Tagged: மதங்கள்

மத ஆய்வரங்கில் கொளத்தூர் மணி உரை: அறிவியலுக்கு எதிராக நிற்கும் மதங்கள்!

மத ஆய்வரங்கில் கொளத்தூர் மணி உரை: அறிவியலுக்கு எதிராக நிற்கும் மதங்கள்!

மனிதகுலத்தின் வளர்ச்சிக்கு துணை நிற்கும் அறிவியலுக்கு எதிராகவே அனைத்து மதங்களும் இருக்கின்றன என்றார், கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி. இந்தியா புனித தோமா வழித் தமிழ்க் கிறிஸ் துவ நாடே – எவ்வாறு? என்ற தலைப்பில் மூன்று நாள் ஆய்வரங்கம் நடைபெற்றது. மகாபலிபுரம் அரசினர் சிற்பக் கல்லூரி அருகிலுள்ள Scripture Union Centre இல் நடைபெற்ற இந்த ஆய்வரங்கின் முதல் நாளான 27.08.2013 செவ்வாய் கிழமை அன்று காலை திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தொடக்க உரையாற்றினார். செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவன பொறுப்பு அலுவலர் பேராசிரியர் முனைவர் க. இராமசாமி வாழ்த்துரை வழங்கினார். தொடர்ந்து பேராசிரியர் முனைவர் மு. தெய்வநாயகம் ஆய்வு கருத்துரை வழங்கி, மறுப்புக் கேள்விகளுக்கான பதில் அளித்தார். ஆய்வரங்க முடிவின் தீர்ப்பினை வழங்குவதற்கு ஐந்து பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. கொளத்தூர் மணி நிகழ்த்திய உரையின் சுருக்கம்: சமயம் தொடர்பான இந்த ஆய்வரங்கில், சமயத்...

மதங்களுக்கு சவால் விடும் அறிவியல்

மதங்களுக்கு சவால் விடும் அறிவியல்

கடவுள், மதங்கள் காலத்துக்கு பொருந்தி வராதவை என்று பேராசிரியர் வசந்த் நடராசன் ‘இந்து’ ஆங்கில நாளேட்டில் எழுதிய கட்டுரையின் தமிழாக்கத்தைப் ‘புரட்சிப் பெரியார் முழக்க’த்தில் ஏற்கனவே வெளியிட்டிருக்கிறோம். பார்ப்பனர்கள் பழமைவாதிகளிடமிருந்து கடுமையான எதிர்ப்பைச் சந்தித்தது அக்கட்டுரை. அதே ‘இந்து’ ஏட்டில் பல மறுப்புக் கட்டுரைகள் வெளி வந்தன. அதில், பேராசிரியர் நடராசனின் கடவுள், மத மறுப்பு கருத்துகளுக்கு ஆதரவு தெரிவித்து, ஜிரேந்திர சர்மா என்ற ஆய்வாளர், ஒரு கட்டுரை எழுதியுள்ளார். மதம் குறித்து அடிப்படையான கேள்விகளை எழுப்புகிறது அவரது கட்டுரை. கட்டுரை சுருக்கம் இதுதான்: “மதத்துக்கும் அறிவியலுக்குமான முரண்பாடுகள் வெடித்து வருகின்றன. இதில் மதம் தொடர்பாக முன்வைக்கப்பட்டு வந்த கருத்துகள் தாக்குப் பிடிக்க முடியாமல் தடுமாறுகின்றன. நவீன வாழ்க்கையின் தத்துவங்கள் இரண்டு. ஒன்று சமத்துவம்; மற்றொன்று சுதந்திரம். இரண்டுமே மதத்துக்கு எதிரானவைதான் சமூக மாற்றத்தை மதப் பழமைவாதிகளால் ஏற்க முடியவில்லை. 19 ஆம் நூற்றாண்டில் கிறிஸ் தவ மதம் மாற்றங்களை எதிர்த்தது....