுக்கு பாராட்டு: மேடையில் மதமறுப்பு திருமணம்
கோவையில் காதலர் திருவிழா கோவையில் பிப்.14 அன்று காதலர் திருவிழா, காலை தொடங்கி மாலை வரை கலை நிகழ்ச்சிகள், கருத்துரைகளுடன் மகிழ்ச்சியாகக் கொண்டாடப்பட்டது. காந்திபுரம் ‘பாத்திமா சர்ச்’ கலை அரங்கில் நடந்த இந்த கொண்டாட்ட விழாவை திராவிடர் விடுதலைக் கழகத்தின் முன்னணி அமைப்பான ஜாதி மத எதிர்ப்பு காதல் மணம் புரிந்தோர் நலச் சங்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட் டிருந்தது. திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்களுடன், தமிழ்நாடு திரைக் கலைஞர் அனைத்து தொழிலாளர் கூட்டமைப்பைச் சார்ந்த தோழர் களும் தோழியர்களும் பெருமளவில் பங்கேற்று கலைநிகழ்ச்சிகளை வழங்கினர். ஜாதி மறுப்பு மணம் புரிந்த பல இணையர்கள் விழாவில் பங் கேற்றது குறிப்பிடத்தக்கதாகும். பகல் 11.45 மணியளவில் ஜாதி எதிர்ப்பு உறுதி ஏற்புடன் நிகழ்ச்சிகள் தொடங்கின. ‘சன்’ தொலைக்காட்சி வி.ஜெகன் குழுவினர் பல குரல் நிகழ்ச்சி, கோவை பிரியாவின் கரகாட்டம், நாட்டுப் புற கலைஞர் செந்தில் கிராமிய நிகழ்ச்சி, ரெஜிதாவின் பாடல் உள்ளிட்ட கலை...